Page 135 of 397 FirstFirst ... 3585125133134135136137145185235 ... LastLast
Results 1,341 to 1,350 of 3965

Thread: Makkal thilagam m.g.r part -5

  1. #1341
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1342
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம். ஜி. ஆரின் தகப்பனார் வழி பூர்வீகம் : தமிழ்நாடு கோவை மாவட்டம்

    மக்கள் திலகத்துடைய தந்தை கோபாலன். அவர்களுடைய தந்தை, பாட்டனார் உடைய பாரம்பரியம் கோவை மாவட்டத்தில் காங்கேயம் என்ற ஊருக்கு அடுத்து உள்ள புத்துயிர் என்று கிராமம், அதில் ஒரு சிறிய ஜமீன் போல் ஒரு மிராசுதாரர் ஆகவும் வாழ்ந்து உள்ளார்கள். இவர்கள் வாழும் காலத்தில் கோவை மாவட்டத்திற்கு பெயர் “கொங்கு நாடு” என்று சொல்லப்பட்டதாம். அவர்களுடைய ஜாதி கொங்கு வெள்ளாளர் என்ற சொல்லப்படுகிறது.

    இந்த கொங்கு நாட்டில் இருந்து அந்தக் காலத்தில் கோபாலன், அவருடைய தாய் தந்தை, கேரளா பாலக்காடு வடவனூருக்கு வந்து குடியேறிவிட்டதாக தெரிகிறது.
    எப்படி இருந்தாலும் கோபாலனுடைய பாரம்பரியம் தமிழ்நாடு கோவை மாவட்டம் என்பது ஆய்வில் தெரிகிறது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடைய பாரம்பரியம் தமிழ்நாடு தான் என்பது திட்டவட்டமாக தெரிகிறது. இப்போது நமக்கு எம்.ஜீ.ஆருடைய வாழ்க்கை வரலாறு தான் முக்கியம். பூர்வீகம் தமிழ்நாடு.

    இவர் பிறந்தது இலங்கை கண்டி. இவர் படித்தது வளர்ந்தது பிறகு வேலைக்கு சென்றது செந்தமிழ்நாடு கும்பகோணம் இவருடைய அம்மா, அப்பா, அண்ணன்கள், அக்காக்கள் கேரளா நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நமக்கு எம்.ஜி.ஆர். தான் கணக்கு. இவருடைய வரலாறு எப்படி என்பதைத்தான் நாம் அறிய விரும்புகிறோம். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், தான் ஒரு தமிழன் என்பதை பல முறை சொல்லி இருக்கிறார்.

    இது மக்கள் திலகத்துடைய தாத்தா, பாட்டி அவர்களுடைய வரலாறு ஆகும். அந்த வரலாறுக்கு உட்பட்ட மக்கள் திகலம் எம்.ஜி.ஆரின் தந்தை கோபாலன். அவர்கள் கேரளாவிற்கு எந்த சூழ்நிலையில் எந்த வருடத்தில் வந்தார்கள் என்பது ஒரு பக்கம். கோவையிலிருந்து சுமார் 30, 40 மைல் தொலைவில் உள்ள பாலக்காடு என்ற பெரும் நகரத்திற்கு அடுத்து உள்ள 20 மைலில் உள்ள வடவனூர் என்ற ஊரில் மருதூர் என்ற இடத்தில் வசித்து வந்த கோபாலன் திருமணம் செய்து கொண்ட பெண்ணின் பெயர் சத்தியபாமா, அவருடைய ஊர் குழல் அந்தம். வடவனூருக்கு அடுத்து உள்ள குழல் அந்தம். கோபாலன் அவர்கள் பட்டப் படிப்பு வரை படித்து உள்ளவர். எந்த விடயத்திலும் கோபப்படமாட்டார்.

    மனிதாபிமானத்தோடு நடந்து கொள்பவர். இவர்கள் வடவனூரில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் நான்கு குழந்தைகள் பிறந்தன இதில் இரண்டு பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்து உள்ளன.

    இதில் நான்காவது குழந்தைதான் சக்கரபாணி. இந்த குழந்தைகளுடன் கோபாலன் சத்தியபாமா அவர்கள் வடவனூரில் வாழ்ந்து இந்த காலத்தில் கோபாலன் அவர்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கும் இவர்களுக்கும் சொத்து விடயத்தில் தகராறுகள் ஏற்பட்டன.

    அது ரொம்ப பெரிய விடயமாக பெரிய அளவில் உண்டாகும் சமயத்தில் கோபாலன் அவர்கள் தர்ம நியாயம் அற்றவர்களுடன் நாம் சேர்ந்து வாழ்வதா என்ற எண்ணத்தோடு இலங்கையில் கண்டியில் உள்ள தன் நண்பர்களுக்கு தன்னுடைய குடும்ப சூழ்நிலையை எழுதுகிறார். அவர்களும் அதை படித்து புரிந்து கொண்டு உங்களுக்கு அங்கு வாழ பிடிக்கவில்லை என்றால் நீங்கள் இங்கு எப்போது வருகிaர்கள் (கண்டி) புறப்பட்டு வரவும்.

    வரும் போது தெரியப்படுத்திவிட்டு வரவும் என்று கடிதம் எழுதினார்கள். அந்த கடிதம் கிடைத்த உடனே கோபாலன் மிக ரகசியமாக இந்த விடயத்தை வைத்துக் கொண்டு இலங்கை புறப்படும் ஏற்பாடுகளை செய்கிறார்.

    கோபாலன் அவர்கள் பாலகாட்டில் ஒரு சில வருடங்கள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மாவட்ட முனிசிப்பல் நீதிமன்றத்தில் துணை நீதிபதியாக பணியாற்றி வரும் காலத்தில் வடவனூரை சேர்ந்த ஒரு வழக்கில் தனக்கு சாதகமான தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று உறவினர்கள் வற்புறுத்தினார்கள்.
    அதை ஏற்றுக் கொள்ளாத துணை நீதிபதி உங்கள் பக்கத்தில் கொஞ்சம் கூட நியாயம் இல்லை. எனவே உங்களுக்கு நான் உதவ முடியாது என்று சொன்னதில் ஏற்பட்ட எதிர்ப்பு அந்த ஊரில் கோபானுக்கு உண்டு.

    அதன் படி 1913ல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நான்கு குழந்தைகளையும், தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு இலங்கை வருகிறார். இலங்கை கண்டிக்கு வந்தவுடன் ராமுபிள்ளை வேலுபிள்ளை இருவரும் கோபாலன் குடும்பத்தினருக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கிறார்கள். பிறகு இலங்கையில் கண்டியில் இவர்கள் தங்குகிறார்கள்.

    இந்த காலகட்டத்தில் கண்டியில் பிறக்கிறார் எம்.ஜி.ஆர். 1917ல் செவ்வாய் கிழமை காலை 11.36 க்கு பிறக்கிறார். 5 வது குழந்தையாக தாய், தந்தையர் எல்லோரும் சேர்ந்து ராமச்சந்திரா என்று பெயர் வைக்கிறார்கள். அவரை அழைக்கும் போது நான்கு அண்ணன்கள் அக்காமார்கள் ராமச்சந்திரா என்று அழைத்து கொஞ்சி விளையாடும் போதும் அதை பார்த்து கோபால் சத்தியபாமா ரசிப்பார்கள்.

    நான்காவது குழந்தையான சக்கரபாணிக்கும் எம்.ஜி.ஆருக்கும் 4 வயது வித்தியாசம் என்று சொல்லப்படுகிறது. எம்.ஜி.ஆருக்கு 3 வயது ஆகும் போது அவர் ஓர் அளவுக்கு ஓடி, ஆடி விளையாடுவதும் அப்பா கோபாலன் வீட்டிற்கு வந்தவுடனே அவரை கட்டிப் பிடித்து கொஞ்சுவாராம்.

    இந்த காலகட்டத்தில் கோபாலனுக்கு ஒரு கல்லூரியில் பேராசிரியராக வேலை கிடைத்தது. அதில் இருந்து சில வருடங்கள் கழித்தவர் கண்டி மாவட்ட நீதி மன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்தார். இந்த நான்கு குழந்தைகளுடன் நல்ல வசதியோடு வாழ்ந்து கொண்டு இருக்கும் காலத்தில் கோபாலனுக்கு உடல் நலம் பாதிக்கப்படுகிறது.

    கோபாலன் மாரடைப்பால் 1920 ம் ஆண்டு இறந்து விடுகிறார். பிறகு சத்திய தாய் தன் கணவர் இறந்த துயரத்திலே மூழ்கி விடுகிறார். ராமுபிள்ளை, வேலுபிள்ளை ஆறுதல் சொல்லி செல்கிறார்கள்.

    அதன் பிறகு தன் கணவரை இழந்த சத்தியபாமா தன் கணவர் வேலை பார்த்த காலத்தில் வாங்கப் பட்ட சொந்த வீடு, சேர்த்து வைத்துக் இருந்த பணம், நகைகள் இவைகளை எல்லாம் செலவுக்கு வைத்து கொண்டு கண்டியிலே வாழ்கிறார். இந்த காலகட்டத்தில் திடீர் என்று விஷகாய்ச்சல் ஏற்பட்டு தன் இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இறந்து விடுகிறார்கள்.

    ஏற்கனவே தன் கணவரை பறிகொடுத்து விட்டு துக்கத்தில் இருக்கும் சத்தியபாமாவுக்கு மேலும் ஒன்றுக்கு பின் ஒன்றாக மூன்று குழந்தைகளும் இறந்ததை நினைத்து அழுது புலம்பும் சமயத்தில் எம்.ஜி.ஆர். தன் தாயின் கழுத்தை கட்டிப் பிடித்து அம்மா அழாதே! அம்மா என்று சொல்லுவாராம்.

    ஐந்தாவது குழந்தையாக நீ பிறந்த பிறகு தாண்டா பெற்ற அப்பாவையும், உன் கூட பிறந்த 3 பேரும் செத்து போனார்களடா, என்று எம்.ஜி.ஆரை பிடித்து அழுவாராம். அவருடைய சேட்டைகள், விளையாட்டுகள் எந்த கவலையும் தெரியாமல் ஓடி, ஆடி மழலை பேச்சு பேசும் போது எல்லாம் அந்த தாய் பழைய நினைவுகள் எல்லாம் மறந்து சக்கரபாணியையும், ராமச்சந்திரனையும் காப்பாற்ற வேண்டும் என்ற பெரிய சபதத்தோடு மீண்டும் வேலுபிள்ளை, ராமுபிள்ளைகளின் உதவியை நாடுகிறார்கள்.

    அந்த சமயம் அவர்கள் இருவரும் அம்மா சத்திய தாயிடம் அண்டி பிழைக்க வந்த இடத்தை விட்டு விட்டு தங்களுடைய சொந்த இடத்திற்கே செல்வது மிகச் சிறந்தது ஆகும். அப்போது சத்திய தாய் சொல்லுகிறார், எனக்கு சொந்த இடம் என்பது கேரளா வடவனூர்தான், அந்த ஊர் வேண்டாம் என்று தான் சபதத்தோடு இங்கு வந்தோம்.

    இப்போ அவர் இல்லாமல் வடவனூருக்கு எப்படி செல்வேன்? என்ற கேள்வி அவருக்கு எழுந்தது. தான் அந்த சமயத்தில் கும்ப கோணத்தில் இருக்கும் மதுரை பாய்ஸ் நாடக கம்பெனியில் வேலை செய்யும் நாராயணன் என்பவரின் ஞாபகம் வந்தது. இவர் சத்தியபாமாவுக்கு நெருங்கிய உறவினர். நாராயணனுக்கு சத்திய பாமா தன் குடும்ப நிலைமைகளை பற்றி விரிவாக கடிதம் போடுகிறார்.

    அதன்படி அவருடைய அழைப்பின் படி நீங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு கும்பகோணம் வந்து விடுங்கள் என்று சொல்லுகிறார், அதன்படி வேலுபிள்ளை, ராமுபிள்ளை உதவியுடன் சத்தியபாமா குழந்தைகளை அழைத்துக் கொண்டு கும்பகோணம் வந்து சேருகிறார்கள்.

    சத்தியபாமா நாராயணனுடைய உதவியுடன் கும்பகோணத்தில் ஒரு சிறிய வீடு வாடகைக்கு பிடித்து வாழ்ந்து கொண்டு இருக்கும் நாட்களில் தன்னுடைய இரண்டு மகன்களையும் எப்படியாவது ஓரளவுக்கு படிக்க வைக்க வேண்டும் என்று நாராயணனிடம் சத்தியபாமா சொல்கின்றார். அதன்படி, இந்த இரண்டு பையன்களையும் கும்பகோணத்தில் உள்ள யானை அடி இடத்தில் உள்ள அரசாங்க பள்ளிக் கூடத்தில் சேர்த்து விட்டார்கள்.

    மேலும் பையன்கள் படிப்பதற்கு சிலேட்டு புத்தகங்களையும் வாங்கி கொடுத்து விட்டு பிறகு இந்த பையன்களின் பள்ளி படிப்புக்கு ஆன செலவுகளுக்கும், சாப்பாட்டிற்கும் என்ன செய்வது என்ற பிரச்சினை உண்டாகிறது.

    இந்த நேரத்தில் சத்தியபாமா மிக மன தைரியத்தோடு நான் எங்கேயாவது வேலை செய்து என் பிள்ளைகளை காப்பாற்றுவேன் என்று நாராயணனிடம் செல்கிறார். அடுத்து சத்தியபாமா குடி இருக்கும் பகுதியில் அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் இந்த அம்மாவினுடைய நிலைமைகளை பார்த்து இந்த அழகான பையன்களுடைய நிலைமைகளை அறிந்தும் சிலர் வேலைக்கு செல்ல உதவி செய்கிறார்கள்.

    இந்த நிலையில் எம்.ஜி.ஆருக்கும் சக்கரபாணிக்கும் 3 வயதுதான் வித்தியாசம். சக்கரபாணி, தம்பியை ராமச்சந்திரா என்று அழைப்பார். பள்ளிக்கூடம் முடிந்து அவர்கள் வீட்டில் இருக்கும் நேரத்தில் இவர்களுடைய தந்தை பற்றி போதனை சொல்லுவார்கள். சத்தியம், தர்மம், நேர்மை, நீதி, பக்தி எல்லாம் நிறைந்தவர் உங்கள் தந்தை, நன்றாக படித்தவர், நீதிபதியாகவும் பேராசிரியராகவும் பணிபுரிந்து பலரிடம் மதிப்பும், மரியாதையும் பெற்றவர்.

    அவர் போல் நீங்களும் நன்கு படித்து வாழ்ந்து காட்ட வேண்டும் இதைக் கேட்ட இருவரும் தன் தாயிடம் உறுதி மொழி எடுத்து கொள்கிறார்கள். தந்தை சொல்லுக்கு மந்திரம் இல்லை என்பார்கள். ஆனால் இவர்களுக்கு தந்தைக்கு பதிலாக தாய் சொல்கிறார் மந்திரத்தை. அந்த மந்திரத்தை மனதில் பதிவு செய்து கொண்டவர்தான் மக்கள் திலகம் எம்.ஜி.அர். தன் தாயினுடைய உழைப்பால் மூன்று வேளையும் சாப்பிட்டு கொண்டு பள்ளிக்கூடம் சென்று வருகிறோம் என்ற எண்ணம் எம்.ஜி.ஆரு மனதுக்குள் நாளுக்கு நாள் வளரத் தொடங்கியது.

    எம்.ஜி.ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் (எம். ஜி. இராமச்சந்திரன், ஜனவரி 17, 1917 - டிசம்பர் 24, 1987), தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்தார்.

    -----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    THANK U MR.NELLAISIVAM

  4. #1343
    Junior Member Devoted Hubber masanam's Avatar
    Join Date
    May 2011
    Location
    Kuala Lumpur
    Posts
    1
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    DR.RUDHRAN ABOUT MAKKAL THILAGAM - FROM NET.


    மீசையும் கொஞ்சமாய் தாடியும் வளர்த்து, தோளில் ஒரு ஜோல்னா பையுடன் ருஷ்ய-ஃப்ரென்ச் எழுத்தாளர்களை மட்டுமே படிப்பதாய் ஒரு பாவ்லா/ பாவனை காட்டிக் கொண்டிருந்த வயதுகளில் எனக்கு எம்ஜியார் பிடிக்கவில்லை – நடிகராக மட்டுமல்ல, அரசியல் தலைவராகவும்.


    அது ஒரு சிக்கலான வயதின் கட்டம். ஸ்ரீதர் தானே நல்ல இயக்குநர் என்று மனம் கேள்வி எழுப்பினாலும் பாலசந்தரைப் பற்றிப் பேச வைத்த வயதுகளின் காலம்.


    ஆனால் அப்புறம் எனக்கு எம்ஜியார் பிடித்தது...ரொம்ப வருடங்களுக்குப் பிறகு, ஐந்திலிருந்து பத்து வயது வரை பிடித்த அளவுக்கு. நான் படிக்க வீட்டிலிருந்த சின்ன மேஜையின் மேல் எம்ஜியார் படம் மாட்டி வைத்திருந்தவன் நான். எம்ஜியார் ஏன் பிடிக்கும் என்று கேட்டால்,”பிடிக்கும்” என்று மட்டுமே பதில் தெரிந்திருந்த அறுபதுகளின் முற்பகுதி அது. எழுபதுகளில் அறிவுஜீவித்வ ஒப்பனை. பிறகுஒவ்வொரு வேடமாய் மாறி நடிப்பு மட்டுமல்ல நாடகங்களும் சலித்தபின், என் ரசனை எளிமையான நேர்மையான ஒன்றாய் மாறியிருக்கிறது (என்று இப்போது கருதுகிறேன்).



    இப்போதெல்லாம் எனக்கு எம்ஜியார் பாடல்களைக் கேட்க மட்டுமல்ல பார்க்கவும் பிடித்திருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன் கூட இதை நான் இப்படி வெளிப்பையாகச் சொல்லாமல் டிஎம்எஸ்க்காக, கண்ணதாசனுக்காக, விஸ்வநாதனுக்காக என்றெல்லாம் என்னிடமேயும் காரணம் சொல்லித்தான் எம்ஜியார் பாடல்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

    நான் சொல்லிக்கொண்டிருந்த காரணங்களுக்காகக் கேட்கலாம் பார்க்க முடியாது, பார்ப்பது எம்ஜியாருக்காகத்தான்!

    பதின்வயதுகளுக்கு முன் ஏனென்று தெரியாமல் எனக்குப் பிடித்த எம்ஜியார் முகம், ஐம்பதுகளின் பிற்பகுதியில் அடிக்கடி தொலைகாட்சியில் தென்பட்டதாலோ மீண்டும் பிடித்திருக்கிறது. என் வயதில் எம்ஜியார் ஆடிய ஆட்டங்கள் என்னுள் வியப்பை மேலிட வைக்கின்றன.. ஒரு வேளை அது வயிற்றெரிச்சலோ என்றும் யோசிக்க விருப்பமில்லை1

    இப்போது ஏன், எது பிடிக்கிறது? “தொட்டு விடத் தொட்டுவிடத் தொடரும்” என்ற டூயட்டானாலும், “உன்னையறிந்தால்..” எனும் ஸோலோவானாலும், எம்ஜியாருக்கென்று ஒரு பாணி புரிகிறது. பல் தெரியச் சிரித்துக்கொண்டே பாடுவதாய் வாயசைப்பதும், க்ளோஸப் காட்சிகளில் காமெரா நோக்கி உற்றுப்பார்த்து, கண்கள் குறுக்கிச் சிரிப்பதும் அந்த நேரத்து ஸென் ZEN. அப்போது டிஎம்எஸ், கண்ணதாசன், விஸ்வநாதன் மட்டுமல்ல, உடன் ஒலிக்கும் சுசீலா குரலும் உடன் நடிக்கும் நாயகியின் முகமும்கூட மனத்துள் வந்து விடாது. முழுமையாய் அந்தக் கணத்தை ஆக்ரமிப்பதே எம்ஜியாரின் சாகசம்.

    எம்ஜியாருக்கு நடிப்பு வராது, சும்மா கதாநாயகியாக இளம் வயதுப் பெண்களை வைத்து ஒப்பேற்றினார், அழத்தெரியாது, வெவ்வேறு பாத்திரங்களிலும் வெவ்வேறு ஒப்பனைகளிலும் தோன்ற மாட்டார், தன் வயதைக் காட்டும்படி காட்சி வைக்க மாட்டார் என்றெல்லாம் நாற்பதாண்டுகளுக்கு முன் நானும் எல்லாரும் சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தவன்தான், இன்று புரிகிறது எம்ஜியாரின் வெற்றி எது, எப்படியென்று.

    கண்களை நேரே பார்க்கவும், அப்போது மனத்திலும் முகத்திலும் இருக்கும் புன்னகையை விழியிலும் கொண்டு வந்ததுமே அவரது வெற்றி. இதைத் திட்டமிட்டுச் செய்திருந்தாலும் அது ப்ரம்மாண்டம்தான்!








    ரசனைக்கெல்லாம் காரணம் தேடி, அதைச் சொல்லித்திரிய வேண்டிய நிலை கஷ்டம்தான் ஆனால் இன்னும் முப்பதாண்டுகள் கழித்து,

    ரசனை மாறும் ஆனால் அதை நியாயப்படுத்துவதில் நியாயம் இருக்காது.
    நாம் செய்வன/ சொல்வன எல்லாமுமா, எல்லாம் மட்டுமா நியாயம்!
    டாக்டர் ருத்ரனின் சத்திய வரிகள்.
    மக்கள் திலகத்தின் charisma அளப்பரியது
    .

  5. #1344
    Junior Member Devoted Hubber masanam's Avatar
    Join Date
    May 2011
    Location
    Kuala Lumpur
    Posts
    1
    Post Thanks / Like
    Quote Originally Posted by MGR Roop View Post
    100th day of Rickshawkaran

    ரூப் ஸார், ரிக்ஸாக்காரன் பட வெளியீட்டின் விளம்பர ஆவணங்கள் அற்புதம். நன்றி.
    கும்பகோணம், மாயவரம் போன்ற சிறிய நகரங்களில் கூட நூறு நாட்கள் ஓடியது சாதனை.

  6. #1345
    Junior Member Devoted Hubber masanam's Avatar
    Join Date
    May 2011
    Location
    Kuala Lumpur
    Posts
    1
    Post Thanks / Like
    ரவிச்சந்திரன் ஸார்,
    'மக்கள் திலகம் எம். ஜி. ஆரின் தகப்பனார் வழி பூர்வீகம் : தமிழ்நாடு கோவை மாவட்டம்' ..தகவலுக்கு நன்றி.

  7. #1346
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like



  8. #1347
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post



    Thanks Vinod Sir for linking the full movie url of Rickshawkaran

  9. #1348
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    very rare advt- 70th day of rikshakkaaran - the hindu paper.


  10. #1349
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    very rare advt- 70th day of rikshakkaaran - the hindu paper.

    Very rare thanks for sharing.

  11. #1350
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் ரசிகர்களிடம் இந்த இனிய செய்தியினை பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்..



    வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் - அதை
    வாங்கி தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்


    பூஜை அறையில் தலைவரின் படத்தை வைத்து பூஜித்து, தனது இல்லத்தில் திரும்பிய இடமெல்லாம் தலைவரின் திருவுருவ படங்களை வைத்திருக்கும் நமது தெய்வத்தின் பக்தரான திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களின் மகன் சரவணன் (எ) ர. பிரசாந்த் பத்தாவது (cbse) தேர்வில் தான் பயிலும் பள்ளியில் முதல் மாணவனாக தேறியிருக்கிறார்...அனைத்து பாடங்களிலும் நூற்றுக்கு நூறு எடுத்து சாதனை படைத்திருக்கிறார்..மேலும் தலைவருக்கு மிகவும் பிடித்த யோகா பாடத்தை திறம்பட கற்று, மாநில அளவிலான போட்டியில் பங்கு பெற்று, கோவை மாவட்ட அளவில் 5வது மாணாக்கனாக பரிசு பெற்றிருக்கிறார். இவரது இந்த சாதனையால் நாமக்கல்லில் உள்ள (இந்த ஆண்டு +2வில் முதலில் வந்த) கிரீன் பார்க் பள்ளியில் உடனடியாக அட்மிஷன் கிடைத்தது. இந்த மாணவனுக்கு, பள்ளியின் இயக்குனர், நடிகர் ராஜீவ் மற்றும் புதுச்சேரி, தமிழ்நாடு, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மக்கள் திலகத்தின் அபிமானிகள் பலர் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்..மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி என்ற குறளுக்கேற்ப இந்த மாணவர் தன் தந்தைக்கு செய்ய வேண்டிய கடமையை செய்து பெருமை படுத்தியிருக்கிறார்..மேலும் இந்த மாணவர் கருவிலே நாராயண மந்திரம் கற்ற பிரகலாதன் போல தன் தந்தையிடமிருந்து எம்ஜிஆர் என்று மூன்றெழுத்து மந்திரத்தை கற்று, நன்றாக கற்கும் பேராற்றலை பெற்று செயற்கரிய இந்த சாதனையை செய்தார் என்றால் மிகையாகாது...தந்தையைப்போல் தனயன் என்பது போல இவரும் எம்ஜிஆரின் தீவிர ரசிகர்.. விளம்பரமே இல்லாமல் நற்பணிகள் மற்றும் தொண்டுகள் பல செய்யும் திரு. ரவிச்சந்திரனின் இல்லத்திற்கு அமரர் டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் வந்திருந்து அவரது மகனை 'நன்றாக படித்து பேர் வாங்கவேண்டும்' என்று ஆசீர்வதித்து சென்றார்..அப்பெருமகனாரின் ஆசீர்வாதம் இம்மாணவனுக்கு நிலைத்தது இன்னுமொரு சிறப்பு.

    "இத்தனை பெருமைகளுக்கும் காரணம் நான் அன்றாடம் வணங்கும் என் இதயம் தெய்வம் எம்ஜிஆர்தான். அவரை உளமார வணங்கினால் நமக்கு அனைத்து காரியங்களிலும் வெற்றியை கொடுப்பார்" என்று உணர்ச்சி பெருக்குடன் கூறும் திரு. ரவிச்சந்திரன் வாழ்க்கையில் இன்னும் இது போன்று பல வெற்றிகளைப் பெற நாம் அனைவரும் வாழ்த்துவோம்.

    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
    Last edited by kaliaperumal vinayagam; 29th May 2013 at 07:21 PM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •