Page 125 of 397 FirstFirst ... 2575115123124125126127135175225 ... LastLast
Results 1,241 to 1,250 of 3965

Thread: Makkal thilagam m.g.r part -5

  1. #1241
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #1242
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    நம் நாட்டின் சரித்திரத்தில் ஜவஹர்லால் நேரு, எம்.ஜி.ஆர் இருவரும் மிகப் பிரபலமானவர்கள், மக்களால் பெருமளவில் விரும்பப் பட்டவர்கள், துதிக்கப் பட்டவர்கள். இவர்களின் பெயர் மட்டுமே மக்கள் மனத்தில் பெரும் உணர்வெழுச்சியை உண்டாக்கும் வல்லமை பெற்றது.

    இவர்கள் எவ்வாறு இந்த அளவுக்கு பாபுலாரிடியைப் பெற்றார்கள் என்று சற்றே ஆராய்ந்தோமானால், அத்தகைய நிலை தன்னிச்சையாகத் தோன்ற வாய்ப்பில்லை என்பது தெளிவாகிறது. அத்தகைய பெருமையை அடைய வேண்டுமானால் அதற்கான சிறப்பு முயற்சியை மேற்கொண்டு, அதற்கேற்ற உழைப்பை அளிக்க வேண்டும்.

    மேற்கூறிய இருவரும் systemmatic-காக தங்களைப் பற்றிய ஒரு உயர் நிலை உணர்வினை மக்கள் மனத்தில் பதித்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல, அத்தகைய படிவத்தை உரம் போட்டு, நீரூற்றி வளர்த்தும் வந்திருக்கிறார்கள். அவர்களின் பெருமைகளை நான் குறைத்துச் சொல்லவில்லை.

    இத்தகைய முயற்சிக்கு முழுமுதல் தேவை - மனித மனத்தின் இயல்புகள், செயல்பாடுகள், நிறைகுறைகள் (idiosyncrasies, susceptibilities, propensities, thought process and patterns of behaviour) முதலியவற்றைப் பற்றிய முழுப் புரிதலும் உங்கள் வசப் பட்டிருக்க வேண்டும். எந்த வகையில் அணுகினால் மக்கள் மத்தியில் எத்தகைய எதிர்வினை ஏற்படும் என்பதைக் கண்டு கொண்டு, அதற்கேற்றதொரு தோற்றத்தை மக்கள் கண்முன் அளிக்க வேண்டும். இந்தக் கலையில் அவர்கள் இருவரும் முழுத் தேர்ச்சி பெற்றவர்களாக விளங்கினார்கள் என்பது திண்ணம்!

    ஜவஹர்லால் நேருவை எடுத்துக் கொண்டால் அவர் உடை உடுத்துவதில் ஒரு தனித்துவம் பெற்ற ஸ்டைலை மேற்கொண்டார். பளீரென்ற உடை, குல்லாய், ரோஜாப்பூ, சிரித்த முகம் இவை நேருவை நமக்கு அடையாளம் காட்டுகின்றன. அவர், திறமை வாய்ந்த செய்தி ஒருங்கிணைப்பாளர்கள் உதவியால் செய்தித் தாள், வானொலி முதலிய ஊடகங்களில் தன்னைப் பற்றிய படிமம் எப்போதுமே positive-ஆக இருக்கும்படி கவனித்துக் கொண்டார். நம் நாடு விடுதலை பெற பலர் பலவித தியாகங்கள் செய்திருந்தாலும், தன்னலமில்லா உழைப்பை அளித்திருந்தாலும், எல்லோருமே நேரு பெற்ற பெயரைப் பெறவில்லையே! அவரைச் சுற்றி இருந்தவர்கள் தவறு செய்ததாக அறியப் பட்டலும், அதில் சிறிது அழுக்கு கூட நேரு மேல் ஒட்டாது பார்த்துக் கொண்டார்கள். கஷ்மீர் விஷயத்திலும், சீனாவுடனான அணுகு முறையிலும் பெரியதொரு blunder-களை அவர் இழைத்திருந்தாலும், அவருடைய படிமம் அவரைக் காப்பாற்றியது. இன்று வரை நேரு என்றொரு காந்த சக்தி நம்மை ஆட்கொண்டிருக்கிறது!

    எம்.ஜி.ஆர் தன் இமேஜை சினிமா மூலம் மிக்க அறிவாற்றலுடன் வளர்த்துக் கொண்டார். அவர் ஒரு போதும் அண்ணனாக நடிக்கமாட்டார். ஏழை பங்காளனாகவே தோன்றுவார். திரையில் தோன்றும் எம்ஜியார் புகை பிடிக்க மாட்டர், மது அருந்த மாட்டார். அவர் ஏழையாகத் தான் நடிப்பார். ஆனால் பணக்காரப் பெண் ஒருவர் அவரைச் சுற்றுவார். அவர் ஏற்கும் பாத்திரங்கள் நற்குணங்களின் முழு உருவகமாக இருக்கும். அவர் தோன்றும் திரைப்படத்தின் ஒவ்வொரு சிறு விஷயத்தையும் நுணுக்கமாகக் கவனித்து, தன் இமேஜுக்குக் குந்தகமில்லாமல் பார்த்துக் கொள்வார்.

    courtesy - net

  4. #1243
    Junior Member Devoted Hubber masanam's Avatar
    Join Date
    May 2011
    Location
    Kuala Lumpur
    Posts
    1
    Post Thanks / Like
    மக்கள் திலகம் தன் இமேஜை கண்டிப்பாக கடைசி வரை குந்தகம் வராமல் காத்துக் கொண்டார்.
    பார்க்கும் ரசிகனுக்கு அழுகை, சோகம், எதிர்மறை தாக்கம் வராத வகையில் தன்னுடைய படங்களின் உருவாக்கத்தில் மக்கள் திலகத்தின் பங்கு இருந்த்து.

    எஸ்வி ஸார், தினம் தினம் மக்கள் திலகத்தின் தகவல்களை அள்ளி வழங்கும் தங்களுக்கு நன்றி.

  5. #1244
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    நன்றி திரு மசானம் அவர்களே .

    மக்கள் திலகத்தை பற்றிய செய்திகள் - விளம்பரங்கள் - இணையதள தகவல்கள் - அமுத சுரபியாக தேட தேட வந்து கொண்டிருக்கிறது .

    ஒரு தனி மனிதரின் புகழ் - நம் மக்கள் திலகத்துக்கு உள்ளது போல் உலகில் வேறு யாருக்குமில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

    நாம் என்றென்றும் பெருமைப்பட்டுகொள்ளும் விதமாக மக்கள் திலகத்தின் எல்லையில்லா புகழ் இந்த தலைமுறை அறிந்து கொண்டதுபோல் எதிர்கால தலைமுறையினரும் அறிந்து கொள்ள நிச்சயம் இந்த மக்கள் திலகம் திரி பங்கு வகிக்கும் என்பது உறுதி .
    Last edited by esvee; 24th May 2013 at 05:57 PM.

  6. #1245
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர். படங்கள்!
    கண்ணதாசன் பாடல்கள்!
    எம்.ஜி.ஆர் என்ற மனிதர், நடிகராகி, புரட்சி நடிகராக, மக்கள் திலகமாக, நடிக மன்னராக, வசூல் சக்கரவர்த்இதயாக, மூன்றெழுத்து மந்திரமாக, எங்க வீட்டுப் பிள்ளையாக, தாய்க்குலத்தின் தாரக மந்திரமாக, புவி போற்றிடும் புரட்சித் தலைவராகப் படிப்படியாகத் தனது புகழ் எனும் ஏணிப்படிகளில் ஏறி, தனது நிலைகளை மெல்ல மெல்ல உயர்த்தி, இன்றுவரை இந்தியத் துணைக்கண்டத்திலேயே எந்த நடிகராலும் பெற இயலாத மக்கள் செல்வாக்கைப் பெற்று உயர்ந்தார்.

    இத்தகைய உயர்வுகளைக் காண அவருக்கு உதவியன இரண்டே! ஒன்று, அவரது உயர்ந்த கருணை உள்ளம்! மற்றொன்று அவர் நடித்த திரைப்படங்கள்!

    எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்களோ 135. இவற்றுள்ளும் அவர் கதாநாயகனாக நடித்த படங்களின் எண்ணிக்கை என்று பார்த்தாலோ 115 படங்கள்தான்.

    115 படங்களில் மட்டுமே கதாநாயகனாக நடித்த எம்.ஜி.ஆரால் எப்படி மக்கள் இதயங்களைக் கவர முடிந்தது? மக்கள் எங்ஙனம் அவரை ஆளும் அரியாசனத்தில் ஏற்றி வைத்தார்கள்? என்றேல்லாம் வினாக்கள் எழும்!

    வினாக்களுக்கான விடைகள்!

    கண்டறியப்பட வேண்டும்!

    எம்.ஜி.ஆர் காலத்திலும், அவரது காலத்திற்குப் பின்னும் திரையுலகில் புகுந்து ஏராளமான படங்களில் நடித்த மாபெரும் நடிப்புலக மேதை சிவாஜிகணேசனும்; காதல் மன்னன் ஜெமினி கணேசனும், இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனும் பெறமுடியாத, ட்ட முடியாத மக்கள் செல்வாக்கை எம்.ஜி.ஆர் எட்டிப்பிடிக்கக் காரணங்கள் என்ன?

    இடைப்பட்ட காலத்தில் திரையுலகையே திக்குமுக்காடச் செய்த மக்கள் கலைஞர் ஜெய்சங்கர், வெள்ளிவிழாக் கதாநாயகன் ரவிச்சந்திரன், நவரசத்திலகம் முத்துராமன், ஏவி.எம்.ராஜன் போன்றோர் காணமுடியாத மக்கள் ஆதரவை எம்.ஜி.ஆர். கண்டது எப்படி?

    கால மாற்றங்களில், தங்களது கலை நுட்பங்களை, அனுபவங்களைத் தெளிவாகப் பதிவு செய்துகொண்ட நடிப்புலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் கண்டிட முடியாத மக்கள் சக்தியை எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து மந்திரம் கைப்பற்றியது எங்ஙனம்?

    இவற்றையெல்லாம் சிந்திக்கும் வேளையில்தான், எம்.ஜி.ஆர் என்ற மாமேதையின் மகத்தான மகத்துவம் நமக்குப் புரியும்.

    இப்போது எம்.ஜி.ஆர் நடித்த படப்பாடல்களில், கண்ணதாசன் எழுதிய பாடல்களைப் பற்றிப் பார்ப்போமாக.

    எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த 115 படங்களில் ஐம்பது படங்களில் கண்ணதாசன் பாடல்களே இடம்பெற்றுள்ளன.

    இவை தவிர, எம்.ஜி.ஆர் நடித்து இடையிலேயே நின்றுபோன பவானி, ஊமையன் கோட்டை, மாடிவீட்டு ஏழை, சமூமே நான் உனக்கே சொந்தம், போன்ற பல படங்களுக்கும் கண்ணதாசனே பாடல்கள் எழுதியுள்ளார்.

    எவ்வாறு ஆய்வு செய்தாலும், எம்.ஜி.ஆர். நடித்த அதிகமான படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் என்ற பெருமையையும், எம்.ஜி.ஆர். படங்களுக்கென அதிக எண்ணிக்கையில் பாடல்கள் எழுதியவர் என்ற பெருமையினையும் கண்ணதாசனே பெறுகிறார்.

    1951 – ஆம் ஆண்டு ஜூபிடர் பிலிம்ஸாரின், கே. ராம்நாத் இயக்கத்தில் வெளிவந்த எம்.ஜி.ஆர். நடித்த ‘மர்மயோகி’ படத்திற்குப் பாடல்கள் எழுதத் தொடங்கிய கண்ணதாசன், 1974 – ஆம் ஆண்டு, அமல்ராஜ் பிலிம்ஸ், ப. நீலகண்டன் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த ‘நேற்று, இன்று, நாளை’ படத்திற்கும்; இதே ஆண்டில், சித்ரயுகா வெளியீடாக ஸ்ரீதர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடித்து வெளியான மிகப்பெரும் வெற்றிப்படமான ‘உரிமைக்குரல்’ படத்திற்கும்; 1975 – ஆம் ஆண்டில் வெளியான ஓரியண்டல் பிக்சர்ஸ் தயாரித்து, எம்.ஜி.ஆர். நடித்த ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்திற்கும் கண்ணதாசன் பாடல்கள் எழுதியுள்ளார் என்பதனை, இன்றைய இளைஞர் சமுதாயத்தில் எத்தனை இதயங்கள் அறியக்கூடும்?

    நினைத்துப் பாருங்கள்!

  7. #1246
    Junior Member Devoted Hubber masanam's Avatar
    Join Date
    May 2011
    Location
    Kuala Lumpur
    Posts
    1
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post

    உண்மையில் பிரமிப்பு தான். மக்கள் திலகம் நடித்ததோ 135.
    அதிலும் கதாநாயகனாய் 115 தான்.
    ஆனால் அவர் தொட்ட உச்சம் மக்கள் திலகத்தின் வெற்றி சாதனை.
    இன்றும் தேர்தலில் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரம் உச்சரிக்கப்படுகிறது என்பதே மக்கள் திலகத்தின் செல்வாக்கு எத்தகையது எனபதை காட்டுகிறது.

    காலத்தை வென்றவன்..காவியம் ஆனவன்..மக்கள் திலகம்.
    Last edited by masanam; 24th May 2013 at 07:41 PM.

  8. #1247
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    நண்பர்களுக்கு

    என்னுடைய முந்தைய பதிவில் இடம் பெற்ற தகவல்கள்

    ''புரட்சித்தலைவர் வரலாறு '' என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட தகவல்கள்.

    எந்த இடத்திலும் நடிகர் திலகத்தை பற்றி எந்தவிதமான தவறான செய்திகள் இடம் பெறவில்லை .
    மக்கள் திலகத்தின் செல்வாக்கை - புகழை- ஒரு சிலாரால் ஜீரணிக்க முடியாதவர்கள் - புரிந்து கொள்ளாதவர்கள்

    விரும்பாதவர்கள் பதிவுகளை - எண்ணங்களை -தொடரப்போகும்

    வீம்பு கணைகளை பற்றி கவலை பட வேண்டாம் .

    நமக்கு மக்கள் திலகம் சொல்லி தந்த வைர வரிகள்

    ''
    இருட்டினில் வாழும் இதயங்களே
    கொஞ்சம் வெளிச்சத்தில் வாருங்கள்
    நல்லவர் உலகம் எப்படி இருக்கும்
    என்பதை பாருங்கள்
    எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான்
    என்பது கேள்வி இல்லை -
    அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை உணர்ந்தால்
    வாழ்க்கையில் தோல்வியில்லை...
    வாழ்க்கையில் தோல்வியில்லை..''.

  9. #1248
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்ஜியார் - எங்கள் கடவுள்

    கடவுள் இருக்கின்றான்
    அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
    கடவுள் இருக்கின்றான்
    அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?

    காற்றில் தவழுகிறாய்
    அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
    காற்றில் தவழுகிறாய்
    அது உன் கண்ணுக்கு தெரிகின்றாதா?
    கண்ணுக்கு தெரிக்கின்றதா ?
    கடவுள் இருக்கின்றான்
    அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா ?
    இருளில் விழிக்கின்றாய்
    எதிரே இருப்பது புரிகின்றதா ?
    இருளில் விழிக்கின்றாய்
    எதிரே இருப்பது புரிகின்றதா ?
    இசையை ரசிக்கின்றாய்
    இசையின் உருவம் வருகின்றதா?
    உள்ளதில் இருக்கும் உண்மையின் வடிவம்
    வெளியே தெரிகின்றதா
    வெளியே தெரிகின்றதா ?
    கடவுள் இருக்கின்றான்
    அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
    காற்றில் தவழுகிறாய்
    அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
    கண்ணுக்கு தெரிகின்றதா?
    புத்தன் மறைந்து விட்டான்
    அவன் தன் போதனை மறைகின்றதா?
    புத்தன் மறைந்து விட்டான்
    அவன் தன் போதனை மறைகின்றதா?
    சத்தியம் தோற்றதுண்டா
    உலகில் தர்மம் அழிந்ததுண்டா?
    இதை சரித்திரம் முழுதும் படித்த பின்னாலும்
    சஞ்சலம் வருகின்றதா?
    சஞ்சலம் வருகின்றதா?
    கடவுள் இருக்கின்றான்
    அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
    தேடியும் கிடைக்காது
    நீதி தெருவினில் இருக்காது!
    தேடியும் கிடைக்காது
    நீதி தெருவினில் இருக்காது!
    சாட்டைக்கு அடங்காது
    நீதி சட்டத்தில் மயங்காது!
    காலத்தில் தோன்றி கைகளை நீட்டி
    காக்கவும் தயங்காது!
    காக்கவும் தயங்காது!
    கடவுள் இருக்கின்றான்
    அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
    காற்றில் தவழுகிறாய்
    அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
    கண்ணுக்கு தெரிகின்றதா?
    கடவுள் இருக்கின்றான்
    கடவுள் இருக்கின்றான்
    கடவுள் இருக்கின்றான்

  10. #1249
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like

    இன்று கலைஞர் தொலைகாட்சியில் புரட்சிதலைவர் பாடல்கள்

    புரட்சி தலைவர் குரலில் திரு டி எம் எஸ் படிய அணைத்து பாடல்களும் பிரமிக்க வைக்கிறது. அது இப்படி தான் தெரியவில்லை எல்லா பாடலும் அந்த காட்சி அமைப்புக்கு தகுந்ததாக உள்ளது. நாம் இப்படி ஒரு பாடகர் கிடைத்ததற்கு கண்டிப்பாக புண்ணியம் செய்து இருக்கிறோம். திரு டி எம் எஸ் இன்னும் பல ஆண்டுகள் நாள் உடல் நலத்தோடு வழ வேண்டும் என்பதே தமிழர்களின் எண்ணம்.

  11. #1250
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    makkal thilagathin 'kumarikkottam' at chennai mahalakshmi.

    Msg from prof.selvakumar

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •