Page 92 of 397 FirstFirst ... 42829091929394102142192 ... LastLast
Results 911 to 920 of 3965

Thread: Makkal thilagam m.g.r part -5

  1. #911
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by mahendra raj View Post
    Sorry, Eswee, I misread it as though Kannadhasan was representing DMK since it appeared just above his name. Anyway, Eswee, since you were privy to all those happenings around this period you will be the best source to report as it is without bias.

    Bye the way, since you mentioned Kannadhasan I am duty-bound to add a bit of info which I had sourced earlier. As it is well-known the relationship between MGR and Kannadhasan can be likened to that of a husband and wife. When MGR telephoned Kannadhasan some where in 1978 to inform that he is going to appoint him as the poet laureate of the Tamil Nadu State Government the latter was apprehensive. He should know because he was a vocal critic of MGR whether orally or through his writings. Kannadhasan felt guilty and did point out to MGR that people might talk badly. But MGR explained that one should not live the life according to how people perceive. After much persuasion Kannadhasan agreed verbally over the telephone to this government appointment which status was almost similar to that of a minister.

    And the inevitable happened! That very evening at a public meeting Kannadhasan, as usual, started to verbally criticize MGR just like in the immediate past. This news was conveyed to MGR that night by one of his senior party cadres. MGR just shrugged it off with his usual signature smile. He told that Kannadhasan is one person who cannot be controlled just like that by offering tempting gains.

    MGR's offer was reported in Kumudham (or was it Ananda Vikatan?) back in 1978 and the perks Kannadhasan will enjoy as the poet laureate. Even Kannadhasan has mentioned MGR's generosity in his own books adding that His persona is such that he never back stabs anyone. He is sincere and many critics like himself ((Kannadhasan) have actually benefitted by just being friends with him. He treated his foes as friends and not the other way around.

    Even Vaali, in his weekly installment in Thuglak entitled 'Enakkul X- ray: MGR' did mention to the effect that MGR casually told him while traveling in the car about his contemplation to appoint Kannadhasan as the poet laureate. Vaali was with him from 1964 until the last although he did have some minor break-offs and differences with the former. Everyone thought that Vaali will be the chosen one but MGR appointed Kannadhasan instead. That is proof enough of how MGR cherished old-time relationships despite the occasional bitterness and enmity. He also knew of Kannadhasan's wit and wisdom and his contributions towards the Tamil literature which was the other reason. In short he recognized a person's talents and not his personal characteristics.

    Of course, at that time, some tongues were wagging to the effect that MGR appointed Kannadhasan as the poet laureate so as to silence Kannadhasan's criticisms against him. My personal opinion is that Kannadhasan criticized Kalaignar Karunanidhi more than MGR. He actually regretted for bad-mouthing MGR as he was a true gentleman, never to retaliate unlike the other so-called friends. This is written from the bottom of his heart in his Vanavaasam or Manavaasam.

    When we interviewed the late Ponnammal Aachi, first wife of Kaviarasu Kannadhasan way back in 1996 in Singapore at her youngest son's house she related as to how MGR defended the then on-going debate on the medical expenses incurred by Kannadhasan at the hospital in Chicago. The opposition led by Karunanidhi was playing to the gallery in the Tamil Nadu State Assembly as to why the State Government should foot the bill of an unelected representative and that too in the US where the costs were exorbitant. MGR stood his ground firmly till the last and said that the Government is obligated to defray the costs even though the hospitalisation was more than two months. This is because of his virtue of appointment as poet laurete. When Kannadhasan's lifeless body arrived from Chicago by air MGR was at the airport and thence at the house. The flight expenses were also borne by the government and of course Kannadhasan was given a state funeral and the procession led by MGR himself. MGR even went on board the hearse to arrange all those books by Kannadhasan as an after thought. Till to date there is no record of any cinema lyricist being given a state funeral which procession was led by a reigning Chief Minister. Kaviarasu Kannadhasan couldn't have dreamt even in his wildest dreams that he will be accorded such a VVIP treatment on his last journey and led by the man whom he once used to criticize. This incident is reminiscent of the song Naalu Perukku Nandri' (Sangey Muzhangu) by Kannadhasan for MGR but in actuality has been reversed to mean Kannadhasan is singing a gratitude song to MGR. Incidentally, this is the only song ever written by any poet as though a dead man is singing the song if gratitude.

    That goes to show how magnanimous was MGR to his once severe critic, a personal friend and a business partner.

    I will try and post whatever I can re-cap from time to time but in the meantime can Easwee please throw some light as to what really transpired at the Tamil Nadu State Assembly from July to October 1981 pertaining to Kannadhasan's medical issue in Chicago?
    எஸ்வி சார்

    இப்போது புரிகிறதா நான் எதற்காக தங்களிடம் வாதாடினேன் என்று..! இதே நிலை தான் எனக்கும் அப்போது இருந்தது !

    இதற்க்கு நீங்கள் ஒரு பாடல் வேறு எனக்கு பரிசளிபதாக நினைத்துகொண்டு பரிசளிதீர்கள்..! அதற்க்கு மாசனம் சார் உங்களை பாராட்டி வேறு எழுதயுள்ளார்...நீங்கள் அந்த பாடலில் வரும் MGR என்றால் அவர் VKR போலும் !


    மாசானம் சார் ! கோவித்துகொள்ளதீர்கள் உடனயே ! ஒரு Lighter sideukku சொன்னேன் !

    Anyways past is past !
    Last edited by Sowrirajann Sri; 13th May 2013 at 10:43 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #912
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    DEAR KALIYAPERUMAL SIR


    UNGALUKKAAGA



  4. #913
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் சவுரி சார்


    மக்கள் திலகத்தின் இனிய பாடலுடன் இன்றைய பதிவை துவங்கலாம் .மக்கள் திலகத்தின் ரசிகர் திரு மாசனம் அவர்களுக்கும் - உங்களுக்கும் பிடித்த பாடலே .



    just refresh our thoughts

    அறிவுக்கு வேலைகொடு
    பகுத்தறிவுக்கு வேலை கொடு
    மூடப் பழக்கத்தை விட்டுவிடு
    காலம் மாறுது கருத்தும் மாறுது
    நாமும் மாற வேண்டும்
    நம்மால் நாடும் மாற வேண்டும்

    மண்வெட்டி கையில் எடுப்பார்
    சில பேர் மற்றவர்க்கு குழி பறிப்பார்
    அது தன்பக்கம் பார்த்திருக்கும் என்பதை
    தானறிய மறந்திருப்பார்
    ஆகாத பழக்கமெல்லாம்
    மனதுக்குப் பொருந்தாத வழக்கமெல்லாம்
    ஆக்கத்தைக் கெடுத்துவிடும்
    மனிதனின் அழிவுக்கு வழி வகுக்கும்
    பந்தெடுத்து விட்டு எறிந்தால்
    சுவர் மேல் பட்டது போல் திரும்பி வரும்
    இந்தத் தத்துவத்தைத் தானறிந்தால்
    பிறர்க்கு தீங்கு செய்ய எண்ணம் வருமோ
    Last edited by esvee; 14th May 2013 at 08:29 AM.

  5. #914
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    சங்கே முழங்கு சங்கே முழங்கு
    எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
    மங்காத தமிழ் என்று
    சங்கே முழங்கு சங்கே முழங்கு
    எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
    மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு

    எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
    இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு
    பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
    பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
    சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு
    சங்கே முழங்கு சங்கே முழங்கு
    சங்கே முழங்கு

    திங்களோடும் செழும் பருதி தன்னோடும்
    விண்ணோடும் உடுக்களோடும்
    மங்கு கடல் இவற்றோடும்
    பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்
    தமிழுடன் பிறந்தோம் நாங்கள்

    ஆண்மை சிங்கத்தின் கூட்டமென்றும்
    சிறியோர்க்கு ஞாபகம் செய் முழங்கு
    சங்கே சங்கே முழங்கு


    வெங்க்கொடுமை சாக்காட்டில் விளையாடும் தோள்
    எங்கள்வெற்றித் தோள்கள்
    கங்கையைப் போல் காவிரிப் போல்
    கருத்துக்கள் ஊரும் உள்ளம் எங்கள் உள்ளம்
    வெங்குருதி தனில் கமழ்ந்து
    வீரம் செய்கின்ற தமிழ் எங்கள்
    மூச்சாம் தமிழ் எங்கள் மூச்சாம்


    ------------------------------------------------------------------------------------

    ஏன் என்ற கேள்வி
    இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
    நான் என்ற எண்ணம்
    கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை
    பகுத்தறிவு பிறந்ததெல்லாம்
    கேள்விகள் கேட்டதனாலே

    உரிமைகளை பெறுவதெல்லாம்
    உணர்ச்சிகள் உள்ளதனாலே
    Last edited by esvee; 14th May 2013 at 08:41 AM.

  6. #915
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் படங்கள் தற்போது திரையரங்குகளில்


    சென்னை - சரவணா - அன்பே வா

    கோவை - நாடோடிமன்னன்

    புதுவை - உரிமைக்குரல்


    விரைவில் வருகிறது


    நீதிக்கு தலை வணங்கு - கோவை

    உலகம் சுற்றும் வாலிபன் - மதுரை

    அன்பே வா - சேலம்

  7. #916
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    திரு மகேந்திரன் சார்


    கவியரசர் கண்ணதாசன் பற்றிய கட்டுரை அருமை .மக்கள்திலகத்தை பற்றி அவரைப்போல் உயர்வாகவும் எழுதியவர்கள் யாரும் இல்லை . அதே நேரத்தில் அவர் எழுதியது போல் தாக்கி எழுதியவர்கள் யாரும் இல்லை.

    மக்கள் திலகம் சரியான நேரத்தில் கண்ணதாசனுக்கு கெளரவம் செய்து அழகு பார்த்தார் .

    இதை வழக்கம் போல் ஒரு சிலர் கொச்சை படுத்தி விமர்சனம் செய்தார்கள் .
    மக்கள் திலகத்தின் திரைப்பட வாழ்க்கையில் ஒரு மறுமலர்ச்சி -
    உருவாக்கியவர்களில் திரு கருணாநிதி - திரு கண்ணதாசன் இவர்களின் வசனங்கள் மற்றும் கண்ணதாசனின் பாடல்கள்
    என்றும் அழியா புகழ் பெற்றவை .

  8. #917
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    வினோத் சார்..சும்மா கிடைக்கவில்லை எம்ஜிஆர் வெற்றி..உழைத்த உழைப்பும் பட்ட கஷ்டங்களும் கொஞ்சமா..சிங்கத்தின் முன்பு நேரடியாக சண்டை போடலாம்..ஆனால் குள்ள நரியிடம் சண்டையிட்டு வெற்றி பெறுவதென்றால் எவ்வளவு கஷ்டம்...இதோ கண்ணதாசன் கூறுகிறார்...

    எம்.ஜி.ஆர் - கருணாநிதி பற்றி கவியரசர் கண்ணதாசன்


    திமுக வில் இருந்து எம்.ஜி.ஆர்.நீக்கம் ஏன் என்பது பற்றியும் அப்போது தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த நிகழ்வுகளை தமது நான் பார்த்த அரசியல் எனும் புத்தகத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரலாற்று உண்மையை படித்தால் உண்மையாகவே அப்போது நடந்ததை வெளிச்சமிட்டு காட்டுகிறது. தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த உரையாடலை எழுதியுள்ளார்.

    இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். விலகியதைப் பற்றி நான் சில விஷயங்களைச் சொல்வேண்டும்.

    கருணாநிதியும் நானும் இந்தக் கட்டத்தில் நன்றாகப் பழகிக் கொண்டிருந்தோம். உள்ளுக்குள்ளே அவர்கள் இருவருக்கும் தகராறு நடந்து கொண்டிருந்தது.

    திடீரென்று ஒருநாள் கருணாநிதி எனக்கு டெலிபோன் செய்து, “என்னய்யா செய்யலாம்” என்று கேட்டார்.

    “சரி, அவர் கணக்குத்தானே கேட்கிறார். எல்லா ஊர்களிலேயிருந்தும் கணக்கு அனுப்ப வேண்டும் என்று செயற்குழுவிலே தீர்மானம் போட்டு, செயற்குழுவை ஒத்தி வைத்துவிடுங்கள். கணக்கு வருவதற்கு ஒரு தலைமுறையாகும். அதுவரை என்ன செய்வார் என்று பார்க்கலாம்,” என்று நான் சொன்னேன்.

    செயற்குழுவுக்கு முதல் நாள் நண்பர் கருணாநிதி அவர்கள், எனக்கு டெலிபோன் செய்து, “இல்லை இல்லை. அது ஒன்றும் நடக்காது. இன்று ஒரேடியாக ஒழித்துவிட வேண்டியதுதான்” என்று சொன்னார்.

    நான் சொன்னேன், “சில மக்கள் பின்னணி இருக்குமே” என்று.

    “என்ன, பத்துப்பேர் கத்துவான். பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.

    மறுநாள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும் போது, நண்பர் ‘சோ’ அவர்கள் எனக்கு டெலிபோன் செய்தார்.

    “தெரியுமா விஷயம்?” என்று கேட்டார்.

    “என்ன?” என்றார். “தெரியாது” என்றேன்.

    “எம்.ஜி.ஆரை டிஸ்மிஸ் செய்து விட்டார்கள்” என்றார்.

    “இருக்காதே” என்றேன்.

    “இப்பொழுது தான் எனக்குச் செய்தி வந்தது” என்றார்.

    இது இரண்டு மணிக்கு நடந்திருக்கும் என்றால், எனக்கு இரண்டு ஐந்துக்கெல்லாம் இந்தச் செய்தி வந்தது.

    அவர் டெலிபோனை வைத்த உடனேயே, டெலிபோன் மணி அடித்தது.

    கருணாநிதி பேசினார்: “முதல் முதலாக உனக்குத் தானய்யா சொல்லுகிறேன். கேள்விப்பட்டாயா?” என்றார்.

    “உங்களுக்கு முன்னாலே சோ போன் பண்ணினார் அய்யா” என்றேன்.

    “என்ன நினைக்கிறாய்?” என்றார்.

    “கொஞ்சம் கலகம் இருக்குமே” என்றேன்.

    “பார்த்துக் கொள்ளலாம்”என்றார் அவர். “என்ன, பத்து ஊரிலே கலகம் செய்வார்கள். பார்ப்போம்” என்றார்.

    ஆனால் அவர் போட்ட கணக்குத் தவறு. மக்கள் பின்னணி என்பது எழுச்சியாக எழுமானால் காரண காரியங்கள் இன்றியே அது பெருங்கூட்டமாகத் திரளும் என்பதை நான் பல கட்டங்களில் பார்த்திருக்கிறேன்.

    1971 பொதுத் தேர்தலே சான்று.

    அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய பின்னணி இருக்கிறது என்பதை கருணாநிதி கண்டு கொள்ள முடிந்தது.

    இந்தச் சூழ்நிலையில், எம்.ஜி.ஆர். பிரிந்த பிறகும் கூட மாநில சுயாட்சி கோஷமாக ஆக்கி, வாயில் வந்தவாறு இந்திரா காந்தியைத் திட்டவும், காங்கிரஸைத் திட்டவும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தயாரானார்கள்.

    திராவிட முன்னேற்றக் கழக்த்தின் கோயமுத்தூர் மாநில மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கருணாநிதியினுடைய மகனே பேசும்போது, என்னுடைய அப்பா எல்லா விதவைகளுக்கும் ‘பென்ஷன்’ கொடுக்கிறார். இந்திராகாந்தி தேவையானால் வந்து வாங்கிக் கொள்ளட்டுமே” என்று பேசியதாகச் செய்தி வந்தது.

    ஆசைதம்பி பேசும்போது இந்திராகாந்தியை, “என்ன இவள், எலெக்*ஷன் நடத்தினால் நடத்தட்டும், இல்லா விட்டால் நாம் நடத்துவோம்” என்று பேசினார். அதே மாதிரி மற்றவர்களும் பேசினார்கள்.

    இவையெல்லாம் சி.பி.ஐ. ரிப்போர்ட்டாக இந்திரா காந்திக்குப் போய்ச் சேரும் என்று அவர்கள் யாரும் அப்போது கருதவில்லை.

    1970 – 1974 க்கு இடைப்பட்ட காலத்தில் எம்.ஜி.ஆர். அரசியல் தலைவரானதை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

    அரசியலில் ஒரு கட்சியைத் துவக்க வேண்டும், தலைவராக வேண்டும் என்கின்ற விருப்பம் எப்போதுமே எம்.ஜி.ஆருக்கு இருந்ததில்லை என்பது எனக்குத் தெரியும்.

    சினிமா உலகத்தில் தன்னுடைய ஆதிக்கத்தை விட்டு விடக்கூடாது, அரசியலில் தன்னுடைய பிடியை விட்டு விடக் கூடாது என்றுதான் அவர் நினைப்பாரே தவிர, முழு அரசியல்வாதியாக முழு நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ள அவர் எப்போதும் விரும்புவதில்லை.

    ஆனால் அவரை வலுக்கட்டாயமாக அரசியலில் ஒரு தலைவராக்கிய பெருமை நண்பர் கருணாநிதிக்கு உண்டு. கட்சியிலிருந்து அவரை விலக்கியதன் மூலமாக ஏராளமான கூட்டத்தை அவர் பக்கத்தில் ஓடவிட்ட பெருமையும் கருணாநிதிக்கு உண்டு.

    எம்.ஜி.ஆரைப் பின் தொடர்ந்து தொண்டர்கள் அனைவரும் போய் விட்டார்கள்.

    முதன் முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1961 ஏப்ரலில் பிளவு ஏற்பட்டது.

    அந்தப் பிளவுக்கு நானும் சம்பத்தும் காரணமாக இருந்தோம். எங்களைப் பின்பற்றி வந்தவர்கள் மாவட்டங்களில் நல்ல தலைவர்களாக இருந்தார்களே தவிர, தொண்டர்களாக இல்லை. ஏராளமான தொண்டர்கள் தி.மு.கழகத்திலிருந்து எங்களுக்குக் கிடைக்கவில்லை. எங்களுக்குக் கிடைத்ததெல்லாம் காங்கிரஸ் தொண்டர்களும், திராவிடக் கழகத் தொண்டர்களும்தான்.

    ஆனால் எம்.ஜி.ஆர். விலக்கப்பட்ட பிற்பாடு, அவருக்குப் பின்னணியாக நின்றவர்கள் அனைவரும் மிக அற்புதமான தி.மு.கழகத் தொண்டர்களாக இருந்தார்கள்.

    கட்டுப்பாடற்ற, முறையாக செயல் திட்டமற்ற தொண்டர்கள் தான் என்றாலும், ஒரே தலைவரின் கீழே திரண்டவர்கள். எம்.ஜி.ஆரிடம் அவர்கள் உயிரையே வைத்திருந்தார்கள்.

    அந்த முறையில் எம்.ஜி.ஆரைப் பின்பற்றியே அனைவரும் போனார்கள் என்பது மட்டுமல்லாமல், அரசியல் கட்சியில் ஒரு தலைவர் நீக்கப்பட்டார் என்பதற்காக நாடு முழுவதிலும் கொந்தளிப்பு ஏற்பட்ட சம்பவம் இது இரண்டாவது முறையாகும்.

    இந்திராகாந்தி நீக்கப்பட்ட போது முதன் முதலில் எப்படி நாடு முழுவதிலும் ஒரு எதிரொலி ஏற்பட்டதோ, அப்படியேதான் எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டவுடனே தமிழ்நாடு முழுவதிலும் எதிரொலி ஏற்பட்டது.

    இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைப் போலவே ஒரு மாபெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. ஆங்காங்கே கார்களையும், பஸ்களையும், லாரிகளையும், நிறுத்தி அதில் எழுதத் தொடங்கினார்கள்.

    சின்னச் சின்னப் பள்ளி மாணவர்களிலேயிருந்து கல்லூரி மாணவர்கள் வரை, அதில் ஈடுபட்டார்கள். தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். கை வண்டி இழுப்பவர்களில் இருந்து, கடலை விற்போர்கள் வரையில் ஆத்திரப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

    ஆகவே, ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற ஒரு பெரிய இயக்கத்தைத் துவக்க வேண்டிய நிர்பந்தம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது.

    அப்படித் துவங்கியவுடனே அது தமிழக அளவில் பெரிதாக வளர்ந்ததும் மிகச் சுலபமாக நடந்தது. வளர்ந்தது என்று சொல்வதைவிட வளர்ந்த நிலையிலேயே அது உருவாயிற்று என்று சொல்வது பொருந்தும்.

    அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் கட்சியாகத் தமிழகத்தில் விளங்கும் என்று நான் எதிர் பார்த்ததுண்டு. அது நியாயமாக நடந்துவிட்டது.

    அதைச் சரிக்கட்டவும், ‘அப்படியொன்றும் இல்லை’ என்று காட்டவும் நண்பர் கருணாநிதி பல்வேறு திசையில் பிராயணம் செய்து பார்த்தார். பல ஊர்களில் அவர் பேசவே முடியாமல் போயிற்று.

    எம்.ஜி.ஆர். மீது ஜனங்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இருந்த பிரியம் என்பது சாதாரணமானதாக இல்லை.

    அதற்குக் காரணம் நியாயமா இல்லையா என்று ஆராய்வதைவிட, ஏதோ சில காரியங்களை அவர் செய்திருக்கிறார், செய்யக்கூடியவர், நியாயமானவர், நேர்மையானவர், ஒழுக்கமானவர் என்றெல்லாம் மக்கள் எண்ணினார்கள். அப்படி எண்ணிய மக்களின் நம்பிக்கை வீண் போகவில்லை.

    கருணாநிதியின் மீது மக்களுக்கிருந்த நல்ல பெயரை அதுதான் போக்கடித்தது.

    எம்.ஜி.ஆரை அவர் விலக்காமல் இருந்திருந்தால் நிலைமைகள் வேறுபட்டிருக்கக் கூடும்.

    திராவிட முன்னேற்றக் கழகத்தைக் தவிர வேறு யாரும் ஆட்சிக்கு வருவதென்பது இன்னும் ஒரு 25 ஆண்டுக் காலத்துக்கு நடக்காமலேயே போயிருக்கும்.

    அதனால் எம்.ஜி.ஆருடைய விலகம் காரணமாக, எம்.ஜி.ஆர் விலக்கப்பட்டதன் காரணமாக, திராவிட முன்னேற்றக் கழகம் மெலியும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற கட்சி ஓங்கி வளரும் என்று நம்பினேன்.

    மற்ற நடிகர்களைப் போல் அவரும் ஒரு நடிகர்தான் என்றாலும், அரசியல் ஈடுபாட்டில் அவருக்கு இருந்த பிடிப்பின் காரணமாக, சில அரசியல் தத்துவங்களையும் அவர் உணர்ந்து கொண்டிருந்தார்.

    விஷயங்களுக்குப் பதில் சொல்வதில் கெட்டிக்காரராக விளங்கினார். பிரச்சனைகளுக்குப் பரிகாரம் தேடுவதிலும் கெட்டிக்காரராக விளங்கினார். ஒரு கட்சியை நடத்தக் கூடிய சாமர்த்தியம் தனக்கு இருக்கிறது என்பதையும் காட்டினார்.

    “பிரித்தலும் பேணிக் கொளலும் பிரித்தார்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு”

    - என்றும் அவர் காட்டினார்.

    அவர் கட்சிக்குள் மிக முக்கியமான ஆட்களும் உள்ளே நுழைய ஆரம்பித்தார்கள்.

    அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்த்தில் அங்கம் வகித்தவர்களில் பட்டதாரிகள் அதிகமாக இருந்தார்கள். அதே அளவுக்கு பட்டமோ, படிப்போ இல்லாத கிராம வாசிகளும் அதிகமாக இருந்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் எவ்வளவு எரிச்சல் அடைந்தும் கூட இந்த வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.

    எம்.ஜி.ஆருக்கு எதிராகக் கருணாநிதி அதிகார பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டும் கூட அவரால் அவருடைய வளர்ச்சியை நிறுத்த முடியவில்லை.

    கருணாநிதிக்கு இல்லாத சில புதிய திறமைகளும், எம்.ஜி.ஆருக்கு இருந்ததாக அந்தக் காலங்களில் கருதப்பட்டது. உண்மையாகவே ஒரு கட்டத்தில் ஆகிவிட்டது.

    எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையில் நீண்டகாலமாகத் தொழில் தொடர்பு உண்டு. அந்தத் தொடர்புகளில் கசப்பு இருந்தாலும், இனிப்பும் இருந்தது.

    ஆனால் அரசியலில் அவர் நடந்து கொண்ட முறையும், சாமர்த்தியமும் எனக்கே திகைப்பாக இருந்தன. நமக்குக்கூட அந்த அளவுக்கு உழைக்கின்ற சக்தி இல்லை என்பது புரிந்தது.

    திண்டுக்கல் தேர்தலில் அவர் ஈடுபட்ட போது, அந்தத் தேர்தலுக்கு அவர் பட்டபாடு, அதிகாலையிலிருந்து இரவு வரையில் அவர் செய்துவந்த சுற்றுப்பயணங்கள், இவை வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

    சோம்பல் என்பது துளியும் இல்லாமல், அவர் எந்தச் சூழ்நிலையிலேயும் யாரையும் சந்திப்பதற்குத் தயாராக இருந்து மாபெரும் வெற்றி ஒன்றை, எல்லாக் கட்சிகளையும் எதிர்த்துப் பெற்றார் என்பது, தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகும்.

    இந்த நேரத்தில் நண்பர் கருணாநிதி அவர்களைப் பற்றியும் தெளிவாகச் சில விஷயங்களைச் சொல்லி விடுவது நல்லது என்று நான் கருதுகிறேன்.

    ஏற்கனவே ‘வனவாச’த்திலும் மற்ற இடங்களிலும் நான் அவரைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன் என்றாலும், அரசியல் ரீதியாக இரண்டொரு விஷயங்களை நான் கூறியாக வேண்டும்.

    கருணாநிதி அரசியல் நிர்வாகத்தில் மிகுந்த திறமைசாலி. ‘எங்கே எந்தத் தொண்டன் இருக்கிறான், எந்த மாவட்டத்தில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள், எந்த ஊரில் கிளை இருக்கிறது இல்லை’ என்கிற அனைத்தும் அவர் விரல் நுனியில் அடங்கி இருந்தன. அவ்வளவு திறமைசாலி.

    பேச்சில் ஒருவரை வளைக்க வேண்டும் என்றால் அவரால் வளைக்க முடியும். முன்னாலே உட்கார்ந்திருப்பவர்களை அழ வைக்க வேண்டும் என்றால் அழ வைக்க முடியும். யாரைப் பக்கத்திலே இழுக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ, அவர்களை சாகசம் பண்ணியாயவது வரவழைத்து விடுவார், உள்ளே இழுத்து விடுவார்.

    கம்யூனிஸ்டு கட்சியில் இருந்துகூட ஆட்களை இழுத்துக் கொள்ளக் கூடிய சாமர்த்தியம் அவருக்கு மட்டுமே உண்டு. எந்தக் கட்டுப்பாட்டையும் உடைத்து ஆட்களை இழுக்கக் கூடியவர்.

    எம்.ஜி.ஆர். விஷயத்தில், யானை தடம் தப்பியதைப் போலத் தப்பினாரே தவிர, மற்றபடி அவருக்கு அரசியல் சாமர்த்தியம் என்பது மிக அதிகம்.

    நிர்வாகத்தில் ஏற்கனவே இருந்த எல்லாரையும் விட அவர் திறமைசாலி என்று செக்ரட்டேரியட்டில் இன்றைக்கும் எல்லாரும் ஒப்புக் கொள்கிறார்கள்.

    ஆனால் கருணாநிதியை பொறுத்தவரைக்கும் இருந்த மிகப் பெரிய பலவீனம், ‘பணம், பதவி’ இந்த இரண்டும் தன்னுடைய குடும்பத்திற்குப் போகத்தான் மற்றவர்களுக்கு என்று, ஒன்றை வைத்திருந்தார்.

    இந்த எண்ணம் எம்.ஜி.ஆரிடம் எப்போதும் இருந்ததில்லை. இந்தப் பணமும், பதவியும், தனக்கும் தன் வீட்டுக்கும் என்று அவர் கருதியதில்லை.

    ஆனால் கருணாநிதியைப் பொறுத்தவரை ஒரு பதவி காலியானால் அதில் மாறனைப் போடலாமா, மற்ற நெருங்கிய நண்பர்களைப் போடலாமா, உறவினர்களைப் போடலாமா என்று தான் கருதுவார். பணம் ஏதாவது கிடைக்குமானால் குடும்பத்திற்கு ஒதுக்கிக் கொண்டு மீதியில்தான் மற்றவர்களுக்கு செலவழிக்கலாம் என்று கருதுவார்.

    அதே நேரத்தில் நானும் அவரோடு 25 வருடங்களாகப் பழகியிருந்தேன். காரில் ஏறி உட்கார்ந்தாலோ, கடை வீதியில் இறங்கினாலோ, யாராவது பிச்சைக்காரர்கள் வந்து காசு கேட்டாலோ நாலணா போடலாம் என்கின்ற எண்ணம் ஒருபோதும் இவருக்கு வந்ததில்லை. அப்படிப் போடுவது பயனற்றது என்றும் அவர் கருதுவார்.

    ஆனால் எம்.ஜி.ஆர். அவர்களைப் பொறுத்துவரைக்கும் 10,000 கொடுக்க வேண்டிய இடத்தில் 20,000-மாவது கொடுத்து விடுவார்.

    இரண்டு பேருக்கு இடையிலே பேதம் இது என்றால் கருணாநிதியினுடைய சுபாவம் இது.

    பணத்தையும் பதவியையும் பெரிதாக நினைத்த காரணத்தினால்தான், அந்த பலஹீனத்தினால்தான், மிகப் பெரிய அவருடைய பலங்களெல்லாம் அடிப்பட்டுப்போய் கடையில் அவருக்குப் பல சிரமங்கள் தோன்றின என்று நான் கருதுகிறேன்.

    நன்றி..கண்ணதாசனின் - நான் பார்த்த அரசியல்

    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

  9. #918
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பு நண்பர் கலியபெருமாள் அவர்களுக்கு
    இந்த திரியில் தங்களுக்கு முதல் முதலில் எழுதும் மடல் என்று நினைகிறேன். மிகவும் அருமையான தொகுப்பு.

    இது போன்ற நல்ல புத்தகங்கள் என்ன என்ன இருக்கிறது தமிழக அரசியல் வரலாறு பற்றி அறிந்துகொள்ள என்று உரைதீர்கலேயானால் அந்த புத்தகங்களை வாங்கி படிப்தற்கு உதவியாக இருக்கும் எனக்கு.

    கூறுவீர்கள் என்ற நம்பிக்கையில்

    அன்புடன்
    சௌரிராஜன்

  10. #919
    Junior Member Devoted Hubber masanam's Avatar
    Join Date
    May 2011
    Location
    Kuala Lumpur
    Posts
    1
    Post Thanks / Like
    மக்கள் திலகம் அருமை பெருமைகளை இயம்பும் திரியாகவே இருந்தால் நல்லது. அரசியல் பேச வேறு ஏதாவது திரியைப் பயன்படுத்திக் கொள்ளலாமே.. மற்றொரு திரியில் இதே போல் சில பதிவர்கள் அரசியல் பேச ஆரம்பித்ததைப் போன்று நாமும் பயணிக்க வேண்டாமே..
    Last edited by masanam; 14th May 2013 at 11:45 AM.

  11. #920
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நல்ல விருந்து என்பது பொரியல், கூட்டு, ஊறுகாய், பாயசம், பப்படம், சாம்பார், ரசம், மோர் என்பதாகும். இதில் ஏதாவது ஒன்று மட்டுமே இலையில் முழுவதுமாக இருந்தால் அதன் பெயர் விருந்தல்ல ! விருப்பம் இல்லாதவர்கள் விருந்தில் கலந்துகொள்ளாமல் விருந்து என்ற ஒன்று இருப்பதாக நினைக்காமல் இருப்பது உத்தமம் ! அதைவிடுத்து ....

    மேலும் கலியபெருமாள் சார் அவர்கள் இடுகை செய்த அந்த பதிவு என்னைபோன்றோருக்கு புதிய விஷயம். தெரிந்துகொள்ளவேண்டிய விஷயமும் கூட...!

    அதில் மக்கள் திலகம் புகழ் மட்டுமே பாடப்பட்டுள்ளது கண்ணதாசன் என்ற கவிஞரால் ! திரு.mgr அவர்களையும் அரசியலையும் எப்படி பிரிக்க முடியும்? இரெண்டும் ஒன்றோடு ஒன்று 1948 முதல் ஒன்றாக கலந்துவிட்ட விஷயம் !

    மேலும்...ஒருவர் என்ன பேசவேண்டும், எதை பேசவேண்டும், எங்கு பேசவேண்டும் என்பது அவர் அவர் சுதந்திரத்தை பொருத்தது..திரி என்பது பதிவுகளையும், அது மற்றவர்கள் படித்து அதற்க்கு அவர்களுடைய கருத்துக்களை பதிபிடுவதர்க்கு மட்டுமே ஆகும்.

    அதை தடை செய்ய திரியின் உரிமையாளருக்கு மட்டுமே உரிமை உண்டு . மற்ற அனைவரும் அதில் பங்குகொள்பவர்கள் மாத்திரமே !
    Last edited by Sowrirajann Sri; 14th May 2013 at 12:10 PM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •