-
16th August 2013, 02:51 PM
#11
Senior Member
Diamond Hubber
very sad...
RIP
நடிகர் மணிவண்ணன் மனைவி திடீர் மரணம்
சென்னை: கணவர் இறந்த இரண்டு மாதத்தில் நடிகர் மணிவண்ணன் மனைவி செங்கமலம் இன்று திடீரென மரணம் அடைந்தார்.
பிரபல நடிகரும், இயக்குனருமான மணிவண்ணன் கடந்த ஜூன் 15ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். இதையடுத்து, அவரது மனைவி செங்கமலம் (55) மகன் ரகுவண்ணனுடன் சென்னை கே.கே.நகர் ஜெய்பாலாஜி நகர் திருமலை தெருவில் வசித்து வந்தார்.
கணவர் இறந்த பின்னர் சோகத்தில் இருந்த செங்கமலத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செங்கமலம் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலுக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், சினிமா பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினர். இறுதிச் சடங்கு இன்று மாலை நடக்கிறது.
http://news.vikatan.com/article.php?...news&aid=18332
-
16th August 2013 02:51 PM
# ADS
Circuit advertisement
Bookmarks