-
28th May 2013, 05:30 PM
#1371
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
balaajee
Why this kolaveri Sana khan. For not long time ago another Sana was in news for wrong reasons, and this Sana Khan was mistakenly being named in that matter, now she just have to pay the price by doing such dumb thing.
-
28th May 2013 05:30 PM
# ADS
Circuit advertisement
-
30th May 2013, 11:34 AM
#1372
Senior Member
Veteran Hubber
தன் பெயரில் போலி பேஸ்புக்! கமிஷனரிடம் சாந்தனு புகார்
சக்கரக்கட்டி, சித்து பிளஸ் 2, அம்மாவின் கைப்பேசி போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் சாந்தனு பாக்யராஜ். நடிகரும், இயக்குனருமான பாக்யராஜின் மகனான இவர் சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில் தனது பெயரில் ரியாஸ் என்பவர் போலியாக பேஸ்புக் ஒன்றை துவக்கி பல்வேறு மோசடி செயல்களில் ஈடுபட்டு வருகிறார். பேஸ்புக் மூலம் பெண்களிடம் ஆபாசமாக சேட்டிங் செய்வது, ஆபாசமாக செய்தி அனுப்புவது, இன்னும் சிலரிடம் பணம் வசூல் செய்வது என்று தனது பெயரை தவறாக பயன்படுத்தி வருவதாக அந்த புகாரில் கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
31st May 2013, 11:26 AM
#1373
Senior Member
Veteran Hubber

Originally Posted by
balaajee
Sana Khan: I am not on the run - Hindustan Times
-
3rd June 2013, 11:00 AM
#1374
Senior Member
Veteran Hubber
Anjali’s shocks Media in Balupu Audio function
The happenings in film industry are not just stunning but one will wonder if there are any ethics and consequences for such acts. Here comes the story of hot Telugu beauty Anjali and her dangerous Pinni who shot to headlines sometime back.
The entire episode of Anjali escaping from the clutches of her pinni Bharati Devi and accusing that her pinni is a dangerous woman is a known thing to everyone. Also Anjali lodged cases on her pinni and baabai, while her pinni Bharati Devi filed a missing complaint against Anjali and dragged her to court. Giving pause and punch to all such fiasco, Anjali appeared along with her pinni the other day during the audio launch of Balupu. It looked like all people including Police, Media and enthusiastic fans are just made fools by our Anjali and her pinni.
Critics are asking how come Anjali got united with her pinni despite those serious accusations. They say that Anjali’s aunt got some vital secrets of this hot beauty, at the same time Anjali made sure that all her earnings are transferred into her bank account and hence the truce.
-
7th June 2013, 10:00 AM
#1375
Junior Member
Seasoned Hubber
http://tamil.webdunia.com/entertainm...30606044_1.htm
சிஎம் ஆசை - ஹீரோக்கள் மீது சீறிய கேயார்
இசை விழாவில் ஈயம் காய்ச்சி ஊற்றுவதை ஒரு கடமையாகவே வைத்திருக்கிறார்கள் சில சிறப்பு விருந்தினர்கள். கேயாரை அந்த லிஸ்டில் சேர்க்க முடியாது. அநியாயம் என்று தெரிந்தால் மட்டுமே சாட்டையை சொடுக்கும் சொற்ப நபர்களில் அவரும் ஒருவர்.
மாதவனும் மலர்விழியும் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடந்தது. விழாவில் பேசிய கேயார் முதல்வர் ஆசையில் திரியும் நடிகர்களை ஒரு பிடி பிடித்தார்.
படத்தில் நடித்திருக்கும் அஸ்வினின் நடிப்பை புகழ்ந்தபடி தொடங்கினார் பேச்சை. அஸ்வினுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. சினிமாவில் ஒரு இடத்துக்கு வந்ததும் கரன்சியை மட்டும் நினைக்காமல் கதைக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்றார். இதுவரை ஓகே. அதற்குப் பிறகுதான் சரவெடியை கொளுத்தினார்.
நாலு படம் ஓடினதும் சில நடிகர்கள் பழசை மறந்து முதல்வர் ஆசையை வளர்த்துக்கொள்கிறார்கள். இப்படிப்பட்ட நடிகர்கள் சினிமா விழாக்களுக்கு வந்தால் கோர்வையாக நாலு வார்த்தைக்கூட பேச தெரியவில்லை என ஆவேசப்பட்டார்.
முதல்வர் ஆசையில் இருக்கும் நடிகர் இப்போது ஒருவர்தான். விழாக்களில் ஓரிரு வார்த்தைகள்தான் பேசுவார். அவர் மீது கேயாருக்கு அப்படி என்ன கோபமோ?
-
7th June 2013, 10:34 AM
#1376
Senior Member
Veteran Hubber

Originally Posted by
Thala_rasigan
http://tamil.webdunia.com/entertainm...30606044_1.htm
சிஎம் ஆசை - ஹீரோக்கள் மீது சீறிய கேயார்
இசை விழாவில் ஈயம் காய்ச்சி ஊற்றுவதை ஒரு கடமையாகவே வைத்திருக்கிறார்கள் சில சிறப்பு விருந்தினர்கள். கேயாரை அந்த லிஸ்டில் சேர்க்க முடியாது. அநியாயம் என்று தெரிந்தால் மட்டுமே சாட்டையை சொடுக்கும் சொற்ப நபர்களில் அவரும் ஒருவர்.
மாதவனும் மலர்விழியும் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடந்தது. விழாவில் பேசிய கேயார் முதல்வர் ஆசையில் திரியும் நடிகர்களை ஒரு பிடி பிடித்தார்.
படத்தில் நடித்திருக்கும் அஸ்வினின் நடிப்பை புகழ்ந்தபடி தொடங்கினார் பேச்சை. அஸ்வினுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. சினிமாவில் ஒரு இடத்துக்கு வந்ததும் கரன்சியை மட்டும் நினைக்காமல் கதைக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்றார். இதுவரை ஓகே. அதற்குப் பிறகுதான் சரவெடியை கொளுத்தினார்.
நாலு படம் ஓடினதும் சில நடிகர்கள் பழசை மறந்து முதல்வர் ஆசையை வளர்த்துக்கொள்கிறார்கள். இப்படிப்பட்ட நடிகர்கள் சினிமா விழாக்களுக்கு வந்தால் கோர்வையாக நாலு வார்த்தைக்கூட பேச தெரியவில்லை என ஆவேசப்பட்டார்.
முதல்வர் ஆசையில் இருக்கும் நடிகர் இப்போது ஒருவர்தான். விழாக்களில் ஓரிரு வார்த்தைகள்தான் பேசுவார். அவர் மீது கேயாருக்கு அப்படி என்ன கோபமோ?
Malaiya Parthu Naai kolaikathaan Seyium....
-
15th June 2013, 10:29 AM
#1377
Junior Member
Seasoned Hubber
dont knw where to post..bt very gud article..
http://tamil.webdunia.com/entertainm...30614027_1.htm
போதையில் கரையும் தமிழ் சினிமா
சமீபத்தில் வெளிவந்த சூது கவ்வும் படத்தில் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கையில் ஒருவன் சொல்வான். மணி ஒன்பது அம்பதாச்சு. பத்து மணிக்கு கடை மூடிருவான்.
தியேட்டரில் ஒரே விசில் சத்தம், கைத்தட்டல். உயிரே போனாலும் பத்து மணிக்குள் டாஸ்மாக்கில் சரக்கு வாங்க வேண்டும் என்ற அவனின் சின்சியாரிட்டிக்கு ரசிகர்கள் செய்த மரியாதைதான் அந்த விசிலும், கைத்தட்டலும்.
அதிக ரசிகர்களை ஈர்க்க வேண்டும், கமர்ஷியலாக பல மடங்கு லாபம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கில்தான் இங்கு படங்கள் எடுக்கப்படுகின்றன. அதிக சிரமமில்லாமல் தங்களின் நோக்கத்தை நிறைவு செய்யவே ஒவ்வொருவரும் விரும்புகிறார்கள். அந்தவகையில் எளிதாக ரசிகர்களை பரவசப்படுத்த இயக்குனர்கள் இப்போது அதிகம் நம்புவது டாஸ்மாக் காட்சிகளைதான். பிராந்தி பாட்டிலை காண்பித்தாலே திரையரங்குகள் ஆர்ப்பரிக்கின்றன.
இருபது வருடங்களுக்கு முன் குடி ஒரு மோசமான செயலாக நமது சமூகத்தில் பார்க்கப்பட்டது. அன்று திரைப்படங்களில் குடி என்பது ஒருவரின் குணத்தை வெளிப்படுத்தும் விஷயமாக கையாளப்பட்டது. அதாவது வில்லன்கள் மட்டுமே எப்போதும் மதுக்கோப்பைகளுடன் இருந்தார்கள். கதாநாயகன் தவறு செய்வதாக காட்சி வந்தால் குடி போதையில் அந்தத் தவறை செய்வதாக காட்டினார்கள். அதாவது போதைதான் அவனை தவறு செய்ய வைத்தது என்பதாக. நடைமுறை வாழ்க்கையிலும் இன்று போல் குடி இயல்பான ஒன்றாக ஆகியிருக்கவில்லை. குற்றவுணர்வுடனே மதுவிடுதிகளை அன்று நாடினர்.
கடந்த இருபது ஆண்டுகளாக நம்மை ஆண்டவர்கள் மதுவை ஒரு அத்தியாவசிய பண்டமாக ஆக்கிவிட்டார்கள். ஒரு தலைமுறையை குடிகாரர்களாக மாற்றிய பெருமை இரு திராவிட காட்சிகளுக்குமே உண்டு. சமூக அளவில் மது குறித்து இருந்த மனத்தடைகளையும், குற்றவுணர்வுகளையும் தெருவுக்கு தெரு முளைத்திருக்கும் டாஸ்மாக் கடைகள் இல்லாமலாக்கிவிட்டன. குடி இன்று ஒரு தவிர்க்க முடியாத பழக்கமாகிவிட்டது.
1983ல் மது விற்பனை 180 கோடியாக இருந்தது. இருபது வருடங்களில் அதாவது 2003ல் அது 3,600 கோடியாக உயர்ந்தது. 2013ல் 22,000 கோடிகள். உலகில் எந்தவொரு வியாபாரமும் இப்படியொரு வளர்ச்சியை கண்டதில்லை. தமிழகத்தைவிட ஒன்றரை மடங்கு ஜனத்தொகை கொண்ட உத்திரப்பிரதேசத்தில் மதுவினால் கிடைக்கும் வருவாய் 11,500 கோடிகள். தமிழகத்தில் அதுவே 22,000 கோடிகள். தமிழ்நாட்டின் குடிவெறிக்கு இதுவொரு சின்ன உதாரணம்.
குடியே கூடாது என்று சொல்லும் ஒழுக்கவாதியோ, மதுவை அறவே தவிர்க்க வேண்டும் என்று சொல்லும் காந்தியின் லட்சியவாதியோ கிடையாது நாம். அதேநேரம் இந்தப் பழக்கத்தின் அசுர வளர்ச்சி அச்சப்படுத்துகிறது.
குடி ஒரு பழக்கமாகிவிட்டது என்றோம். அதுதான் பிரச்சனையின் அடிப்படை. பழக்கம் என்பது நாம் சிந்தித்து நடைமுறைப்படுத்துவது இல்லை. அது நம்மையறியாமல் நம்மிடம் ஒட்டிக் கொள்வது. இருபது வருடங்களுக்கு முன் மெழுகுவர்த்தி ஊதி அணைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவது அரிது. ஆனால் இன்று அந்த சம்பிரதாயத்தை கடைபிடிக்காத குடும்பங்களே இல்லை. கேக், மெழுகுவர்த்தியுடன் தலையில் வைக்கும் குல்லா முதற்கொண்டு அதற்கான எக்ஸ்ட்ரா தளவாடங்கள் விற்பனை இன்று மிகப்பெரிய சந்தையாக உருவெடுத்திருக்கிறது. இன்று நாம் விரும்பாவிட்டாலும் அந்த சம்பிரதாயத்தை செய்ய வேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டிருக்கிறோம். பழக்கத்தினால் வரும் முக்கியப் பிரச்சனையே அதுதான். நாம் விரும்புகிறோமா இல்லையோ அதை நாம் செய்ய பழக்கப்படுத்தப்படுகிறோம்.
இன்று குடியை நாடும் பெரும்பாலான இளைஞர்கள் குடியை தேர்ந்தெடுத்தவர்கள் என்பதைவிட குடிக்கு பழக்கப்படுத்தப்பட்டவர்கள் என்பதுதான் சரி. சென்ற தலைமுறையை ஓரளவு குடிப்பழக்கத்திலிருந்து தடுத்தது, சமூகம் குடி குறித்து உருவாக்கி வைத்திருந்த, குடி மோசமான செயல் என்ற மதிப்பீடும், அந்த மதிப்பீடு உருவாக்கிய குற்றவுணர்வும்தான். அதனை இல்லாமல் செய்ததில் கடந்த இருபதாண்டுகளாக நம்மை ஆண்டவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். சினிமாவுக்கும் அதில் கணிசமான பங்குண்டு. நிஜத்தைதானே சினிமாவில் காண்பிக்கிறார்கள் என்று சப்பைகட்டு கட்ட முடியாது. நிஜத்தை சினிமா பிரதிபலிக்கிறதா இல்லை சினிமாவைப் பார்த்து நிஜத்தை உருவாக்குகிறார்களா என்பது பதில் கிடைக்காத கேள்வி. ஆறு இரு கரைகளையும் இணைக்கிறதா இல்லை பிரிக்கிறதா என்பது போல. கரைகளை பிரிப்பதும் ஆறுதான், இணைப்பதும் ஆறுதான். குடி விஷயத்தில் யதார்த்தமும், சினிமாவும் ஒன்றையொன்று ஒத்திசைந்து தம்மை வலுப்படுத்திக் கொண்டன என்றுதான் சொல்ல வேண்டும்.
சென்ற தலைமுறை சினிமாவில் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்கிற, கொலை செய்கிற வில்லன்கள்தான் மது அருந்தினார்கள். மது கெட்ட மனிதனின் அடையாளமாக இருந்தது (குடிப்பவர்கள்தான் மோசமானவர்கள் அல்லது மோசமானவர்கள்தான் குடிப்பார்கள் என்ற அந்தக்கால சினிமா பார்வையிலும் நமக்கு உடன்பாடில்லை). பருந்து பார்வையில் சொல்வதானால் ஒருவன் கெட்டவன் என்பதை காண்பிக்க அவன் கையில் மதுக்கோப்பையை தந்தார்கள். ஆனால் இன்று காட்சிகள் மாறிவிட்டன. படத்தின் ஆரம்பத்தில் கதாநாயகன் அறிமுகமாவதே டாஸ்மாக் கானா பாடலில்தான்.
படத்தில் வரும் இளைஞன் ஏதாவது சாதித்தால் டாஸ்மாக்... காதலில் வெற்றி பெற்றால் டாஸ்மாக்... தோல்வி அடைந்தால் டாஸ்மாக்... காமெடி என்றால் டாஸ்மாக்... கானா பாடல் என்றால் டாஸ்மாக்... விழுந்தாலும் எழுந்தாலும் டாஸ்மாக். இன்றைய இளைஞனின் தவிர்க்க முடியாத உறுப்பாக டாஸ்மாக்கை மாற்றிவிட்டது தமிழ் சினிமா.
சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பிய நிகழ்ச்சியில் விளம்பரங்கள் எப்படி நம்மை கன்ஸ்யூமராக மாற்றுகிறது என்பது பற்றி அலசப்பட்டது. அதில் பேசிய ஒரு இளம்பெண், சாக்லெட்டை கண் மூடி சுவைப்பதை பெருமையாக குறிப்பிட்டார். விளம்பரத்தில் கண்களை மூடி சாக்லெட்டை சுவைக்கும் பெண்ணை அவர் இமிடேட் செய்கிறார் என்பதுகூட அவருக்கு தெரிந்திருக்கவில்லை. அந்த இளம்பெண்ணைப் போல இன்னதென்று அறியாமலே குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிற இளைஞர்கள்தான் இன்று அதிகம். சிந்தித்துப் பார்க்காமல் எதையும் சுவீகரித்துக் கொள்ளும் சமூகத்தை குடியிலிருந்து ஓரளவு தடுத்து நிறுத்துவது குடி குறித்த குற்றவுணர்வுதான். அந்த குற்றவுணர்வை நமது சினிமா இல்லாமலாக்கிவிட்டது. அதற்கு முக்கிய காரணம் குடியை ஒரு கொண்டாட்டமாக மட்டுமே இதுவரை தமிழ் சினிமா காட்டியிருக்கிறது. அதன் இன்னொரு பக்கத்தை காட்டியதில்லை. குடி குறித்த குற்றவுணர்வை இல்லாமலாக்கியதற்கான பரிசுதான் திரையரங்குகளில் டாஸ்மாக் காட்சிகளுக்கு கிடைக்கும் விசிலும் கைத்தட்டல்களும்.
தமிழ் சினிமாவுடன் ஒப்பிட்டால் வேறு எந்த மொழி திரைப்படமும் இப்படி குடியில் விழுந்து கிடக்கவில்லை. பெரும் குடிகாரர்கள் நிறைந்த கேரளாவிலும்கூட குடி சம்பந்தமான காட்சிகள் கதையோட்டத்தின் தேவையை முன்னிறுத்தி மட்டுமே வைக்கப்படுகின்றன. குடிக்காக காட்சிகள் அமைப்பது தமிழ் சினிமாவில் மட்டும்தான். ஒரு பள்ளி மாணவன் எவ்வித உறுத்தலும் இன்றி டாஸ்மாக்கில் மது அருந்துவதற்கான மனப்பக்குவத்தை தந்ததில் தமிழ் சினிமாவுக்கு பெரும் பங்கு இருக்கிறது.
இருபத்தைந்தாயிரம் கோடி இலக்கு நிர்ணயித்து சாராயம் விற்கும் நாட்டில் குடி குறித்த குற்றவுணர்வை இனி எதிர்பார்ப்பதற்கில்லை. குடியை வைத்து கைத்தட்டல் வாங்குகிறோமே என்று ஏதாவது இயக்குனர்களுக்கு குற்றவுணர்வு ஏற்பட்டால்தான் உண்டு.
-
17th June 2013, 02:54 PM
#1378
Senior Member
Diamond Hubber
some truth in it...
the cinemas has made it look look cool nowadays...
-
19th June 2013, 11:50 AM
#1379
Senior Member
Veteran Hubber
-
24th June 2013, 04:55 PM
#1380
Senior Member
Veteran Hubber
@ Small Screen
செக்ஸ் டார்ச்சர் - டி.வி தயாரிப்பு நிர்வாகி மீது பெப்சி உமா புகார்!!தான் வேலை பார்த்து வந்த இடத்தில், தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக தயாரிப்பு நிர்வாகி மீது "பெப்சி" உமா கொடுத்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு டி.வி. நிகழ்ச்சியான "பெப்சி உங்கள் சாய்ஸ்" நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் உமா. அப்போது முதல் "பெப்சி" உமா என்று அழைக்கப்பட்டவர், பின்னர் டி.வி. நிகழ்ச்சிகளை தவிர்த்து விட்டு ஒதுங்கியிருந்தார். தற்போது மீண்டும் சின்னத்திரையில் கால் பதித்துள்ளார். தற்போது ஒரு டி.வியில் "ஆல்பம்" என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் அந்த டி.வி.யின் தயாரிப்பு நிர்வாகியான சரவணராஜன் என்பவர் உமாவுக்கு அடிக்கடி செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார். தனது ஆசைக்கு இணங்காவிட்டால் வேலையைவிட்டு நீக்கிவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனையடுத்து உமா, சென்னை கிண்டி போலீசிடம் புகார் கொடுத்தார். உமாவின் புகாரை ஏற்ற போலீசார், சரவணராஜனை கைது செய்து, சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்
Bookmarks