-
28th February 2013, 04:51 PM
#11
Senior Member
Seasoned Hubber
டியர் சாரதி சார்,
தங்களுடைய ஆதங்கம் புரிகிறது. இது சகஜம் தான். நடிப்பில் மட்டுமின்றி பொது வாழ்விலும் நடிகர் திலகத்தின் அர்ப்பணிப்பும் பங்களிப்பும் மிகவும் கணிசமானது. கிட்டத் தட்ட மூன்று தலைமுறையினருக்கு மேல தேச பக்தி, மனிதாபிமானம் போன்ற நற்குணங்களையும் போதித்தவை அவர் படங்கள், அவரும் தன் வாழ்க்கையில் அவற்றை செயல் படுத்தி அவர்களை மேம்படுத்தியுள்ளார். அவருடைய படங்களின் வெற்றிகளும் சாதனைகளும் சரியான மீடியா ஆதரவு இல்லாமல் மக்களிடம் சென்று சேரவில்லை. இப்போது நம்முடைய பம்மலார் அவர்கள் அரும்பாடு பட்டு சேர்த்த ஆவணங்களும் முரளி சார் இம் மய்யத்தில் சாதனைகளைப் பற்றி எழுதியுள்ள கட்டுரைகளும் அதற்கு பெரிதும் துணை புரிகின்றன. இவற்றையெல்லாம் சீனியர் ரசிகர்கள் என்ற முறையில் நாம் அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டாமா. நடிகர் திலகத்தின் படங்கள் பெற்ற வெற்றிகளும் சாதனைகளையும் நாம் கொண்டு சென்று சேர்ப்பதற்கு இது சரியான கால கட்டம். நம் அனைவருக்குமே அந்த ஆதங்கம் இருந்தது, இறைவன் அருளால் இப்போது அதற்கு சந்தர்ப்பம் கனிந்துள்ளது. நாம் வெறுமனே வாய் வார்த்தையால் சொல்வதில்லை, ஆவணங்களின் துணையுடன் தான் சொல்கிறோம். அது மட்டுமல்ல அவருடைய படங்களில் கொள்கைப் பாடல்களே இல்லாதது போலவும் சிவாஜி என்றாலே சோகம் என்பது போலவும் ஒரு பரவலான அபிப்ராயம் நிலவி வருகிறது. இதனையும் களைய வேண்டியது நமது கடமை யல்லவா. நடிகர் திலகத்தின் படப் பாடல்களில் இல்லாத கொள்கைகளா, இல்லாத தத்துவமா. தத்துவம் என்ற பேரில் உடனே சோகப் பாடல்களை போட்டு விடுகிறார்கள்.
இவற்றையெல்லாம் மக்களிடம் சொல்லி அவருடைய அனைத்துத் துறை சாதனைகளையும் விளக்கும் வகையில் இத்திரி பயன் படும் என்கிற நோக்கில் தான் இதில் ஆவணங்களையும் நிழற்படங்களையும் வாசுதேவன், பம்மலார் மற்றும் நான் பகிர்ந்து கொண்டோம். பின்னர் அதனால் விவாதங்கள் அமுங்கி விடுமே என்ற கருத்து வந்ததால் தனித் திரி துவங்கி அதில் போட்டு வந்தோம். இப்போது அதுவும் முடக்கப் பட்டு விட்டது. இந்நிலையில் நாம் நடிகர் திலகத்தின் சாதனைகளையெல்லாம் எவ்வாறு மக்களிடம் சேர்ப்பது.
இந்த ஆதங்கம் நம் எல்லோருக்குமே உள்ளது தான். சரி. இதை நாம் நேரம் கிடைக்கும் போது அல்லது பம்மலார் மீண்டும் வந்து அந்த திரியை தொடங்கினால் அப்போது பார்த்துக் கொள்ளலாம், இப்போதைக்கு முடிந்த வரை திரைப்படப் பட்டியலில் அந்தந்தப் படங்களின் தகவல்களோடு இணைத்து பகிர்ந்து கொள்ளலாம் என்று எண்ணி நடைமுறைப் படுத்தப் பட்டு வருகிறது.
இருந்தாலும் அவருடைய பல்வேறு திரைப்படங்களில் சமுதாயத்திற்கு மிகவும் பயன் தரக்கூடிய கருத்துக்களும் தகவல்களும் இடம் பெற்றுள்ளதையாவது இங்கே பகிர்ந்து கொள்ளலாம் என்றால் அவையும் இங்கே அமுங்கி விடுகின்றன என்கிற போது மனம் வருந்துகிறது.
எனவே யாராவது அவருடைய படங்களை அறவே ஒதுக்கும் போது அல்லது அவற்றை மிகவும் நையாண்டி செய்யும் போது இயற்கையாக கோபம் வருகிறது. அதற்கு பதில் தரும் போது கருத்து வேறுபாடுகள் வருகின்றன.
எனவே பொதுவாக இந்த விதமாகத் தான் இங்கே சர்ச்சைகள் வருகின்றனவே தவிர ஈகோ என்பது இல்லை. எனவே இந்த சர்ச்சைகளுக்காக தாங்கள் வராமல் இருக்க வேண்டாம். தாங்களும் கருத்துக்களை சொல்லுங்கள். தொடர்ந்து தங்கள் பதிவுகளை அளியுங்கள்.
இந்த வேண்டுகோள் அனைத்து நண்பர்களுக்கும் தான்.
நன்றி
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
28th February 2013 04:51 PM
# ADS
Circuit advertisement
Bookmarks