Page 264 of 397 FirstFirst ... 164214254262263264265266274314364 ... LastLast
Results 2,631 to 2,640 of 3965

Thread: Makkal thilagam m.g.r part -5

  1. #2631
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த "ஜூனியர் விகடன்" இதழில் கேள்வி - பதில் பகுதியில்,

    A. தமிழகத்தை ஆண்ட மிகச்சிறந்த,

    B. ஆட்சிக்கு வந்த பின்பும் சொத்து சேர்க்காத முதல்வர்கள் யாவர் ?

    என்ற கேள்விக்கு
    1. பெருந்தலைவர் காமராஜர்,

    2. பேரறிஞர் அண்ணா
    3. புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர்.

    என்று அவர்கள் ஆட்சி புரிந்த காலவரிசைப்படி பதிலளிக்கப்பட்டுள்ளது.

    இது உண்மையிலேயே ஒவ்வொரு எம். ஜி. ஆர். அன்பனும், ரசிகனும், பக்தனும் பெருமை பட்டுக் கொள்ளவேண்டிய விஷயம்.. .

    பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் 1954ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்று 1963ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் தேதி வரை சுமார் 9 வருடங்கள் சிறப்பாக ஆட்சி புரிந்தார்.

    அவரது பதவிக்காலம் நம் பாரத நாடு சுதந்திரம் பெற்று சில வருடங்களே ஆகியிருந்த நிலையில், எண்ணற்ற மக்கள் நல திட்டங்கள் சுதந்திர இந்தியாவில், ஒவ்வொரு மாநிலத்திலும் அமல்படுத்த வேண்டிய கட்டாய சூழ்நிலை. மேலும், அப்போது மக்கள் தொகை குறைவு. இயற்கை வளங்கள் அதிகம். மத்தியில், அவர் சார்ந்த காங்கிரஸ் கட்சியும் ஆட்சியில் இருந்த காரணத்தால், திட்டங்கள் பல எளிதில், எந்த வித தங்கு தடையுமின்றி நிறைவேற்றப்பட்டன, இது அவருக்கு கிடைத்த மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட். மேலும், 2 பிரதமர்களை உருவாக்கி 'KING MAKER' என போற்றப்பட்டதால், அவரின் செல்வாக்கு, மத்திய அரசில் ஓங்கி உயர்ந்திருந்த நிலையில், பல திட்டங்களுக்கு எந்தவித சிக்கலின்றி அனுமதி கிடைத்தது.

    இந்த அனுகூலங்கள், பிற்காலத்தில் அரியணையேறிய பேரறிஞர் அண்ணா மற்றும் புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள் முதல்வராக இருந்த காலத்தில் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
    இவ்வளவுக்கு பின்பும், 1967ல் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தோல்வி அடைந்ததுக்கான காரணிகளாக அன்றைய தினம் பத்திரிகைகளால் படம் பிடித்துக் காட்டப்பட்டவை வருமாறு :

    1. 1964-67 கால காங்கிரஸ் ஆட்சியின் மீது மக்களுக்கு இருந்த மனகசப்பு

    2. வறட்சியால், மாநிலத்தில் பசி, பஞ்சம் மற்றும் பட்டினி தாண்டவமாடியது

    3. மக்கள் திலகத்தின் உறுதியான 'தி.மு.க. ஆதரவு' நிலை மற்றும் எழுச்சியான அறிக்கையுடன் கூடிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சுவரொட்டிகள்

    4. பேரறிஞர் அண்ணா அவர்களின் எழுத்தாற்றலும், பேச்சாற்றலும், அவரின் கண்ணியமான 1962-67 கால பாராளுமன்ற நடவடிக்கைகள்

    5. மக்களின் ஆட்சி மாற்ற எண்ணம்

    1954ல் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் சட்ட மன்ற உறுப்பினராக இல்லாத காரணத்தால், தமிழக முதல்வராக முடியாத நிலை இருந்தது. அது சமயம், குடியாத்தம் சட்ட மன்றத்துக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது எதிர்கட்சியாக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையிலான தி. மு. க., எவரையும் வேட்பாளராக நிறுத்தாமல், காமராஜர் அவர்கள் எளிதில் முதல்வராக உதவியது. இது, பேரறிஞர் அண்ணா அவர்களின் மிகப் பெரிய பெருந்தன்மையை காட்டுகிறது.

    பேரறிஞர் அண்ணா அவர்கள், 1967 மார்ச் மாதம் 6ம் தேதி, ஆட்சிப் பொறுப்பினை ஏற்று 02-02-1969 வரை, மிகக் குறுகிய காலமே (சுமார் 2 ஆண்டுகள் மட்டுமே) ஆண்டார். அதற்குள், காலம் அவரை நம்மிடமிருந்து பிரித்து விட்டது. 1967-1969 இடைப்பட்ட அந்த குறுகிய காலத்தில், எதிர் கட்சியான காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியிலிருந்த போழ்து, பேரறிஞர் அண்ணா அவர்கள் நிகழ்த்திய சாதனைகள் வருமாறு :

    1. ஒரு ரூபாய் படியரிசி திட்டம் கொண்டு வந்தது.

    2. சென்னையில் இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு நடத்தியது.

    3. சென்னை மாகாணம் "தமிழ் நாடு" மாநிலம் என்று உதயமாகியது. .

    4. தமிழ் சொற்களை அரசு ஆவணங்களில் பயன் படுத்த உத்தரவிட்டது

    5. பள்ளிகளில் இந்தி மொழியை கட்டாயப் பாடம் என்பதை நீக்கி ஆணையிட்டது மட்டுமல்லாமல், விருப்பமானவர்கள் மட்டும் படித்துக் கொள்ளலாம் என்று விலக்களித்தது.

    6. அரசுப் பேருந்துகளில் தெய்வப்புலவர் திருவள்ளுவர் மற்றும் அவர் எழுதிய திருக்குறள் இடம் பெறச் செய்து அதன் மூலம் மாணவர்களை நல்வழிப்படுத்தியது.

    7. இளைஞர்களை சமூக நலப் பணிகளில் ஈடுபடுத்த "சீரணி" இயக்கம் கண்டது.

    8. திருக்குறள் ஆராய்ச்சிக்காக, தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும், பல்கலைகழகங்களுக்கு தனி நிதி ஒதுக்கினார்.

    9. தமிழறிஞர்களுக்கு அரசு சார்பில் சிலையமைத்தது.

    10. விலைவாசி உயர்வினை கட்டுக்குள் கொண்டு வந்தது.

    11. பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் கொணரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை விரிவு படுத்தியது. இன்னும் சிறிது காலம் உயிரோடு இருந்திருந்தால் புரட்சித் தலைவரைப்போல் பொற்கால ஆட்சியை வழங்கியிருப்பார்.

    பிளவு பட்ட காங்கிரசின் ஒரு பிரிவான இந்திரா காங்கிரஸ் கட்சியை ஆதரித்தாலும், மற்றொரு பிரிவான ஸ்தாபன காங்கிரஸ் - ஜனசங்கம் கட்சிகள் உள்ளடக்கிய "ஜனதா" கட்சி 1977ல் மத்தியில் ஆட்சி கைப்பற்றியிருந்த காலத்திலும், பின்னர் 1980ல் அவரது ஆட்சியை பறித்து அவரை தங்கள் எதிரியாக பாவித்த காங்கிரஸ் கட்சி ஆட்சி புரிந்த கால கட்டத்திலும், அதற்கும் பின்பும் புரட்சித்தலைவரின் பொற்கால ஆட்சி நிகழ்த்திட்ட சாதனைகளின் பட்டியில் வருமாறு :

    1. பூரண மது விலக்கு திட்டத்தை தொடக்க காலத்தில் அமல் படுத்தினார்.

    2. ஐக்கிய நாடுகள் சபை போற்றி, உலகமே வியந்து பாராட்டிய சத்துணவு திட்டத்தினை 01-07-1982
    முதல் கொண்டு வந்தார்.

    3. அழகுத் தமிழில் சீர் திழுத்த எழுத்துக்களை, 19-10-1978 அன்று நடைமுறைப்படுத்தினார்.

    4. வழி வழியாக அனுபவிக்கப்பட்ட கிராம முன்சீப் பதவியினை ஒழித்து அதற்கு பதிலாக தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில், கிராம நிர்வாக அலுவலர்களை, தமிழக அரசு ஊழியர்களாக நியமித்தார்.

    5. தன்னிறைவு திட்டம் தொடங்கினார்.

    6. நிர்வாக வசதிக்காக மாவட்டங்களை பிரித்து மட்டுமல்லாமல், முக்கிய நகரங்களை HEAD QUARTERS CITY ஆக மாற்றினார்.

    7. புதிய போக்கு வரத்து கழங்களை துவக்கி, இன்றைய தினம் தமிழக மூலை முடுக்கெல்லாம்,போக்குவரத்து வசதி ஏற்படுத்தினார். குறிப்பாக, கிராமப்புற மக்களுக்கு போக்குவரத்து வசதி அளிக்க, 4316 பேருந்து வழித்தடங்களையும் ஏற்படுத்தினார்.

    8. அதே போன்று, குக்கிராமங்களுக்கெல்லாம் மின்னொளி வசதி அளித்தார்.

    9. காவல் துறைகள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு அதிகாரிக்கும் அதிகாரத்தை பகிர்ந்தளித்தார். (Under Management Concept - It is known as DE-CENTRALIZATION)

    10. வீட்டுக்கொரு விளக்கு என்ற அடிப்படையில் இலவச மின்சாரம் அளித்திட்டார்.

    11 .நாட்டின் முதுகெலும்பாய் திகழ்ந்த விவசாயிக்கு, வானம் பொய்த்த போது, அவர்களுக்கு வழங்கப்பட்ட மொத்த கடன் தொகையை பெரும் அளவில் (ரூபாய் 325 கோடி) தள்ளுபடி செய்தார். இது ஒரு தொடர் நிகழ்வாக நடந்தது. பாசனத்துக்கு நிலத்தடி நீரைப் பயன்படுத்த 3.31 லட்சம் பம்பு செட்டுகளுக்கு புதிதாக மின்சாரம் இணைப்பு கொடுக்க ஏற்பாடு செய்தார்.

    மனிதப் புனிதர் எம். ஜி. ஆர். 10.5 லட்சம் சிறு விவசாயிகள் இதனால் பயன் பெற்றனர்.

    12. பயிர் பாதுகாப்பு இன்சூரன்ஸ் முறையை அமல் படுத்தினார்.

    13. சிறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளித்திட்டார்.

    14. பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடையும், காலணியும், வழங்க வகை செய்தார்.

    15. இலவச பல்பொடி வழங்கும் திட்டத்தை கொணர்ந்தார்.

    16. விலைவாசி உயர்வில்லாமால், இறுதி நாட்கள் வரை தனிக்கவனம் செலுத்தினார். அதனை தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

    17. பண்டிகை காலங்களில், கூடுதல் அரிசி நியாய விலைக் கடைகளில் வழங்கினார்.

    18. முதியோருக்கு, இலவச வேஷ்டி, சேலை, மற்றும் பென்சன் (PENSION) வழங்கி சிறப்பித்தார்.

    19. எழுச்சிக் கவிஞர் பாரதி, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பெயரில் பல்கலைகழகங்களை ஏற்படுத்தினார்.

    20. தமிழ் மொழிக்கு தனியாக தஞ்சை மாநகரில் பல்கலைகழகம் உருவாக்கினர்.

    21. மகளிருக்காக "அன்னை தெரேசா" பல்கலை கழகம், கொடைக்கானலில், நிறுவினார்.

    22. சுய நிதி கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கி, அதன் மூலம் எண்ணற்ற மாணவர்கள் பொறியியல் பட்டப் படிப்பினை மேற் கொள்ளச் செய்தார். ஆசிரியர்கள் பலரும் இதன் மூலம் வேலை வாய்ப்பினை பெற்றனர்.

    23. ஏழை மாணவ - மாணவியர் பயன் தக்க வகையில், பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் நுழைவுத்தேர்வு முறையை புகுத்தினார்.

    24. கரும்பு சர்க்கரையிலிருந்து காகிதம் தயாரிக்கும் தொழிற்சாலையை நாட்டிலேயே முதன் முதலில் நம் தமிழகத்தில், கரூர் மாநகரத்தில் ஏற்படுத்தினார்.

    25. திரையரங்குகளில் COMPOUND TAX முறையை அமல் படுத்தி, தமிழ் திரை உலகினை அழிவிலிருந்து மீட்டார்.
    26. ஆங்கில படங்கள் திரையிடும் தமிழக அரங்குகளில், கட்டாயம் 3 மாதமாவது தமிழ் திரைப்படங்களை காண்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    27. அரசு அலுவலகங்களில், கோப்புக்களில், குறிப்புக்களை தமிழில் இடம் பெறச் செய்தார்.

    28. அரசு நிர்வாகத்தில், அரசியல் குறுக்கீடு இல்லாமல் பார்த்துகொண்டார்.

    29. மின்சார தேவையை கருத்தில் கொண்டு, "குந்தா" போன்ற அனல் மின் நிலையங்கள் அமைத்தார். காற்றாலைகள் அமைத்திட அரசு உதவியினை வழங்கினார்.

    30. முதன் முதலில் மாநில கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற வித்திட்டார்.

    31. சாதிக் கட்சிகளை ஊக்குவிக்காமல், மக்கள் ஆதரவுடன், அவைகளை தலை தூக்கிடாமல் செய்தார்.
    (உதாரணமாக - இந்துக்களில் குறிப்பிட்ட இனத்தை சார்ந்தவர்கள் பெரும்பான்மையோர் வசிக்கும்
    அருப்புக்கோட்டையில் தானே நின்று மகத்தான வெற்றி பெற்றார். அது போன்று நெல்லையில், கிறிஸ்தவ
    இனத்தை சார்ந்த ஜி. ஆர். எட்மண்ட் அவர்களை நிற்கவைத்து வெற்றி பெறச செய்தார். அதே போல்,
    பாளையங்கோட்டையில், நாஞ்சில் மனோகரன் அவர்களை வெற்றி பெறச் செய்தார்.

    தமிழகத்தில் பல தொகுதிகளில் இதே போன்று, தொகுதிக்கு புதியவர்களையும், மிக
    மிக சாதாரணமானவர்களையும், பெரும்பான்மை இனத்தை சாராதவர்களையும் வேட்பாளர்களாக நிற்க வைத்து
    வெற்றி பெறச் செய்து, ஒரு புரட்சிகரமான சாதனையை ஏற்படுத்த நமது புரட்சித் தலைவரால் மட்டுமே
    முடியும்),

    32. தமிழ் ஈழத்தில் நடைபெற்ற "இனபடுகொலையை" கண்டித்து, அரசு சார்பில் பொது 'BANDH' நடத்தி மத்திய அரசின் கவனத்தை ஈர்த்து, ஒரு தீர்வு காண விதை விதைத்தார்.

    33. தமிழகத்துக்கு கூடுதல் அரிசியும் உணவும் மத்திய தொகுப்பிலிருந்து வழங்குமாறு மத்திய அரசைக் கேட்டு 09-02-1983 அன்று உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

    34. தெலுங்கு கங்கை திட்டம் கொண்டு வந்து மாநிலத்தில், தண்ணீர் பஞ்சத்தை போக்கினார்.

    35. அண்டை மாநிலமான கர்நாடக முதல்வர்களுடன் (மறை திரு. தேவராஜ் அர்ஸ் மற்றும் மறை திரு. குண்டுராவ், ராமகிருஷ்ண ஹெக்டே போன்றோருடன்) நல்லுறவு பூண்டு, காவிரி நீர் பெற்று, விவசாயத் தொழிலை மேம்படச் செய்தார்.

    36. தமிழக மக்களின் நல் வாழ்விற்காக மத்தியில் ஆட்சி புரிந்த மாற்றுக் கட்சியினருடனும், சுமூக உறவு கொண்டு, மக்கள் நல திட்டங்கள் பல கொண்டு வந்தார்.

    37. நாட்டிலேயே மகளிருக்கான காவல் நிலையங்களை தமிழகத்தில் முதன் முதலில் ஏற்படுத்தி, முன்னுதாரணமாக திகழ்ந்தார்.

    38. சந்தேக கேஸ் என்கின்ற பிரிவை குற்றவியலில் இருந்து நீக்கினார்.

    39. சைக்கிளில் இருவர் செல்லலாம் என்று அனுமதித்தார்.

    40. விபச்சார வழக்கில் ஆணுக்கும் தண்டனை என்ற சட்டம் கொண்டு வந்து குற்றம் இரு பாலருக்கும் பொதுவானது என்று உணர்த்தினார்.

    41. தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற புதிய சட்ட வடிவம் கொண்டு வந்தார்.

    42.. "ஹரிஜன்" என்ற சொல்லை விடுத்து, "ஆதி திராவிடர்" என்று மாற்றி அழைக்கச் செய்தார்.

    43. குக்கிராமங்களில் வாழும் மக்களின் நலனுக்காக, மண் சாலைகளை தார் சாலைகளாக மாற்றியமைத்து எளிதான போக்கு வரத்துக்கு வழி வகுத்தார்.

    44. சித்த வைத்தியத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, அதற்கென்று தனி வாரியம் அமைத்தார்.

    45. நலிந்த பிரிவு மக்களுக்காக 3 ஆண்டுகளில் 30 லட்சம் வீடுகள் கட்டிகொடுக்கும் திட்டத்தை அமல் படுத்தினார்.

    46. பத்தாவது வகுப்பு வரை படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதம் ரூபாய் 50 நிவாரனப்பணம் அளிக்கும் திட்டத்தையும் அமல் படுத்தினார். புதுமுக வகுப்பு படித்தவர்களுக்கு மாதம் ரூபாய் 75 நிவாரணப்பணம் அளிக்கும் திட்டத்தையும், அமல் படுத்தின்னார். இதன் மூலம், ஏறத்தாழ 20 ஆயிரம் இளைன்கர்கள் இன்றும் பயன் பெற்றுறுக் கொண்டிருக்கின்றனர்.

    47. வணிகர்களுக்கு "ஒரு முறை வரி விதிப்பு" திட்டத்தை அமல்படுத்தி வீண் தொல்லைகளிலிருந்து விடுதலை அளித்தார்.

    48. கிராமக் கை வினைக் கலைஞர்களுக்கு இலவசத் தொழில் கருவிகள் வழங்கும் திட்டத்தை துவக்கினார்.

    49. விபத்து மற்றும் இடர் உதவித் திட்டத்தையும் அமல் படுத்தினார். (தற்போதைய 108 ஆம்புலன்ஸ் திட்டத்தின் முன்னோடியே இதுதான். (இந்த உண்மை பற்றி சில மாதங்களுக்கு முன் " ஜூனியர் விகடன்" இதழில் வெளியிடப்பட்ட செய்தி கவனத்தில் கொள்ளத்தக்கது).

    50. அரசு ஊழியர்களுக்கு, ஈட்டுறுதியுடன் இணைந்த சிறப்பு ஒய்வூதிய திட்டம் (GRATUITY CUM SUPERANNUATION SCHEME) அறிமுகப்படுத்தினார்.

    51. தொழிளார்களுக்கு (நெசவாளர், தீபெட்டித் தொழிலாளர், பனை ஏறும் தொழிலார் உட்பட, விபத்து நிவாரண திட்டத்தை அமல் படுத்தி பின்னர் அதனை விரிவு படுத்தினார்.

    52. மீனவர்களுக்கும், நெசவாளர்களுக்கும், சிறப்பு வீட்டு வசதி திட்டம் ஏற்படுத்தினார்.

    53. கட்டிட தொழிலாளர், கிராமக் கை வினைஞர், கை வண்டி இழுப்போர், சுமை ஏற்றி இறக்கும் தொழிலாளர், போன்றவர்களுக்கு ஆயுள் காப்புறுதியும், பணி ஒய்வு பலன்கள் கிட்த வழி செய்யும் திட்டம் துவக்கினார்.

    54. காவலர்களுக்கு, தனி வீட்டு வசதி கழகம் அமைத்து, அவர்களுக்கு மலிவு விலையில் உணவுப் பொருள் வழங்கும் திட்டத்தையும் அமல் படுத்தினார்.

    55. உலக வங்கி உதவியுடன் விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் பயிற்சி வழங்கும் திட்டத்தினை துவக்கினார்.

    56. ஆதரவற்ற பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் ஆகியவற்றுடன், ஆதரவற்ற விதவை தாய் மார்களின் பெண்களுக்கு, இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பெண்ணுக்கும் ருபாய் 1,000 வீதம் வழங்கவும் உத்தரவிட்டார்.

    56. விதவை மறுமணம் செய்து கொண்ட 1,500 தம்பதியருக்கு ருபாய் 5,300 வரை ஊக்கத் தொகை வழங்க உத்தரவிட்டார்.

    57. தாழ்த்தப்பட்டோரை, மாற்று இனத்தவர் மணம் புரிந்தவர்களுக்கும் ருபாய் 4,300 வீதம் வழங்க உத்தரவிட்டார்.

    58. பத்தாயிரம் ஏழைத் தாய் மார்களுக்கு உதவ தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கவும் உத்தரவிட்டார்.

    59. ஏழை விதவை தாய் மார்களின் குழந்தைகள் 15,126 பேருக்கு 1979 முதல் 1983 வரை இலவசமாக பாடப் புத்தகங்களை வழங்கி சிறப்பித்தார்.

    60. மனித சேவையில் ஈடுபடுவோர் மற்றும் பணி புரியும் மகளிர்க்கு தாங்கும் விடுதிகள் அமைக்கும் திட்டத்தையும் அமல் படுத்தினார்.

    இப்படி சாதனைகள் அடுக்கிக் கொண்டே போகலாம்.

    1977ம் ஆண்டு முதல் 1983 வரை, பொன்மனசெம்மலின் பொற்கால ஆட்சிக் காலத்தில் ---

    தமிழகத்தில் அமைக்கப்பட்ட பெரிய மற்றும் நடுத்தர தொழிற் சாலைகளின் எண்ணிக்கை 449 ஆகும். இவற்றின் மொத்த மூலதனம் அந்த கால கட்டத்தில் 850 கோடியாகும். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்றனர்.

    1979ல் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி 5.2 சதவிகிதம். இது 1982,ம் ஆண்டில் 12.1 சதவிகிதமாய் உயர்ந்தது. இது நம் தலைவரின் மகத்தான சாதனை.

    இது தவிர, மத்திய அரசின் நிதியுதவி நிறுவனங்களிடமிருந்து கடன் உதவி பெறுவதில் தமிழகம் இந்தியாவிலேயே 3 வது இடத்தை பெற்றது.

    1977-78ல் (அவர் ஆட்சி பொறுப்பு ஏற்ற புதிதில்) தமிழகத்தில் 2424 மெகா வாட்டாக இருந்த மின் உற்பத்தி 1983-84 ம் வருடத்தில் 3344 மெகா வாட்டாக இருந்தது.

    20,000 இளைஞர்களுக்கு சுய தொழில் தொடங்க நிதி உதவி அளிக்கவும் உத்தரவிட்டார் உன்னதமான நம் உத்தமத் தலைவர்.

    அரிசி விலை குறைப்பு :

    கடுமையான வெள்ளத்தால் விளைச்சல் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கூட, ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் அரிசி விலையை ரூ. 1.75 ஆக குறைக்க உத்தரவிட்டார். அதனுடன் மாதம் ஒன்றுக்கு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 20 கிலோ அரிசி வழங்க ஏற்பாடு செய்தார். இது தவிர, ஒரு கிலோ அரிசியை இலவசமாக வழங்கவும் உத்தரவிட்டார்.

    பின் குறிப்பு :

    1. புரட்சித் தலைவர் ஆட்சி காலத்தில், இயற்கை வளங்கள் குறைந்து, மக்கள் தொகை பெருமளவுக்கு (GEOMETRIC PROGRESSION முறையில்) பெருகியது.

    2. பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா - இவர்கள் இருவரும் ஆட்சிப்பொறுப்பு ஏற்ற போது, சாதாரண நிலையில் இருந்து அதே நிலையினில் கடைசி வரை இருந்தனர்.

    ஆனால், நம் மக்கள் தலைவர் எம். ஜி. ஆர். அவர்களோ, நன்கு சம்பாதிக்கக் கூடிய நடிப்பு தொழிலை விட்டொழித்து மக்கள் நலனுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு மிக உயர்ந்த நிலையிலிருந்து, எளிமையின் மொத்த உருவமாக திகழ்ந்து, கடைசி யில் சாதாரண நிலையில் ஐக்கிய மானார்.
    அன்பன் :

    சௌ. செல்வகுமார்

    என்றும் எம். ஜி. ஆர்.

    எங்கள் இறைவன்
    Last edited by makkal thilagam mgr; 22nd July 2013 at 08:52 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #2632
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like

    ================================================== ============================

    இந்த தில்லை வில்லாளன் தி. மு. க. வின் நிறுவன கால உறுப்பினர்களில் ஒருவர். பேரறிஞர் அண்ணா அவர்களின் அன்புக்கு பாத்திரமானவர். மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர். பேரறிஞர் அண்ணா அவர்கள் நடத்திய திராவிட நாடு, காஞ்சி போன்ற வார ஏடுகளில் பொறுப்பு ஏற்று பணியாற்றியவர்.

    "தன் சிறைவாசம் பற்றி எம். ஜி. ஆர். எப்போதும் வெளியில் கூறிக் கொண்டதில்லை".

    பின்னாளில், நமது புரட்சிதலைவர் அவர்கள், 1962ம் ஆண்டு சீனப் படையெடுப்பின் போது

    பிரதமர் நேரு அவர்களின் வானொலி உரையைக் கேட்டு யுத்த நிதியாக, நாட்டிலேயே, முதல் நபராக ரூபாய் 75,000 தொகையை அளித்தார். இது அந்தக் காலத்தில், மிக மிகப் பெரிய தொகை.

    தான் சார்ந்திருந்த கட்சியின் கொள்கைக்கும் கட்டுப்பட்டு, நாட்டு பாதுகாப்பிலும் அக்கறை கொண்டு, தேசிய ஒருமைப்பாட்டில் நம்பிக்கை வைத்து செயல்பட்ட நமது மக்கள் திலகத்தின் பெருமையை என்னென்று சொல்வது
    ?

    சௌ. செல்வகுமார்

    என்றும் எம். ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்
    [/QUOTE]

    நன்றி செல்வகுமார் சார்.

    தலைவர் இந்த சிறை வாசத்தை தன்னுடைய சுயசரிதையில் கூட குறிப்பிடவில்லை. தலைவர் கட்சி ஆரம்பித்த வேளையில் எதிர்கட்சிக்காரர் இவர் (எம்.ஜி.ஆர்.) எந்த போராட்டத்திலாவது சிறை சென்று இருக்கிறாரா என்று கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கு அவர் பதில் சொல்லவில்லை. இதே நிகழ்ச்சியை திரு.எஸ்.எஸ்.ஆர். அவர்களும் மேறப்டி சிறைவாசத்தை தலைவருடன் கழித்ததை பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.

    இன்னொன்றும் நினைவிற்கு வருகிறது. புரட்சித்தலைவராகவும் மற்றும் முதல்வராகவும் இருந்து நேரத்தில் வேலை செய்தவர்களுடன் (சிலர்) நான் உரையாடிய போது அவர்கள் தெரிவித்த தகவல்கள் இதுவரை எந்த செய்தி தாளிலும் வேறு எந்த புத்தகத்திலும் வந்தது இல்லை அந்நிகழ்ச்சிகளை கேட்ட போது தலைவர் சினிமாவில் ஒரு சதாவிதம் தான் கதாநாயக சாகஸம் காட்டி இருக்கிறார் என்பது புரிந்தது. தலைவர் சொல்லாத நிகழ்ச்சிகள் பல உள்ளன.

  4. #2633
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    செல்வகுமார் தாங்கள் குறிப்பிட்ட

    விபத்து மற்றும் இடர் உதவித் திட்டத்தையும் அமல் படுத்தினார். (தற்போதைய 1008 ஆம்புலன்ஸ் திட்டத்தின் முன்னோடியே இதுதான். (இந்த உண்மை பற்றி சில மாதங்களுக்கு முன் " ஜூனியர் விகடன்" இதழில் வெளியிடப்பட்ட செய்தி கவனத்தில் கொள்ளத்தக்கது)

    http://mgrroop.wordpress.com/2011/04...also-known-as/

  5. #2634
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    பத்தாவது வகுப்பு வரை படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதம் ரூபாய் 50 நிவாரனப்பணம் அளிக்கும் திட்டத்தையும் அமல் படுத்தினார். புதுமுக வகுப்பு படித்தவர்களுக்கு மாதம் ரூபாய் 75 நிவாரணப்பணம் அளிக்கும் திட்டத்தையும், அமல் படுத்தின்னார். இதன் மூலம், ஏறத்தாழ 20 ஆயிரம் இளைன்கர்கள் இன்றும் பயன் பெற்றுறுக் கொண்டிருக்கின்றனர்.

    மற்றும் college முடித்து அரசாங்க வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதவர்களுக்கு மாதம் ரூ.150/- கொடுக்கப்பட்டது. மேற்கண்ட இந்த திட்டம் தொடங்கப்பட்ட காலத்தில் என் சகோதரர் இத்திட்டதால் பயன் பெற்றார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

  6. #2635
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    National Rural Health Mission Report, published by Ministry of Health and Family Welfare last year.

    http://www.mgrroop.blogspot.in/2012/05/nrhm-report.html

  7. #2636
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    தலைவருடைய 3 முறை ஆட்சி காலத்தில் பஸ் கட்டணம் ஒரு முறை தான் ஏற்றப்பட்டது. எனக்கு நினைவு தெரிந்து நான் 30 பைசா கொடுத்து பள்ளிகூடத்திற்கு பஸ்ஸில் சென்று வந்தேன் அதன் பின்னர் 5வது படிக்கும் போது 40 பைசா ஆனது அதன் பின்னர் நான் 8வது படிக்கும் வரை அதாவது அவர் மறையும் வரை பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை.

  8. #2637
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by makkal thilagam mgr View Post
    கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த "ஜூனியர் விகடன்" இதழில் கேள்வி - பதில் பகுதியில்,

    A. தமிழகத்தை ஆண்ட மிகச்சிறந்த,

    B. ஆட்சிக்கு வந்த பின்பும் சொத்து சேர்க்காத முதல்வர்கள் யாவர் ?

    என்ற கேள்விக்கு
    1. பெருந்தலைவர் காமராஜர்,

    2. பேரறிஞர் அண்ணா
    3. புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர்.

    என்று அவர்கள் ஆட்சி புரிந்த காலவரிசைப்படி பதிலளிக்கப்பட்டுள்ளது.

    இது உண்மையிலேயே ஒவ்வொரு எம். ஜி. ஆர். அன்பனும், ரசிகனும், பக்தனும் பெருமை பட்டுக் கொள்ளவேண்டிய விஷயம்.. .

    பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் 1954ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்று 1963ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் தேதி வரை சுமார் 9 வருடங்கள் சிறப்பாக ஆட்சி புரிந்தார்.

    அவரது பதவிக்காலம் நம் பாரத நாடு சுதந்திரம் பெற்று சில வருடங்களே ஆகியிருந்த நிலையில், எண்ணற்ற மக்கள் நல திட்டங்கள் சுதந்திர இந்தியாவில், ஒவ்வொரு மாநிலத்திலும் அமல்படுத்த வேண்டிய கட்டாய சூழ்நிலை. மேலும், அப்போது மக்கள் தொகை குறைவு. இயற்கை வளங்கள் அதிகம். மத்தியில், அவர் சார்ந்த காங்கிரஸ் கட்சியும் ஆட்சியில் இருந்த காரணத்தால், திட்டங்கள் பல எளிதில், எந்த வித தங்கு தடையுமின்றி நிறைவேற்றப்பட்டன, இது அவருக்கு கிடைத்த மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட். மேலும், 2 பிரதமர்களை உருவாக்கி 'KING MAKER' என போற்றப்பட்டதால், அவரின் செல்வாக்கு, மத்திய அரசில் ஓங்கி உயர்ந்திருந்த நிலையில், பல திட்டங்களுக்கு எந்தவித சிக்கலின்றி அனுமதி கிடைத்தது.

    இந்த அனுகூலங்கள், பிற்காலத்தில் அரியணையேறிய பேரறிஞர் அண்ணா மற்றும் புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள் முதல்வராக இருந்த காலத்தில் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
    இவ்வளவுக்கு பின்பும், 1967ல் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தோல்வி அடைந்ததுக்கான காரணிகளாக அன்றைய தினம் பத்திரிகைகளால் படம் பிடித்துக் காட்டப்பட்டவை வருமாறு :

    1. 1964-67 கால காங்கிரஸ் ஆட்சியின் மீது மக்களுக்கு இருந்த மனகசப்பு

    2. வறட்சியால், மாநிலத்தில் பசி, பஞ்சம் மற்றும் பட்டினி தாண்டவமாடியது

    3. மக்கள் திலகத்தின் உறுதியான 'தி.மு.க. ஆதரவு' நிலை மற்றும் எழுச்சியான அறிக்கையுடன் கூடிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சுவரொட்டிகள்

    4. பேரறிஞர் அண்ணா அவர்களின் எழுத்தாற்றலும், பேச்சாற்றலும், அவரின் கண்ணியமான 1962-67 கால பாராளுமன்ற நடவடிக்கைகள்

    5. மக்களின் ஆட்சி மாற்ற எண்ணம்

    1954ல் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் சட்ட மன்ற உறுப்பினராக இல்லாத காரணத்தால், தமிழக முதல்வராக முடியாத நிலை இருந்தது. அது சமயம், குடியாத்தம் சட்ட மன்றத்துக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது எதிர்கட்சியாக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையிலான தி. மு. க., எவரையும் வேட்பாளராக நிறுத்தாமல், காமராஜர் அவர்கள் எளிதில் முதல்வராக உதவியது. இது, பேரறிஞர் அண்ணா அவர்களின் மிகப் பெரிய பெருந்தன்மையை காட்டுகிறது.

    பேரறிஞர் அண்ணா அவர்கள், 1967 மார்ச் மாதம் 6ம் தேதி, ஆட்சிப் பொறுப்பினை ஏற்று 02-02-1969 வரை, மிகக் குறுகிய காலமே (சுமார் 2 ஆண்டுகள் மட்டுமே) ஆண்டார். அதற்குள், காலம் அவரை நம்மிடமிருந்து பிரித்து விட்டது. 1967-1969 இடைப்பட்ட அந்த குறுகிய காலத்தில், எதிர் கட்சியான காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியிலிருந்த போழ்து, பேரறிஞர் அண்ணா அவர்கள் நிகழ்த்திய சாதனைகள் வருமாறு :

    1. ஒரு ரூபாய் படியரிசி திட்டம் கொண்டு வந்தது.

    2. சென்னையில் இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு நடத்தியது.

    3. சென்னை மாகாணம் "தமிழ் நாடு" மாநிலம் என்று உதயமாகியது. .

    4. தமிழ் சொற்களை அரசு ஆவணங்களில் பயன் படுத்த உத்தரவிட்டது

    5. பள்ளிகளில் இந்தி மொழியை கட்டாயப் பாடம் என்பதை நீக்கி ஆணையிட்டது மட்டுமல்லாமல், விருப்பமானவர்கள் மட்டும் படித்துக் கொள்ளலாம் என்று விலக்களித்தது.

    6. அரசுப் பேருந்துகளில் தெய்வப்புலவர் திருவள்ளுவர் மற்றும் அவர் எழுதிய திருக்குறள் இடம் பெறச் செய்து அதன் மூலம் மாணவர்களை நல்வழிப்படுத்தியது.

    7. இளைஞர்களை சமூக நலப் பணிகளில் ஈடுபடுத்த "சீரணி" இயக்கம் கண்டது.

    8. திருக்குறள் ஆராய்ச்சிக்காக, தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும், பல்கலைகழகங்களுக்கு தனி நிதி ஒதுக்கினார்.

    9. தமிழறிஞர்களுக்கு அரசு சார்பில் சிலையமைத்தது.

    10. விலைவாசி உயர்வினை கட்டுக்குள் கொண்டு வந்தது.

    11. பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் கொணரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை விரிவு படுத்தியது. இன்னும் சிறிது காலம் உயிரோடு இருந்திருந்தால் புரட்சித் தலைவரைப்போல் பொற்கால ஆட்சியை வழங்கியிருப்பார்.

    பிளவு பட்ட காங்கிரசின் ஒரு பிரிவான இந்திரா காங்கிரஸ் கட்சியை ஆதரித்தாலும், மற்றொரு பிரிவான ஸ்தாபன காங்கிரஸ் - ஜனசங்கம் கட்சிகள் உள்ளடக்கிய "ஜனதா" கட்சி 1977ல் மத்தியில் ஆட்சி கைப்பற்றியிருந்த காலத்திலும், பின்னர் 1980ல் அவரது ஆட்சியை பறித்து அவரை தங்கள் எதிரியாக பாவித்த காங்கிரஸ் கட்சி ஆட்சி புரிந்த கால கட்டத்திலும், அதற்கும் பின்பும் புரட்சித்தலைவரின் பொற்கால ஆட்சி நிகழ்த்திட்ட சாதனைகளின் பட்டியில் வருமாறு :

    1. பூரண மது விலக்கு திட்டத்தை தொடக்க காலத்தில் அமல் படுத்தினார்.

    2. ஐக்கிய நாடுகள் சபை போற்றி, உலகமே வியந்து பாராட்டிய சத்துணவு திட்டத்தினை 01-07-1982
    முதல் கொண்டு வந்தார்.

    3. அழகுத் தமிழில் சீர் திழுத்த எழுத்துக்களை, 19-10-1978 அன்று நடைமுறைப்படுத்தினார்.

    4. வழி வழியாக அனுபவிக்கப்பட்ட கிராம முன்சீப் பதவியினை ஒழித்து அதற்கு பதிலாக தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில், கிராம நிர்வாக அலுவலர்களை, தமிழக அரசு ஊழியர்களாக நியமித்தார்.

    5. தன்னிறைவு திட்டம் தொடங்கினார்.

    6. நிர்வாக வசதிக்காக மாவட்டங்களை பிரித்து மட்டுமல்லாமல், முக்கிய நகரங்களை HEAD QUARTERS CITY ஆக மாற்றினார்.

    7. புதிய போக்கு வரத்து கழங்களை துவக்கி, இன்றைய தினம் தமிழக மூலை முடுக்கெல்லாம்,போக்குவரத்து வசதி ஏற்படுத்தினார். குறிப்பாக, கிராமப்புற மக்களுக்கு போக்குவரத்து வசதி அளிக்க, 4316 பேருந்து வழித்தடங்களையும் ஏற்படுத்தினார்.

    8. அதே போன்று, குக்கிராமங்களுக்கெல்லாம் மின்னொளி வசதி அளித்தார்.

    9. காவல் துறைகள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு அதிகாரிக்கும் அதிகாரத்தை பகிர்ந்தளித்தார். (Under Management Concept - It is known as DE-CENTRALIZATION)

    10. வீட்டுக்கொரு விளக்கு என்ற அடிப்படையில் இலவச மின்சாரம் அளித்திட்டார்.

    11 .நாட்டின் முதுகெலும்பாய் திகழ்ந்த விவசாயிக்கு, வானம் பொய்த்த போது, அவர்களுக்கு வழங்கப்பட்ட மொத்த கடன் தொகையை பெரும் அளவில் (ரூபாய் 325 கோடி) தள்ளுபடி செய்தார். இது ஒரு தொடர் நிகழ்வாக நடந்தது. பாசனத்துக்கு நிலத்தடி நீரைப் பயன்படுத்த 3.31 லட்சம் பம்பு செட்டுகளுக்கு புதிதாக மின்சாரம் இணைப்பு கொடுக்க ஏற்பாடு செய்தார்.

    மனிதப் புனிதர் எம். ஜி. ஆர். 10.5 லட்சம் சிறு விவசாயிகள் இதனால் பயன் பெற்றனர்.

    12. பயிர் பாதுகாப்பு இன்சூரன்ஸ் முறையை அமல் படுத்தினார்.

    13. சிறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளித்திட்டார்.

    14. பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடையும், காலணியும், வழங்க வகை செய்தார்.

    15. இலவச பல்பொடி வழங்கும் திட்டத்தை கொணர்ந்தார்.

    16. விலைவாசி உயர்வில்லாமால், இறுதி நாட்கள் வரை தனிக்கவனம் செலுத்தினார். அதனை தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

    17. பண்டிகை காலங்களில், கூடுதல் அரிசி நியாய விலைக் கடைகளில் வழங்கினார்.

    18. முதியோருக்கு, இலவச வேஷ்டி, சேலை, மற்றும் பென்சன் (PENSION) வழங்கி சிறப்பித்தார்.

    19. எழுச்சிக் கவிஞர் பாரதி, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பெயரில் பல்கலைகழகங்களை ஏற்படுத்தினார்.

    20. தமிழ் மொழிக்கு தனியாக தஞ்சை மாநகரில் பல்கலைகழகம் உருவாக்கினர்.

    21. மகளிருக்காக "அன்னை தெரேசா" பல்கலை கழகம், கொடைக்கானலில், நிறுவினார்.

    22. சுய நிதி கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கி, அதன் மூலம் எண்ணற்ற மாணவர்கள் பொறியியல் பட்டப் படிப்பினை மேற் கொள்ளச் செய்தார். ஆசிரியர்கள் பலரும் இதன் மூலம் வேலை வாய்ப்பினை பெற்றனர்.

    23. ஏழை மாணவ - மாணவியர் பயன் தக்க வகையில், பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் நுழைவுத்தேர்வு முறையை புகுத்தினார்.

    24. கரும்பு சர்க்கரையிலிருந்து காகிதம் தயாரிக்கும் தொழிற்சாலையை நாட்டிலேயே முதன் முதலில் நம் தமிழகத்தில், கரூர் மாநகரத்தில் ஏற்படுத்தினார்.

    25. திரையரங்குகளில் COMPOUND TAX முறையை அமல் படுத்தி, தமிழ் திரை உலகினை அழிவிலிருந்து மீட்டார்.
    26. ஆங்கில படங்கள் திரையிடும் தமிழக அரங்குகளில், கட்டாயம் 3 மாதமாவது தமிழ் திரைப்படங்களை காண்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    27. அரசு அலுவலகங்களில், கோப்புக்களில், குறிப்புக்களை தமிழில் இடம் பெறச் செய்தார்.

    28. அரசு நிர்வாகத்தில், அரசியல் குறுக்கீடு இல்லாமல் பார்த்துகொண்டார்.

    29. மின்சார தேவையை கருத்தில் கொண்டு, "குந்தா" போன்ற அனல் மின் நிலையங்கள் அமைத்தார். காற்றாலைகள் அமைத்திட அரசு உதவியினை வழங்கினார்.

    30. முதன் முதலில் மாநில கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற வித்திட்டார்.

    31. சாதிக் கட்சிகளை ஊக்குவிக்காமல், மக்கள் ஆதரவுடன், அவைகளை தலை தூக்கிடாமல் செய்தார்.
    (உதாரணமாக - இந்துக்களில் குறிப்பிட்ட இனத்தை சார்ந்தவர்கள் பெரும்பான்மையோர் வசிக்கும்
    அருப்புக்கோட்டையில் தானே நின்று மகத்தான வெற்றி பெற்றார். அது போன்று நெல்லையில், கிறிஸ்தவ
    இனத்தை சார்ந்த ஜி. ஆர். எட்மண்ட் அவர்களை நிற்கவைத்து வெற்றி பெறச செய்தார். அதே போல்,
    பாளையங்கோட்டையில், நாஞ்சில் மனோகரன் அவர்களை வெற்றி பெறச் செய்தார்.

    தமிழகத்தில் பல தொகுதிகளில் இதே போன்று, தொகுதிக்கு புதியவர்களையும், மிக
    மிக சாதாரணமானவர்களையும், பெரும்பான்மை இனத்தை சாராதவர்களையும் வேட்பாளர்களாக நிற்க வைத்து
    வெற்றி பெறச் செய்து, ஒரு புரட்சிகரமான சாதனையை ஏற்படுத்த நமது புரட்சித் தலைவரால் மட்டுமே
    முடியும்),

    32. தமிழ் ஈழத்தில் நடைபெற்ற "இனபடுகொலையை" கண்டித்து, அரசு சார்பில் பொது 'BANDH' நடத்தி மத்திய அரசின் கவனத்தை ஈர்த்து, ஒரு தீர்வு காண விதை விதைத்தார்.

    33. தமிழகத்துக்கு கூடுதல் அரிசியும் உணவும் மத்திய தொகுப்பிலிருந்து வழங்குமாறு மத்திய அரசைக் கேட்டு 09-02-1983 அன்று உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

    34. தெலுங்கு கங்கை திட்டம் கொண்டு வந்து மாநிலத்தில், தண்ணீர் பஞ்சத்தை போக்கினார்.

    35. அண்டை மாநிலமான கர்நாடக முதல்வர்களுடன் (மறை திரு. தேவராஜ் அர்ஸ் மற்றும் மறை திரு. குண்டுராவ், ராமகிருஷ்ண ஹெக்டே போன்றோருடன்) நல்லுறவு பூண்டு, காவிரி நீர் பெற்று, விவசாயத் தொழிலை மேம்படச் செய்தார்.

    36. தமிழக மக்களின் நல் வாழ்விற்காக மத்தியில் ஆட்சி புரிந்த மாற்றுக் கட்சியினருடனும், சுமூக உறவு கொண்டு, மக்கள் நல திட்டங்கள் பல கொண்டு வந்தார்.

    37. நாட்டிலேயே மகளிருக்கான காவல் நிலையங்களை தமிழகத்தில் முதன் முதலில் ஏற்படுத்தி, முன்னுதாரணமாக திகழ்ந்தார்.

    38. சந்தேக கேஸ் என்கின்ற பிரிவை குற்றவியலில் இருந்து நீக்கினார்.

    39. சைக்கிளில் இருவர் செல்லலாம் என்று அனுமதித்தார்.

    40. விபச்சார வழக்கில் ஆணுக்கும் தண்டனை என்ற சட்டம் கொண்டு வந்து குற்றம் இரு பாலருக்கும் பொதுவானது என்று உணர்த்தினார்.

    41. தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற புதிய சட்ட வடிவம் கொண்டு வந்தார்.

    42.. "ஹரிஜன்" என்ற சொல்லை விடுத்து, "ஆதி திராவிடர்" என்று மாற்றி அழைக்கச் செய்தார்.

    43. குக்கிராமங்களில் வாழும் மக்களின் நலனுக்காக, மண் சாலைகளை தார் சாலைகளாக மாற்றியமைத்து எளிதான போக்கு வரத்துக்கு வழி வகுத்தார்.

    44. சித்த வைத்தியத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, அதற்கென்று தனி வாரியம் அமைத்தார்.

    45. நலிந்த பிரிவு மக்களுக்காக 3 ஆண்டுகளில் 30 லட்சம் வீடுகள் கட்டிகொடுக்கும் திட்டத்தை அமல் படுத்தினார்.

    46. பத்தாவது வகுப்பு வரை படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதம் ரூபாய் 50 நிவாரனப்பணம் அளிக்கும் திட்டத்தையும் அமல் படுத்தினார். புதுமுக வகுப்பு படித்தவர்களுக்கு மாதம் ரூபாய் 75 நிவாரணப்பணம் அளிக்கும் திட்டத்தையும், அமல் படுத்தின்னார். இதன் மூலம், ஏறத்தாழ 20 ஆயிரம் இளைன்கர்கள் இன்றும் பயன் பெற்றுறுக் கொண்டிருக்கின்றனர்.

    47. வணிகர்களுக்கு "ஒரு முறை வரி விதிப்பு" திட்டத்தை அமல்படுத்தி வீண் தொல்லைகளிலிருந்து விடுதலை அளித்தார்.

    48. கிராமக் கை வினைக் கலைஞர்களுக்கு இலவசத் தொழில் கருவிகள் வழங்கும் திட்டத்தை துவக்கினார்.

    49. விபத்து மற்றும் இடர் உதவித் திட்டத்தையும் அமல் படுத்தினார். (தற்போதைய 108 ஆம்புலன்ஸ் திட்டத்தின் முன்னோடியே இதுதான். (இந்த உண்மை பற்றி சில மாதங்களுக்கு முன் " ஜூனியர் விகடன்" இதழில் வெளியிடப்பட்ட செய்தி கவனத்தில் கொள்ளத்தக்கது).

    50. அரசு ஊழியர்களுக்கு, ஈட்டுறுதியுடன் இணைந்த சிறப்பு ஒய்வூதிய திட்டம் (GRATUITY CUM SUPERANNUATION SCHEME) அறிமுகப்படுத்தினார்.

    51. தொழிளார்களுக்கு (நெசவாளர், தீபெட்டித் தொழிலாளர், பனை ஏறும் தொழிலார் உட்பட, விபத்து நிவாரண திட்டத்தை அமல் படுத்தி பின்னர் அதனை விரிவு படுத்தினார்.

    52. மீனவர்களுக்கும், நெசவாளர்களுக்கும், சிறப்பு வீட்டு வசதி திட்டம் ஏற்படுத்தினார்.

    53. கட்டிட தொழிலாளர், கிராமக் கை வினைஞர், கை வண்டி இழுப்போர், சுமை ஏற்றி இறக்கும் தொழிலாளர், போன்றவர்களுக்கு ஆயுள் காப்புறுதியும், பணி ஒய்வு பலன்கள் கிட்த வழி செய்யும் திட்டம் துவக்கினார்.

    54. காவலர்களுக்கு, தனி வீட்டு வசதி கழகம் அமைத்து, அவர்களுக்கு மலிவு விலையில் உணவுப் பொருள் வழங்கும் திட்டத்தையும் அமல் படுத்தினார்.

    55. உலக வங்கி உதவியுடன் விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் பயிற்சி வழங்கும் திட்டத்தினை துவக்கினார்.

    56. ஆதரவற்ற பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் ஆகியவற்றுடன், ஆதரவற்ற விதவை தாய் மார்களின் பெண்களுக்கு, இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பெண்ணுக்கும் ருபாய் 1,000 வீதம் வழங்கவும் உத்தரவிட்டார்.

    56. விதவை மறுமணம் செய்து கொண்ட 1,500 தம்பதியருக்கு ருபாய் 5,300 வரை ஊக்கத் தொகை வழங்க உத்தரவிட்டார்.

    57. தாழ்த்தப்பட்டோரை, மாற்று இனத்தவர் மணம் புரிந்தவர்களுக்கும் ருபாய் 4,300 வீதம் வழங்க உத்தரவிட்டார்.

    58. பத்தாயிரம் ஏழைத் தாய் மார்களுக்கு உதவ தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கவும் உத்தரவிட்டார்.

    59. ஏழை விதவை தாய் மார்களின் குழந்தைகள் 15,126 பேருக்கு 1979 முதல் 1983 வரை இலவசமாக பாடப் புத்தகங்களை வழங்கி சிறப்பித்தார்.

    60. மனித சேவையில் ஈடுபடுவோர் மற்றும் பணி புரியும் மகளிர்க்கு தாங்கும் விடுதிகள் அமைக்கும் திட்டத்தையும் அமல் படுத்தினார்.

    இப்படி சாதனைகள் அடுக்கிக் கொண்டே போகலாம்.

    1977ம் ஆண்டு முதல் 1983 வரை, பொன்மனசெம்மலின் பொற்கால ஆட்சிக் காலத்தில் ---

    தமிழகத்தில் அமைக்கப்பட்ட பெரிய மற்றும் நடுத்தர தொழிற் சாலைகளின் எண்ணிக்கை 449 ஆகும். இவற்றின் மொத்த மூலதனம் அந்த கால கட்டத்தில் 850 கோடியாகும். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்றனர்.

    1979ல் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி 5.2 சதவிகிதம். இது 1982,ம் ஆண்டில் 12.1 சதவிகிதமாய் உயர்ந்தது. இது நம் தலைவரின் மகத்தான சாதனை.

    இது தவிர, மத்திய அரசின் நிதியுதவி நிறுவனங்களிடமிருந்து கடன் உதவி பெறுவதில் தமிழகம் இந்தியாவிலேயே 3 வது இடத்தை பெற்றது.

    1977-78ல் (அவர் ஆட்சி பொறுப்பு ஏற்ற புதிதில்) தமிழகத்தில் 2424 மெகா வாட்டாக இருந்த மின் உற்பத்தி 1983-84 ம் வருடத்தில் 3344 மெகா வாட்டாக இருந்தது.

    20,000 இளைஞர்களுக்கு சுய தொழில் தொடங்க நிதி உதவி அளிக்கவும் உத்தரவிட்டார் உன்னதமான நம் உத்தமத் தலைவர்.

    அரிசி விலை குறைப்பு :

    கடுமையான வெள்ளத்தால் விளைச்சல் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கூட, ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் அரிசி விலையை ரூ. 1.75 ஆக குறைக்க உத்தரவிட்டார். அதனுடன் மாதம் ஒன்றுக்கு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 20 கிலோ அரிசி வழங்க ஏற்பாடு செய்தார். இது தவிர, ஒரு கிலோ அரிசியை இலவசமாக வழங்கவும் உத்தரவிட்டார்.

    பின் குறிப்பு :

    1. புரட்சித் தலைவர் ஆட்சி காலத்தில், இயற்கை வளங்கள் குறைந்து, மக்கள் தொகை பெருமளவுக்கு (GEOMETRIC PROGRESSION முறையில்) பெருகியது.

    2. பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா - இவர்கள் இருவரும் ஆட்சிப்பொறுப்பு ஏற்ற போது, சாதாரண நிலையில் இருந்து அதே நிலையினில் கடைசி வரை இருந்தனர்.

    ஆனால், நம் மக்கள் தலைவர் எம். ஜி. ஆர். அவர்களோ, நன்கு சம்பாதிக்கக் கூடிய நடிப்பு தொழிலை விட்டொழித்து மக்கள் நலனுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு மிக உயர்ந்த நிலையிலிருந்து, எளிமையின் மொத்த உருவமாக திகழ்ந்து, கடைசி யில் சாதாரண நிலையில் ஐக்கிய மானார்.
    அன்பன் :

    சௌ. செல்வகுமார்

    என்றும் எம். ஜி. ஆர்.

    எங்கள் இறைவன்
    தலைவரின் அரசியல் சாதனைகளை அழகாக எடுத்துக்கூறிய பேராசிரியர் திரு. செல்வகுமார் அவர்களுக்கு நன்றி..தாங்கள் கூறியவை தலைவரின் சாதனைகளில் ஒரு சில என்றாலும், தங்கள் பட்டியலில் நான் அறியாத செய்திகள் நிறைய இருந்தன..எனக்கு தெரிந்த, அனைவரும் அறிந்த சில செய்திகளை சொல்ல கடமைபட்டுள்ளேன்.. மக்கள் திலகம் அவர்கள் பெருந்தலைவர் காமராஜர் மற்றும் பேரறிஞர் அண்ணா மீதும் மட்டற்ற மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர்..அதே போல் அறிஞர் அண்ணா அவர்களும், தன்னிடத்தில் நிறைய தம்பிகளை வைத்திருந்தாலும் தலைவரை மட்டுமே தன்னுடைய இதயக்கனி என்று குறிப்பிட்டார்..தம்பி..நீ பணம் தர தேவையில்லை, உன் முகத்தை காட்டு அதுவே போதும்..அதுவே லட்சத்திற்கு சமம் என்று பெருமைபட்டுகொண்டார்...மேலும் தி.மு.க..பட்டி தொட்டி எங்கும் கொண்டு போக வேண்டுமென்றால் அது எம்ஜிஆர் ஒருவரால் மட்டுமே முடியும் என்பதை ஒரு சம்பவத்தின் மூலம் உணர்ந்தார்...

    அனைவருக்கும் இது தெரிந்த செய்தி என்றாலும்..தி.மு.க. யாரால் பட்டி தொட்டியெங்கும் வளர்ந்தது என்பதற்கு இது பெரிய சான்று என்பதால் இதை மீண்டும் நினைவுகூர்கிறேன். ஒரு முறை அண்ணா அவர்கள் தன் நண்பர்களுடன் அம்பாசடர் காரில் சென்னையில் இருந்து திருச்சியை அடுத்த ஊருக்கு திருமணம் ஒன்றிற்கு செல்லும்போது துவரங்குறிச்சியை நெருங்கும்போது விடிந்து விடுகிறது..அண்ணா அவர்கள் தேநீர் அருந்தலாம் வண்டியை நிறுத்துங்கள் என்கிறார்..வண்டியை நிறுத்தியவுடன்.. அண்ணா வண்டியில் இருந்து கீழே இறங்குகிறார். பெருங்கூட்டம் கூடி விடுகிறது..அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் காரில் கட்டியிருந்த கருப்பு சிவப்பு கொடியைப் பார்த்து விட்டு..அண்ணாவைப்பார்த்து 'நீங்கள் எம்ஜிஆர் கட்சிதானே' என்று கேட்டதும்..அண்ணா திகைத்து விட்டார்..அப்போதுதான் அவருக்கு மக்கள் திலகத்தின் மக்கள் செல்வாக்கு மேலும் புரிந்தது..அதிலிருந்து மக்கள் திலகத்தை கழகத்தின் தீவிர பிரச்சாரத்திற்கு பயன்படுத்திகொண்டார்.அண்ணா அரியணை ஏற தலைவர் எவ்வாறெல்லாம் பாடுபட்டார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்..

    அதே போல் மக்கள் திலகம் பெருந்தலைவர் மேல் மரியாதையும் பாசமும் கொண்டிருந்தார்..பெருந்தலைவரின் எளிமை அவரை வெகுவாக கவர்ந்தது..அதனால்தான் அவர் தி.மு.கவில் இருக்கும்போதே துணிச்சலாக 'காமராஜர் என் தலைவர்' அண்ணா என் வழிகாட்டி என்றார்..அப்போது தி.மு.கவில் இருந்த சிலர்..அண்ணாவிடம் அவர் மாற்று கட்சி தலைவரை..தலைவர் என்கிறார்..அவர்மீது நடவடிக்கை எடுங்கள் என்றபோது..பேரறிஞர் பெருந்தன்மையாக..ராமச்சந்திரன் எண்ணம் எனக்கு தெரியும்..என்று அனைவரையும் அமைதிபடுத்தினார்..மக்கள் திலகம், பெருந்தலைவரை யாரும் தாக்கி பேச கூடாது என்று தன் கட்சியினருக்கு கட்டளை பிறப்பித்திருந்தார். பெருந்தலைவரே ஒரு சூழ்நிலையில் 'வேட்டைக்காரன் வருவான்' ஏமாந்து விடாதீர்கள் என்று சொன்னபோது கூட அவர் மீது இருந்த மரியாதையை மாற்றி கொள்ளவில்லை..இன்னும் சொல்லபோனால் 1969ல் நடைபெற்ற நாகர்கோயில் எம்.பி.இடைதேர்தலில் கூட காமராஜர் போட்டியிடுகிறார் என்று தெரிந்து..அந்த தேர்தல் பிரச்சாரத்திற்கே தலைவர் செல்லவில்லை..அந்த அளவிற்கு அவரை நேசித்தார். அவர் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தார்..எத்தனை பேருக்கு இந்த பெருந்தன்மை வரும்..அதனால்தான் இன்னும் அவர் மக்கள் மனதில் வாழ்கிறார்.

    நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக மக்களிடம் 'யார் சிறந்த முதல்வர்' என்று சர்வே எடுத்தபோது புரட்சிதலைவர்தான் முதல் இடத்தில் இருந்தார்..அண்ணா மற்றும் காமராஜர் அடுத்தடுத்த இடங்களில் இருந்தனர்..கருணாநிதி மற்றும் ஜெயலலிதா கடைசி இடங்களுக்கு தள்ளப்பட்டனர்....பேரறிஞர் அண்ணா மற்றும் பெருந்தலைவர் காமராஜர் சிறந்த முதலமைச்சர்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை..ஏழை மக்களின் துயரம் போக்கிய அண்ணாவும், கல்வி கண் தந்த காமராஜரும் பல அரிய திட்டங்கள் தீட்டி, சிறந்த முதலமைச்சர்களாக விளங்கினர்..ஆனால்
    ஏன் எம்ஜிஆர் மட்டும் இன்றளவும் முதல் இடத்தில் இருக்கிறார். பேரறிஞர்
    அண்ணா மற்றும் பெருந்தலைவர் காமராஜ் ஆகியோர்..தாங்கள் வரும்போது எதையும் கொண்டு வரவில்லை..வந்தார்கள்..நல்ல முறையில் ஆட்சி செய்தார்கள்..கையில் எதையும் எடுத்துக்கொண்டும் போகவில்லை (சொத்து சேர்த்துவிட்டு போகவில்லை) ..இன்னும் சொல்ல போனால் பெருந்தலைவர் தன் தாய் கேட்டும்வீட்டில் இன்னொரு குடிநீர் குழாய் இணைப்பு போட கூட அனுமதிக்கவில்லை..அவ்வளவு எளிமையாய் வாழ்ந்துவிட்டு சென்றார்..

    ஆனால் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அவர்களோ தான் 1936 முதல் 1978 வரை திரைப்படத்துறையில் முதல் இடத்தில் இருந்துகொண்டு சம்பாத்தித்த அனைத்தையும் தமிழக மக்களுக்கே செலவிட்டு, போகும்போது தான் இருந்த இடத்தை கூட காது கேளாதோர் பள்ளிக்கு எழுதிவிட்டு சென்றார். வரும்போது பெரும் செல்வத்தைக்கொண்டு வந்து..போகும்போது ஒன்றையும் சேர்த்து வைக்காது சென்ற உத்தம தலைவர்..அதனால்தான் அன்றும் இன்றும் என்றும் மக்கள் மனதில் வாழும் தெய்வமாக இருக்கிறார்...

    ஈழத்தமிழர்களுக்கு தலைவர் எவ்வளவோ உதவிகள் செய்திருந்தாலும், அந்த இயக்கம் தோன்ற காரணமாக தலைவர் அவர்கள் 1982ம் ஆண்டு திரு. பிரபாகரனிடம் முதல் தவணையாக அன்றே..2 கோடியை கொடுத்தார் என்பதை திரு. பிரபாகரன் அவர்களே பேட்டியில் சொன்னதை இப்போது நினைவு கூர்கிறேன்..

    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

  9. #2638
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    டியர் esvee சார்,

    தாங்கள் வழங்கிய இதயபூர்வமான பாராட்டுக்களுக்கு எனது இனிய நன்றிகள் !

    அலைபேசி மூலம் அன்பான பாராட்டுதல்களை அளித்த அன்புச்சகோதரர் பெங்களூரு சி.எஸ்.குமார் அவர்களுக்கும், அருமைச்சகோதரர் பேராசிரியர் அவர்களுக்கும் எனது அகம் குளிர்ந்த நன்றிகள் !

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  10. #2639
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    மலைக்கள்ளனுக்கு மணிவிழா

    மக்கள் திலகத்தின் "மலைக்கள்ளன்" காவியத்துக்கு மணிவிழா ஆண்டு துவக்கம்

    [22.7.1954 - 22.7.2013]

    வைரவிழா துவக்க சிறப்புப் பதிவு

    சிங்காரச் சென்னையில் சிருங்கார மலைக்கள்ளன்

    CULT CLASSIC என்கின்ற செல்லுலாய்ட் காவிய அந்தஸ்தில் என்றென்றும் போற்றப்படும் கலைச்செம்மலின் "மலைக்கள்ளன்" முதல் வெளியீட்டில், 22.7.1954 வியாழக்கிழமையன்று சென்னையில் காஸினோ, பிரபாத், சரஸ்வதி ஆகிய மூன்று திரையரங்குகளிலும் மற்றும் தென்னகமெங்கும் வெளியானது.

    சென்னையைப் பொறுத்தவரை, 'காஸினோ'வில் 22.7.1954 முதல் 3.11.1954 வரை 105 நாட்கள் மெகாஹிட் ரேஞ்சில் ஓடியது. 4.11.1954 வியாழனன்று 'காஸினோ' திரையரங்கில் "பெத்த மனுஷுலு" என்கின்ற தெலுங்கு மொழித் திரைப்படம் வெளியானது.

    'பிரபாத்' திரையரங்கில் 22.7.1954 முதல் 24.10.1954 வரை 95 அபார வெற்றி நாட்கள். தீபாவளித் திருநாளான 25.10.1954 திங்களன்று தீபாவளி வெளியீடாக நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் ALL TIME GREAT மேடை நாடகமான "ரத்தக்கண்ணீர்"-ன் வெள்ளித்திரைவடிவம், நேஷனல் பிக்சர்ஸ் திரு.பெருமாள் முதலியார் அவர்களின் தயாரிப்பில், 'பிரபாத்' திரையரங்கில் வெளியானது.

    'சரஸ்வதி'யில் 22.7.1954 தொடங்கி 24.9.1954 முடிய 65 வெற்றி நாட்கள். 25.9.1954 சனிக்கிழமையன்று 'சரஸ்வதி'யில் நடிகர் ஆர்.எஸ்.மனோகர் கதாநாயகனாகவும், நாட்டியப் பேரொளி பத்மினி கதாநாயகியாகவும் நடித்த வைத்யா ஃபிலிம்ஸாரின் ஹாஸ்யச் சித்திரமான "வைரமாலை" திரைப்படம் வெளியானது.

    எனவே, மக்கள் திலகத்தின் மகத்தான மாணிக்கப் படைப்பான "மலைக்கள்ளன்", முதல் வெளியீட்டில், சென்னையில் ஓடிய நாட்கள் Crisp-ஆக:

    காஸினோ - 105 நாட்கள்
    பிரபாத் - 95 நாட்கள்
    சரஸ்வதி - 65 நாட்கள்

    மொத்தத்தில், சென்னை மற்றும் தென்னகமெங்கும் சூப்பர் டூப்பர் ஹிட் ரேஞ்சில் ஓடி ஒரு பாக்ஸ்-ஆபீஸ் புரட்சியை உருவாக்கிய திரைக்காவியம் "மலைக்கள்ளன்".

    குறிப்பு:
    "மலைக்கள்ளன்" திரைக்காவியத்தை CULT CLASSIC எனப் புகழ்ந்ததால் மற்ற திரைப்படங்கள் காவியங்கள் அல்ல என்று பொருள்கொள்ள வேண்டாம். மக்கள் திலகத்தை இதயதெய்வமாக பூஜிக்கும் பக்தர்கள் அனைவருக்கும் அவரது 134 திரைப்படங்களுமே திரைக்காவியங்கள்தான்.

    அன்புடன்,
    பம்மலார்.
    Last edited by pammalar; 23rd July 2013 at 03:36 AM.
    pammalar

  11. #2640
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    உண்மைகளை மறைத்து பொய்களைத் திரித்து உலவவிடும் ஏமாற்றுக்காரர்களைப் பற்றி எண்ணும்போதெல்லாம் எனக்கு மக்கள் திலகத்தின் இந்த "மலைக்கள்ளன்" பாடல்தான் மனதில் முணுமுணுக்கும்...!

    "எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
    இன்னும் எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
    சொந்த நாட்டிலே நம் நாட்டிலே"

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •