-
30th June 2013, 01:16 AM
#11
நமது ரசிகர்களுக்கு மற்றும் நமது காவியங்களை ரசிக்க காத்துக் கொண்டிருக்கும் அன்பு தமிழக மக்களுக்கு ஒரு நற்செய்தி!
மில் தொழிலாளி ராஜு மில் ஓனர் ராஜசேகரன் ஆனபோது எப்படி ஒரு பெரிய பளபளப்பு வந்ததோ அது போன்ற ஒரு மெருகு ஒரு உயிர்ப்பு ஒரு பளபளப்பு, புதிய மெருகேற்றலில் காலத்தால் அழியாத காவியமாம் நமது பாச மலர் திரைப்படத்திற்கும் கிடைத்திருக்கிறது!
சினிமாஸ்கோப் வடிவத்தில் மெருகேற்றப்பட்டு ஆடியோ போன்றவை மேம்படுத்தப்பட்டு உருவான காவியத்தின் ஒரு Preview ஷோ இன்று திரையிடப்பட்டது. படத்தின் நீளம் trim செய்யப்பட்டு இருக்கிறது. பிரிண்ட் quality பிரமாதமாக வந்திருக்கிறதாம். வெகு சில இடங்களை தவிர மற்ற அனைத்து frame-களும் திருவிளையாடலின் 90% quality-யில் அமைந்திருப்பதாக Preview ஷோ பார்த்தவர் சொன்னார்!
ஆடியோ மிக நன்றாக வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஒரு சின்ன ஒலி கூட தெளிவாக காதில் கேட்கும் வண்ணம் இருக்கிறது எனபதையும் குறிப்பிட்ட அவர் பாடல்கள் வெகு பிரமாதமாக வந்திருப்பதாகவும் சொன்னார். இன்று காணப்பட்ட சின்ன சின்ன குறைகளையும் நீக்கி படம் ஒரு முழுமையான மேருகேற்றலோடு அடுத்த மாதம் [ஆகஸ்ட்] வெளி வர வாய்ப்பு இருப்பதாக சொன்னார்.
அந்த நாளும் உடனே வந்திராதா என்ற ஆவலுடன் காத்திருக்கும்
அன்புடன்
-
30th June 2013 01:16 AM
# ADS
Circuit advertisement
Bookmarks