-
2nd June 2013, 12:34 AM
#131
அன்புள்ள வாசு சார் அவர்களுக்கு,
உங்கள் பாராட்டுக்கு என் இதயங்கனிந்த நன்றிகள். இதற்கு பின்னால் இருந்து செயல்பட்ட வேறு சிலரும் இருக்கின்றனர். முதலில் மணிசேகரன் சார். அவர் எழுத தொடங்கிய தொடர் இது [ஆனால் அவர் நடிகர் திலகத்தின் பாடல்களை மட்டும் எடுத்துக் கொள்ளாமல் அனைத்து பாடலகளையும் உள்ளடக்கி எழுதினார்].அவரால் தொடர முடியாத சூழல் வந்தபோது என்னிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்தார். பாடல்களை தேர்ந்தெடுப்பது, பாடல்களின் பின்புலத்தில் நடந்த நிகழ்வுகளை விவரிக்கும் முறை எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிய ஒரு Broad Outline எனக்கு தந்தார். அவரிடம் இருந்த சில குறிப்புகளையும் பகிர்ந்து கொண்டார். அவருக்குதான் முதல் நன்றி. அதே போன்று என்னை இந்த தொடர் பாடல் கட்டுரை எழுத பெரிதும் ஊக்கமளித்தவர்கள் நமது ஹப்பின் மாடரேட்டர்கள் RR அவர்களும் NOV அவர்களும். அப்போது மட்டுமல்ல இப்போதும் என்னை பெரிதும் பாராட்டி தன்னுடைய முகநூல் /வதன புத்தகம் wall -ல் இந்த பதிவின் சுட்டியை அளித்த NOV அவர்களுக்கு மீண்டும் நன்றி.
மற்றொரு மறக்க முடியாத நபர் திரு மோகன்ராம் சார். இந்த பாடல்களின் தொடர் கட்டுரையை நான் எழுதும்போது நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க திரைப்பட துறையை சேர்ந்த நடிகர் திலகத்துடன் பணியாற்றிய பலரையும் சந்தித்து உரையாடி பல விஷயங்களை நான் தெரிந்துக் கொள்ள உதவியாக இருந்தவர் மோகன்ராம் சார். அவர் உதவி இல்லாமல் என்னால் இத்துணை விரிவாக எழுதியிருக்க முடியாது.
இந்த ஞான ஒளி படத்தைப் பொறுத்தவரை, திரு L I C நரசிம்மன் அவர்கள் [இன்றைக்கு அவர் உயிருடன் இல்லைஎன்பது வருத்தத்துக்குரிய செய்தி] பல சுவையான விஷயங்களை பகிர்ந்து கொணடார். அது போன்றே வியட்நாம் வீடு சுந்தரம் அவர்களின் உதவியும் நல்ல முறையில் கிடைத்தது.
இந்த பாடலைப் பற்றிய என் பதிவு உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது எனபது எனக்கு மிகுந்த மனநிறைவை கொடுக்கிறது. ஐந்து வருடங்களுக்கு முன்பு அடைந்த மகிழ்ச்சியை விட அதிகமாக அடைகிறேன். அன்றைய நாளில் பதிவிட்ட நடிகர் திலகத்தின் ஏனைய பாடல்களின் ஆய்வு பதிவுகளை தேடி எடுத்து மீண்டும் மீள் பதிவு செய்ய இது ஒரு தூண்டுகோலாய் அமைந்திருக்கிறது.
கார்த்திக்,
ஒரு விஷயத்தைப் பற்றி நான் எப்போதும் நண்பர்கள் ராகவேந்தர் சார், கோபால், சாரதி மற்றும் சுவாமியிடம் சொல்வதுண்டு. அதாவது யாராவது ஒருவர் தன மனதிற்கு பிடித்த பதிவை செய்திருக்கிறார் என்றால் அதை அஃகு வேறு ஆணி வேறாக அலசி மனம் திறந்து பாராட்டுவதில் அதை அழகாய் வெளிப்படுத்துவதில் கார்த்திக்கு இணை யாருமில்லை என்று. அதை மீண்டும் நிரூபித்திருக்கிறீர்கள். உங்கள் பாராட்டுகளுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள்.
மேலும் பதிவை பாராட்டிய ராகவேந்தர் சார், ராகுல்ராம், சந்திரசேகர் மற்றும் சித்தூர் வாசுதேவன், ரவிகுமார் , அலைபேசியில் கடந்த 3 நாட்களாக பாராட்டு மழை பொழிந்த கோபாலுக்கு நன்றிகள் பல.
அன்புடன்
-
2nd June 2013 12:34 AM
# ADS
Circuit advertisement
-
2nd June 2013, 12:36 AM
#132
ஒரு சில விஷயங்கள் அவை சந்தோஷமாக இருக்கட்டும் அல்லது வேறு உணர்வுகளை சார்ந்ததாக இருக்காட்டும் அவை சட்டென்று சில நேரம் நாம் எதிர்பார்க்காத தருணங்களில் நிகழ்வதை பார்க்கலாம். வெகு நாட்களுக்கு முன் பிரிந்து போன நண்பனை தற்செயலாய் சந்திப்பது, உற்றார் உறவினர்களின் தொடர்பு புதிப்பிக்கப்படுவது, மனங்கவர்ந்த ஒரு நபரின் சந்திப்பு இவை எல்லாம் எப்படி ஒரு சொல்லவென்னா சந்தோஷ தூறல்களை மனதில் தூவுமோ அது போன்றே ஒரு உணர்வை தந்தது சுவாமியின் மீள் வருகை பதிவுகள். சுவாமி எப்போதும் ஒரு சில pleasant surprise-களை தருவார். அது போன்றதுதான் இதுவும். இதை இங்கே குறிப்பிட காரணம் நேற்றிரவு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நள்ளிரவு 12 மணி வரை பலதரப்பட்ட விஷயங்களைப் பற்றி என்னுடன் அலைபேசியில் பேசிக் கொண்டீருந்த சுவாமி இப்படி ஒன்று செய்யப் போகிறேன் என்பதைப் பற்றி மூச்சு கூட விடவில்லை. என்னுடன் பேசிய பிறகு நான்கு ஐந்து மணி நேரத்திற்கு பிறகு இதை செய்திருக்கிறார். அதுதான் சுவாமியின் specialty.
தொடருங்கள் சுவாமி! இடைவெளியில்லாமல் தொடருங்கள்!
ஒரு சந்தேகம். தங்கசுரங்கம் முதல் நாள் வெளியீட்டு விளம்பரம் பதிந்திருக்கிறீர்கள். அடுத்த பதிவில் Gold Medal படத்தின் archive -கள் தொடரும் என ஒரு அறிவிப்பு.. அப்படியென்றால் ஜூன் 1-ந் தேதியை முன்னிட்டு SP சௌத்ரி வலம் வரப் போகிறாரா? அப்படியென்றால் Gold Mine பற்றிய நாளிதழ் ஆவணங்கள் வேறு வராதா?
அன்புடன்
-
2nd June 2013, 12:38 AM
#133
ராகவேந்தர் சார், தவறாக நினைக்கவில்லையென்றால் ஒரு வேண்டுகோள். இந்த திரியில் பாட்டுக்கு பாட்டு எல்லாம் வேண்டாமே! அதற்கு என்றே பாட்டுக்கு பாட்டு என்ற தலைப்பிலே ஒரு திரி நமது ஹப்பிலேயே Permanent Topics பிரிவில் இயங்கி வருகிறது. வேண்டுமென்றால் அதை பயன்படுத்திக் கொள்ளலாம். புரிந்து கொள்வீர்கள் என நம்பிக்கையுடன்
அன்புடன்
-
2nd June 2013, 04:48 AM
#134
Senior Member
Veteran Hubber
இந்த எளியவனை வரவேற்றுப் பாராட்டிய அன்புக்குரிய அடிகளார், ரசிகவேந்தர், ஆருயிர்ச் சகோதரர் நெய்வேலியார், சாரதி சார், ராமஜெயம் சார், ஆதிராம் என்கிற அனந்தராமன் சார் (ராமன் எத்தனை ராமனடி) , சித்தூரார், காமெடி போஸ்ட் கிங் கல்நாயக், சிவாஜிசெந்தில் சார், அருமைச்சகோதரர் mr_karthik, ராகுல்ராம், பேரன்புக்குரிய முரளி சார் உள்ளிட்ட அனைவருக்கும் எமது இதயபூர்வமான நன்றிகள் !
mr_karthik, எங்க ஊரான பம்மல் கணக்கில் 3 நாள் என்பது 30 வாரமோ என்று தாங்கள் என்னை நகைச்சுவை ததும்ப செல்லமாகக் கடிந்ததை மிகவும் ரசித்தேன்.
முரளி சார், Gold Mineக்கு என்னிடம் உள்ளதை அளித்தேன். மேலும் கிடைக்கப் பெறின் நிச்சயம் அளிக்கிறேன் !

பாசத்துடன்,
பம்மலார்.
-
2nd June 2013, 06:21 AM
#135
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
murali srinivas
ராகவேந்தர் சார், தவறாக நினைக்கவில்லையென்றால் ஒரு வேண்டுகோள். இந்த திரியில் பாட்டுக்கு பாட்டு எல்லாம் வேண்டாமே! அதற்கு என்றே பாட்டுக்கு பாட்டு என்ற தலைப்பிலே ஒரு திரி நமது ஹப்பிலேயே permanent topics பிரிவில் இயங்கி வருகிறது. வேண்டுமென்றால் அதை பயன்படுத்திக் கொள்ளலாம். புரிந்து கொள்வீர்கள் என நம்பிக்கையுடன்
அன்புடன்
முரளி சார்,
ஒரு மாறுதலுக்காகவும் நம் நடிகர் திலகத்தின் பாடல் வரிகளை நினைவூட்டிக் கொள்வதற்காகவுமே அவ்வப்போது refresh செய்து கொள்வதற்காகவுமே பாட்டுக்குப் பாட்டு என்று பங்கு கொள்கிறோம். இது தொடர்ந்து நடைபெறக் கூடியதல்ல. குறிப்பிட்ட நேரத்தில் நம் நண்பர்கள் யாராவது உடனிருந்தால் அப்போது மட்டுமே நிகழக் கூடியதே. அது மிக மிக அபூர்வம். அதிகம் போனால் ஒரு ஐந்து நிமிடங்கள் இடம் பெறக் கூடியதேயன்றி. இத்திரியை ஆக்கிரமிக்கும் வாய்ப்பு 100க்கு 0.01 சதம் கூட வாய்ப்பற்றது. எனவே தாங்கள் கவலை கொள்ள வேண்டாம். அவ்வப்போது கறிவேப்பிலை அல்லது ஊறுகாய் மாதிரி மட்டுமே இது இடம் பெறும். அதுவும் மிக மிக அபூர்வமாக.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
2nd June 2013, 06:28 AM
#136
Senior Member
Seasoned Hubber
இதே எண்ணம்தான் இரு நாட்களுக்கு முன்பு பஸ் பிரயாணத்தின் போது எனக்கும் ஏற்பட்டது. நான் பதிவிடுவதற்கு முன்பு நீங்கள் முந்திவிட்டீர்கள். அதனால் வழி மொழிகிறேன். ஆராய்ச்சிக் கட்டுரையோடு நின்றுவிடாமல் நூலாக வெளிவரணும். ஆங்கிலத்திலும் தமிழிலும். சிறந்த கலை விமர்சனப் பிரிவில் தேசிய விருதுக்கும் தகுதி பெறக்கூடிய ஒன்று. உலகெங்கும் இருக்கும் பலதரப்பட்ட பலதரப்பட்ட நாடுகளில் நூலகங்களில் இடம்பெற வழிவகை செய்யணும். வரப்புயர நீர் உயரும் - நீர் உயர நெல் உயரும் என்பதற்கிணங்க சிவாஜி என்ற குடையின் எல்லோரும் பெருமை பட்டுக்கொள்ள உதவும் ஒரு சரித்திர நிகழ்வு திரு கோபால் அவர்களின் தொடர் ஆய்வுக் கட்டுரைகள்.
டியர் வெங்கிராம்
நிச்சயம் இந்த எண்ணம் நம் எல்லோருக்கும் உண்டு. இந்த ஆய்வினை இன்னும் ஆழமாக மேற்கொண்டு, மேற்கோள்களை உரிய முறையில் சுட்டிக் காட்டி, அதற்குத் தகுந்த உதாரணங்களுடனும் நம் கருத்தைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு professional research அணுகுமுறையைத் தான் இந்த Sivaji Ganesan School of Acting கடைப் பிடித்து வருகிறது. வரும் காலங்களில் அவருடைய ஆய்விற்கு வலு சேர்க்கும் விதமாகவும் உதாரணங்களுடனும் பதில் பதிவுகளும் இடம் பெறும் போது இதற்குரிய முழுத்தகுதியும் இதற்குக் கிடைத்து விடும். தற்போதே அது உள்ளது என்றாலும் when it comes with quotes, annotations, examples, illustrations, அதற்கு ஒரு ஆய்வேட்டின் அந்தஸ்து வலுவாக அமைந்து விடும்.
கோபால் அவர்களின் இந்தக் கட்டுரையின் முடிவில் இது நிச்சயம் உலக அளவில் ஒரு REFERENCE MATERIAL FOR ACTING என்ற முறையில் அமைவது உறுதி. அப்போது அது தானாகவே ஒரு முனைவர் பட்டத்திற்குரிய தகுதியையும் பெற்று அதனை அவருக்கு வாங்கியும் தந்து விடும்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
2nd June 2013, 06:30 AM
#137
Senior Member
Seasoned Hubber
பம்மலார் சார்
தங்க சுரங்கம் ... தங்க பதக்கம் ... என்று தங்கள் தங்கக் கரங்களால் தங்க மனிதனைப் பற்றிய தகவல்களைத் தங்கமாகத் தந்து ஜொலிக்க விட்டுள்ளீர்கள். இன்னும் தர வேண்டும் என நாங்கள் எப்போதும் போலவே இப்போதும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
2nd June 2013, 06:43 AM
#138
Junior Member
Senior Hubber

Originally Posted by
RAGHAVENDRA
முரளி சார்,
ஒரு மாறுதலுக்காகவும் நம் நடிகர் திலகத்தின் பாடல் வரிகளை நினைவூட்டிக் கொள்வதற்காகவுமே அவ்வப்போது refresh செய்து கொள்வதற்காகவுமே பாட்டுக்குப் பாட்டு என்று பங்கு கொள்கிறோம். இது தொடர்ந்து நடைபெறக் கூடியதல்ல. குறிப்பிட்ட நேரத்தில் நம் நண்பர்கள் யாராவது உடனிருந்தால் அப்போது மட்டுமே நிகழக் கூடியதே. அது மிக மிக அபூர்வம். அதிகம் போனால் ஒரு ஐந்து நிமிடங்கள் இடம் பெறக் கூடியதேயன்றி. இத்திரியை ஆக்கிரமிக்கும் வாய்ப்பு 100க்கு 0.01 சதம் கூட வாய்ப்பற்றது. எனவே தாங்கள் கவலை கொள்ள வேண்டாம். அவ்வப்போது கறிவேப்பிலை அல்லது ஊறுகாய் மாதிரி மட்டுமே இது இடம் பெறும். அதுவும் மிக மிக அபூர்வமாக.
I was also not in favour of the above PATTUKKU PATTU As i was sightly relectant to put forth my opinion our murali has done the joband raghavender has also given above reply suitably. thanks.
PAmmalar sir thank you. you are our THANGASURANGAM ALWAYS.
-
2nd June 2013, 06:52 AM
#139
Senior Member
Seasoned Hubber
ஞான ஒளி
இது ஒவ்வொரு ரசிகருக்குள்ளும் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் ... மிக மிக ஆழமானது. நான் ஏற்கெனவே முன்னர் ஒரு பாகத்தில் குறிப்பிட்டது தான். மீண்டும் நினைவூட்டிக் கொள்கிறேன்.
ஞான ஒளி நாடகம் சென்னை திருவல்லிக்கேணி என்.கே.டி. கலாமண்டபத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த கால கட்டத்தில் நடிகர் திலகம் ஒரு முறை பார்வையிட்டு இதனைத் திரைப்படமாக்கலாம் என்று முடிவெடுத்து அதற்குரிய முயற்சிகள் செயல் முறைப் படுத்தப் பட்டு திரைப்படம் தொடங்க இருந்த நேரத்தில் எங்கள் பகுதியில் மன்றம் துவங்கப் பட்டு விட்டது. ஞான ஒளி சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம் என்று பெயரிட்டு நடத்தினார்கள். திரைப்படம் வெளியாகும் காலம் வரை அந்த மன்றத்தின் மூலம் நடிகர் திலகத்தின் பெயரில் அவ்வப்போது நலத் திட்டங்களும் தங்களால் முடிந்த வரையில் செய்து கொண்டிருந்தார்கள். அது மட்டுமின்றி அங்கத்தினர்கள் குடும்பத்துடன் சிற்சில சுற்றுலாக்களும் மேற்கொண்டு வந்தார்கள்.
படம் வெளியான போது அவர்களின் கொண்டாட்டம் மிகச் சிறப்பாக அமைந்தது. ஞான ஒளி படப்பிடிப்புத் தொடங்கிய கால கட்டத்திலிருந்தே நடிகர் திலகத்தின் செல்வாக்கு விறுவிறுவென பரவத் தொடங்கியது. ரசிகர்களின் வெறித்தனம் அன்று அதிகமாகத் தொடங்கியதிலிருந்து இன்று வரை நீடிக்கிறது என்பது அவருக்கு மட்டுமே சாத்தியமான ஒன்று, இதனை கர்ணனும் சமீபத்தில் நிரூபித்து விட்டது.
சென்னையில் 1969களிலேயே சபாக்கள் புதிய திரைப்படங்களை வெளியாகும் நாளன்றோ அல்லது அதனை ஒட்டி வரும் ஞாயிறு அன்றோ காலைக் காட்சியாகத் திரையிடுவது வழக்கம். இதனை பிரபலமாக்கியது ஓம் விக்நேஸ்வரா கல்சுரல் அகாடமி. ராஜா திரைப்படத்தின் போதே பல்வேறு சபாக்கள் இந்த யுத்தியைக் கடைப்பிடிக்கத் தொடங்கி விட்டன. காரணம் இதற்குக் கிடைத்த மிகச் சிறப்பான வரவேற்பு. சபா உறுப்பினர்களுக்கு இந்த புதிய பட திரையீடு மிகுந்த மகிழ்வூட்டியது. அதுவும் பெரும்பாலானோர் நடிகர் திலகத்தின் ரசிகர்களாக இருந்ததால் அவர்களுக்கு நம் திரைப்படங்கள் இன்னும் ஆர்வத்தைத் தூண்டி உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகப் படுத்தின்.
இந்த அடிப்படையில் பார்த்தால் 1969 - 1975 கால கட்டத்தில் சென்னையில் நூற்றுக் கணக்கான சபாக்கள் இருந்தன.
சபாக்களின் இந்த அணுகுமுறை நாடகக் கலையினையும் வளர்த்து வந்தது என்பது குறிப்பிடத் தக்கது. இந்த கால கட்டத்தில் தான் தங்கப் பதக்கம் நாடகம் பெற்ற வரவேற்பினை மக்கள் சிலாகித்து கூறுவது பிரசித்தமானது.
1970ம் ஆண்டு வியட்நாம் வீடு திரைப்படம் இதே போன்று சபாக்களால் பெரிதும் வரவேற்கப் பட்டது என்றாலும் காட்சிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்றன. முழுவீச்சில் இது புகழடையத் தொடங்கியது 1971ம் ஆண்டில். அந்த ஆண்டில் சவாலே சமாளி திரைப்படமும் சபாக்களில் ஒரு சில காட்சிகள் இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து பாபு மேலும் சில காட்சிகளைக் கண்டது.
1971ம் ஆண்டின் இறுதியில் புகழின் உச்சியில் நடிகர் திலகம் கொடி கட்டிப் பறந்த அந்த நேரத்தில் விரைவில் ஞான ஒளி திரைப்படம் வெளியிட உள்ளது என்கிற செய்தி பரவத் தொடங்கியது. அதற்கேற்றாற் போல் அருணோதயம் திரைப்படம் வெளியாகி ஓடிக் கொண்டிருந்த போதே தேவனே என்னைப் பாருங்கள் பாடல் சென்னை வானொலியில் ஒலிபரப்பி விட்டனர். ஓரிரு மாதங்கள் கழிந்த பின்னர் இலங்கை வானொலியிலும் இப்பாடல் ஒலிபரப்பப் பட்டது.
பாபு படம் வெளியீடான போது தேவனே என்னைப் பாருங்கள் பாடல் மிகப் பிரபலமாகி விட்டு எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் உண்டாக்கி விட்டது. ராஜா வெளியீட்டின் போதே இதுவும் பரபரப்பாக பேசப் பட்டது.
இப்படிப் பட்ட சூழ்நிலையில் தேவி பேரடைஸில் ராஜா அரங்கு நிறைந்து ஓடிக் கொண்டிருக்கும் போதே பிளாசாவில் ஞான ஒளி வெளியீடு. ஆஹா... இது வல்லவோ வரவேற்பு என்ற மகிழ்ச்சியுடனும் ஆரவாரத்துடனும் நடைபோட்டது ஞான ஒளி.
சென்னை நகரில் அன்று இயங்கிய சபாக்களில் பெரும்பாலானவை - கிட்டத்தட்ட 90 சதவீதம் பேர் நகரெங்கும் உள்ள திரையரங்குகளில் இரண்டு நாட்களும் சேர்த்து கிட்டத்தட்ட 55 காலைக் காட்சிகளாக ஞான ஒளி திரைப்படத்தைத் திரையிட்டது எந்த நடிகராலும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத ஒன்று.
முதல் இரண்டு நாட்களிலும் 55 காலைக் காட்சிகள், இப்படம் வெளியான போது போட்டியாக நகரெங்கும் கிட்டத் தட்ட 20 நடிகர் திலகத்தின் படங்கள் என்று இந்த சோதனைகளனைத்தையும் தாண்டி ஞான ஒளி திரைப்படம் பெற்ற வெற்றி தமிழ்த் திரையுலக வரலாற்றில் எவராலும் நடத்தியிருக்க முடியாத மிகப் பெரிய சாதனை. ஒரு படத்திற்கும் இன்னொரு படத்திற்கும் ஆறு மாத காலத்திற்கு இடைவெளி விடாமல், ஆறு வாரத்திற்குள்ளாகவே அடுத்த படம் வெளியிட்டு வெற்றி பெறக் கூடிய வலிமை நடிகர் திலகத்திற்கு மட்டுமே சாத்தியமான ஒன்று. அப்படிப் பார்த்தால் ஞான ஒளி திரைப்படத்தின் வெற்றியைத் தமிழ்த் திரையுலக வரலாறு காணாத வெற்றி என்று தான் சொல்ல வேண்டும்.
Last edited by RAGHAVENDRA; 2nd June 2013 at 06:55 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
2nd June 2013, 07:22 AM
#140
Junior Member
Veteran Hubber

Originally Posted by
RAGHAVENDRA
பம்மலார் சார்
தங்க சுரங்கம் ... தங்க பதக்கம் ... என்று தங்கள் தங்கக் கரங்களால் தங்க மனிதனைப் பற்றிய தகவல்களைத் தங்கமாகத் தந்து ஜொலிக்க விட்டுள்ளீர்கள். இன்னும் தர வேண்டும் என நாங்கள் எப்போதும் போலவே இப்போதும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
Thangappadumai.....EngalThanga Raja... marandu vitteerhale!
Last edited by sivajisenthil; 2nd June 2013 at 07:28 AM.
Bookmarks