-
30th May 2013, 09:34 AM
#1361
Junior Member
Platinum Hubber
-
30th May 2013 09:34 AM
# ADS
Circuit advertisement
-
30th May 2013, 01:18 PM
#1362
Junior Member
Platinum Hubber
எம்.ஜி.ஆர். என்ற அதிசயம்!
சட்டக்கல்லூரி மாணவனாக நான் இருந்தபோதே எம்.ஜி.ஆர்.மீது கொண்டிருந்த பெரும்பாசத்தை வெறும் வார்த்தைகளுக்குள் சொல்லிவிட முடியாதது. பிற்காலத்தில் அவரின் அன்புக்குரிய தம்பியாகி, அவரது பொற்கால ஆட்சியில் அமைச்சராகவும் நான் இருந்தது எனக்குக் கிடைத்த பாக்கியம்.
எம்.ஜி.ஆர். முதல்வர் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில்
தினந்தோறும் காலை டிபன் ராமாவரம் தோட்டத்தில்; மதிய உணவும் கோட்டையில் அவரது அறையில்தான். உண்ணுகிற நேரமெல்லாம்கூட ஏழை எளிய மக்களின் நலனையே எண்ணுகிற எம்.ஜி.ஆரின் அக்கறையை உடனிருந்து பார்த்து நெகிழ்ந்திருக்கிறேன். சத்துணவுத்திட்டம், இலவச வேட்டி சேலைத் திட்டம், இலவச காலணித் திட்டம்
இப்படி எத்தனையோ நலத்திட்டங்கள் அவரது பொன்மனத்திலிருந்து உருவானவைதான்.
ஒருமுறை திருச்சிக்கு எம்.ஜி.ஆருடன் காரில் பயணிக்கிறேன். வழியில் ஒரு ரயில்வே கேட். கார் நிற்கிறது. எம்.ஜி.ஆர். வந்த செய்தியறிந்து பக்கத்து வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த மக்கள் பறந்து வருகிறார்கள். அத்தனை பேரும் காரைச் சூழ்ந்து கொண்டு பாசத்தைக் கொட்ட
திக்குமுக்காடிப் போகிறார் எம்.ஜி.ஆர். எல்லாரும் நல்லா இருக்கீங்களா? என்று அன்போடு விசாரிக்கிறார். பதிலுக்கு அந்த மக்களோ மகராசா
நீங்க நல்லா இருந்தாலே போதும், நாங்க நல்லா இருப்போம் என்று அந்த உழைக்கும் மக்கள் கையெடுத்துக் கும்பிட்டுச் சொல்ல
அவர்கள் அத்தனை பேரின் கைகளைப் பற்றிக்கொண்டு நெகிழ்ந்து போகிறார் எம்.ஜி.ஆர். கார் நகர்கிறது. சில நிமிடங்கள் மௌனமாக வந்த எம்.ஜி.ஆர். உருகிப்போய் சொன்னார்: நான் நல்லா இருந்தாலே தாங்களும் நல்லா இருப்போம்னு சொல்ற இந்த மக்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போறேன்!''
மக்கள் தன் மீது காட்டிய பாசத்தைப் போலவே, மக்கள் மீது அவர் காட்டிய அன்பையும் அக்கறையையும் நேரில் பார்த்தேன். அவரது ஆட்சியின்போது ஒருமுறை ராமேஸ்வரத்தில் கடுமையான புயல் மழை. குடியிருப்புப் பகுதிகளில் பலத்த சேதம். தகவல் கிடைத்ததும் உடனே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்றார் எம்.ஜி.ஆர். அவருடன் நானும். சேறும் சகதியுமாக நீரோடிய வீதிகளில், கண்ணீரும் கம்பலையுமாக நின்றிருந்தனர் மக்கள். அவர்களைப் பார்த்ததுமே காரிலிருந்து இறங்கிய எம்.ஜி.ஆர். கொஞ்சம்கூட யோசிக்காமல் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு முழங்கால் அளவு தண்ணீரில் நடக்க
பதறிப்போன மக்களோ அய்யா, எங்களுக்கு ஒண்ணும் பிரச்னையில்ல, உங்களப் பாத்ததே போதும், சகதியில நடக்காதீங்க என்று தடுத்தும் கேளாமல், அவர்களது அருகில் போய் ஆறுதல் கூறினார். அதேஜோரில் மின்னல் வேகத்தில் நிவாரணப்பணிகளுக்கும் உத்தரவிட்டார். மக்களின் குறைகளை கோட்டையில் உட்கார்ந்து கேட்டவர் அல்ல
தெருவுக்கே வந்து தீர்த்து வைத்தவர் எம்.ஜி.ஆர்.
கட்சித்தலைவராக தொண்டர்கள் மீது அவர் கொண்டிருந்த பற்றை சொல்லித்தீராது. கட்சியில் சின்ன ஆள், பெரிய ஆள் என்றெல்லாம் பேதமே பார்க்க மாட்டார். புதுக்கோட்டைப் பகுதியில் இரண்டு தொண்டர்கள் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் சேர்ந்து விட்டனர். உள்ளூர் பத்திரிகையில் இது சில வரிச் செய்தியாக வெளியானது. இந்தச் செய்தி எம்.ஜி.ஆரின் கவனத்திற்குப் போனதுமே எனக்கு ஃபோன் செய்து விசாரித்தார். அப்போது நான் கோவையில் இருந்தேன். அவங்க ரெண்டு பேருமே அடையாளம் தெரியாத நபர்கள் என்றேன். உடனே எம்.ஜி.ஆர்.அப்படிச் சொல்லாதீங்க. கட்சியிலேர்ந்து யாரையுமே நான் இழக்க விரும்பலை. நீங்க ஊருக்குப் போனதுமே அவங்க ரெண்டு பேரையும் திரும்பவும் கட்சியில சேர்த்துடணும். அந்தச் செய்தி அதே உள்ளூர் பேப்பர்ல வரணும், அதை முடிச்சிட்டு என்னை வந்து பாருங்க என்றார் அழுத்தமாக. அவர் சொன்னதை அப்படியே செய்து முடித்தேன். அந்தத் தொண்டர்களுக்கோ பூரிப்பு தாங்கவில்லை. அப்புறம்தான் அவரைப் பார்த்தேன். என் கன்னத்தில் செல்லமாகத் தட்டிச் சிரித்த அந்தச் சிரிப்பிருக்கிறதே
அவர்தான் எம்.ஜி.ஆர்.!
முதல்வராக ஆட்சிப்பொறுப்பேற்ற நாள்முதல் அவர் அமரராகும் வரை
அந்த 11 ஆண்டுகளில் 1 சென்ட் நிலமோ அல்லது வீடோ..இந்தத் தமிழ்நாட்டிலோ, வேறெந்த மாநிலத்திலோ அவர் வாங்கியது கிடையாது. அதேசமயம் திரையுலகில் இருந்தபோது தான் சம்பாதித்த சொத்துக்களை மாற்றுத் திறனாளிக் குழந்தைகளின் நலனுக்கும், கட்சிக்கும் என தமிழக மக்களிடமே திருப்பிக் கொடுத்து லட்சக்கணக்கான மக்களின் இதயங்களில் அவர்போல இடம் பிடித்தவர் வேறு யாரும் கிடையாது. ஏனெனில் தான் சம்பாதித்த மாபெரும் சொத்து மக்கள் செல்வாக்கு என்பதைத்தான் அவர் மதித்தார், அதில் துளிகூட கீறல் விழாமல் கடைசிவரை காத்தார்.
இதற்கு உதாரணமாக ஒரு சம்பவம்
எம்.ஜி.ஆருடன் காரில் செல்கிறேன். சாலையில் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் தலைவா வாழ்க! எம்.ஜி.ஆர். வாழ்க என்று கோஷமிடுகிறார்கள். இதைப் பார்த்த எம்.ஜி.ஆர். என்னிடம் எல்லாருமே எம்,ஜி,ஆர், வாழ்கன்னுதானே வாழ்த்தறாங்க. ஒருத்தர்கூட முதலமைச்சர் வாழ்கன்னு சொல்லலை. ஏன் தெரியுமா? என்று கேட்டார். உங்க மூன்றெழுத்துப் பெயர்தான் அவங்களுக்கு மந்திரம் மாதிரி. அதனாலதான் என்றேன். அதுமட்டுமல்ல, முதலமைச்சர் வாழ்கன்னு சொன்னா அது பதவியை வாழ்த்தற மாதிரி, எம்.ஜி.ஆர். வாழ்கன்னு சொன்னாதான் அவங்களுக்கு என்னை வாழ்த்தற திருப்தி. இதுதான் நான் சம்பாதிச்ச சொத்து. இதைத்தான் நான் பத்திரமா காப்பாத்தியாகணும்! என்றார். இறுதிவரை சொன்னது போலவே நின்றார்.
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் சென்னை வருகை தந்தபோது முதல்வர் எம்.ஜி.ஆரை கோட்டையில் சந்தித்தார். இருவரும் உற்சாகமாக உரையாடினார்கள். சந்திப்பு முடிந்து இளவரசரை ஆளுநர் மாளிகைக்கு திரும்ப அழைத்து வருகிறேன். அப்போது சார்லஸ் என்னிடம் எம்.ஜி.ஆரின் பின்னணி என்ன? இவர் ராஜகுடும்பத்தைச் சேர்ந்தவரா? என்று வியப்போடு விசாரிக்கிறார். நான் அவரது குடும்பப்பின்னணி பற்றி விவரித்தேன். ஆனாலும் ஆச்சரியம் விலகாமல் சார்லஸ் சொன்னார்: ஒருவேளை போன பிறவியில் இவர் அரசராக இருந்திருக்கலாம்!. அப்படியே நான் மெய்சிலிர்த்துப் போய்விட்டேன். தமிழக மக்கள் மட்டுமல்ல
உலகையே ஆண்ட அரச குடும்பத்தின் இளவரசர்கூட, நம் எம்.ஜி.ஆரைப் பார்த்து அரசர் என்று வியக்கிறாரே
அந்த அதிசயம்தான் எம்.ஜி.ஆர்.!
தகவல்: சு. திருநாவுக்கரசர் ( முன்னாள் அமைச்சர் )
எழுத்து: எம்.பி. உதயசூரியன்
-
30th May 2013, 04:32 PM
#1363
Junior Member
Platinum Hubber
சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்த ஆறு படங்களும் மக்கள் திலகத்தின் மகத்தான வெற்றி காவியங்கள் .
1. தெய்வத்தாய் - 1964.
2. நான் ஆணையிட்டால் - 1966
3. காவல்காரன் - 1967
4. கண்ணன் என் காதலன் - 1968
5. ரிக்ஷாக்காரன் - 1971
6. இதயக்கனி -1975
ஆறு வித்தியாசமான படங்களில் மக்கள் திலகம் அவர்கள்
சிறப்பாக நடித்து வெற்றி பெற்றார் .
தெய்வத்தாய்-காவல்காரன் -ரிக்ஷாக்காரன் - . இதயக்கனி
4 படங்கள் மிகப்பெரிய வெற்றி அடைந்தது .
நான் ஆணையிட்டால் - படம் .
மக்கள் திலகம் கொள்ளை கூட்டத்தை திருத்தும் வேடத்தில்
அபாரமாக நடித்து ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டை பெற்றார் . கருத்துள்ள சமூக சீர்திருத்த படம் .
கண்ணன் என் காதலன்-
இசைக்கு முக்கியத்துவம் தந்த படம் . எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .
சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்த இந்த 6 படங்களும்
மக்கள் திலகத்திற்கு புகழ் சேர்த்த படங்கள் .குறிப்பாக மக்கள் திலகத்திற்கு ரிக்ஷாக்காரன் படம் ''பாரத் '' -பட்டம் பெற்று தந்தது .
காவல்காரன் - படம் 1967 சிறந்த படம் -
இதயக்கனி - 1975 - மிகப்பெரிய சாதனை படம் .
சத்யா மூவிஸ் திரு ராம வீரப்பன் மறக்க முடியாத மனிதர் .
-
30th May 2013, 08:22 PM
#1364
Junior Member
Diamond Hubber

MALAIMALAR
-
31st May 2013, 05:55 AM
#1365
Junior Member
Platinum Hubber
"நான் முதல் மந்திரியாக இருந்தாலும் மக்கள் சேவகன். மக்கள் வாழ்வே என் வாழ்வு" இது எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்சராக ஆன பிறகு, அவர் சொன்ன வார்த்தைகளும், எண்ணமும் இது தான்.
அதிகாரிகளிடமும், பத்திரிகை நிருபரிடமும் பாசதுடன் பழகுவார். எல்லோரையும் சார் சார் என்று அழைப்பார்.. தனகுண்டான மனகுறை வெளிகாட்டமாட்டார், எப்பொழுதும் புன்சிரிப்புடன் காணப்பட்ட பொன்மனச்செம்மல் டாக்டர் mgr. இவர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திக கொள்கையுள்ளவராயிருந்தும்,இவரை மக்கள் கடவுளாகவே கருதினர். தன் தாயின் மேல் கொண்ட அன்பின் காரணமாக தன் தாய்க்கு கொயில் கட்டி வணங்கியவர் புரட்சி தலைவர்.
இப்படி எல்லா வகையிலும் தலைவன் என்ற தகுதிக்கு தன்னை தயார்ப்படுத்தி கொண்டார் மக்கள் தலைவன். தான்மட்டுமில்லாது தன்னுடன் இருக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் அறிவுரைகள் வழங்குவார் " எல்லாம் நம் கையில் இல்லை மக்கள் கையில் தான் இருக்கிறது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று நினைத்து கொண்டு இருந்தால் போதாது மக்கள் மனதில் குடிபோக வேண்டும். அவர்கள் நாம் எப்போதும் சந்தித்து கொண்டே இருக்கணும். இந்த கட்சிக்கு நீங்கள் எல்லாம் எப்படி என்னை தலைவராக தேர்ந்து எடுத்துள்ளீர்களோ! அதே போல் தான் நாம்மை அனைவரையும் மந்திரிகளாக இருந்து ஆட்சி நடத்த மக்கள் தேர்ந்து எடுத்து உள்ளார்கள். நான் சினிமாவில் புகழ் அடைந்தேன் என்றால் அது மக்களால்தான். நான் அப்பவே மக்களுக்கு நண்பன் ஆகிவிட்டேன். நான் இப்போ ஒரு பெரிய அளவில் வளர்ந்து உள்ள அரசியல் கட்சிக்கு தலைவனாகவும் தமிழ்நாட்டுக்கு முதல் அமைச்சராகவும் இருக்க முடிந்தது. அதனாலே நாம் எல்லாம் மக்கள் மனதில் இருக்கனும்."
இது முக்கியமாக மற்ற மந்திரிகளுக்கும் எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கும் மக்கள் திலகம் அடிக்கடி சொல்லும் அறிவுரைகள்.
இவற்றையெல்லாம் நாம் பார்க்கும்பொது, புரட்சித்தலைவர் டாக்டர்
எம். ஜி. இராமச்சந்திரன் ஒரு நாயகன்தான். நீ! ஒரு நாயகன்.......
-
31st May 2013, 06:23 AM
#1366
Junior Member
Platinum Hubber
ஆனந்தஜோதி
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரோடு, நடிகை தேவிகா இணைந்து நடித்த ஒரே படம் ஆனந்தஜோதி! கதாநாயகியின் தம்பியாக கமல்ஹாசன், எம்.ஜி.ரோடு நடித்த படமே ஆன்ந்தஜோதி. இப்படத்தில் எம்.ஜி.ஆரை, ‘மாஸ்டர்! மாஸ்டர்!’ என்று மழலை மொழியில் கமல்ஹாசன் அழைக்கும் குரல் நயம் அருமையோ அருமை.
ஹரிஹரன் பிக்சர்ஸ் தயாரிப்பில், வி.என். ரெட்டி, ஏ.எஸ்.ஏ. சாமி இயக்கத்தில், விசுவநாதன் – ராமமூர்த்தி இசையமைப்பில், கண்ணதாசன் பாடல்கள் நிறைந்த இப்படம் 5.7.1963 அன்று வெளியானது.
படத்தில் எம்.ஜி.ஆர் உடற்கல்வி ஆசிரியராக, ‘ஆனந்த்’ என்ற பெயரில் நடித்துள்ளார்.
ஆனந்தஜோதி படத்தில் வரும் அனைத்துப் பாடல்களும் அனைவரது பாராட்டுகளையும் பெற்றவையே என்றால் உண்மையே.
இப்படத்தில்,
“காலமகள் கண்திறப்பாள் சின்னையா – நாம்
கண்கலங்கி கவலைப்பட்டு என்னையா?”
“நினைக்கத் தெரிந்த மனமே – உனக்கு
மறக்கத் தெரியாதா?”
இவ்வாறு பி. சுசீலாவின் குரலில் சோகமழை பொழியும் பாடல்களும், பலரது ஆதங்கங்களுக்கு ஆறுதல் தரும் பாடல்களே!
தர்மத்தின்சாவி!
“பலப்பலப் பலபல ரகமா இருக்குது பூட்டு – அது
பலவிதமா மனிதர்களைப் பூட்டுது போட்டு
கலகலவென பகுத்தறிவு சாவியைப் போட்டு – நான்
கச்சிதமாய்த் திறந்து வைப்பேன் இதயத்தைக் காட்டு….”
கேட்டீர்களா …. பாட்டு?
பகுத்தறிவு எனும் சாவியால்… இதயங்ளைத் திறந்து வைக்க வருகிறார் எம்.ஜி.ஆர்!
இனி அவர் என்ன சொல்கிறார்?
“அடக்கமில்லாம சபையில் ஏறி
அளந்துகொட்டும் ஆண்களுக்கு வாயிலே பூட்டு!
அடுத்தவர் பையில் இருப்பதைக் கையில்
அள்ளிக் கொள்ளும் திருடருக்கு கையிலே
பூட்டு!”
சரிதானே!
வாய்ப்பேச்சு வீரர்களுக்கு வாயிலும், திருடர்களுக்குக் கையிலும் போட வேண்டியது தானே பூட்டு….
இன்னும் யார் யாருக்குப் பூட்டுப் போடவேண்டும் என்றே எம்.ஜி.ஆர். பட்டியலிடுகிறார். பாடலின் தொடர்ச்சியைக் கண்டு, தெளிவீராக.
அடுத்து அவர் தரும் சாவியைக் காண்போம்!
“அறிவிருந்தாலும் வழி தடுமாறி
அவதிப்படும் மக்களுக்கும் இருக்குது சாவி
வறுமையினாலே வாழ்க்கை யில்லாமே
வாடிப்போன வீட்டினையும் திறக்குது சாவி!
தங்க மக்கள் உள்ளத்திலே
அன்பு மிக்க எண்ணத்திலே
தடை இருந்தா உடைத்துப் போடும்
தர்மத்தின் சாவி!”
என்னே அதிசயம்!
அறிவிருந்தும், அவதிப்படுவோர்க்கும் சாவி உண்டு!
வறுமையில் வாடிப்போனவர் வீட்டையும் வளம்பெறத் திறக்கவும் சாவி! உண்டு
தங்கமான மக்கள் உள்ளங்கள்! – அவற்றுள்
அன்புமிக்க எண்ணங்கள்!
இவைகளுக்குள் தடையா?
உடைத்துவிடும்! – எது?
அதுதான்…தர்மத்தின் சாவி!….”
இங்கே எம்.ஜி.ஆர் எடுத்துச் சொன்ன பகுத்தறிச் சாவி, தம்மத்தின் சாவி இரண்டைனையும் பார்த்தோம்.
யார் சொன்னால் மக்கள் கேட்பார்கள் என்பதை அறிந்தே, கண்ணதாசன், எம்.ஜி.ஆர். படங்களில் இப்பாடல்களைத் தந்து சொல்ல வைத்தார்.
யார் இந்தப் படத்திற்குப் பாடல்கள் தந்தால் நன்றாக இருக்கும் என்பதைத் தெரிந்தே, எம்.ஜி.ஆர். தகுந்த படங்களில் கண்ணதாசனைப் பாடல்கள் எழுத வைத்தார்.
இருவர் பார்வையிலும், இருவரும் எபுபோதுமே இலக்கிய இரசனையில் வேறுபட்டு நின்றவரல்லர்.
கடவுள் இருக்கின்றான்!
கவியரசர், புரட்சிநடிகர் மூலம் புகட்டும் தத்துவம் கேளீர்!….
“கடவுள் இருக்கின்றார் – அது உன்
கண்ணுக்குத் தெரிகின்றதா?
……………..
இசையை ரசிக்கின்றாய் – இசையின்
உருவம் வருகின்றதா?”
என்றெல்லாம் வினாக்களை எழுப்பி, எங்கும் இருக்கும் இறைவனை, இதயத்தால் உணரவைப்பதைக் கேட்டீர்கள்.
இன்னும்…..
“புத்தன் மறைந்தவிட்டான் – அவன் தன்
போதனை மறைகின்றதா?
சத்தியம் தோற்றதுண்டா? – உலகில்
தருமம் அழிந்ததுண்டா? – இதை
சரித்திரம் முழுதும் படித்த பின்னாலும்
சஞ்சலம் வருகின்றதா? -
தேடியும் கிடைக்காது – நீதி
தெருவினில் இருக்காது!
சாட்டைக்கு அடங்காது – நீதி
சட்டத்தில் மயங்காது!
காலத்தில் தோன்றி கைகளை நீட்டி
காக்கவும் தயங்காது!”
காலங்கள் உருண்டோடினாலும், கலங்கும் மனிதருக்கும், கண்ணீர் சிந்தும் மனிதருக்கும், தைரியம் ஊட்டி, சத்தியம் தோற்காது; தருமம் அழியாது; சஞ்சலம் கொள்ளாதீர் என்று கூறி, நீதி மயங்காது; காக்கவும் தயங்காது என்று பெரும் ஆறுதல்களைக் கூறும் இந்தத் தத்துவப் பாடலைத் தரணியில் உள்ளோர் உள்ளங்களால் மறக்க முடியுமா?… முடியவே முடியாது.
அடுத்து,
ஆனந்தஜோதியை கவியரசரும், புவியரசரும் ஏற்றிவைத்துப் புகழ்கொண்ட வித்த்தைப் போர்ப்போமே!
புரட்சித்தலைவராம் எம்.ஜி.ஆரின் படப்பாடல்களில் நாட்டுப்பற்றையும், தேசிய உணர்வையும் ஊட்டிப் புரட்சி கீதம் எழுப்பியவரே கவியரசர். அந்த வகையில்தான்,
“ஒருதாய் மக்கள் நாமென்போம்!
ஒன்றே எங்கள் குலமென்போம்!
தலைவன் ஒருவன் தான் என்போம்!
சமரசம் எங்கள் வாழ்வென்போம்!”
என்று தொடங்கும் பாடலைக் கவியரசர் எழுதினார்.
உடற்கல்வி ஆசிரியராய்த் தோன்றி, மக்கள்திலகம் மாணவர்களுக்கு அறிவு தீபம் ஏற்றிவைக்கும் விதத்திலேயே இப்பாடல் காட்சியில் நடிப்பார்.
அறிஞர் அண்ணாவின் தாரக மந்திரமாம், ‘ஒன்றேகுலம்! ஒருவனே தேவன்!’ என்ற திருமூலர் செப்பிய ஒப்புயர்வற்றவாக்கும்; ‘தலைவன் ஒருவனே!’ என்ற வாக்குறுதியும்; வள்ளலாரின் சமரச நோக்கும் இப்பாடல் வரிகளிலே நினைவுறுத்தப் பெற்றன.
பாடல் எழுதிய கண்ணதாசனுக்கும்; எடுத்துச் சொன்ன எம்.ஜி.ஆருக்கும்; பாடிய டி.எம். சௌந்தர்ராஜனுக்கும் இன்றும் இப்பாடல் நற்புகழினையே நல்கி வருகிறது.
தொடர்ந்து வரும் பாடல் வரிகளில், தமிழன்னையின் தனித்ததோர் புகழ் கூறப்படுகிறது.
எங்ஙனம்…..?
“பொதிகை மலையில் பிறந்தவளாம்!
பூவைப் பருவம் அடைந்தவளாம்!
கருணை ந்தியில் குளித்தவளாம்!
காவிரிக் கரையில் களித்தவளாம்!”
இப்படித்தான்…!
இவற்றின் விளக்கங்களையெல்லாம், நான் ‘கண்ணதாசனின் புரட்சிப் பூக்கள்’ என்ற நூலில் விளக்கமாக எழுதியுள்ளேன்.
எனவே, இப்பாடலின் பெருமையை அறிய விரும்புவோர் அந்நூலை நுகர்வீர்களாக!
ஆயிரம் இருந்தாலும்,
“தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம்! – தமிழ்த்
தாயின் மலரடி வணங்கிடுவோம்!
அமைதியை நெஞ்சினில் போற்றி வைப்போம்!
ஆனந்த ஜோதியை ஏற்றி வைப்போம்!”
என்ற அர்த்தமுள்ள கருத்துகளை, உங்களோடு பகிர்ந்து கொள்ளாமல் செல்ல என்னால் எப்படி முடியும்?
‘தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம்!’ என்ற கருத்தை எடுத்துச் சொன்ன எம்.ஜி.ஆரே தர்மத்தின் தலைவனாக நின்றார்.
‘தமிழ்த்தாயின் மலரடி வணங்கிடுவோம்!’ என்று, எடுத்துரைத்த அவர்தான், தஞ்சைத் தரணியிலே ‘தமிழ்ப் பல்கலைக்கழகம்’ அமைத்தார். உலகம் போற்ற மதுரை மாநகரில் ஐந்தாவது உலகத்தமிழ் மாநாட்டை மகத்தான முறையில் நடத்திக் காட்டினார்.
அளவிற்கு அடங்காத அக்கிரமங்கள், அடக்குமுறைகள் விளைந்தபோதும்; அமைதியை நெஞ்சினில் தேக்கி, ஆனந்த ஜோதியை ஏற்றிப் புகழ்கண்ட ஒளிவிளக்கே எம்.ஜி.ஆர். தானே!
‘கோட்டையை எட்ட முடியுமா?’ என்ற கேள்வி எழுந்தபோதும்; சூழ்ச்சியின் ஆட்சியின் தளபதிகளாக இருந்தவர்களையும், அதற்குத் துணைபுரிந்த துரியோதன வம்சத்துக் கும்பல்களையும்; மக்கள் சக்தியால் மண்டியிட வைத்து, மாமகுடம் தரித்த மாபெரும் தலைவராய் விளங்கியவரும் எம்.ஜி.ஆர். அல்லவா?
இங்கேதான், கண்ணதாசன் கவிதைகளைப் பற்றி எம்.ஜி.ஆர் ஏற்றமுடன் புகழ்ந்துரைந்தார். அந்தப் புகழுரைகளை நாமும் பூரிப்புடன் பார்ப்போமாக.
-
31st May 2013, 07:33 AM
#1367
Junior Member
Veteran Hubber
-
31st May 2013, 07:34 AM
#1368
Junior Member
Veteran Hubber
ஆனந்த ஜோதி படத்தில் இருந்து தத்துவ பாடல்.
ஒரு தாய் மக்கள் நாம் என்போம்.
-
31st May 2013, 07:35 AM
#1369
Junior Member
Veteran Hubber
ஆனந்த ஜோதி படத்தில் ஒரு காதல் பாடல்
-
31st May 2013, 07:37 AM
#1370
Junior Member
Veteran Hubber
Bookmarks