இன்னா செய்தாரை ஒருத்தல் - அவர் நாண நன்னயஞ் செய்து விடல் - தொடர்ச்சி (பாகம் 5)
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இதற்கு முன்பு இந்த தலைப்பில் நடிகை டி.வி. குமுதினி, இயக்குனர் எல்லிஸ் ஆர். டங்கன், கவியரசர் கண்ணதாசன் மற்றும் நடிகை பானுமதி ஆகியோருக்கு மக்கள் திலகம் உதவிய நிகழ்ச்சியினைப் பற்றி குறிப்பிட்டு, இத்திரியில் வெளியிட்டு, பார்வையிடுவோரின் கவனத்துக்கு கொண்டு வந்தது அனைவரும் அறிந்ததே. அதன் தொடர்ச்சியாக தற்போது நடிகர் சந்திரபாபு அவர்களுக்கு நமது மக்கள் திலகம் உதவிய சம்பவம் ஒன்றினை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
================================================== ================================================== ===============
நடிகர் சந்திரபாபு ஷீலா என்கின்ற ஆங்கிலோ இந்தியப் பெண்ணை மணந்தார். மணமான சில நாட்களில், கணவன் - மனைவிக்குள் எந்த ஒளிவு மறைவும் இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில், மணமாவதற்கு முன்பு தனக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததை சந்திரபாபு கூறியிருக்கிறார். அந்த பெண்ணும், மணமாவதற்கு முன்பு தனக்கும் இரண்டொரு இளைஞர்களுடன் தொடர்பு இருந்ததாக சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான். வந்தது கோபம் சந்திரபாபுவுக்கு மூர்க்கனாக மாறி அந்த பெண்மணியை வீட்டை விட்டு வெளியே தள்ளி கதவை தாழிட்டுக் கொண்டார். ஷீலா என்கின்ற அந்த பெண்மணியும் எவ்வளவோ மன்றாடியும் சந்திரபாபு கதவைத் திறக்க வில்லை. இரவு நேரம். என்ன செய்வதென்று அறியாத ஷீலா தற்கொலை செய்வது என்ற முடிவுக்கு வந்து விட்டார். இருந்தாலும் சந்திரபாபு அவர்கள் அதிகமாக மதிக்கும் இயக்குனர் சுப்பிரமணியம் (நாடோடி மன்னன் - இயக்குனர் மேற்பார்வை) அவர்களை தொடர்பு கொண்டு தனது முடிவை சொல்லி அழுதிருக்கிறார். அவர் உடனே ஒரு ஆளை அனுப்பி ஷீலாவை தன் வீட்டுக்கு அழைத்து வந்து "எல்லாம் நாளை பேசிக் கொள்ளலாம், முதலில் நீ தூங்கு" என்று சமாதனம் செய்தார். மறுநாள் சந்திரபாபுவை அழைத்து எவ்வளவோ சமாதானம் சொல்லிப் பார்த்திருக்கிறார் சந்திரபாபு இணங்கவில்லை. சுப்பிரமணியம் தொடர்ந்து வற்புறுத்தவே, நீங்கள் வற்புறுத்தினால் நான்தான் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று முடிவாக கூறியிருக்கிறார். வேறு வழியின்றி, இயக்குனர் சுப்ரமணியம் அவர்கள் ஷீலாவிடம் "நடந்ததை மறந்து விட்டு புது வாழ்க்கை தொடங்குவதை தவிர உனக்கு வேறு வழியில்லை. லண்டனில் உள்ள உன் அன்னைக்கு செய்தி அனுப்புகிறேன். அவர்கள் வந்து அழைத்துப்போகும் வரை நீ இங்கேயே என் மக்களோடு மக்களாக இருக்கலாம் என்று கூறி சுமார் ஒரு மாத காலம் தங்க வைத்து ஷீலாவை அவரது தாயாரிடம் ஒப்படைத்தார். அந்த ஒரு மாத காலமும் இயக்குனர் சுப்பிரமணியம் அவர்கள் குடும்பத்தினர் ஷீலாவை கண் போலக் காத்தார்கள்.
ஆதாரம் : வலம்புரி சோமநாதன் எழுதிய "தமிழ்ப்பட உலகின் தந்தை கே சுப்பிரமணியம்" என்ற நூல்.
நாகரீகம் கருதி சந்திரபாபுவின் வேறு சில நடவடிக்கைகள் பற்றி இங்கு குறிப்பிட விரும்ப வில்லை.
================================================== ================================================== ==================
சந்திரபாபுவின் இது போன்ற நடவடிக்கைகள் பிடிக்காமல், நமது பொன்மனச்செம்மல் அவர்களுக்கும், - சந்திரபாபுவுக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இதனால், சந்திரபாபுவின் சொந்தப் படமாகிய "மாடி வீட்டு ஏழை" என்ற படத்தில் தொடர்ந்து நடிக்க தயக்கம் காட்டி வந்தார் நம் எழில் வேந்தன் எம் ஜி ஆர். அவர்கள். அதற்குள், நமது மக்கள் திலகத்தின் வளர்ச்சியிலும், புகழிலும், பொறாமை கொண்ட சிலர், உண்மை நிலவரத்தை திரித்து, தமிழ் திரைப்பட உலகில் வதந்திகளை உலாவ விட்டனர். இதில் சந்திரபாபுவின் பங்கு பெருமளவு உண்டு.
ஆனால் இவற்றையெல்லம் மறந்து விட்டு, சந்திரபாபு அவர்கள் படங்கள் இல்லாமல் கஷ்ட ஜீவனம் நடத்திக் கொண்டிருந்த கால கட்டத்தில், அவருக்கு, பறக்கும் பாவை, அடிமைப்பெண், கண்ணன் என் காதலன் போன்ற தனது படங்களில் தொடர் வாய்ப்புக்கள் அளித்து உதவினார். அடிமைப்பெண் படத்துக்காக நடிக - நடிகையர் ஜெய்ப்பூர் சென்றிருந்தனர். அப்போது சந்திரபாபுவும் அக்குழுவில் இடம் பெற்றிருந்தார். ஜெய்ப்பூரில் அவரது காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டும் கூட, சென்னை திரும்பும் வரை அவருக்கு, சம்பளம் போக தினசரி ஒரு பெரும் தொகை வழங்கி, அவரை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டார் நம் புரட்சித் தலைவர் அவர்கள்.
சந்திரபாபுவும், "பிலிமாலயா" என்ற பத்திரிகையில், நம் சரித்திர நாயகன் எம். ஜி. ஆர். அவர்களைப் பற்றி அவதூறாக எழுதி வந்தார். மிகவும் மோசமாகவும் விமர்சனம் செய்தார் என்பது தனிக் கதை. .

================================================== ================================================== =================
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம் ஜி ஆர்.
எங்கள் இறைவன்
Bookmarks