-
6th August 2013, 11:21 AM
#3091
Junior Member
Platinum Hubber
MAKKAL THILAGAM IN DEIVATHAI- 1964
BANGALORE - PAPER CUTTING
-
6th August 2013 11:21 AM
# ADS
Circuit advertisement
-
6th August 2013, 11:25 AM
#3092
Junior Member
Platinum Hubber
-
6th August 2013, 03:37 PM
#3093
Junior Member
Seasoned Hubber
http://tamil.webdunia.com/entertainm...30806011_4.htm
சந்திரபாபுவை ஏழையாக்கிய மாடி வீட்டு ஏழை
சந்திரபாபு எம்.*ஜி.ஆரை வைத்து மாடி வீட்டு ஏழை படத்தை தயா*ரித்த போது சென்னையில் பிரமாண்ட வீடு ஒன்றை கட்டிக் கொண்டிருந்தார். முதல் மாடிவரை கார் போவது போன்று வடிவமைக்கப்பட்ட வீடு. வீடு பாதியில் நிற்கும் போது படமும் பாதியில் நின்றது. நாயகிக்கு நடிக்க தெ*ரியலை, ஆளை மாற்று என்றார் எம்.*ஜி.ஆர். எழுபது சதவீதம் படம் முடிந்த பிறகு எப்படி மாற்றுவது? - இது சந்திரபாபு. ஆளை மாற்றினால்தான் ஆச்சு என்று எம்.*ஜி.ஆர். அடம்பிடிக்க, எடுத்தவரைக்குமான ஃபிலிம்களை தீயிட்டு கொளுத்தினார் சந்திரபாபு.
அவருக்கு பைனான்ஸ் செய்தவர்களும் பெரிய இடத்து பிரஷர் காரணமாக சந்திரபாபுவை நெருக்க, அவர் ஆசையோடு கட்டி வந்த வீடு கடன்காரர்களின் கைக்கு போனது. அப்படி மாடி வீட்டு ஏழையை தயா*ரித்து, ஏழையானார் சந்திரபாபு.
மேற்கத்திய கலாச்சார பாதிப்பில் வளர்ந்தவர் சந்திரபாபு. அண்ணே என்று பவ்யமாக மற்றவர்கள் எம்.*ஜி.ஆரை சுற்றி நிற்க, கால் மேல் கால் போட்டு மிஸ்டர் ராமச்சந்திரன் என்று பெயர் சொல்லிதான் அழைப்பாராம் சந்திரபாபு. அவரை மட்டுமில்லை, சிவா*ஜி கணேசனும் அவருக்கு மிஸ்டர் கணேசன்தான். சிவா*ஜி பெரியார் தந்த படம் இல்லியா.
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை
புத்திசாலி மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை...
சந்திரபாபு புத்திசாலி.
-
6th August 2013, 04:30 PM
#3094
Junior Member
Veteran Hubber
ஆருயிர் சகோதரர் திரு. ரவிச்சந்திரன் அவர்கள் அறிவது :
தாங்கள் பதிவிட்ட தங்க நாணயத்துக்குள் தங்கத் தலைவரின் எழிலான முகராசி கொண்ட எங்கள் இறைவன் எம். ஜி. ஆர். அவர்களின் திருவுருவம் கொள்ளை அழகு.
முகராசி திரைப்படப் பதிவுகள் மிக அருமை. மக்கள் திலகத்தின் ஒரு சாதாரண கருப்பு-வெள்ளை படம் அரங்கு நிறைந்த ஆரவார காட்சிகளாக இன்றும் இன்றைய தலைமுறையினர் உட்பட மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று திகழ்கிறது என்றால், இந்த உலக சாதனையை படைக்க உத்தமத் தலைவராம், நம் பொன்மனசெம்மல் ஒருவரால் மட்டுமே முடியும்.
அன்புச் சகோதரர் திரு. கலியபெருமாள் அவர்கள் அறிவது :
தங்களின் கவிதை நடையுடன் கூடிய புகழாரத்தை புரட்சித்தலைவருக்கு சூட்டி, அவரின் புன்னகை ததும்பும் படப் பதிவுகளை பக்குவமாக வடிவமைத்து திரு. ரவிச்சந்திரன் அவர்களுடன் இணைந்து இரட்டிப்பு சந்தோஷத்தை அளிக்கும் தங்களின் திருப்பணி போற்றத்தக்கது.
அருமைச் சகோதரர் திரு. வினோத் அவர்கள் அறிவது :
கர்நாடக மாநிலத்தில், நம் இதய வேந்தன் எம்.ஜி. ஆர். அவர்கள் நடித்த திரைக்காவியங்களின் திரைஅரங்க விளம்பரங்களை தொடர்ச்சியாக வெளியிடுவது மட்டுமல்லாமல், சிறப்பு செய்திகளாக சிலவற்றை குறிப்பாக அவ்வப்போது வெளியிட்டு, தக்க பதிலடியினை வெளிப்படுத்தும் சாமர்த்தியமே தனி.
]உங்களனைவருக்கும் எனது பணிவான பாராட்டுக்களும், நன்றியும் உரித்தாகுக !

அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
Last edited by makkal thilagam mgr; 6th August 2013 at 04:35 PM.
-
6th August 2013, 04:43 PM
#3095
Junior Member
Devoted Hubber

Originally Posted by
esvee
Dharmendra with Makkal Thilagam..a rare picture.
Thanks for having posted it..Vinod Sir.
-
6th August 2013, 05:15 PM
#3096
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Thala_rasigan
http://tamil.webdunia.com/entertainm...30806011_4.htm
சந்திரபாபுவை ஏழையாக்கிய மாடி வீட்டு ஏழை
சந்திரபாபு எம்.*ஜி.ஆரை வைத்து மாடி வீட்டு ஏழை படத்தை தயா*ரித்த போது சென்னையில் பிரமாண்ட வீடு ஒன்றை கட்டிக் கொண்டிருந்தார். முதல் மாடிவரை கார் போவது போன்று வடிவமைக்கப்பட்ட வீடு. வீடு பாதியில் நிற்கும் போது படமும் பாதியில் நின்றது. நாயகிக்கு நடிக்க தெ*ரியலை, ஆளை மாற்று என்றார் எம்.*ஜி.ஆர். எழுபது சதவீதம் படம் முடிந்த பிறகு எப்படி மாற்றுவது? - இது சந்திரபாபு. ஆளை மாற்றினால்தான் ஆச்சு என்று எம்.*ஜி.ஆர். அடம்பிடிக்க, எடுத்தவரைக்குமான ஃபிலிம்களை தீயிட்டு கொளுத்தினார் சந்திரபாபு.
அவருக்கு பைனான்ஸ் செய்தவர்களும் பெரிய இடத்து பிரஷர் காரணமாக சந்திரபாபுவை நெருக்க, அவர் ஆசையோடு கட்டி வந்த வீடு கடன்காரர்களின் கைக்கு போனது. அப்படி மாடி வீட்டு ஏழையை தயா*ரித்து, ஏழையானார் சந்திரபாபு.
மேற்கத்திய கலாச்சார பாதிப்பில் வளர்ந்தவர் சந்திரபாபு. அண்ணே என்று பவ்யமாக மற்றவர்கள் எம்.*ஜி.ஆரை சுற்றி நிற்க, கால் மேல் கால் போட்டு மிஸ்டர் ராமச்சந்திரன் என்று பெயர் சொல்லிதான் அழைப்பாராம் சந்திரபாபு. அவரை மட்டுமில்லை, சிவா*ஜி கணேசனும் அவருக்கு மிஸ்டர் கணேசன்தான். சிவா*ஜி பெரியார் தந்த படம் இல்லியா.
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை
புத்திசாலி மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை...
சந்திரபாபு புத்திசாலி.
எந்த ஒரு செயலுக்கும் பொறுப்பாவது அவரவர்களின் நடவடிக்கைகளே காரணம். அடுத்தவர்கள் மீது பழி போடுவது கோழைத்தனம் !
உண்மை தெரியாமல் எதை வேண்டுமானாலும் உளறலாம் என்பது கூடாது.
உண்மை நிலவரங்கள் சில சமயங்களில் நாகரீகம் கருதி வெளிபடுத்த முடியாத நிலை ஏற்படுவதுண்டு.
கலைஞர்களை மதிக்காத இதே சந்திரபாபு பின்னாளில் மக்கள் திலகத்திடம் சரணடைந்தது தனிக்கதை.
தனது அடிமைப்பெண் படத்தில் சந்திரபாபுவுக்கு நடிக்க நல்ல வாய்ப்பளித்து, ஜெய்ப்பூர் படபிடிப்பில் நடிக்காத நாட்களிலும், சம்பளம் வழங்கி தனது பெருந்தன்மையை நிரூபித்தவர் தான் மனிதப்புனிதர் எம். ஜி. ஆர். அவர்கள்.
இது குறித்து, மக்கள் திலகம் பகுதி 4 திரியில், " இன்னா செய்தாரை ஒறுத்தல் - அவர் நாண நன்னயஞ் செய்து விடல் " பகுதியில் பொன்மனசெம்மலின் பெருந்தன்மையை பற்றி தெளிவாக குறிப்பிடபட்டுள்ளதை இந்த நேரத்தில் நினைவு படுத்துகிறேன்.
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
6th August 2013, 05:35 PM
#3097
Junior Member
Platinum Hubber
''தல '' ரசிகன்
மக்கள் திலகம் திரியில் வந்து எந்த சம்பந்தமும் இல்லாத ஒரு
தகவலை - எதிர் மறையான - அநாகரீகமான முறையில்
ஒரு பதிவினை நீங்கள் பதிவிட்டது மூலம் உங்களின்
அநாகரீகம்
உள்நோக்கம்
குழப்பம்
படித்திருந்தும் பண்பில்லாமை
புரிகிறது .வீணான விவாதம் - மற்றவர்கள் மனம் புண்படும்படி
பதிவிடுதல் இதுவே கடைசி முறையாக இருக்கட்டும் என்று அன்புடன் கேட்டு கொள்கிறேன் .
-
6th August 2013, 06:05 PM
#3098
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Thala_rasigan
http://tamil.webdunia.com/entertainm...30806011_4.htm
சந்திரபாபுவை ஏழையாக்கிய மாடி வீட்டு ஏழை
சந்திரபாபு எம்.*ஜி.ஆரை வைத்து மாடி வீட்டு ஏழை படத்தை தயா*ரித்த போது சென்னையில் பிரமாண்ட வீடு ஒன்றை கட்டிக் கொண்டிருந்தார். முதல் மாடிவரை கார் போவது போன்று வடிவமைக்கப்பட்ட வீடு. வீடு பாதியில் நிற்கும் போது படமும் பாதியில் நின்றது. நாயகிக்கு நடிக்க தெ*ரியலை, ஆளை மாற்று என்றார் எம்.*ஜி.ஆர். எழுபது சதவீதம் படம் முடிந்த பிறகு எப்படி மாற்றுவது? - இது சந்திரபாபு. ஆளை மாற்றினால்தான் ஆச்சு என்று எம்.*ஜி.ஆர். அடம்பிடிக்க, எடுத்தவரைக்குமான ஃபிலிம்களை தீயிட்டு கொளுத்தினார் சந்திரபாபு.
அவருக்கு பைனான்ஸ் செய்தவர்களும் பெரிய இடத்து பிரஷர் காரணமாக சந்திரபாபுவை நெருக்க, அவர் ஆசையோடு கட்டி வந்த வீடு கடன்காரர்களின் கைக்கு போனது. அப்படி மாடி வீட்டு ஏழையை தயா*ரித்து, ஏழையானார் சந்திரபாபு.
மேற்கத்திய கலாச்சார பாதிப்பில் வளர்ந்தவர் சந்திரபாபு. அண்ணே என்று பவ்யமாக மற்றவர்கள் எம்.*ஜி.ஆரை சுற்றி நிற்க, கால் மேல் கால் போட்டு மிஸ்டர் ராமச்சந்திரன் என்று பெயர் சொல்லிதான் அழைப்பாராம் சந்திரபாபு. அவரை மட்டுமில்லை, சிவா*ஜி கணேசனும் அவருக்கு மிஸ்டர் கணேசன்தான். சிவா*ஜி பெரியார் தந்த படம் இல்லியா.
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை
புத்திசாலி மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை...
சந்திரபாபு புத்திசாலி.
தல ரசிகன் என்று அடைமொழி வைத்திருக்கிறீர்கள். பெயர் தெரியாததால் நண்பரே என்று .அழைக்கிறேன். அஜீத் அவர்களே, மக்கள் திலகம் எம்ஜிஆரை தலைவராக கருதுபவர். அவரை ரோல் மாடலாக .நினைப்பவர்.அப்படிப்பட்டவரை முழுவதும் தெரிந்து கொள்ளாமல் தாங்கள் எழுதியிருப்பது வருத்தம் தருகிறது. மாடிவீட்டு ஏழை திரைப்படம் கைவிடப்பட்டதன் உண்மைகளை நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டும்..
உண்மை 1:
மாடி வீட்டு ஏழையின் கதாநாயகி நடிகையர் திலகம் திருமதி சாவித்திரி..சாவித்திரிக்கு நடிக்க தெரியவில்லை. மாற்றுங்கள் என்று யாரவது சொல்வார்களா அதுவும் நடிக நடிகையரின் திறமைகளைப் போற்றும் சிறந்த நடிகர், இயக்குனர் சொல்வாரா?
உண்மை 2
ஒரு நடிகை-நடிகர் தம்பதியரின் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டபோது, அதன் உள்ளே நுழைந்து அந்த நடிகையைப் பிரித்து, அவர்களை தவறான வழிக்கு கொண்டு செல்லும்போது, மக்கள் திலகத்தின் நல் அறிவுரையை கேட்காமல் போனதால் வேறு வழியில்லாமல் அந்த திரைப்படத்தில் .நடிக்கவில்லை. நாகரீகம் கருதி அவர்களின் பெயரை வெளியிட .விரும்பவில்லை.
உண்மை 3
நாகரீக போதையால் தடுமாறிய திரு. சந்திரபாபு அவர்கள் மக்கள் திலகத்தை பற்றி விமர்சனம் செய்தபோதும், அதை பெரிதுபடுத்தாமல் அவர் படங்கள் இன்றி, வாழ்க்கை நடத்த வருமானமின்றி தவித்தபோது, அவருக்கு தன்னுடைய சொந்த படத்தில் வாய்ப்பு கொடுத்து மீண்டும் அவர் வாழ்க்கையில் ஒளிவிளக்கேற்றியவர்தான், தமிழக மக்களின் இதயத்தில் நீங்க இடம் பெற்ற புரட்சிதலைவர்.
எனவே ஒருவரை பற்றி எழுதும்போது,அதுவும் உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வத்தை பற்றி எழுதும்போது, உண்மையைத் தெரிந்துகொண்டு மிகவும் கவனமாக எழுதுமாறு தங்களைக் .கேட்டுகொள்கிறேன்.
-
6th August 2013, 06:14 PM
#3099
Junior Member
Platinum Hubber
'உன் அகம்' நலம் என்றால் 'தென்னகம்' நலம்தான் தலைவா! -எம்.ஜி.ஆர்
உள்ளேயும் வெளியேயும் தங்கமாக மின்னிய தலைவர் எம்ஜிஆர்! இவரது பூர்விகம் கேரளா. பிறந்தது இலங்கையில் உள்ள கண்டி. வளர்ந்தது கும்பகோணம். உலகம் போற்றும் மனிதராக உருவா(க்)கியது சென்னை. அதனால்தானோ என்னவோ தனது பூத உடல் இந்த மண்ணில்தான் அமரத்துவம் அடைய வேண்டும் என்று விரும்பினார். அவருக்கும் சென்னைக்குமான தொடர்பு எத்தகையது? சில சம்பவங்களை மட்டும் சொல்லி முடித்துவிட முடியாது. நமது வாசகர்களுக்காக இங்கே கொஞ்சமே கொஞ்சம்...
ஒத்தவாடை தெரு-
கலைஞரும் எம்ஜிஆரும் நண்பர்களாக நடைபழகிய தெரு இது. இங்குதான் எம்ஜிஆர் வீடும் இருந்தது. கலைஞரையும் தனது பிள்ளையாக பாவித்த புரட்சித்தலைவரின் அம்மா சத்யபாமா இருவரையும் ஒன்றாக உட்கார வைத்து தானே சாதத்தை பிசைந்து உருட்டிக் கொடுப்பாராம்.
ராமாவரம் தோட்டம் -
அடிப்படையில் மலையாளிதான் என்றாலும், புரட்சித்தலைவர் விரும்பிக் கொண்டாடியது தமிழர் திருநாளான பொங்கல் திருநாளைதான். இந்த நாளில் திரைத்துறையை சார்ந்த தனது நண்பர்களை அழைத்து இங்குதான் பொங்கலை கோலாகலமாக கொண்டாடுவார்.
அதே மாதிரி புத்தாண்டு தினத்தன்று வருகிற எல்லாருக்கும் தனது கையால் 100 ரூபாய் நோட்டு ஒன்றை வழங்குவாராம். திரையுலகை சார்ந்த எல்லாருமே இந்த நோட்டை வாங்க ராமாவரத்தில் உள்ள அவரது வீட்டின் முன் குவிந்திருக்கிறார்கள். புரட்சி தலைவர் கையால் வாங்கினால் வருடம் முழுவதும் செழிப்பாக இருக்கலாம் என்பது அவர்களது நம்பிக்கை. அப்படி ஒருமுறை வந்த நடிகர் பாலாஜிக்கு ஒரு 100 ரூபாய் தாளுடன், பெட்டி நிறைய கேஷ¨ம் கொடுத்தாராம் எம்.ஜி.ஆர். ஏன்?
எங்கோ ஒரு கிராமம் வழியாக காரில் சென்று கொண்டிருந்தாராம் பாலாஜி. அங்கே மொட்டை வெயிலில் காலில் செருப்பு கூட இல்லாமல் யாரோ ஒரு மூதாட்டி சென்று கொண்டிருக்க, இறக்கப்பட்ட பாலாஜி காரை நிறுத்தி ஒரு 100 ரூபாய் கொடுத்தாராம் மூதாட்டிக்கு. இதுபோல நினைத்துப் பார்க்க முடியாத இன்ப அதிர்ச்சியை கொடுக்கிற ஒரே ஜீவன் எம்ஜிஆர்தானே? நீங்க எம்ஜிஆர்தானே? நல்லாயிருக்கணும் தலைவா என்று அந்த மூதாட்டி வாழ்த்தினாராம். இதைதான் பாலாஜி அப்போது எம்ஜிஆரிடம் சொன்னார்.
என் சார்பில் அந்த மூதாட்டிக்கு உதவியதற்காகதான் இந்த பரிசு என்றுதான் ஒரு பெட்டி நிறைய பணம் கொடுத்தாராம் எம்ஜிஆர். (ஆனால் அதை பாலாஜி வாங்கிக் கொள்ளவில்லை)
எம்ஜிஆரை வெறும் நடிகராகதான் பலர் பார்த்தார்கள். ஆனால் அவர் பெரிய படிப்பாளி என்பதை நிரூபித்த இடம் இதே ராமாவரம் தோட்டம்தான். இங்கே அண்டர் கிரவுண்டில் மிக பிரமாண்டமான நு£லகம் அமைத்திருந்தார் எம்ஜிஆர். இந்த நு£லகத்தை பார்த்து வியந்த அறிவாளிகளில் கருணாநிதியும் ஒருவர்.
மவுண்ட் ரோடு-
தமிழக முதல்வர்கள் யாருமே மக்கள் முன் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டதில்லை. அந்த பெருமை எம்ஜிஆருக்கு மட்டும்தான். முதன் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட போது, இதே மவுண்ட் ரோடில் அண்ணாசிலைக்கு அருகே பிரமாண்டமான மேடை அமைத்து பொதுமக்கள் முன்னிலையில்தான் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் புரட்சித்தலைவர்.
லாயிட்ஸ் சாலை-
இன்றைய அதிமுக வின் தலைமை அலுவலகம் இருக்கிறதே, அது ஒரு காலத்தில் எம்ஜிஆர் வாழ்ந்த வீடு. அவர் திரைத்துறையில் சம்பாதித்து வாங்கிய முதல் சொத்தும் இதுதான். இவர் வாங்கி வைத்திருக்கும் மற்ற பங்களாக்களில் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடும் எம்ஜிஆர், இங்கு மட்டும் தரையில் அமர்ந்துதான் சாப்பிடுவார். ஏனென்றால் இந்த மண் அவரை பொறுத்தவரை ரொம்பவே ஸ்பெஷலானது.
தி.நகர் ஆற்காடு தெரு-
தனது முக்கியமான முடிவுகளை அவர் இங்குதான் எடுப்பார். உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் ஜெயலலிதாவை நடிக்க வைக்க முயன்றார் எம்ஜிஆர். ஆனால் அப்போது உடனிருந்த ஆர்.எம்.வீரப்பன் அதற்கு சம்மதிக்கவில்லை. அதில் நடிக்கவில்லை என்றாலும், நட்பை தொடர்ந்தார் எம்.ஜி.ஆர். ஆனால் திடீரென்று என்ன காரணத்தினாலோ ஜெயலலிதாவுக்கும், எம்ஜிஆருக்குமான தொடர்பு விட்டு போயிருந்தது. முதல்வர் ஆன பின்பு ஒரு விழாவில் கலந்து கொள்ள சென்ற எம்ஜிஆர், அங்கு வாசலில் நின்று வரவேற்பளித்துக் கொண்டிருந்த ஜெ.வை சந்தித்தார். தன்னை வந்து சந்திக்கும்படி கேட்டுக் கொண்டு நேரம் ஒதுக்கிக் கொடுத்த இடம் இதே ஆற்காட் தெரு அலுவலகத்தில்தான்.
அடையார் சத்யா ஸ்டுடியோ-
தனது அன்னையார் சத்யபாமா அம்மையார் பெயரில் எம்ஜிஆரால் நிறுவப்பட்ட ஸ்டுடியோ இது. திமுக விலிருந்து நீக்கிப்பட்ட நிமிடங்களில் இங்குதான் இருந்தார் எம்ஜிஆர். போனில் தகவலை சொன்ன நாஞ்சில் மனோகரன், "இப்போ என்ன செய்யப் போறீங்க?" என்று பதற்றத்தோடு கேட்க, "பால் பாயாசம் சாப்பிட போகிறேன்" என்று சிரித்துக் கொண்டே பதில் சொன்னார் எம்ஜிஆர். புதிய கட்சி என்ற முடிவை எடுத்ததும் இதே ஸ்டுடியோவில் வைத்துதான்.
மீனம்பாக்கம்-
அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் மருத்துவமனையில் இருந்து சிங்கம் போல் துள்ளிக்குதித்து சென்னை வந்த புரட்சித்தலைவர், விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து தன்னை பார்க்க துடித்த லட்சோப லட்சம் மக்களுக்கு தரிசனம் கொடுத்தது இங்கேதான். பின்பு இது திரையரங்குகளில் நியூஸ் ரீலாக காண்பிக்கப்பட்டது. இந்த ஒளிச்சுருளுக்கு பின்னணி பேசியவர் எம்.என்.ராஜம். அவர் பேசிய ஒரு வாசகம் இன்னும் நெஞ்சுக்குள் அப்படியே...
"எம்.ஜி.ஆர், நலமா என்று மக்களை பார்த்து கேட்கிறார். அதற்கு மக்கள், தலைவா... உன் அகம் நலம் என்றால், தென்னகம் நலம்தானய்யா என்று ஆர்ப்பரிக்கிறார்கள்.... !"
courtesy- tamil cinema
Last edited by esvee; 6th August 2013 at 06:17 PM.
-
6th August 2013, 07:51 PM
#3100
Junior Member
Veteran Hubber
Bookmarks