Page 103 of 397 FirstFirst ... 35393101102103104105113153203 ... LastLast
Results 1,021 to 1,030 of 3965

Thread: Makkal thilagam m.g.r part -5

  1. #1021
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like
    எஸ்வி சார்

    முக்கியமானதை விட்டுடீங்களே

    எங்கள் தங்கம் திரைப்படத்தில் பாடலாசிரியர்..நான் அளவோடு ரசிப்பவன் என்று எழுதி..அதை தூக்கலாக எப்படி முடிப்பதென்று அறியாதிருக்க அங்கு வந்த கருணாநிதி அவரின் நிலை கண்டு..என்ன என்று கேட்க அவர் தன நிலையை கூற....உடனே....."எதையும் அளவின்றி கொடுப்பவன்" என்று முடியுங்கள் என்று கூற....அருமையான வரி அல்லவா அது !

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1022
    Junior Member Devoted Hubber masanam's Avatar
    Join Date
    May 2011
    Location
    Kuala Lumpur
    Posts
    1
    Post Thanks / Like
    மேஜர்தாசனின் 'தி​ரைச் சு​வை' நூலிலிருந்து...

    நட்பின் பண்புக்கு உதாரணம்
    எம்.ஜி.ஆரும் கலைஞரும் - கவிஞர் வாலி (அதிலிருந்து சில பகுதிகள்..)

    கேள்வி : மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்காக எத்தனை படங்களில் பாடல்களை எழுதியிருக்கிறீர்கள். அதில் உங்களுக்கே பிடித்த இரு பாடல்களைக் கூறுங்களேன் என்றேன்.
    கவிஞர் வாலி : 'மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்காக 63 படங்களில் பாடல்களை எழுதியிருக்கி​றேன். 'படகோட்டி' படத்தில் இடம்பெற்ற 'கொடுத்ததெல்லாம் கொடுத்தான்...' என்ற பாட்டும். 'தரைமேல் பிறக்கவைத்தான்....' என்ற பாட்டும்தான் எனக்கு மிகவும் பிடித்த பாட்டு என்றார்.

    கேள்வி : நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்கு எத்தனை படங்களில் பாடல்களை எழுதியிருக்கிறீர்கள். அதில் மிகவும் பிடித்த பாட்டு?
    கவிஞர் வாலி : நடிகர் திலகத்திற்கு 66 படங்களில் பாடல்களை எழுதியிருக்கிறேன். அவைகளில் 'பேசும் தெய்வம்' படத்தில் இடம்பெற்ற 'அழகுதெய்வம் மெல்லமெல்ல' என்ற பாட்டுதான் எனக்கு மிகவும் பிடித்த பாட்டு.

    கேள்வி : உங்களுடைய அருமை நண்பர் கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கு நீங்கள் எழுதிய பாடல்களில் மிகவும் பிடித்தமான பாட்டு என்று உங்களிடம் ஏதாவது கூறியிருக்கிறாரா?
    கவிஞர் வாலி : 'கற்பகம்' படத்தில் நான் எழுதிய 'பக்கத்து வீட்டு பருவ மச்சான்' என்ற பாட்டுதான் கவிஞர் கண்ணதாசனுக்கு மிகவும் பிடித்தப் பாட்டு. இதை அவர் என்னிடம் பலமுறை கூறியிருக்கிறார்.

    கேள்வி : கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் எது?
    கவிஞர் வாலி : கவிஞரின் எல்லா பாடல்களுமே எனக்குப் பிடிக்கும். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் 'சுமைதாங்கி' படத்தில் 'மயக்கமா... கலக்கமா...' என்ற பாட்டும். 'அவன்தான் மனிதன்' படத்தில் 'ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா...' என்ற பாட்டும் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றார் வலி.

    வழுவூர் ராமையா பிள்ளையிடம் பரதம் பயின்றவர். பத்மினி, ஈ.வி.சரோஜா ஆகியோருடன் சேர்ந்து நடனம் ஆடியவர். எஸ்.வி. சகஸ்ரநாமத்தின் 'குயில்' நாடகத்தில் கதாநாயகியாக நடித்த ரமண திலகம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் வாலி. அந்த அன்பு மனைவி கடந்த 14-9-2009 அன்று திடீரென்று இயற்கை எய்தினார். அப்போது அவருக்கு வயது 65. இவர்களுக்கு பாலாஜி (40) என்ற ஒரே ஒரு செல்ல மகன்.

    கேள்வி : மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். - கலைஞர் கருணாநிதி இவர்களின் நட்பின் பண்புக்கு ஒரு உதாரணம் கூறுங்களேன்??
    கவிஞர் வாலி : எம்.ஜி.ஆர். குண்டடிபட்டு இறைவனருளால் மீண்டும் நல்லபடியாக வந்த நேரம். அப்போது மேகலா பிக்சர்சின் 'எங்கள் தங்கம்' படத்திற்காக 'நான் செத்துப் பிழைச்சவன்டா - எமனை பார்த்து சிரிச்சவன்டா என்ற பாடல் எழுதிக்கொண்டு அதை எம்.ஜி.ஆரிடம் காட்டுவதற்காக நானும் முரசொலி மாறனும் ஜெமினி ஸ்டுடியோவில் 'நீரும் நெருப்பும்' படத்திற்காக ஒப்பனை செய்து கொண்டிருந்த அறைக்குச் சென்றோம். மாறன் அவர்கள் வெளியே தங்கிவிட்டார். நான் மட்டும் எம்.ஜி.ஆரிடம் அந்தப் பாட்டை பாடிக் காண்பித்தேன். சந்தோஷப்பட்டார். பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை.

    "வாலி...நாட்டுக்காக உயிரை துச்சமா நினைச்சவங்களைப் பத்தி இந்தப் பாட்டுலே எழுதியிருக்கீங்க... இருந்தாலும் நம்ம தமிழ்மொழிக்காகத் தண்டவாளத்திலே தலைவெச்சுப்படுத்தவரு நம்ம கலைஞர். அவரைப் பற்றி ஒரு சரணம் எழுதி இந்தப் பாட்டுலே சேர்த்திடுங்க என்றார். நான் பிரமித்துப்போனேன். உடனே இரண்டாவது சரணத்தில் 'ஓடும் ரெயிலை இடைமறித்து, அதன் பாதையிலே தனது தலைவைத்து, உயிரையும் துரும்பாய்த்தான் மதித்து - தமிழ்ப்பெயரை காத்த கூட்டமிது என்று எழுதினேன். கட்டிமுத்தமிட்டு அனுப்பினார்.

    இதே படத்தில் இன்னொரு பாட்டில் 'நான் அளவோடு ரசிப்பவன்..." என்று முதல் வரியை எழுதிவிட்டு இரண்டாவது வரியை சிந்தித்துக் கொண்டிருக்கும்போது என் பக்கத்தில் அமர்ந்திருந்த கலைஞர், வாலி... இரண்டாவது வரியை 'எதையும் அளவின்றி கொடுப்பான்' என்று போட்டா நல்லாயிருக்குமே. நம்ம எம்.ஜி.ஆர்தான் வாரிவாரி வழங்குகின்ற வள்ளலாச்சே என்றார். அதன்படியே அடுத்த வரியை சேர்த்தேன். பிறகு அடுத்தடுத்த வரிகளை மிகவும் ஈசியாக எழுதினேன்.

    நீங்க கேட்ட கேள்விக்கு இந்த ஒரு உதாரணமே நச்சுன்னு இருக்கும். இதெல்லாம் நடந்த உண்மை என்றார். ஏராளமான எம்.ஜி.ஆர். படங்களுக்கு பாடல்கள் எழுதிக் கொண்டிருந்த நேரம் நடிகர் திலகம் படங்களுக்கு நான் பாட்டெழுத ஆரம்பித்த சமயம் மக்கள் திலகம் எம.ஜி.ஆர். அதைப் பற்றி நினைத்துக் கோபப்படவோ, அவருக்கு பாட்டு எழுதக்கூடாது என்றோ என்னிடம் கூறியதே கிடையாது. அதற்கு ஒரு உதாரணம் சிவாஜியின் நெருங்கின நண்பர் பெரியண்ணன் என்பவர் சாந்தி பிலிம்ஸ் சார்பாக 'அன்புக் கரங்கள்' என்ற படத்தை தயாரிக்க முடிவு செய்தார். அப்போது சிவாஜியிடம் என்னை பெரியண்ணன் அறிமுகப்படுத்தினார். பரஸ்பர விசாரிப்புக்குப் பிறகு 'அன்புக் கரங்கள்' படத்தில் பாடல் எழுத ஒப்பந்தமானேன். 'அன்புக் கரங்கள்' படத்தில் நான் பாடல் எழுதுவது குறித்து படத்தில் முழுப் பக்க விளம்பரத்தில் என் பெயரும் இடம்பெற்றிருந்தது. அன்று 'தாழம்பூ' படத்தின் படப் பிடிப்பில் எம்.ஜி.ஆர். அவர்களை சந்திக்க நேர்ந்தது. அப்போது அவர் கிண்டலாக 'உங்க அன்புக் கரங்கள்' எப்போ ரிலீஸ் என்றார். உடனே நான் 'உங்க அன்புக் கரங்களிலிருந்து என்றைக்குமே எனக்கு ரிலீஸ் கிடையாது' என்று கூறியதும் கண்கள் பனிக்க எம்.ஜி.ஆர். என்னைத் தட்டிக் கொடுத்துப் பாராட்டினார். நீங்க எப்போவும் பிசியாக இருக்கணும். எல்லா கலைஞர்களுக்கும் பாடல்களை எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் என்று மானசீகமாக வாழ்த்தினார். அவருடைய அந்த வாழத்துதான் என்னை இன்றும் எழுத வைத்துக் கொண்டிருக்கிறது.
    Last edited by masanam; 17th May 2013 at 01:47 PM.

  4. #1023
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like



    THAIKU PIN THARAM

  5. #1024
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like



    THAIKU PIN THARAM - 1

  6. #1025
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by ravichandrran View Post
    எழில் வேந்தன் படத்தை இயற்கை காட்சிகளுடன் இணைத்து எழிலூட்டும் பணியை இடைவிடாது செய்யும் இனிய நண்பர் திருப்பூர் திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு இதயம் கனிந்த நன்றி..தங்கள் பணி இன்னும் சிறக்க வாழ்த்தும் அன்பன் கலியபெருமாள்..

    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
    Last edited by kaliaperumal vinayagam; 17th May 2013 at 03:58 PM.

  7. #1026
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    சங்கே முழங்கு

    4.2.1972

    வெல்லிங்டன் - 56 நாட்கள்

    கிருஷ்ணா -69 நாட்கள்

    சரவணா -42 நாட்கள்

    கமலா - 36 நாட்கள்


    பெங்களூர்

    நடராஜ் -28 நாட்கள்

    சிவாஜி -28 நாட்கள்

    அபேரா -28 நாட்கள்


    சங்கே முழங்கு

    மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பில் வந்த படம் .

    இயக்குனர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் வசனத்தில் வந்த படம் .

    கண்ணதாசனின் பாடல்கள் எல்லாமே இனிமை .

    கோர்ட் காட்சிகளில் மக்கள் திலகம் - வி கே ராமசாமி - அசோகன்

    சம்பந்த பட்ட காட்சிகளில் எம்ஜியாரின் குறுக்கு விசாரணை - நடிப்பு மிகவும் அருமையாக இருக்கும் ,

    மக்கள் திலகம் - ஹெலன் நடனம் - பாடல் காட்சிகள் சூப்பர்.

    நாலு பேருக்கு நன்றி - பாடல் கட்சியில் மக்கள் திலகத்தின் உணர்ச்சி மிக்க மௌன நடிப்பு பிரமாதம் .

    அழகில் நீ ஒரு கலை

    இரண்டு கண்கள் பேசும் மொழியில் ..

    இரண்டு பாடல்கள் இனிமை .


    பொம்பள சிரிச்சா போச்சு பாடலில் மக்கள் திலகத்தின் சுறுசுறுப்பான நடனம் ரசிகர்களுக்கு விருந்து .
    Last edited by esvee; 17th May 2013 at 07:30 PM.

  8. #1027
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  9. #1028
    Junior Member Devoted Hubber masanam's Avatar
    Join Date
    May 2011
    Location
    Kuala Lumpur
    Posts
    1
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    சங்கே முழங்கு

    4.2.1972

    வெல்லிங்டன் - 56 நாட்கள்

    கிருஷ்ணா -69 நாட்கள்

    சரவணா -42 நாட்கள்

    கமலா - 36 நாட்கள்


    பெங்களூர்

    நடராஜ் -28 நாட்கள்

    சிவாஜி -28 நாட்கள்

    அபேரா -28 நாட்கள்


    சங்கே முழங்கு

    மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பில் வந்த படம் .

    இயக்குனர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் வசனத்தில் வந்த படம் .

    கண்ணதாசனின் பாடல்கள் எல்லாமே இனிமை .

    கோர்ட் காட்சிகளில் மக்கள் திலகம் - வி கே ராமசாமி - அசோகன்

    சம்பந்த பட்ட காட்சிகளில் எம்ஜியாரின் குறுக்கு விசாரணை - நடிப்பு மிகவும் அருமையாக இருக்கும் ,

    மக்கள் திலகம் - ஹெலன் நடனம் - பாடல் காட்சிகள் சூப்பர்.

    நாலு பேருக்கு நன்றி - பாடல் கட்சியில் மக்கள் திலகத்தின் உணர்ச்சி மிக்க மௌன நடிப்பு பிரமாதம் .

    அழகில் நீ ஒரு கலை

    இரண்டு கண்கள் பேசும் மொழியில் ..

    இரண்டு பாடல்கள் இனிமை .


    பொம்பள சிரிச்சா போச்சு பாடலில் மக்கள் திலகத்தின் சுறுசுறுப்பான நடனம் ரசிகர்களுக்கு விருந்து .
    சங்கே முழங்கில் மக்கள் திலகம் பஞ்சாபி வேடத்தில் படு பொருத்தமாக இருப்பார்.

  10. #1029
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like



  11. #1030
    Junior Member Devoted Hubber masanam's Avatar
    Join Date
    May 2011
    Location
    Kuala Lumpur
    Posts
    1
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post


    (சொன்ன உடனே வழங்கிய) மக்கள் திலகம் பஞ்சாபி வேடத்தில் தோன்றும்
    சிலர் குடிப்பது போல நடிப்பார், தமிழில் அது ஒரு இனிய கலை - பாடல்கள் பார்க்க இனிமை.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •