-
14th August 2013, 10:01 PM
#11
Senior Member
Diamond Hubber
தம்பிகளா,
செல்வமோகன் குமார் சொன்னது மாதிரி நொந்து போயிருக்கிற நேரத்தில் மேலும் நோகடிக்க விரும்பல்ல.
ஆனா கமல்ஹாசனோடு நீங்கள் ஒப்பிட்டுக்கொண்டு மீண்டும் காமெடி செய்யாதீர்கள் ..கமல்ஹாசன் படத்தில் அரசியல் உதார் விடுவதில்லை என்பதும் எந்த சூழ்நிலையிலும் கமல்ஹாசனின் நோக்கம் அரசியல் இல்லை என்பதும் மிகவும் உறுதியாக எல்லோருக்கும் தெரியும் அளவுக்கு அவர் நடந்து கொண்டதால் அவரின் அங்கலாய்ப்புக்கு ஆதரவு கிடைத்தது .மேலும் தனது படத்தை யார் தடுக்கிறார்கள் ,என்ன காரணம் என்பது குறித்து அவரே அவ்வப்போது தெளிவாக மக்களுக்கு சொல்லி வந்தார் . எல்லாவற்றுக்கும் மேலாக ஒற்றை வரியில் சொல்லிவிடலாம் .. மக்களின் ஜீவாதார பிரச்சனைகள் பற்றி கூட விளக்கம் கொடுக்க பத்திரிகையாளர்களை சந்திக்கும் வழக்கம் இல்லாத மகாராணி இறங்கி வந்து விஸ்வரூம் பட பிரச்சனை குறித்து விளக்கம் கொடுக்க வேண்டியிருந்தது .
எனவே சந்தடி சாக்கில் மலையையும் மடுவையும் ஒப்பிட வேண்டாம்.
Last edited by joe; 14th August 2013 at 10:08 PM.
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

-
14th August 2013 10:01 PM
# ADS
Circuit advertisement
Bookmarks