-
28th May 2013, 01:03 PM
#1331
Junior Member
Devoted Hubber
ரிக்ஷாகாரன் திரைப்பட தகவலுக்கு நன்றி ஸார்.
-
28th May 2013 01:03 PM
# ADS
Circuit advertisement
-
28th May 2013, 02:02 PM
#1332
Junior Member
Diamond Hubber

Originally Posted by
esvee
மக்கள் திலகம் அவர்கள் 1972 பாரத் பட்டம் பாராட்டு விழாவில் பேசிய ஒலி உரையை பதிவிட்ட நண்பர் திரு ரூப் அவர்களுக்கு நன்றி .
30 நிமிடங்கள் மேல் இடம் பெற்ற மக்கள் திலகத்தின் உரை மிகவும் தெளிவாகவும் ,தீர்க்கதரிசனமாக பேசிய அவரின் உரையும் ''1972 ஆண்டே அவர் எதிர்காலத்தில் தொலைக்காட்சி என்ற சாதனம் இந்தியாவில் வந்தால் சினிமா தொழிலுக்கு ஒரு பெரிய ஆபத்து வரும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார் ''
எவ்வளவு உண்மை .
எங்க வீட்டு பிள்ளை பட அனுபவம் - தன்னுடைய நடிப்பு -
பிறரின் நடிப்பு - வளரும் நடிகர்களுக்கு அறிவுரை என்று
மக்கள் திலகம் பேசியுள்ள உரை நிச்சயம் ஒரு பெரிய தாக்கத்தை அன்றே உருவாக்கியுள்ளது .
Yes Sir, but may be you have not listened to part - 1 yet, it is for another 32 minutes
https://soundcloud.com/kumar-rajendr...rudhu-vizha-ii
Last edited by saileshbasu; 28th May 2013 at 02:05 PM.
-
28th May 2013, 08:52 PM
#1333
Junior Member
Veteran Hubber

Originally Posted by
esvee
29-5-1971-ரிக்ஷாக்காரன் ''
மக்கள் திலகம் அவர்களின் ''ரிக்ஷாக்காரன் '' 42 வது நிறைவு நாள் .
இன்று .28-5-2013.
சத்யா மூவீஸ் தயாரிப்பின் 5 வது படம்
இயக்குனர் எம் . கிருஷ்ணன் இயக்கிய முதல் படம்
நடிகை மஞ்சுளா அறிமுக படம் .
சென்னை தேவி பாரடைஸ் அரங்கில் - மக்கள் திலகத்தின் முதல் படம் .
1971 ஆண்டில் மிகப்பெரிய சாதனை படம் .
மக்கள் திலகத்திற்கு ''பாரத் '' பட்டம் வாங்கி தந்த படம்
புதுமையான சண்டைகாட்சிகள் - மாறுபட்ட மக்கள் திலகத்தின் நடிப்பு - நேர்த்தியான திரைக்கதை - வசனம் - மற்றும் அருமையான பொழுது போக்கு சித்திரம் .
42 ஆண்டுகள் பின்னர் இன்று படம் பார்த்தாலும் ஒரு புது படம் பார்ப்பது போல் உணர முடிகிறது .
Thanks for remainding Vinod Sir.
-
28th May 2013, 09:01 PM
#1334
Junior Member
Platinum Hubber
DR.RUDHRAN ABOUT MAKKAL THILAGAM - FROM NET.
மீசையும் கொஞ்சமாய் தாடியும் வளர்த்து, தோளில் ஒரு ஜோல்னா பையுடன் ருஷ்ய-ஃப்ரென்ச் எழுத்தாளர்களை மட்டுமே படிப்பதாய் ஒரு பாவ்லா/ பாவனை காட்டிக் கொண்டிருந்த வயதுகளில் எனக்கு எம்ஜியார் பிடிக்கவில்லை நடிகராக மட்டுமல்ல, அரசியல் தலைவராகவும்.
அது ஒரு சிக்கலான வயதின் கட்டம். ஸ்ரீதர் தானே நல்ல இயக்குநர் என்று மனம் கேள்வி எழுப்பினாலும் பாலசந்தரைப் பற்றிப் பேச வைத்த வயதுகளின் காலம்.
ஆனால் அப்புறம் எனக்கு எம்ஜியார் பிடித்தது...ரொம்ப வருடங்களுக்குப் பிறகு, ஐந்திலிருந்து பத்து வயது வரை பிடித்த அளவுக்கு. நான் படிக்க வீட்டிலிருந்த சின்ன மேஜையின் மேல் எம்ஜியார் படம் மாட்டி வைத்திருந்தவன் நான். எம்ஜியார் ஏன் பிடிக்கும் என்று கேட்டால்,பிடிக்கும் என்று மட்டுமே பதில் தெரிந்திருந்த அறுபதுகளின் முற்பகுதி அது. எழுபதுகளில் அறிவுஜீவித்வ ஒப்பனை. பிறகுஒவ்வொரு வேடமாய் மாறி நடிப்பு மட்டுமல்ல நாடகங்களும் சலித்தபின், என் ரசனை எளிமையான நேர்மையான ஒன்றாய் மாறியிருக்கிறது (என்று இப்போது கருதுகிறேன்).

இப்போதெல்லாம் எனக்கு எம்ஜியார் பாடல்களைக் கேட்க மட்டுமல்ல பார்க்கவும் பிடித்திருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன் கூட இதை நான் இப்படி வெளிப்பையாகச் சொல்லாமல் டிஎம்எஸ்க்காக, கண்ணதாசனுக்காக, விஸ்வநாதனுக்காக என்றெல்லாம் என்னிடமேயும் காரணம் சொல்லித்தான் எம்ஜியார் பாடல்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
நான் சொல்லிக்கொண்டிருந்த காரணங்களுக்காகக் கேட்கலாம் பார்க்க முடியாது, பார்ப்பது எம்ஜியாருக்காகத்தான்!
பதின்வயதுகளுக்கு முன் ஏனென்று தெரியாமல் எனக்குப் பிடித்த எம்ஜியார் முகம், ஐம்பதுகளின் பிற்பகுதியில் அடிக்கடி தொலைகாட்சியில் தென்பட்டதாலோ மீண்டும் பிடித்திருக்கிறது. என் வயதில் எம்ஜியார் ஆடிய ஆட்டங்கள் என்னுள் வியப்பை மேலிட வைக்கின்றன.. ஒரு வேளை அது வயிற்றெரிச்சலோ என்றும் யோசிக்க விருப்பமில்லை1
இப்போது ஏன், எது பிடிக்கிறது? தொட்டு விடத் தொட்டுவிடத் தொடரும் என்ற டூயட்டானாலும், உன்னையறிந்தால்.. எனும் ஸோலோவானாலும், எம்ஜியாருக்கென்று ஒரு பாணி புரிகிறது. பல் தெரியச் சிரித்துக்கொண்டே பாடுவதாய் வாயசைப்பதும், க்ளோஸப் காட்சிகளில் காமெரா நோக்கி உற்றுப்பார்த்து, கண்கள் குறுக்கிச் சிரிப்பதும் அந்த நேரத்து ஸென் ZEN. அப்போது டிஎம்எஸ், கண்ணதாசன், விஸ்வநாதன் மட்டுமல்ல, உடன் ஒலிக்கும் சுசீலா குரலும் உடன் நடிக்கும் நாயகியின் முகமும்கூட மனத்துள் வந்து விடாது. முழுமையாய் அந்தக் கணத்தை ஆக்ரமிப்பதே எம்ஜியாரின் சாகசம்.
எம்ஜியாருக்கு நடிப்பு வராது, சும்மா கதாநாயகியாக இளம் வயதுப் பெண்களை வைத்து ஒப்பேற்றினார், அழத்தெரியாது, வெவ்வேறு பாத்திரங்களிலும் வெவ்வேறு ஒப்பனைகளிலும் தோன்ற மாட்டார், தன் வயதைக் காட்டும்படி காட்சி வைக்க மாட்டார் என்றெல்லாம் நாற்பதாண்டுகளுக்கு முன் நானும் எல்லாரும் சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தவன்தான், இன்று புரிகிறது எம்ஜியாரின் வெற்றி எது, எப்படியென்று.
கண்களை நேரே பார்க்கவும், அப்போது மனத்திலும் முகத்திலும் இருக்கும் புன்னகையை விழியிலும் கொண்டு வந்ததுமே அவரது வெற்றி. இதைத் திட்டமிட்டுச் செய்திருந்தாலும் அது ப்ரம்மாண்டம்தான்!


ரசனைக்கெல்லாம் காரணம் தேடி, அதைச் சொல்லித்திரிய வேண்டிய நிலை கஷ்டம்தான் ஆனால் இன்னும் முப்பதாண்டுகள் கழித்து,
ரசனை மாறும் ஆனால் அதை நியாயப்படுத்துவதில் நியாயம் இருக்காது.
நாம் செய்வன/ சொல்வன எல்லாமுமா, எல்லாம் மட்டுமா நியாயம்!
-
28th May 2013, 09:05 PM
#1335
Junior Member
Veteran Hubber
Masanam Sir had already uploaded this record, but the box office of 50 days in detailed manner.
-
28th May 2013, 09:07 PM
#1336
Junior Member
Veteran Hubber
A special edition was published by Thiraiulagam for the movie Rickshawkaran
-
28th May 2013, 09:07 PM
#1337
Junior Member
Veteran Hubber
100th day of Rickshawkaran
-
28th May 2013, 09:09 PM
#1338
Junior Member
Veteran Hubber
100 days in 12 theaters, Chennai Devi Paradise, Sri Krishna and Saravana.
Madurai New Cinema, Coimbatore Raja, Salem Alankar, Trichy Palace, Thirunelveli Lakshmi, Erode Krishna, Thanjavur Yagappa, Kumbakonam Diamond, Mayavaram Sundaram.
-
28th May 2013, 09:11 PM
#1339
Junior Member
Veteran Hubber
My father told me about the Rickshaw race that comes in the begining of the movie shot in Anna Nagar (newly formed) we can only see one or two houses. Couple of days the shooting was done, my father went to see the shooting from the 2nd day onwards.
-
28th May 2013, 09:18 PM
#1340
Junior Member
Veteran Hubber
The highlight of the movie is MGR's natural acting, the Rickshaw fight and songs. The movie which was commercially a super hit and he received the National award i.e. the best actor of 1971.
Kumar Rajendran had uploaded MGR's speech about receiving the Bharath award for this movie the details how he was selected for the award.
Bookmarks