Page 265 of 397 FirstFirst ... 165215255263264265266267275315365 ... LastLast
Results 2,641 to 2,650 of 3965

Thread: Makkal thilagam m.g.r part -5

  1. #2641
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    எங்கும்-எதிலும்-எப்பொழுதும் வாய்மை எனப் போற்றப்படும் உண்மையே நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதனை மிக நேர்த்தியாக வலியுறுத்தும் கலைச்செம்மலின் கானம்

    "உண்மையின் சிரிப்பை ரசிக்கிறேன்
    அதில் உலகை மறந்து சிரிக்கிறேன்"




    "எது வந்தாலும் தாங்கிடும்
    இந்த இதயம் கலங்காது"


    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2642
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர்கள் பேராசிரியர் திரு செல்வகுமார்

    திரு கலியபெருமாள்

    திரு ரூப்குமார்

    மக்கள் திலகத்தின் 10 ஆண்டு கால ஆட்சியின் சமூக நல திட்டங்கள் ,ஏழை மக்களுக்கு பயன் பெரும் அளவிற்கு உதவிகள்
    புரிந்திட்ட சாதனைகள் என்று பட்டியல் இட்டு சிறப்பு பதிவுகள் செய்த உங்களுக்கு பாராட்டுக்கள் .

    மக்கள் திலகம் 1977ல் ஆட்சி கட்டில் அரியணை அமரும்போது
    பல அரசியல் விமர்சகர்கள் -பத்திரிகைகள் -எதிர்கட்சி தலைவர்கள் எல்லோரும் ''இவர் என்ன சாதிக்க போகிறார் ?
    நிர்வாக அனுபவமில்லை -நடிகர்தானே என்று ஏளனமாக
    கருதினார்கள் .

    புரட்சிதலைவர் தான் ஒரு ஒரு சிறந்த நிர்வாகி
    தொலைநோக்கு பார்வையாளர்
    ஏழைகளின் வாழ்க்கை தரம் உயர்ந்திட பல திட்டங்கள்
    கல்வி தரத்தில் மாறுதல்
    மதிய உணவு திட்டம் - விரிவாக்கம்
    1977-1987 வரை ஒரே சீரான -மக்களுக்கு பாதிக்காத வண்ணம்
    விலைவாசி கட்டுக்குள் வைத்த நிர்வாகம் .

    மத்தியில் ஆளும் கட்சியின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து தமிழ் நாட்டின் முன்னேற்றத்தை கவனத்தில் கொண்டு பல் வேறு பிரச்சனைக்கு தீர்வு கண்ட தீர்க்கதர்சி .

    நதி நீர் பிரச்னையில் சுமூக தீர்வு கண்ட தலைவர் .

    ஒரு சாதரான நடிகராக அறிமுகமாகி , மக்கள் மனதில் நிரந்தரமாக குடியேறி ,அரசியல் - சினிமா - மனித நேயம்
    என்ற மூன்று துறைகளிலும் தன்னுடய முத்திரையை பதித்த
    மூன்றெழுத்து எம்ஜியார் அவர்களின் அரசியல் பக்குவம்
    ராஜதந்திரம் -திரைப்படத்தில் பேசிய வசனங்களுக்கு உயிர் கொடுத்த சாணக்கியர் என்று

    இன்றும் அரசியல் நோக்கர்கள் -விமர்சகர்கள் பாராட்டுகிறார்கள் .
    குறை காண்போர்கள் -எந்த காலத்திலும் தங்களுடைய கருத்துக்களை மாற்றி கொள்ள மாட்டார்கள் .

    மக்கள் திலகத்தின் 10 ஆண்டு கால ஆட்சி - பொற்கால ஆட்சி
    என்பதில் மாற்று கருத்து கிடையாது .

    பெருந்தலைவரின் சிறப்பான திட்டங்கள்

    அண்ணாவின் திராவிட அரசின் புரட்சிகரமான திட்டங்கள்

    புரட்சி தலைவரின் ''அடிமட்ட ஏழைகளின் ''-முன்னேற்ற திட்டங்கள்

    மக்களால் மறக்க முடியாத மூவேந்தர்கள் .
    Last edited by esvee; 23rd July 2013 at 06:19 AM.

  4. #2643
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் திரு பம்மலார் சார்

    ''மலைக்கள்ளன்''- படம் சென்னை நகர காசினோ-பிரபாத் - சரஸ்வதி அரங்குகளில் ஓடிய நாட்கள் குறித்து விரிவான பதிவுகள் செய்த உங்களுக்கு பாராட்டுக்கள் .

    மலைக்கள்ளன் படத்தில் பெற்ற இடம் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் என்ற பாடல் நேற்றும் - இன்றும் - நாளையும் எல்லோருக்கும் என்றும் பொருந்தும் காவிய பாடல் .

    கணவன் படத்தில் இடம் பெற்ற ''உண்மையின் சிரிப்பை ''
    பாடல் மிகவும் அருமை .

    இதயக்கனியில் மக்கள் திலகம் பாடும் பாடலில்


    காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது மனிதன்
    காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கெடக்குது
    பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம் மனிதர் இதயமே
    உலகில்
    பிரிவு மாறி ஒருமை வந்தால் அமைதி நிலவுமே
    அமைதி நிலவுமே- என்ற இந்த வைர
    வரிகளுக்கு உங்கள் பதிவுகள் மூலம் மனமகிழ்வு நிலவும் என்று நம்புகிறேன் .

  5. #2644
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    திரு. கலியபெருமாள் அவர்கள் அறிவது,

    [B]நமது ஒப்பற்ற தெய்வம் புரட்சித்தலைவர் அவர்கள், ஆட்சிப் பொறுப்பில் இருந்த காலம்
    (30-06-1977 முதல் 23-12-1987 வரை) முழுவதும், தான் தீட்டிய புரட்சிகரமான மக்கள் நல திட்டங்கள் மூலம், மக்கள் முழு பயனை பெறுகின்றார்களா (குறிப்பாக சமுதாயத்தின் அடித்தள மக்களை சென்று அடைகிறாதா), என்பதில் தனிக் கவனம் செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


    மேலும், தமிழக அரசின் நியாய விலைக் கடைகளில் (RATION SHOP), எல்லாப் பொருட்களும் ஒரே நேரத்தில் கிடைக்குமாறு, பார்த்துக் கொண்டது, தன் ஆட்சிக் காலம் முழுவதும் இப்பொருட்களின் விலை உயராமல் பார்த்துக் கொண்டதும், மக்கள் திலகத்தின் அரசியல் ஆட்சி அமைப்பின் தனிசிறப்பு.


    அவரது மந்திரி சபையில் நிதி அமைச்சர்களாக பணி புரிந்த மறைதிரு. நாராயணசாமி முதலியார் மற்றும் நாவலர் நெடுஞ்செழியன் ஆகியோர் வரவு-செலவு திட்டம் தயாரிக்கும் தருணத்தில், தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணத்தால், சில அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்த்தப் பட்டிருக்கும். ஆனால், அவை சட்டப் பேரவையில் தாக்கல்
    செய்யப்படும் போது, விலை உயர்த்தப்பட்டிருக்காது.

    இதற்கு காரணம், புரட்சித்தலைவரின், விருப்பபடி, மக்களின் மீது எந்தவிதமான சுமையும் ஏற்றப்படக்கூடாது என்கின்ற கரிசனம் தான்.

    இதை பல முறை, மறைதிரு. நெடுஞ்செழியன் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.


    நமது பொன்மனசெம்மலின், இன்று வரை முறியடிக்கப்படாத திரையுலக சாதனைகளை தொடர்ந்து, அரசியலிலும், தமது சாதனைகளால் பேசப்படுகிறார், போற்றப்படுகிறார் என்றால், மேற்கூறிய அவரது தொலை நோக்குப்பார்வையுடன்
    கூடிய அணுகுமுறை தான்.
    [/B].




    அன்புடன் :

    சௌ. செல்வகுமார்


    என்றும் எம்..ஜி. ஆர்.

    எங்கள் இறைவன்
    Last edited by makkal thilagam mgr; 23rd July 2013 at 10:54 AM.

  6. #2645
    Junior Member Devoted Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Virgin Islands
    Posts
    0
    Post Thanks / Like
    .....
    Last edited by NTthreesixty Degree; 23rd July 2013 at 10:20 PM.

  7. #2646
    Junior Member Devoted Hubber masanam's Avatar
    Join Date
    May 2011
    Location
    Kuala Lumpur
    Posts
    1
    Post Thanks / Like
    செல்வகுமார் ஸார்,
    பாரத் ரத்னா மக்கள் திலகத்தின் ஆட்சி குறித்து நிறைய தகவல்களுடன் தங்களது பதிவு அருமை.

  8. #2647
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    படம் சொல்லும் பாடம்

    குடியிருந்த கோயில் - தாய்மையின் சிறப்பை கூறும் பாடம்.


    ஞாயிற்றுக்கிழமை மாலை காட்சி..நிறைந்தது அரங்கு மட்டுமல்ல..என் மனதும்தான்..இந்த படத்தில் முரட்டு வேடம் மற்றும் ஆர்ப்பாட்ட நடிப்பில் புரட்சி நடிகராகவும், அமைதியான வேடத்தில் மக்கள் திலகமாகவும் அசத்துகிறார்..

    அதுவும் அந்த 'பாபு' கேரக்டரில் நடிப்பில் பல பரிணாமங்களை காட்டுகிறார்..இந்த வேடத்தில் இவருடைய நடிப்பு பிரமிப்பூட்டுகிறது..இப்போது பார்க்கும்போதும் புதிதாக ரிலீஸ் ஆன ஒரு விறு விறுப்பான ஒரு புதிய படத்தின் பாதிப்பை ஏற்படுத்துகிறது..படம் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை ஒவ்வொரு காட்சியிலும் மக்கள் திலகமும் புரட்சி நடிகரும் போட்டி போட்டு நடிக்கின்றனர்..ஒரு நடிகரால் இரண்டு பாத்திரங்களுக்கு இடையில் இவ்வளவு வித்தியாசம் காட்ட முடியுமா..முடியும் என்று நிரூபித்திருக்கிறார் புரட்சி தலைவர்..
    ரயில்வே ரெகார்ட் அலுவலகத்தில் ஓட்டை பிரித்து இறங்கி சண்டை போடும் காட்சியில் என்ன வேகம், துள்ளல், ஆக்ஷன் என பிரம்மிப்பூடுகிறார்..

    அதற்கு எதிர்மாறாக அமைதியான, நிதான பாத்திரமாக 'ஆனந்த்' கேரக்டரில் மென்மையாக நடிக்கிறார்...பாபுவாக நடிப்பவரா இவர் என்று அதிசயிக்க வைக்கிறார்.

    அவர் நடனமும், வி.கே. ராமசாமியிடம் அவர் நிகழ்த்தும் நகைச்சுவை காட்சிகளும், காதல் காட்சிகளில் ஏற்படுத்தும் அழகும் பார்க்க பார்க்க திகட்டாதவை. வீட்டிற்கு வந்து தன் தாயிடம் தனக்கு கல்யாணம் செய்து வைக்க அவர் பேசும் வசனங்களும், நடிப்பும் எப்படி இவரால் இப்படி முடிகிறது என்று வியக்க வைக்கிறது..'எம்மா நான் உங்க மகன்மா' எங்கிட்ட வாங்க முடியுமா விஷயத்தை' என்று சொல்லும்போது அரங்கமே கைதட்டலில் அதிர்ந்தது..


    ...தொடரும்..

  9. #2648
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    சென்னை மகாலட்சுமி அரங்கில் கடந்த 05-07-13 முதல் திரையிடப்பட்ட "சக்கரவர்த்தி திருமகள்" திரைப்படம், 11-07-13 வரை ஒரு வாரத்தில் ரூபாய் 76,000/- வரை வசூல் செய்துள்ளது.

    56 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த இந்த "கறுப்பு-வெள்ளை" படம், மீண்டும் மீண்டும்
    திரையிடப்பட்டு சென்னை நகர அரங்குகளை வலம் வந்தது, என்பது குறிப்பிடத்தக்கது
    .






    அன்புடன் :

    சௌ. செல்வகுமார்



    என்றும் எம்..ஜி. ஆர்.

    எங்கள் இறைவன்

  10. #2649
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு ..இந்த திரியில் தேவையில்லாமல் வேண்டுமென்றே மூக்கை நுழைப்பவர்களுக்கும், அரை வேக்காடுகளுக்கும் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று மீண்டும் ஒரு முறை வேண்டிகொள்கிறேன்...அதுதான் அவர்களுக்கு தெரிந்த நாகரீகம்..ஏன் என்றால் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று ஒரு சிறு குழந்தைக்கு கூட தெரியும்..அவர் ஆட்சி பொற்கால ஆட்சி என்பதால்தான் அவரை மூன்று முறை ஆட்சி கட்டிலில் வைத்து அழகு பார்த்தார்கள். மேலும் தமிழ் மக்கள் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணத்தில் காமராஜர் கொண்டு வந்து, சரிவர நிறைவேற்ற படாமல் இருந்த மதிய உணவு திட்டத்தை மீண்டும் சத்துணவு திட்டத்தைக் கொண்டு வந்து இந்தியாவிலே..ஏன்..ஆசியாவிலே எடுத்துக்காட்டான திட்டம் என்று unescoவே பாராட்டும்படியான புரட்சிகர திட்டத்தை கொண்டு வந்தாரே..அதுதான் பொற்கால ஆட்சி..
    தமிழ் தமிழ் என்று கூறியவர்கள் தமிழுக்கு ஒன்றும் செய்யாத போது..தமிழுக்கென்று பல்கலை கழகம் கட்டினாரே அது பொற்கால ஆட்சி..பாரதியார், பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, அன்னை தெரசா பல்கலை கழகங்கள் கண்டாரே அது பொற்கால ஆட்சி..இன்றைக்கு அனைவரும் ஒத்துகொண்ட சித்த மருத்துவத்தின் சிறப்பை அன்றே உணர்த்தி அதை மேன்மைபடுத்தினாரே அது பொற்கால ஆட்சி..இன்று எல்லோராலும் போற்றப்படும் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை அன்றே கொண்டு வந்தாரே..அது பொற்கால ஆட்சி...இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்..எல்லாவற்றையும் பேராசிரியர் செல்வகுமார் சொல்லியிருக்கிறார்..அதில் எதுவெல்லாம் நீண்டகால, தொலை நோக்கு திட்டங்கள் என்று படித்து தெரிந்து கொள்ளலாம்..

    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

  11. #2650
    Junior Member Devoted Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Virgin Islands
    Posts
    0
    Post Thanks / Like

    கலியபெருமாள் அவர்களே...!

    யார் அரவேக்காடு என்பதை யார் எப்படி புரிந்து எப்படி எழுதுகிறார்கள் என்பதை படிபவர்களுக்கு நன்றாக விளங்கும்...!

    என்னுடைய கருத்தை பதிவிட்டதில் என்ன அநாகரீகத்தை கண்டுவிடீர்கள் தாங்கள் ? யாரையாவது இழிசொல் எழுதினென, வைதேனா, மரியாதைகுறைத்து உங்களைபோல எழுதினென அல்லது ஒரு மயிரிழயாவது இழிவாக எழுதினேனா?

    கூறுங்கள் கலியபெருமாள் அவர்களே ?

    தமிழில் என்ன வார்த்தையை எதற்கு உபயோகபடுத்தவேண்டும் என்று தெரிந்து அதன்படிதான் பிரயோகம் செய்கிறீர்களா தாங்கள் ?

    முதலில் எழுதியிருப்பதை சரிவர படித்து புரிந்துகொள்ளாமல் முட்டாள்தனமான பிதற்றலை, தாக்குவதாக தவறாக நினைத்துகொண்டு ஒரு closed mindset உடன் பதில் பதிவிடுவதை விடுத்து , நின்ற நிலைக்கு வாருங்கள்...அந்தரத்தில் மிதக்காதீர்கள்..!

    தங்களுடைய ஒவ்வொரு பதிவிற்கும் அதைவிட அதிக தாக்கம் நிறைந்த பதிலடி என்னால் எழுத்தின் மூலம் கொடுக்க முடியும் என்பதை மறக்க வேண்டாம் நண்பரே...!

    ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பு நான் ஒரு முடிவை எடுத்து யார் என்ன கேவலாமான முறையில் தூண்டினாலும் அதை பொருட்படுத்தாது கண்ணியமாக என் பார்வையில்...என் கருத்தை பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று நினைத்து அதன்படி நடக்கிறேன்..!

    இப்போதும் நான் நீங்கள் எழுதியதை தவறாக நினைக்கவில்லை..! உங்களுடைய அறியாமையும் அபரிதமான அன்பும் தான் அப்படி தூண்டுகிறது என்பது நன்றாக உணர்ந்தவன் நான்..!

    ஆகவே பதிவிட விரும்புவதை நேராக எனக்கு பதிவிடுங்கள்..! மறைமுக விளாசல் தேவை இல்லை !

    அதைவிடுத்து எனதருமை மூத்த சகோதரர் பேராசிரியர் அவர்களை எதற்கு தூண்டி சாட்சிக்கு அழைகிறீர்கள்
    Last edited by NTthreesixty Degree; 23rd July 2013 at 01:09 PM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •