-
15th July 2013, 01:11 PM
#1101
Senior Member
Devoted Hubber
காமராஜர் என்னும் உலக அதிசயம்
நடிக்க வந்தவர்கள் எல்லோரும் சிவாஜியிடம் சிலதைக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். பாட வந்தவர்கள் எல்லோரும் எஸ்.பி.பி யிடம் சிலதைக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். நல்ல டைரக்டர்கள் எல்லோரும் பாலச்சந்தரிடம் சிலதைக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். எழுத வந்தவர்கள் எல்லாரும் சுஜாதாவிடம் சிலதைக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
அரசியலுக்கு வருகிறவர்கள் யாருமே ஏன் பெருந்தலைவர் காமராஜரிடம் எதுவுமே கற்றுக் கொள்ளவில்லை?
நாடே பேசும் அந்தத் தலைவர், முதலமைச்சராகவும், அகில இந்தியத் தலைவராகவும் பல வருஷங்கள் இருந்தவர். இறந்து போகிற போது வாடகை வீட்டில்தான் இருந்தார். ஐந்து வருஷம் மந்திரியாக இருந்தவர்கள் எத்தனை வீடு (ஐ மீன் ஹெளஸ்) வைத்திருக்கிறார்கள்?
இறக்கும் போது இருநூற்றுச் சொச்சம் ரூபாய்தான் வைத்திருந்தார். மந்திரியான முதல் வருஷமே வெள்ளையிலேயே சில கோடிகள் சேர்த்துவிடுகிறார்கள் மஹானுபாவன்கள். கறுப்பில் எவ்வளவோ! காமராஜர் ஆள்தான் கறுப்பே ஒழிய பணம் வெளுப்பில் கூட அவரிடம் இருந்ததில்லை!
சீனியர்கள் கட்சிப் பணிக்கு வரவேண்டும் என்று நேரு (அவரே அதைச் செய்யாத போதும்) சொன்னதும் படாரென்று ராஜினாமா செய்தாரே? இன்றைக்கு உதைத்து உருட்டி விட்டாலும் ஓடி வந்து நாற்காலியை கெட்டியாகப் பிடித்துக் கொல்கிறார்கள்.
அந்த வகையில் பார்த்தால் காமராஜர் ஒரு அதிசயம். அடுத்த முறை தாஜ்மஹாலுக்கு பதில் காமராஜரை நாம் சிபாரிசு செய்யலாம்.
Last edited by abkhlabhi; 15th July 2013 at 01:14 PM.
-
15th July 2013 01:11 PM
# ADS
Circuit advertisement
-
15th July 2013, 02:51 PM
#1102
Senior Member
Diamond Hubber

Originally Posted by
abkhlabhi
சீனியர்கள் கட்சிப் பணிக்கு வரவேண்டும் என்று நேரு (அவரே அதைச் செய்யாத போதும்) சொன்னதும் படாரென்று ராஜினாமா செய்தாரே?
எனக்குத் தெரிந்து இது பெருந்தலைவரின் உள்ளத்தில் தோன்றி அவரே பரிந்துரைத்து நடைமுறைபடுத்தியது .அதனால் தானே அதன் பெயரே "Kamaraj Plan" என்றானது .இல்லையா?
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

-
15th July 2013, 02:54 PM
#1103
Senior Member
Diamond Hubber
என்னைக் கேட்டால் நல்ல நோக்கத்தோடு காமராஜர் கொண்டு வந்த "காமராஜர் பிளான்" தான் தமிழக்கத்தின் சாபக்கேடாக அமைந்தது .அதனால் தானே கர்மவீரர் தன் முதல்வர் பதவியை துறந்து இன்னொருவரை கொண்டுவர நேர்ந்தது ?
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

-
15th July 2013, 04:36 PM
#1104
Senior Member
Seasoned Hubber
-
15th July 2013, 08:02 PM
#1105
Senior Member
Seasoned Hubber
-
15th July 2013, 09:51 PM
#1106
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Murali Srinivas
தமிழகத்தில் பொற்கால ஆட்சி வழங்கிய ஒரே முதல்வன்
தமிழகத்தில் ஏழைகளுக்கு வாழ்வாதாரம் அமைத்த ஒரே ஏழை பங்காளன்.
கொண்ட கொள்கையை விட்டுக் கொடுக்காமல் கடமையை நிறைவேற்றிய ஒரே கர்ம வீரன்
தமிழகத்தில் தொழிற்புரட்சியை ஏற்படுத்திய ஒரே மனிதன். அந்த மனிதனின் ஆட்சியில்தான்
1.நெய்வேலி நிலக்கரித் திட்டம்
2.பெரம்பலூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை
3.திருச்சி பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ்
4.ஊட்டி கச்சா பிலிம் தொழிர்சாலை
5.ஆவடி கனரக வாகன தொழிற்சாலை
6.கல்பாக்கம் அணுமின் நிலையம்
7.கிண்டி டெலிபிரின்டர் தொழிற்சாலை
8.சங்ககிரி துர்க்கம் சிமெண்ட் தொழிற்சாலை
9.மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
10.கிண்டி அறுவைச் சிகிச்சைக் கருவித் தொழிற்சாலை
11.துப்பாக்கித் தொழிற்சாலை
12.நெய்வேலி நிலக்கரி சுரங்கம்
13.சேலம் இரும்பு உருக்காலை
14.பெரம்புர் ரயில்பெட்டித் தொழிற்சாலை
15.அரக்கோணம் இலகுரக ஸ்டீல் ப்லான்ட் தொழிற்சாலை
16.சமய நல்லூர் அனல்மின் நிலையம்
17.சென்னை அனல்மின் நிலையம்
18.நீலகிரி கச்சாபிலிம் தொழிற்சாலை
போன்றவை துவக்கப்பட்டன.
இவை மட்டுமா?
மணிமுத்தாறு
ஆரணியாறு
சாத்தனூர்
அமராவதி
கிருஷ்ணகிரி
வீடூர்
வைகை
காவிரி டெல்டா
நெய்யாறு
மேட்டூர்
பரம்பிக்குளம்
புள்ளம்பாடி
கீழ்பவானி
என்று இன்றைக்கும் விவசாயிகள் பெரும்பங்கு நம்பிக்கொண்டிருக்கும் பாசனத்திட்டங்கள் அனைத்துமே பெருந்தலைவர் காமராஜ் உருவாக்கியவை!
அவர் ஆட்சி ஏற்றபோது தமிழகத்தில் இருந்தது 3 சர்க்கரைத் தொழிற்சாலைகள். அவர் ஆட்சி விட்டு இறங்கிய போது 14.
இன்னும் சொல்லவா?
159 நூல் நூற்பு ஆலைகள்
4 சைக்கிள் தொழிற்சாலைகள்
6 உரத் தொழிற்சாலைகள்
21 தோல் பதனிடும் தொழிற்சாலைகள்
2 சோடா உற்பத்தித் தொழிர்சாலைகள்
ரப்பர் தொழிற்சாலை
காகிதத் தொழிற்சாலை
அலுமினிய உற்பத்தித் தொழிற்சாலை
இவை அமைக்கப்பட்டதும் அவரின் 9 ஆண்டு கால ஆட்சியில்தான்.
அது மட்டுமல்ல இன்றைக்கு Industrial clusters என்று அழைக்கப்படும்
கிண்டி,விருதுநகர்,அம்பத்தூர்,ராணிப்பேட்டை, மதுரை,மார்த்தாண்டம்,ஈரோடு,காட்பாடி, தஞ்சாவூர்,திருச்சி...என்று.
தமிழகத்தில் 20 தொழிற்பேட்டைகள் உருவாக்கிய ஒப்பற்ற நிர்வாகி.
இத்தனை சாதனைகள் புரிந்தும் அதை விழாமபரபப்டுதிக் கொள்ள தெரியாத எளிய மனிதன்.
எப்படி நடிகர் திலகத்தின் ரசிகன் என்பதை வாழ்நாள் பெருமையாக சொல்லிக் கொள்வோமோ அது போன்றே பெருந்தலைவரின் தொண்டன் என்பதையும் வாழ்நாள் பெருமையாக நெஞ்சில் சூடிக் கொண்டு நடக்கும் லட்சக்கணக்கான மனிதர்களில் ஒருவனாக அந்த மாமனிதனின் பிறந்த நாளன்று அவர் வாழ்ந்த திசை நோக்கி வணங்குகிறேன்.
மீண்டும் இது போன்ற தனக்கென வாழாமல் மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த ஒரு தலைவன் எப்போது தோன்றுவான்?
அன்புடன்
சத்தியமான வாக்கு முரளி சார் !
வேறு எந்த முதல்வர் இதுபோல தமிழகத்திற்கு தமிழக மக்களுக்கு நல்லது செய்துள்ளார் ?
வேண்டுமென்றால் 400 பக்கங்களுக்கு அடிக்கல் மட்டுமே நாட்டிய விஷயங்களை பட்டியல் போடமுடியுமே அல்லாது இதை போல செயல் படுத்திய, நடைமுறை படுத்தப்பட்ட திட்டங்களை ஒரு லிஸ்ட் போடமுடியுமா முதலில் மற்ற முதல்வர்களின் ஆட்சியில் நடைபெற்றதென்று !
இதை போல ஒரு நல்லாட்சிக்கு இந்த நன்றி கெட்ட தமிழக மக்கள் கொடுத்த பரிசு அதிர்ச்சி தோல்வி. !
அவரது தோல்விக்கு பிறகு தமிழக மக்களின் இந்த நன்றிமறந்த செயலுக்கு இறைவன் கொடுத்த பரிசுதான் தமிழகத்திலே பிடித்த தரிதிரம்...பசி, பஞ்சம், பட்டினி, கொலை, கொள்ளை, திருட்டு, கட்டபஞ்சாயத்து, நில அபகரிப்பு, ஜாதி வெறி சண்டை... இன்னும் தமிழக மக்கள் அனுபவிக்க நிறைய பாக்கி இருக்கிறது இப்படி நாளுக்கு நாள் பெருகும் அவலங்கள் !
காமராஜரின் மிக பெரிய சாதனையாக நான் கருதுவது, அரசு கெஜான நிரம்பவேண்டும் என்று காரணம் சொல்லி தெருவெங்கும் சாராய கடை திறக்காதது. அப்படி அவர் செய்யாமல் அவருக்கு பிறகு பிற்காலத்தில் தெருவுக்கு தெரு, சந்துக்கு சந்து சாராய கடை திறந்து கால் குடிகாரனை கூட முழு குடிகாரனாக மூளை செயல்படாமல் போதையில் இருக்குமாறு செய்தார்கள்.
கள்ள சாராயம் விற்ற கோமான்கள் எல்லாம் பெரிய சாராய தொழிற்சாலை அமைத்ததோடு மட்டும் அல்லாமல் அதை அரசாங்க கஜான நிரப்ப என்ற ஒரு காரணத்தை சொல்லி அதிகாரபூர்வமாக அல்லவா அரசாங்கத்துடன் " Liquor Business " செய்தார்கள் !
பொறுப்புள்ள அமைச்சர்களும் அதற்க்கு காரணம் கேட்டால் "அரசுக்கு வருமானம்" என்று கூறுகின்றனர், எங்கள் ஆட்சியின் சாதனை சாதனை என்று தெருவெங்கும் இன்றுவரை போஸ்டர் அடிக்கும் போலி அரசியல்வாதிகள்...அல்ல...அல்ல..அரசியலின் வியாதிகள் !!!!!
இன்று... பூரண மதுவிலக்கு என்று புது கதை அவிழ்கிரார்கள் !
கூடங்குளம் திறந்தால் ஆபத்தாம் ஆனால் சாராய கடை நிறைய திறந்தால் நல்லது போலும் !
Last edited by NTthreesixty Degree; 15th July 2013 at 10:07 PM.
-
15th July 2013, 10:40 PM
#1107
Junior Member
Devoted Hubber
-
15th July 2013, 10:42 PM
#1108
Junior Member
Devoted Hubber
-
15th July 2013, 10:43 PM
#1109
Junior Member
Devoted Hubber
-
15th July 2013, 10:46 PM
#1110
Junior Member
Devoted Hubber
Bookmarks