-
2nd September 2013, 01:39 AM
#11
Senior Member
Diamond Hubber
மெகா படத்தில் பாடல் வரிகள் சிறப்பாக இல்லை என்பதை விட, எழுதுவதில் ஒரு குழப்பம் தெரிகிறது. என்ன வேண்டும் எது வேண்டும் பாடலில் எளிய/மலிவான நகரத் தமிழ் பிரயோகங்கள் கலந்த பல்லவியில் "சாந்துப் போட்டு வாசம் வேணுமா? மஞ்சள் முகம் தீண்ட வேண்டுமா? குங்குமத்தை காண வேண்டுமா?" என்ற வரிகள் துருத்திக் கொண்டு நிற்கின்றன. முதல் சரணம் சுத்தம்.. பொய்யே நீ சொன்னாலும் மெய்யாய் நான் கேட்பேனே என நாயகி பாடுவதும், பதிலாக நாயகன் "மெய்யே நீ சொன்னாலும் உண்மைதானா என்பேனே!" - மெய்யும் உண்மையும் ஒரே வரியில்.. மீட்டருக்கு மேட்டர் என்பது ரொம்ப மலிவாக போய்விட்டது. தொடரும் "நீ போட்ட மந்திரம் நீ செய்த தந்திரம் நிற்காமல் சுத்துதே நெஞ்சென்னும் பம்பரம்".. ஆஹா! ஆஹா! காவிய வரிகள் நா. முத்துக்குமார். பாடலின் ஆரம்பமே என்ன வேண்டும் எது வேண்டும் எனக் கேட்டுக்கொண்டு கண்டதையெல்லாம் எழுதி பாடல் நிரப்பினால் என்ன செய்வது நா.முத்துக்குமார்! எனக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது கார்க்கி ஒரு பாடல் வரிகளுக்கான சாப்ட்வேர் டூல் தயாரித்து வைத்திருக்கிறாராம். அதன் ஒரு பக்கத்தில் ராஜாவின் இதுபோன்ற இசைக்குறிப்புக்களை நுழைத்து மறு பக்கம் வழியே பத்து இருபது பாடல் வரிகளின் வடிவங்களை பெற்றுவிடலாம். பத்து இருபது என்பது ஒரு வடிவம் பிடிக்கவில்லையென்றால் இன்னொன்று..எதுவும் பிடிக்கலையென்றால் ஒன்றிலிருந்து ஒரு வரி, இன்னொன்றிலிருந்து அடுத்த வரி.. இப்படி கலக்கி ஒரு கலவையாக மாற்றிவிடலாம். இசை மட்டுமே ஆர்கானிக், பாடல் வரிகள் Fast Food. அது எப்படிங்க.. இசையை மட்டுமே காதில் நுழைத்து மனதில் நிறுத்தி, வரிகளை உள்வாங்காமல் அப்படியே வெளியே தள்ளிவிடுவது! "Listening my music without listening to lyrics" எப்படி என ராஜாவிடமே ஒரு புத்தகம் எழுதச் சொல்லவேண்டியதுதான்.
Last edited by venkkiram; 2nd September 2013 at 01:42 AM.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
2nd September 2013 01:39 AM
# ADS
Circuit advertisement
Bookmarks