Page 126 of 397 FirstFirst ... 2676116124125126127128136176226 ... LastLast
Results 1,251 to 1,260 of 3965

Thread: Makkal thilagam m.g.r part -5

  1. #1251
    Junior Member Regular Hubber
    Join Date
    Oct 2005
    Location
    KUALA LUMPUR
    Posts
    13
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    மக்கள் திலகம் எம்ஜியார் - எங்கள் கடவுள்



    கடவுள் இருக்கின்றான்
    அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
    கடவுள் இருக்கின்றான்
    அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?

    காற்றில் தவழுகிறாய்
    அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
    காற்றில் தவழுகிறாய்
    அது உன் கண்ணுக்கு தெரிகின்றாதா?
    கண்ணுக்கு தெரிக்கின்றதா ?
    கடவுள் இருக்கின்றான்
    அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா ?
    இருளில் விழிக்கின்றாய்
    எதிரே இருப்பது புரிகின்றதா ?
    இருளில் விழிக்கின்றாய்
    எதிரே இருப்பது புரிகின்றதா ?
    இசையை ரசிக்கின்றாய்
    இசையின் உருவம் வருகின்றதா?
    உள்ளதில் இருக்கும் உண்மையின் வடிவம்
    வெளியே தெரிகின்றதா
    வெளியே தெரிகின்றதா ?
    கடவுள் இருக்கின்றான்
    அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
    காற்றில் தவழுகிறாய்
    அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
    கண்ணுக்கு தெரிகின்றதா?
    புத்தன் மறைந்து விட்டான்
    அவன் தன் போதனை மறைகின்றதா?
    புத்தன் மறைந்து விட்டான்
    அவன் தன் போதனை மறைகின்றதா?
    சத்தியம் தோற்றதுண்டா
    உலகில் தர்மம் அழிந்ததுண்டா?
    இதை சரித்திரம் முழுதும் படித்த பின்னாலும்
    சஞ்சலம் வருகின்றதா?
    சஞ்சலம் வருகின்றதா?
    கடவுள் இருக்கின்றான்
    அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
    தேடியும் கிடைக்காது
    நீதி தெருவினில் இருக்காது!
    தேடியும் கிடைக்காது
    நீதி தெருவினில் இருக்காது!
    சாட்டைக்கு அடங்காது
    நீதி சட்டத்தில் மயங்காது!
    காலத்தில் தோன்றி கைகளை நீட்டி
    காக்கவும் தயங்காது!
    காக்கவும் தயங்காது!
    கடவுள் இருக்கின்றான்
    அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
    காற்றில் தவழுகிறாய்
    அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
    கண்ணுக்கு தெரிகின்றதா?
    கடவுள் இருக்கின்றான்
    கடவுள் இருக்கின்றான்
    கடவுள் இருக்கின்றான்
    MGR proved himself to be a cut from the rest of the DMK cadres especially in matters concerning spirituality. He was daring enough to use the words 'kaduval', 'iraivan'. 'Aandavan', 'thalaivan' in his philosophical songs beginning 'Thaai Solley Thattathey' (1961) working closely with Kannadhasan. This was when his party, the DMK was regarded as atheist. The irony was that both MGR and Kannadhasan were spiritual persons deep in their hearts although belinging to DMK which was one of the reasons they both addressed each other 'aandavar' when meeting in person!

    Yes, Eswee both MGR and Kannadhasan will continue to be immortal as long as the Tamil language lives. I fully agree with you that Kannadhasan has written for MGR for almost half of his film careers. You have forgotten to mention the powerful dialogues he had written for 'Madurai Veeran', 'Nadodi Mannan', 'Raja Desingu', 'Mannathi Mannan', 'Thirudaathey', 'Mahadevi' and partly for 'Thai Solley Thattahthey' and 'Thaaikupin Thaaram' which were later complemented by Ayampillai.

    I still use to wonder why Vaali never wrote dialogues for MGR films although he was very close with him.
    Mahendra Raj

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1252
    Junior Member Devoted Hubber masanam's Avatar
    Join Date
    May 2011
    Location
    Kuala Lumpur
    Posts
    1
    Post Thanks / Like

  4. #1253
    Junior Member Regular Hubber
    Join Date
    Oct 2005
    Location
    KUALA LUMPUR
    Posts
    13
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    எம்.ஜி.ஆர். படங்கள்!
    கண்ணதாசன் பாடல்கள்!
    எம்.ஜி.ஆர் என்ற மனிதர், நடிகராகி, புரட்சி நடிகராக, மக்கள் திலகமாக, நடிக மன்னராக, வசூல் சக்கரவர்த்இதயாக, மூன்றெழுத்து மந்திரமாக, எங்க வீட்டுப் பிள்ளையாக, தாய்க்குலத்தின் தாரக மந்திரமாக, புவி போற்றிடும் புரட்சித் தலைவராகப் படிப்படியாகத் தனது புகழ் எனும் ஏணிப்படிகளில் ஏறி, தனது நிலைகளை மெல்ல மெல்ல உயர்த்தி, இன்றுவரை இந்தியத் துணைக்கண்டத்திலேயே எந்த நடிகராலும் பெற இயலாத மக்கள் செல்வாக்கைப் பெற்று உயர்ந்தார்.

    இத்தகைய உயர்வுகளைக் காண அவருக்கு உதவியன இரண்டே! ஒன்று, அவரது உயர்ந்த கருணை உள்ளம்! மற்றொன்று அவர் நடித்த திரைப்படங்கள்!

    எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்களோ 135. இவற்றுள்ளும் அவர் கதாநாயகனாக நடித்த படங்களின் எண்ணிக்கை என்று பார்த்தாலோ 115 படங்கள்தான்.

    115 படங்களில் மட்டுமே கதாநாயகனாக நடித்த எம்.ஜி.ஆரால் எப்படி மக்கள் இதயங்களைக் கவர முடிந்தது? மக்கள் எங்ஙனம் அவரை ஆளும் அரியாசனத்தில் ஏற்றி வைத்தார்கள்? என்றேல்லாம் வினாக்கள் எழும்!

    வினாக்களுக்கான விடைகள்!

    கண்டறியப்பட வேண்டும்!

    எம்.ஜி.ஆர் காலத்திலும், அவரது காலத்திற்குப் பின்னும் திரையுலகில் புகுந்து ஏராளமான படங்களில் நடித்த மாபெரும் நடிப்புலக மேதை சிவாஜிகணேசனும்; காதல் மன்னன் ஜெமினி கணேசனும், இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனும் பெறமுடியாத, ட்ட முடியாத மக்கள் செல்வாக்கை எம்.ஜி.ஆர் எட்டிப்பிடிக்கக் காரணங்கள் என்ன?

    இடைப்பட்ட காலத்தில் திரையுலகையே திக்குமுக்காடச் செய்த மக்கள் கலைஞர் ஜெய்சங்கர், வெள்ளிவிழாக் கதாநாயகன் ரவிச்சந்திரன், நவரசத்திலகம் முத்துராமன், ஏவி.எம்.ராஜன் போன்றோர் காணமுடியாத மக்கள் ஆதரவை எம்.ஜி.ஆர். கண்டது எப்படி?

    கால மாற்றங்களில், தங்களது கலை நுட்பங்களை, அனுபவங்களைத் தெளிவாகப் பதிவு செய்துகொண்ட நடிப்புலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் கண்டிட முடியாத மக்கள் சக்தியை எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து மந்திரம் கைப்பற்றியது எங்ஙனம்?

    இவற்றையெல்லாம் சிந்திக்கும் வேளையில்தான், எம்.ஜி.ஆர் என்ற மாமேதையின் மகத்தான மகத்துவம் நமக்குப் புரியும்.

    இப்போது எம்.ஜி.ஆர் நடித்த படப்பாடல்களில், கண்ணதாசன் எழுதிய பாடல்களைப் பற்றிப் பார்ப்போமாக.

    எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த 115 படங்களில் ஐம்பது படங்களில் கண்ணதாசன் பாடல்களே இடம்பெற்றுள்ளன.

    இவை தவிர, எம்.ஜி.ஆர் நடித்து இடையிலேயே நின்றுபோன பவானி, ஊமையன் கோட்டை, மாடிவீட்டு ஏழை, சமூமே நான் உனக்கே சொந்தம், போன்ற பல படங்களுக்கும் கண்ணதாசனே பாடல்கள் எழுதியுள்ளார்.

    எவ்வாறு ஆய்வு செய்தாலும், எம்.ஜி.ஆர். நடித்த அதிகமான படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் என்ற பெருமையையும், எம்.ஜி.ஆர். படங்களுக்கென அதிக எண்ணிக்கையில் பாடல்கள் எழுதியவர் என்ற பெருமையினையும் கண்ணதாசனே பெறுகிறார்.

    1951 – ஆம் ஆண்டு ஜூபிடர் பிலிம்ஸாரின், கே. ராம்நாத் இயக்கத்தில் வெளிவந்த எம்.ஜி.ஆர். நடித்த ‘மர்மயோகி’ படத்திற்குப் பாடல்கள் எழுதத் தொடங்கிய கண்ணதாசன், 1974 – ஆம் ஆண்டு, அமல்ராஜ் பிலிம்ஸ், ப. நீலகண்டன் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த ‘நேற்று, இன்று, நாளை’ படத்திற்கும்; இதே ஆண்டில், சித்ரயுகா வெளியீடாக ஸ்ரீதர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடித்து வெளியான மிகப்பெரும் வெற்றிப்படமான ‘உரிமைக்குரல்’ படத்திற்கும்; 1975 – ஆம் ஆண்டில் வெளியான ஓரியண்டல் பிக்சர்ஸ் தயாரித்து, எம்.ஜி.ஆர். நடித்த ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்திற்கும் கண்ணதாசன் பாடல்கள் எழுதியுள்ளார் என்பதனை, இன்றைய இளைஞர் சமுதாயத்தில் எத்தனை இதயங்கள் அறியக்கூடும்?

    நினைத்துப் பாருங்கள்!
    The first song, if I am not mistaken, to incorporate the word 'Iraivan' was 'Poyum Poyum Manithanaku Intha Butthiyai Koduthaanae Iraivan....' in 'Thai Sollai Thattathey' (1961) followed by 'Ulagam Piranthathu Enakaaga' in Paasam (1962); Oruvan Manathu Onbathaada (Dharmam Thalaikaakkum' (1963); Kadavul Irukindraar - Ananda Jothi (1963); Ennathaan Nadakkum & Kurangu Varum Thottamadi - Panathottam (1963) and the master of all songs in Thani Piravi - Ethir Paaramal Nadanthathudi (1966). Most of it were for Devar Films but all were written by his erstwhile and sometimes estranged pal Kaviarasar Kannadhasan!

    I wonder also whether any other lyricist, besides Kannadhasan, have written such God-themed songs for MGR, Vaali included. Would be glad to be enlightened.
    Mahendra Raj

  5. #1254
    Junior Member Regular Hubber
    Join Date
    Oct 2005
    Location
    KUALA LUMPUR
    Posts
    13
    Post Thanks / Like
    An ardent MGR fan who was also the Secretary of MGR Mandram in Kuala Lumpur, Malaysia personally related as to how MGR helped him out of his dire financial straits. He was retrenched in his job as a bus conductor somewhere in the early nineties and was having severe financial problems as he had a large family. One night he decided to end his life but before that he made one last attempt to seek redressal for his plight. Yes, he went to the altar in his house in the middle of the night when everyone went to sleep. He had a photo of MGR along with other deities in the altar. He prayed hard this time o MGR asking him to help him out of his dire financial straits. In his prayers he told MGR flatly that if help is not forthcoming he will commit suicide and meet him 'over there'.

    After that he went to bed. Not long after that he had a dream of MGR visiting him in his house. This guy was too dumbfounded to see his idol so vividly but MGR had a stern look in his face. He never spoke a word but instead beckoned him to follow him to a room. He followed as instructed. MGR scribbled something and gave him that piece of paper. In the paper was written a four-digit number. After that MGR walked away and this friend was still in a daze.

    He woke up sweating but he could remember the digits MGR had written on the piece of paper. The following morning he borrowed ten Malaysian Ringgit from a friend and went straight to the 4-Digit Gambling outlet to book that particular number sequence. This he did after first offering prayers to MGR in the morning at his house.

    That number sequence drew first prize in that day's draw. The prize money was Malaysian Ringgit thirty thousand (about the equivalent of three lakh Indian Rupees). This guy almost went into a trance after seeing the results that night. His financial problems were solved instantly and with the balance he started a small business and he is well-off today. He believes strongly that MGR still lives in the hearts of his sincere fans which was why he appeared in his dreams. He still feels that it is not a dream but something very hard to explain as it was life-like. He further added that the reason MGR appeared so stern was to warn him of his cowardly proposition to end his life. Perhaps that was why he never spoke a word.

    I countered him saying that MGR being a man who believes in hard work will never advocate gambling. But he argued that it was the only recourse MGR had to prevent him from taking his own life the following day. In other words it was not a sin in times of such situations and MGR did the right thing.

    Next I will tell of Iseri Ganesh's (son of the late Iseri Velan) experience with MGR which he told us personally when we met him in his house in ECR in February this year.
    Mahendra Raj

  6. #1255
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    1957ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி, பழநியில் நடைபெற்ற திராவிட சீர்திருத்த மாநாட்டில் அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர், கே.ஆர்.ராமசாமி, மதுரை முத்து, அன்பில் தர்மலிங்கம், கே.ஏ.மதியழகன், நாவலர் நெடுஞ்செழியன், இரா. செழியன், சத்தியவாணி முத்து, அலமேலு அப்பாதுரை உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அம்மாநாட்டில் எம்.ஜி.ஆர். அவர்கள் சிறப்புரையாற்றினார். அந்த நிழற்படம் உங்கள் பார்வைக்கு.



    இந்த காணொளி தற்போது வெளியிடப் பட்டுள்ள எஸ்.எஸ்.ஆர். தயாரித்து நடித்த தங்கரத்தினம் படத்தின் டிவிடியில் இடம் பெற்றுள்ளது. மாநாட்டின் காட்சிகள் மட்டும் காணொளியாக உள்ளன. பின்னணியில் எஸ்.எஸ்.ஆர். அவர்களின் வர்ணனை இடம் பெற்றுள்ளது.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #1256
    Junior Member Devoted Hubber masanam's Avatar
    Join Date
    May 2011
    Location
    Kuala Lumpur
    Posts
    1
    Post Thanks / Like

  8. #1257
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like



    மக்கள் திலகத்தின் அருமையான ஸ்டில் மற்றும் 1957 தேர்தல் சிறப்பு வீடியோ பற்றிய தகவல்கள் தந்த இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார் அவர்களுக்கு நன்றி .

  9. #1258
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் திரு மகேந்திரன்


    மக்கள் திலகம் - கண்ணதாசன் நட்பில் உருவான பல பாடல்கள் சாகாவரம் பெற்றவை . ஆனந்தஜோதியில் இடம் பெற்ற ''கடவுள் இருக்கின்றான் ''பாடலை பற்றி உங்களின் ஆய்வு நன்றாக இருந்தது .

    பணத்தோட்டம்

    பாசம்

    ஆனந்தஜோதி

    மூன்று படங்களில் இடம் பெற்ற வரிகள்




    தலைவன்

    தெய்வம் - இறைவன்

    கடவுள் - மூலம் அவரது கருத்துக்கள் எந்த அளவிற்கு மக்கள் மனதை ஈர்த்தது

    என்பதை அறிய முடிகிறது .

  10. #1259
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like

  11. #1260
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    Arror das - to day ''thandhi'' paper

    1966–ல் எம்.ஜி.ஆர்., எம்.ஆர்.ராதா, சரோஜாதேவி நடித்து நான் கதை வசனம் எழுதிய ‘பெற்றால்தான் பிள்ளையா?’ படம் வெளியானது. இந்தப்படம் 100 நாள் ஓடியது.

    இந்தப்படம் வெளியான போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. பின்னர் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. 1967 மார்ச் மாதம் 18–ந் தேதியுடன் படம் 100–வது நாளை எட்டியது. இந்தப்படத்தின் வெற்றிவிழாவை அப்போதைய முதல்வர் அண்ணாவின் தலைமையில் நடத்த திட்டமிடப்பட்டது. அப்போது பொதுப்பணி மற்றும் போக்குவரத்து துறைகளின் அமைச்சராக இருந்த கலைஞர் விழாவுக்கு முன்னிலை வகிப்பது என்றும் முடிவானது. அண்ணாவின் கரங்களால் கலைஞர்களுக்கு கேடயங்கள் வழங்குவது என்று ஏற்பாடாகியிருந்தது. இடம் ஏவி.எம். ராஜேஸ்வரி திருமண மண்டபம்.

    அப்போது நான் சாவித்திரியை சந்தித்து விழாவைப் பற்றிய விவரம் கூறி, ‘சரோஜாதேவிக்கான கேடயத்தை அவருக்குப் பதிலாக நீ பெற்றுக் கொள்ள வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டேன். அதற்கு அவர் சொன்ன பதில்:

    சாவி: ‘நான் எதுக்கு? நடிச்சிருக்கிறது சரோஜா தானே? அதுதானே வந்து வாங்கிக்கணும்’ சம்பந்தம் இல்லாம நான்... ஏன்?

    நான்: ‘இல்லே.. இந்த விழாவுல சரோஜா வந்து கலந்துக்கும்னு எனக்குத் தோணலே’’

    சாவி: ‘ஏன்? எதனால அப்படி நினைக்குறீங்க?’.

    நான்: ‘போன மாசந்தான் அது கல்யாணம் பண்ணிக்கிட்டு சினிமாவுலேர்ந்து ஒதுங்கியிருக்கு. அதோட கூட அதுக்குச் சில மன உறுத்தல்கள் இருக்கும்னு நான் நினைக்கிறேன். அதையெல்லாம் விவரமா ஒங்ககிட்டே இப்போ சொல்ல எனக்கு விருப்பம் இல்லை. அப்புறமா ஒருநாளைக்கு சொல்றேன்.

    இது என் சினிமா வாழ்க்கையிலே ஒரு முக்கியமான வெற்றி விழா! அண்ணா முதலமைச்சராகி கலந்துக்குற முதல் கலை விழா!

    என் வாழ்க்கையில முதல்ல நீ அதுக்கு அப்புறம் சரோஜா! ரெண்டு பேருமே முக்கியமானவுங்க. எனக்குத் தெரிஞ்சு சரோஜா வர்றதுக்கு வாய்ப்பில்லை...

    அப்படி ஒருவேளை, நான் நினைச்சிருக்கிறதுக்கு நேர்மாறா சரோஜா வந்தாலும் கூட, நீயும் அவசியம் வரணும்னு விரும்புறேன், என்று சற்று உணர்ச்சிவசப்பட்டு அவருடைய கரங்களைப் பற்றி கொண்டு மேலும் தொடர்ந்தேன்...

    ‘அண்ணி! உனக்கு நினைவிருக்கோ இல்லியோ– எனக்கு இன்னும் நல்லா நினைவிருக்கு. ஏழு வருஷங்களுக்கு முந்தி, ஆயிரத்தி தொளாயிரத்தி அறுபத்து ஒண்ணுலே, உன் புண்ணியத்துல சிவாஜிக்கு நான் முதல் முதலா எழுதுன பாசமலர் படம் தொடர்ந்து ஆறுமாசங்களுக்கும் அதிகமாக இருநூறு நாள் ஓடி, அதன் வெள்ளிவிழா பிலிம் சேம்பர் காம்பவுண்டுலே கொண்டாடப்பட்டுச்சி.

    எனக்கு முதல் சிவாஜி படம்! முதல் வெள்ளிவிழாப்படம். வாகினி ஸ்டூடியோ நாகிரெட்டியார் தலைமை தாங்கி அவர் கையாலே ஒரு பெரிய வெள்ளிச்சிலை பரிசு வாங்கினேன்.

    நாகிரெட்டியார் பேசும்போது, இந்தப் பாசமலர் படத்துல சிவாஜி சாவித்திரியோட நடிப்புக்கு உயிர்நாடியே ஆரூர்தாசோட சிறந்த வசனந்தான்னு சொன்னாரு. அதைக் கேட்டு சிவாஜி உட்பட எல்லாருமே கைதட்டுனாங்க ஏன்? நீயும் சேர்ந்துதான் கைதட்டுனே.

    நான் அந்த வெள்ளிச்சிலையை வாங்கிக்கிட்டு வந்து ஒம்பக்கத்துல ஒக்காந்து ஒங்கிட்டே குடுத்தேன். உனக்கு, என் காணிக்கைன்னு சொன்னேன். கண்கலங்க அதை நீ வாங்கிக்கிட்டு எமோஷன்ல உன் கை நடுங்க என் கையைப் பிடிச்சி வாழ்த்து சொன்னே. அதே மாதிரி ஒரு காட்சியை இந்தப்பட விழாவுல நான் பாக்கணும்– நீயும் பார்க்கணும்னு ஆசைப்படுறேன். சம்பந்தம் இருக்கோ இல்லியோ எனக்கு நீ வரணும், அண்ணி பிளீஸ்...’’

    இதைக் கேட்டதும் எமோஷனாகி விட்ட சாவித்திரி நீர் கட்டிய தன் கண்களை சேலை முந்தானையால் ஒத்திக்கொண்டு சொன்னார்.

    ‘சரி...வர்றேன்.. நான் எப்போ வரணுமோ அதுக்கு முந்தி நீங்க வீட்டுக்கு வந்திடுங்க. அங்கேருந்து என் கார்ல ரெண்டு பேரும் சேர்ந்தே போகலாம். இப்போ ஒங்களுக்குச் சந்தோஷந்தானே?’.

    நான் என் கண்களைத் துடைத்துக்கொண்டபடி தலையாட்டினேன்.

    டைரக்டர் பஞ்சுவிடம் தொலைபேசியில் சாவித்திரி விழாவுக்கு வரும் செய்தியைத் தெரிவித்தேன். ‘எம்.ஜி.ஆருக்குத் தெரியுமா என்று கேட்டார். ‘தெரியாது, நானே விழாவில் முன்னதாகச் சொல்லிக் கொள்கிறேன். அண்ணா கேடயங்களை வழங்கும்போது சரோஜாதேவிக்குப்பதிலாக சாவித்திரி பெற்றுக் கொள்வார் என்று நீங்கள் அறிவித்து விடுங்கள்’ என்றேன். அதற்கு அவர் சொன்னார், ‘வேண்டாம். சாவித்திரி என் படங்கள் எதிலும் நடித்ததில்லை. எனக்கு அவரோடு அவ்வளவு பழக்கமும் இல்லை. நீங்கள்தான் அவருடைய ஆஸ்தான ஆசிரியர். நீங்களே மைக்கில் அறிவித்து விடுங்கள்’ என்றார்.

    ஏவி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபம்....

    முதலமைச்சர் அண்ணா கலந்து கொள்ளும் முதல் சினிமா கலைவிழா! அதுவும் எம்.ஜி.ஆர். முற்றிலும் மாறுபட்ட ஒரு வேடத்தில் நடித்த வெற்றிப்படத்தின் நூறாவது நாள் விழா! மண்டபம் மக்களால் நிறைந்தது.

    சாவித்திரியும் நானும் காரிலிருந்து இறங்கி உள்ளே சென்றோம். சாவித்திரியைப் பார்த்த பட சம்பந்தப்பட்ட நடிகர் நடிகைகள் மற்றும் கலைஞர்களின் புருவங்கள் மேலே உயர்ந்தன!

    நான் நைஸாக எம்.ஜி.ஆரின் அருகில் சென்றமர்ந்து விஷயத்தை மெதுவாக அவருடைய செவிகளில் ஓதினேன். பதிலுக்கு அவர் சன்னக்குரலில் கேட்டார்:

    ‘சரோஜா வராதுன்னு ஒங்களுக்கு எப்படித் தெரியும்?’.

    நான்: ‘சோழி ஜோசியம் பார்த்தேன். அதுலே சொன்னுச்சி’.

    இதைக் கேட்டு அவர் செல்லமாக என் காதைப் பிடித்து ஒரு திருகு திருகி விட்டு புன்னகைத்தார்.

    இப்படி நான் அவ்வப்போது எம்.ஜி.ஆரிடம் குறும்பாகப் பேசி அவரைச் சீண்டுவது உண்டு. அவர் அதை மிகவும் ரசிப்பார். ஏனென்றால் வேறுயாருமே அவரிடம் இப்படியெல்லாம் விளையாட மாட்டார்கள்.

    அன்று மாலை, அறிஞரும் கலைஞரும் கோடம்பாக்கத்தில் ஏதோ ஒரு திறப்பு விழாவிற்குச் சென்று உரையாற்றி விட்டு மிகவும் தாமதமாக எங்கள் விழாவிற்கு வந்தார்கள்.

    அதுவரையில் சாவித்திரி அங்கு பொறுமையாக அமர்ந்திருந்தார்.

    விழா தொடங்கியது–

    வெள்ளிக்கேடயங்களை அண்ணா வழங்க ஆரம்பித்தார்.

    முதன் முதலில் எம்.ஜி.ஆர். பெற்றுக்கொண்டதும் அடுத்து நான் ஒலிபெருக்கி முன் நின்று, ‘அடுத்த படியாக, அபிநய சரஸ்வதி திருமதி சரோஜாதேவி பெங்களூரிலிருந்து இங்கு வர இயலாத நிலையில் அவருக்குப் பதிலாக, அவருக்கான கேடயத்தை ‘நடிகையர் திலகம்’ சாவித்திரி பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்’ என்று அறிவித்தேன்.

    ‘நடிகவேள்’ என்று எம்.ஆர். ராதாவுக்கும், ‘நடிகமணி’ என்று டி.வி. நாராயணசாமிக்கும், ‘நடிப்பிசைப்புலவர்’ என்று கே.ஆர்.ராமசாமிக்கும், ‘நடிப்பின் இலக்கணம்’ என்று பி.பானுமதிக்கும், ‘கலைவாணர்’ என்று என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் பல பட்டங்களை வழங்கி, கலைஞர்களைப் பெருமைப்படுத்திய பேரறிஞர் அண்ணாவின் திருக்கரங்களிலிருந்து ‘அபிநயசரஸ்வதிக்கான’ கேடயத்தை ‘நடிகையர் திலகம்’ பெற்றுக்கொண்டார்.

    கனத்த கைத்தட்டல் ஒலியைக் கேட்டு என் காதுகள் குளிர்ந்தன! கண்களில் நீர் மல்கியது.

    எனக்கான கேடயத்தையும் அந்த ‘மறுமலர்ச்சித் தமிழின் தந்தை’யின் கரங்களிலிருந்து பெற்று மனம் மகிழ்ந்தேன். அவர் என்னைப் புரிந்து கொண்டு வாழ்க! என்றார்.

    நான் சிவாஜிக்கு நல்ல பிள்ளையாகவும் எம்.ஜி.ஆருக்கு செல்ல பிள்ளையாகவும் இருந்தேன். என் குறும்புத்தனமான பேச்சைக் கேட்டு சரோஜாதேவி எம்.ஜி.ஆரிடம் இப்படிச் சொல்வதுண்டு:

    ‘அவர் ஆரம்பத்துலே நல்லாத்தான் இருந்தாரு.. நீங்க வந்தப்பறம் செல்லங்குடுத்துக் குடுத்து அவரைக் கெடுத்திட்டிங்க’.

    இதைக் கேட்டு எம்.ஜி.ஆர். சிரிப்பார்.

    அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர். என் மீது கொண்டிருந்தது அன்பு, நட்பு, பாசம் இதற்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு வகைக் ‘காதல்’ என்று சொல்வேன். அந்த இனிய மென்மையான ‘காதல்’ என் பேனாவினாலும் பேச்சினாலும் அவருக்கு ஏற்பட்டது என்பதைப் பெருமையோடு இன்றைக்குக் கூறிக் கொள்கிறேன்.

    அவரிடம் நான் பெற்றிருந்த அந்த அருமையான காதலை ‘பெற்றால்தான் பிள்ளையா’ படத்திற்குப் பிறகு இழக்கும்படியான வேதனையான ஒரு சோதனைக்கு விதிவசமாக நான் ஆளாக நேரிட்டது!

    என்னை இழக்க அவர் விரும்பவில்லை. நான்தான் அவரை இழந்தேன்.

    என்னைப் பொறுத்தவரையில் அது ‘இழந்த காதல்’ ஆகி விட்டது. (இந்தப் பெயரில் ஒரு நாடகம் அந்தக் காலங்களில் பிரபலம்)

    புத்தி மங்கிப்போனதாலும், என் போதாத காலத்தினாலும் எம்.ஜி.ஆரிடம் நான் இழந்த அந்தக் ‘கலைக்காதல்’ பற்றிய சோகக் கதையை அடுத்து சொல்கிறேன்.

    -------------

    எம்.ஜி.ஆரின் கிண்டல்

    சில சமயங்களில் சரோஜாதேவி படப் பிடிப்புக்கு வர சற்றுத் தாமதமானால் எம்.ஜி.ஆர். என்னிடம் கிண்டலும் கேலியுமாகக் கேட்பார்.

    ‘என்ன முதலாளி? ஒங்க ஹீரோயினை இன்னும் காணோம்?’.

    அதற்கு நான் சொல்வேன்.

    ‘அது யாரும் அடைய முடியாத அடையாறுல இருக்கு இல்லியா? அதனால வர்றதுக்கு கொஞ்சம் நேரம் ஆகத்தான் செய்யும்’.

    இதைக் கேட்டு அவர் சிரிப்பார்.

    ஜனவரி மாதம் 17–ல் பிறந்த எம்.ஜி.ஆருக்கும் அதே ஜனவரி 7–ல் பிறந்த சரோஜாதேவிக்கும் ஒரு ராசிப் பொருத்தம் இருந்தது. அதனால்தான் அத்தனை வெற்றிப் படங்களில் சேர்ந்து நடித்தார்கள்.

    ---------

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •