Page 270 of 397 FirstFirst ... 170220260268269270271272280320370 ... LastLast
Results 2,691 to 2,700 of 3965

Thread: Makkal thilagam m.g.r part -5

  1. #2691
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    I had the list of MGR movie release mainly in cities and towns. Anybody having theater list in other B and C centres.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2692
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like

  4. #2693
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    FROM MAALAI MALAR NEWS PAPER


  5. #2694
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    FROM DAILY THANTHI TAMIL DAILY


  6. #2695
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  7. #2696
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    courtesy- ilango - net

    சின்ன வயதில் அதாவது பள்ளிக்கூடம் செல்லும் நாளிலிருந்து நான் எம்ஜிஆர் ரசிகன். படம் பார்ப்பதோடு சரி. கல்லூரிக்கு சென்ற பின்னர் விவரம் தெரிந்த பின்புதான் சிவாஜி,ஜெமினி, எம்.ஆர்.ராதா நடித்த படங்களை பார்த்தேன்.

    அப்போதெல்லாம் ரசிகர்களில் சிலர் படம் வெளியான,முதல் நாளே,முதல் காட்சியை பார்த்து விட்டு ஏதோ வீர தீர செயலை செய்தது போல பெருமையாக சொல்லுவார்கள்.அவர்கள் சொல்லுவதை நம்புவதா வேண்டாமா என்று தோன்றும்.உடனே அவர்கள் தாங்கள் வாங்கிய சினிமா தியேட்டரின் டிக்கட்டை எடுத்து காண்பிப்பார்கள்.அல்லது தியேட்டரில் மட்டுமே விற்கப்படும் பாட்டு புத்தகத்தை எடுத்து நீட்டுவார்கள். இன்னும் சில ரசிகர்கள் தெருவில் உள்ள மன்றத்திலேயே பழியாக கிடப்பார்கள்..எம்ஜிஆர் படங்கள் ரிலீசாகும் தினம் மன்றத்தை அலங்கரிப்பது, மன்றத்திலிருந்து படம் வெளிவந்த தியேட்டர் வரை ஊர்வலமாக செல்வது என்று ரொம்பவும் அமர்க்களப் படுத்துவார்கள். இதனால் பள்ளிப் படிப்பை கோட்டை விட்டவர்களும் உண்டு.

    அப்போது எம்ஜிஆர்- சிவாஜி இருவரும் சினிமா உலகில் கொடி கட்டி பறந்த நேரம். இரண்டு பேருக்குமே ஏராளமான ரசிகர்கள். தி.மு.கவில் எம்ஜிஆர் என்றால் காங்கிரஸில் சிவாஜி. இருவரது ரசிகர்களும் அப்படியே இருந்தார்கள். எம்ஜிஆர் மன்றத்திற்கு அருகிலோ அல்லது எதிரிலோ., சிவாஜி ரசிகர் மன்றம் இருக்கும். இதனால் இரண்டு மன்ற ரசிகர்களுக்கும் இடையில் அடிக்கடி மோதல் வந்து போகும்.

    எம்ஜிஆருக்கு ஜோடியாக நடித்த நடிகைகள் சிவாஜிக்கும், சிவாஜிக்கு ஜோடியாக நடித்த நடிகைகள் எம்ஜிஆருக்கும் நடித்தார்கள். இருந்தாலும் எம்ஜிஆர்-சரோஜாதேவி, சிவாஜி-பத்மினி, ஜெமினி-சாவித்திரி ஜோடிகள் அப்போது பிரசித்தம்.ஜெமினியும் சாவித்திரியும் நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாகி விட்டனர். அதிலும் எம்ஜிஆர் ரசிகர்கள் சரோஜாதேவியை சொந்த அண்ணியாகவே நினைத்தனர்.அப்போது அந்தநேரத்தில் எம்ஜிஆர் ரசிகர்கள் இளைஞர்களாக இருந்ததும் ஒரு காரணம். அதற்கு தகுந்தாற் போல எம்ஜிஆரும் சரோஜாதேவியும் நெருங்கி நடித்தனர்.


    ”காவேரி கரை இருக்கு கரைமேலே பூவிருக்கு” “ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்”
    குமரிப் பெண்ணின் உள்ளத்திலே (எஙக வீட்டுப் பிள்ளை),”ஏதோ ஏதோ ஒரு மயக்கம்”(குடும்ப தலைவன்),”தொட்டு விடத் தொட்டு விட தொடரும்”(தர்மம் தலை காக்கும்),”அன்று வந்ததும் இதே நிலா” -இடி இடிச்சு மழை பொழிஞ்சு எல்லாம் நின்னாச்சு”(நீதிக்குப் பின் பாசம்),”தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன்” (படகோட்டி), ”ஜவ்வாது மேடையிட்டு சர்க்கரை பந்தலிட்டு” (பணத்தோட்டம்), ,”கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா”(பறக்கும் பாவை),”ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்”(தெய்வத்தாய்),- என்று எம்ஜிஆர் சரோஜாதேவி டூயட் பாடல்களை பாடிக்கொண்டே போகலாம்.
    Last edited by esvee; 24th July 2013 at 08:02 AM.

  8. #2697
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    courtesy- ranga rajan -net
    ஆயிரத்தில் ஒருவன்

    1965இல் வந்த படம். எம்ஜிஆர், ஜெயலலிதா, நாகேஷ், நம்பியார், மனோகர், ராமதாஸ், எல். விஜயலக்ஷ்மி நடிப்பு. விஸ்வநாதன்-ராமமூர்த்தி இணைந்து இசை அமைத்த கடைசி படம்.

    கலர் படங்கள் அபூர்வமாகவே வந்த காலத்தில் வந்த கலர் படம். கலர் மேக்கப் ரொம்ப கோரமாக இருக்காது (சரோஜாதேவி, எங்க வீட்டுப் பிள்ளை, enough said) எட்டு மணி மணியான பாட்டுகள். ராஜா ராணி சாகசக் கதைகளில் எம்ஜிஆரை அடிக்க ஆளில்லை என்று நிரூபித்த படம்.



    எம்ஜிஆர் ஒரு டாக்டர். சர்வாதிகாரி மனோகரை எதிர்க்கும் புரட்சியாளர்களுக்கு தன் தொழில் தர்மப்படி சிகிச்சை அளிப்பார். அதற்காக அடிமையாக ராமதாசின் தீவில் விற்கப்படுவார். அங்கே சென்று நாம் அடிமையாகவே இருக்க வேண்டியதுதானா என்று கேட்கும் தோழர்களுக்கு ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே, நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே என்று ஆறுதல் சொல்வார். நடுவில் தன்னை சைட் அடிக்கும் ஜெவை பற்றி மாளிகையில் அவள் வீடு, மரக்கிளையில் ஏன் கூடு, இதில் நான் அந்த மான் நெஞ்சில் வாழுவதேங்கே கூறு என்று பாடுவார். கொள்ளை அடிக்கவரும் நம்பியாருடன் போராடினால் சுதந்திரம் தருகிறேன் என்று சொல்லும் ராமதாசை நம்பி நம்பியாரை விரட்டுவார். ஏமாற்ற நினைக்கும் ராமதாசிடமிருந்து தப்பி நம்பியாரின் கப்பலில் போவார். நம்பியாரின் ப்ளாக்மெயிலால் கொள்ளைக்காரனாக மாறுவார். ஆனால் கொள்ளைக்காரர்களிடமிருந்துதான் கொள்ளை அடிப்பார். ஜெவின் கப்பலை கைப்பற்றுவார். ஜெவை விரும்பும் நம்பியாரிடமிருந்து அவரை காப்பாற்ற தன் அடிமையாக்கிக்கொள்வார். பிறகு அவரை மணப்பார். நம்பியாரிடமிருந்து தப்ப முயற்சி செய்யும்போது நம்பியாருடன் ஒரு சூப்பர் கத்தி சண்டை போட்டு பிறகு அதோ அந்த பறவை என்று பாட்டு பாடி, மனோதரின் கப்பலுடன் சண்டை போட்டு, மனோகரை சாவிலிருந்து காப்பற்றி, மனோகர் தரும் ராஜ பதவியை நிராகரித்து டாக்டராகவே வாழ்வார்.

    அவரல்லவோ சூப்பர்மான்? இப்போதைய நடிகர்கள் எந்த காலத்திலும் அவருக்கு ஈடாக முடியாது.

    அருமையான ஆர்ட் டைரக்ஷன். காட்சிகள் மிகவும் ரிச்சாக எடுக்கப்பட்டிருக்கின்றன. கப்பல் காட்சிகள் நம்மை இன்னும் அசத்துகின்றன. பந்துலு பணத்தை தண்ணீ ராகத்தான் செலவழித்திருக்கிறார்.

    எம்ஜிஆர், நம்பியார், ஜெ, ராமதாஸ் ஆகியோருக்கு நல்ல வேஷப் பொருத்தம். சரோஜா தேவியின் கொஞ்சல் பாணியிலிருந்து விடுதலை! நாகேஷ் ராமதாஸ் காட்சிகளில் சிரிக்கலாம்.

    நம்பியாரிடமிருந்து ஜெவை ஒரு பெட்டியில் வைத்து கடத்தி செல்ல, நம்பியார் அந்த பெட்டியில் தன் வாளை செருகும் காட்சி அருமையானது. அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் என்று பாடும் போது தியேட்டரில் உற்சாகம் பிய்த்துக்கொண்டு கிளம்பும்.

    ராமதாஸ் பேசும் “நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள். ஆனால் வாய்தான் காது வரை இருக்கிறது” என்ற வசனம் எங்கள் வட்டத்தில் ரொம்ப ஃபேமஸ்!

    கண்ணதாசனும் வாலியும் போட்டி போட்டுக்கொண்டு அருமையான பாட்டுகளை எழுதி இருக்கிறார்கள். கண்ணதாசன் “அதோ அந்தப் பறவை”, “நாணமோ” பாட்டுகளை எழுதினால், வாலி “பருவம் எனது பாடல்”, “ஆடாமல் ஆடுகிறேன்”, “ஏன் என்ற கேள்வி”, “ஓடும் மேகங்களே”, “உன்னை நான் சந்தித்தேன்” போன்ற பாட்டுகளில் அசத்தி இருக்கிறார்.

    எனது ஃபேவரிட் அதோ அந்த பறவைதான். எல்லாருக்குமே அதுதான் ஃபேவரிட். பாட்டும், கப்பலில் எம்ஜிஆரும் ஜெவும் ஓடி ஆடி பாடுவதும் பிரமாதம்.

    எனக்கு பிடித்த அடுத்த பாட்டு ஏன் என்ற கேள்விதான். அருமையாக படம் பிடிக்கப்பட்டிருக்கும். எம்ஜிஆரும் அவர் தோழர்களும் வட்டமாக படுத்துக்கொண்டு தண்ணீர் குடிக்கும் காட்சி பார்க்க பிரமாதமாக இருக்கும்.

    ஓடும் மேகங்களேவுக்கு மூன்றாவது இடம். நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன் என்ற வரிகள் மிக அருமை. படத்தின் டைட்டிலை வேறு அர்த்தத்தில் வாலி உபயோகித்திருப்பார். வார்த்தைகள் வருவதற்கு முன் அருமையான இசை.

    ஒரே ஒரு டூயட் – நாணமோ. நல்ல பாட்டு.

    ஜெவுக்கு மூன்று சோலோ பாட்டுகள். பருவம் எனது பாடல், உன்னை நான் சந்தித்தேன், ஆடாமல் ஆடுகிறேன் என்று. நன்றாக, அந்த காலத்துக்கு கவர்ச்சியாக ஆடியிருப்பார்.

    எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கைக்கு வித்திட்ட படங்களில் ஆயிரத்தில் ஒருவனும் ஒன்று. இந்த படம் தான் அவரை கோடி மக்களின் தலைவனாக உருவாக்கியது.

    நான் ஒரு வைத்தியன் ... இந்த சமுதாயத்திற்கு வைத்தியம் பார்ப்பது மட்டும் தான் என் தொழில்.

    தோல்வியை எதிரணிக்கு பரிசளித்வன் நான் இது போன்ற வசனங்கள் ரசிகர்களை கவர்ந்தது.

    இந்த படம் வெளியாகும் போது எம்.ஜி. ஆர் ரசிகர்கள் எப்படி இருந்தார்களோ... அதே நிலை தான் இப்போதும் பார்க்க முடிகிறது.

  9. #2698
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by MGR Roop View Post
    How many MGR movies had crossed 100 days in Mayavaram centre, can anyone tell me?


    இனிய நண்பர் திரு ரூப் சார்

    மாயவரம் நகரில் மக்கள் திலகத்தின் மூன்று படங்கள் ஓடியுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் உள்ளது .

    1. மதுரை வீரன் -1956

    2. ரிக்ஷாக்காரன் - 1971

    3. உலகம் சுற்றும் வாலிபன் - 1973.


    திருச்சி

    தஞ்சை

    குடந்தை

    மாயவரம்

    கரூர்

    பட்டுக்கோட்டை

    திரையிட்ட 6 நகரங்களில் 100 நாட்கள் ஓடிய படம்

    உலகம் சுற்றும் வாலிபன் .
    Last edited by esvee; 24th July 2013 at 09:23 AM.

  10. #2699
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  11. #2700
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    1971ல் வெளிவந்த, மக்கள் திலகத்தின் " ரிக்க்ஷாக்காரன் " திரைப்படத்தினை யொட்டி, புரட்சித் தலைவரின் புகழ் பாடிய "திரை உலகம் " பத்திரிகையில் (15-05-1971 பதிப்பு) நடிகை மஞ்சுளா விடுத்த வேண்டுகோள்




    இயற்கை எய்திய நடிகை மஞ்சுளாவுக்கு, இதய தெய்வம் எம். ஜி. ஆர். அவர்களின் புகழ் பாடுவதையே குறிக்கோளாக கொண்டு செயல்படும் அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நலச் சங்கம் (பதிவெண்: 304/2007) சார்பாக, அஞ்சலி.

    அன்பன் : சௌ.செல்வகுமார்


    என்றும் எம். ஜி. ஆர்.

    எங்கள் இறைவன்
    Last edited by makkal thilagam mgr; 24th July 2013 at 11:56 AM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •