-
9th September 2013, 10:23 PM
#11
Senior Member
Diamond Hubber
செல்லம் கொஞ்சும் - பாடல் இப்போதெல்லாம் வெகுவாக ஆட்கொள்ள ஆரம்பித்துவிட்டது. என்ன ஒரு டிரம்ஸ் துள்ளல் இந்த ஆக்கத்தில்! ஆரம்ப இசையிலிருந்து முதல் சரணம் வரை தொடர்ந்து ஆர்ப்பரிக்கும் டிரம்ஸை "சரி நீ போய் ஓய்வெடுத்துக்கோ!" என விடுப்பிற்கு அனுமதித்து விட்டு டிரம்ஸ் இல்லாமலேயே இரண்டாம் இடையிசையை அமைக்கும் பாங்கு ராஜாவிற்கே உரிய முத்திரை. இதெல்லாம் ராஜாவிற்கே உரிய எதார்த்த/இயல்பு மீறல்.. அப்படிப்பட்ட முடிவு காட்சிக்கு தேவைப்பட்ட ஒன்றா இல்லையா என படம் வந்த பிறகு தெரிந்து விடும். ஆனால் ஆனால்.. இரண்டாம் இடையிசையில் அந்தப் பாடலின் அடிநாதமாக இழையோடும் அந்த துள்ளலின் ஆழம் குறைந்துவிட்டதே என கேட்கும் நாம் நினைக்காதவாறு உறையச் செய்ய அவரால் முடிகிறது. வெற்றியும் காண முடிகிறது. (அந்த இரண்டாம் இசையின் ஆரம்பப்பகுதி ஹேராம் பட இசைக் கோர்ப்பினை ஞாபகப் படுத்துகிறது). அதுதான் இசை மந்திரம்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
9th September 2013 10:23 PM
# ADS
Circuit advertisement
Bookmarks