-
28th February 2013, 10:08 PM
#2011
Senior Member
Seasoned Hubber
மிகவும் அருமையான நெஞ்சில் நிரந்தரமாகக் குடி கொள்ளும் பாடலை அளித்திருக்கிறீர்கள்.. சுமிதா அவர்களே. பிராப்தம் படம் தோல்வியடைந்தாலும் நடிகர் திலகம் நம் மனக்கண்முன்னே என்றும் பசுமையாக நிற்கும் பாடல் சொந்தம் எப்போதும் தொடர்கதை தான். கிட்டத் தட்ட மூன்று விதமான பின்னணி இசையுடன் இப்பாடல் இசைத்தட்டுகளில் வெளிவந்தது. ஒரு தட்டில் உள்ள ஒரு சரணம், மற்றோர் சரணத்தில் இடம் பெறாது. விவித் பாரதியின் நிகழ்ச்சியில் வாரா வாரம் ரசிகர்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த பாடல்களில் நிச்சயம் இப்பாடல் இடம் பெறும். பெரும்பாலும் முதல் மூன்று இடங்களுக்குள் வரும். இதே படத்தில் தாலாட்டுப் பாடி பாடலின் போது சாவித்திரி அவர்களும் நடிகர் திலகமும் உள்ளத்தை உருக்கும் வகையில் நடித்திருப்பார்கள். படம் மிக மிக மெதுவாக நகர்ந்தாலும் உளவியல் ரீதியாக பல விஷயங்களை ஆராய வாய்ப்புத் தரும் படம்.
என்றும் மறக்க முடியாத பாடல்கள் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.யின் நிலையான புகழுக்கு இப்படத்தின் பாடல்களும் ஓர் காரணம்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
28th February 2013 10:08 PM
# ADS
Circuit advertisement
-
28th February 2013, 10:10 PM
#2012
Junior Member
Senior Hubber

Originally Posted by
RAGHAVENDRA
நமது நண்பர் கே.சந்திரசேகர் அவர்கள் நடிகர் திலகத்தின் பின்னால் நிற்கிறார். சிவப்பு நிறத்தில் அம்புக்குறி இட்டு காட்டப் பட்டுள்ளது.
[தினத்தந்தி வாசகன் என்பதை நிரூபித்து விட்டேனாக்கும்]
Congrats KC sir nice to see your photos with NT AND VPSINGH.
PLEASE do something about trichy NT statue opening and also recomending for oscar with selected movie clips of NT with concened people and Ramkumar sir.
-
1st March 2013, 01:13 AM
#2013
ஆலமரம் ஆலமரம் ....
அன்னை இறந்தது தெரியா பிறழ்ந்த மனநிலை..
அவர் உறங்குவதாய் எண்ணி மடியில் வைத்துத் தாலாட்டும் மகனாய் நடிகர்திலகம்..
விடிந்தால் தன் பாதி உயிர் காதலிக்கும் தன் ஆருயிர் நண்பனுக்கும் திருமணம்..
ஜீவ்னா யஹான்... மேராநாம் ஜோக்கர் பாடலை இசைத்தபடி தூரத்தில் ஊர்வலம்..
வெளிச்சமும் இருட்டும் மாறி மாறி பிரதிபலிக்கும் நாயகனின் முகம்...
ரோஜாவின் ராஜா படத்தில் மனம் பேதலிப்பதைப் படிப்படியாய்ச் சித்தரித்த நடிப்பரசரின் அழகு முகபாவங்கள் ஆழமாய் என் மனதில்..
அந்த ஆலமரம் எனும் குறும்பாடல் இணையத்தில் தேடினேன் .. கிடைக்கவில்லை..
ஏன் அப்பாடலை இப்போது தேடினேன்? தெரியவில்லை.
கடலூரில் ( நியூசினிமா) பொங்கலுக்கு வந்து குடியரசு தினத்துக்கு போய்விட்ட இந்த ராஜாவை அந்த 13 நாளில் 14 தடவை பார்த்தேன்.
பெயர்கள் போடும்போது வரும் பின்னணி இசை முதல் சோ வரும் நகைச்சுவைக் காட்சிகள் வரை கோர்வையாய் எல்லாமே மனப்பாடம்..
அந்த நினைவலைகளை மீட்டத் தேடினேனா?
சிவாஜி ரசிகன் என்பது ஒரு நுட்பமான உன்னதமான வரம்..
அந்த புனித உணர்வைப் புனருத்தாரணம் செய்ய, சக உணர்வாளர்களுடன் அளவளாவி இன்னும் ஊக்கிக்கொள்ள வரும் எனக்கு ஏன் அந்த சோகக்காட்சி தேடல்?
ஆலமரம் ...
நம் நடிகர்திலகம்..
அந்த ஆலமரத்தின் புகழைப்பாட ஆயிரம் வழிகள் உண்டு..
நிழலில் இருக்கும் ஆயிரம் பறவைகளுக்கும் ஆலமரத்தின் அத்தனை கிளைகளுக்குமான கிளைக்கதைகள் ஆயிரமாயிரம் உண்டு..
என் ரோஜாவின் ராஜா கதை போல..
கிளிகள் கீறிக்கொள்ளாமல் மரப்பேச்சு மட்டுமே ஒரே மூச்சாய் இருக்கட்டும்..
இரு நாளாய் என் மனம் கொஞ்சம் வலித்ததால்தான் அந்த ஆலமரப் பாடல் தேடினேனோ?
நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
1st March 2013, 06:24 AM
#2014
Junior Member
Senior Hubber

Originally Posted by
Vankv
Ref:#2013
Good piece of writing Vankv. I am also making the similar request that we speak more about sivaji and aviod other SUYA PURANAMS
MURALI WHAT IS YUR OPINION about recomending NT for lifetime ach oscar award with selected brand of his action oriented movies.
we can do something for this RIGHT TIME has come.
whatever we say NADIGARTHILAGAM title alone enough ETC. it is a very big honour at world level so we should not miss it. raghavendran
also can do something more with vasu and pammalar trio in selecting the movies of variety actions he has given .
-
1st March 2013, 08:13 AM
#2015
Junior Member
Devoted Hubber
நேற்று கே டி வி யில் ஒன்ஸ் மோர் படம்..
அப்படி இப்படி நகர முடியவில்லை..
மிதமான குரல்,மிதமான வேகம்,மிதமான அசைவுகள் இவற்றை பயன் படுத்தி உச்சத்தை தொட இந்த மகா கலைஞனால் தான் முடியும்.
காட்சி 1:
காரை மகன் விஜய் ஓட்ட, இவர் அருகில் அமர்ந்துள்ளார்.திடீரென எதிரில் சைக்கிளில் ஒரு யுவதி.குறும்புக்கார விஜய் காரை நிறுத்தி விட்டு இறங்கி போய் அவளிடம் சற்று ஜொள்ளு விட,ஒரு அபூர்வமான காமிரா ஆங்கிள் வைக்கப்படுகிறது.(சபாஷ் டைரெக்டர்).தலைவருக்கு பின்னால் காமிரா.பிரேமின் வலது பாதி தலைவரின் முகம் அவர்களை பார்க்கும் விதமாக,,,இடது பக்கம் அவர்கள் சிரித்து பேசுவது..
தலைவர் ஒரு கொடுக்கிறாரே பார்க்கலாம்..ஒரு reaction.
முதலில் சிறிது சங்கோஜம்,,பிறகு அதை பாராமல், பார்ப்பதை தெரிவிக்கும் உதடுகளின் விசேஷ சுளிப்பு..கண்களில் தெரியும் சந்தோஷம்.Upright body posture..சொல்வது. இதெல்லாம் நான் பார்க்கமாட்டேன் எனும் கண்ணியம்.மின்னலை போலதோன்றி மறையும் புன்னகை..
காட்சி 2: காதல் காதல் பாட்டு..
எந்த நல்ல நேரத்தில் திரு.ராகவேந்திரா தலைவருக்கு இருக்கும் நாட்டிய திறமை பற்றி எழுதினாரோ,சில மணி நேரங்களுக்குள் அது காணக்கிடைக்கிறது.இது ஒரு மாடர்ன் டான்ஸ் வகை... அழகாக உள்வாங்கி ஆடுகிறார்.ஒவ்வொருmovement உம் cho chweet and graceful..கைகlளையும் கால்கlளையும் அசைப்பதில் ஒரு கைதேர்ந்த நடன கலைஞா காட்சியளிக்கிறார்.அதே சமயம் குதிப்பதோ துள்ளுவதோ அறவே கிடையாது....வாவ்
காட்சி 3
மனைவியை (சரோஜாதேவி) படுக்கை அறையில் முப்பது வருடங்களுக்குப்பிறகு பார்க்கும் இடம்.உணர்ச்சி வசப்பட்டு அவள் காலில் விழ, இவர் reaction out of the world..என்னதான் மனைவி என்றாலும் வருஷம் முப்பது ஆகி விட்டது.வெளியே திருமண வயதில் மகன்.எனவே வாரி எடுக்கும் விஷயமெல்லாம் கிடையாது.உண்மையில் சரோஜாதேவி காலில் விழும்போது அவர் தன்னிச்சையாக தன் உடலை சற்று பின்னல் நகர்த்துவார் பாருங்கள் My God!.வெளியே விஜய் 'நதி எங்கே போகிறது'பாடலை மென்மையாக bass guitar இல் வாசிக்க, oh we are in cloud 9
சரி முடிந்து விட்டது என நினைத்தால் தம்பதிகள் இருவரும் வெளியே வருவார்கள்..உள்ளே சந்திப்பது முப்பது வருஷம் கழித்து.. வெளியே வருகையில் அவர் body language ஓ எதோ திருமணம் ஆன பின் ஒரு நாள் கூட விட்டு பிரியாத மனைவியுடன் வருவது போன்ற ஒரு impression ஐ ஒரு துளி unfamiliarity இருக்கவேண்டுமே மூச்..
(நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், அந்த இடத்தில இன்னொரு நடிகராக இருப்பின் முதல் இரவு முடிந்து வரும் கணவன் reaction ஓ அல்லது பல ஆண்டுகள் பிரிவிற்கு பிறகு சேர்ந்த ஒரு கணவன் காண்பிக்கும் மன நெகிழ்சசியோ தான் காண்பிப்பார்கள்.ஆனால் இவர் காண்பிப்பது ஒரு தனி ரகம்..அந்த முப்பது வருஷப்பிரிவை சில மணி நேரங்களில் regularise செய்து,அதை void ஆக்கி விடுவது
ம்ம்ம்ம் பார்க்கலாம்...Osacar க்கு எவ்வளவு அதிர்ஷ்டம் உள்ளதென்று
Last edited by Ganpat; 1st March 2013 at 08:24 AM.
-
1st March 2013, 08:39 AM
#2016
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Murali Srinivas
[கணேஷ் சார், sorry for the nit picking. அது க.கல்யாணம் இல்லை, ஊட்டி வரை உறவு]
கணேஷ் சார்,
நாற்பதுகளில் வரும் காதல் பற்றிய உங்கள் பதிவிற்கு தனியே சின்னதாகவேனும் ஒரு பதிவு போட வேண்டும்.பார்ப்போம். [ஆமாம், நீங்கள் தஞ்சை குடந்தை பகுதியை பூர்விகமாக கொண்டவரா?]
My Dear Murali,
Brilliant analysis..Kudos.
Thanks for the correction.No "sorry" among friends,please..
ஆமாம் பூர்வீகம் குளித்தலை... காவிரி நதிக்கரை. (திருச்சி மாவட்டம்)
பிறப்பு,வளர்தல்,படிப்பு, வாழ்தல்..கூவம் நதிக்கரை.
நாற்பதுகளில் காதல்..அதை நாற்பது வயது கடந்தவர்கள் அல்லவா எழுத முடியும்? 
அன்புடன்,
Ganpat
-
1st March 2013, 08:40 AM
#2017
Junior Member
Seasoned Hubber
Ganpat Sir,
I have seen Once more many times could you say from which movie(s) the flash back episodes were taken ? I guess it was not from a single movie but from many movies.
-
1st March 2013, 08:43 AM
#2018
Junior Member
Seasoned Hubber
Yes sir, we must do it to mark his name in world history of cinema which the thespian rightfully deserves
-
1st March 2013, 08:44 AM
#2019
Junior Member
Seasoned Hubber
-
1st March 2013, 08:51 AM
#2020
Junior Member
Seasoned Hubber
Sir,
MSV has mentioned about it in this week Anantha Vikatan & about NT giving away Mellisai Mannargal award in 1963.
Bookmarks