-
12th September 2013, 03:18 PM
#251

Originally Posted by
madhu
"லக்ஷ்மி வந்தாள்" மற்டும் "கலைமாமணியே" இரு பாடல்களும் பணம் பெண் பாசம் திரைப்படத்தில் இடம் பெற்றவைதான். ஆனால் இந்த "எனக்குப் பிடித்த ரோஜாப்பூவே" பாடல் வெளிவராத (அல்லது வெளிவந்து யாரும் கண்டுக்காமல் விட்ட ) "பணம் பகை பாசம்" என்ற படத்தில் இடம் பெற்றது. முதலில் அந்தப் படத்திற்கு "தர்மங்கள் சிரிக்கின்றன" என்று பெயர் சூட்டி இருந்திருப்பார்கள் போலிருக்கிறது. அந்தப் பெயர் சொல்லித்தான் இலங்கை வானொலியில் ஒலிபரப்புவார்கள்.
பணம் பெண் பாசத்தில் பி.சுசீலா பாடிய "அன்போடும் பண்போடும் உறவாடும் பாசம் அழியாத வரலாறம்மா " என்ற அருமையான பாடல் உண்டு.
இந்த லிங்க்கில் டவுன்லோடு செய்து கேளுங்க..
http://www.mediafire.com/download/15...m+Panpodum.mp3
இன்னொன்று வாணி ஜெய்ராமின் "அழகிய முகம் முழுமை நிலா.. அது வருவது இனிமை உலா" என்று ஒரு பாடலும் உண்டு.
சார்
இதுநாள் வரை இந்த திரி பற்றி தெரியாமல் இருந்தேன்
ஆரம்பித்தது யார் என்று பார்த்தால் நமது மதிற்பிற்குரிய ராக வேந்தர் சார் அவர்கள்
மிக்க மகழ்ச்சி
பணம் பெண் பாசம் ஸ்ரீகாந்த் மற்றும் ஜெயப்ரத நடிப்பில் வெளியாகத படம் என்று திரு முரளி சார் அவர்கள் ஸ்ரீகாந்த் பற்றிய திரியில் கூறி இருந்தார்
-
12th September 2013 03:18 PM
# ADS
Circuit advertisement
-
12th September 2013, 03:32 PM
#252
கடலோடு நதிக்கு என்ன கோபம் ஒரு பாடல் shankar ganesh மியூசிக் ஆனால் படம் பெயர் மறந்து விட்டது
-
12th September 2013, 03:46 PM
#253
சார்
அதே போல் நானும் நீயும் இன்று ரசிகன் நாளை இந்த உலகில் தலைவன் உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று
மலேசிய வாசுதேவன் மற்றும் பாலு குரலில் வரும் ஒரு பாடல் 80களில் சிலோன் ரேடியோவில் கேட்ட நினவு என்ன படம் என்று கூற முடியுமா ப்ளீஸ்
-
12th September 2013, 03:58 PM
#254
சார்
என்னடி மீனாஷி என்று ஒரு படம் சங்கர் கணேஷ் இசையில் வெளி வந்த சிவகுமார் சிவச்சந்திரன் ஸ்ரீப்ரிய நடிப்பில் இனிமையான பாடல் பாலு உடன் வாணி "ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை மனம் தாங்காமல் துடிக்குது ஓசை "
இன்னொரு பாடல் மலேசிய உடன் ஜானகி "ஆசையில் என்னடி ஆடுது மீனாக்ஷி நீரும் நீரும் சேர்ந்தால் எரண்டாகும் நீயும் நானும் சேர்ந்தால் ஓன்று ஆகும்
-
12th September 2013, 04:04 PM
#255
சார்
மாலை சூடவ என்று ஒரு படம் கமல் மற்றும் கவிதா நடித்து சி வீ ராஜேந்திரன் இயக்கம் "யாருக்கு யார் சொந்தம் நான் சொல்லவா எனக்கு என்றும் நீயே சொந்தம் மாலை சூடவ" ஜேசுதாஸ் பாடல் அருமையாக இருக்கும் இன்னொரு பாடல் பாலு அண்ட் வாணி "பட்டு பூசிகள் வட்டம் அடித்தால் கட்டி இழுக்கும் பூச்செண்டு " விஜய பாஸ்கர் இசை என்று நினைவு
-
12th September 2013, 04:31 PM
#256
இரண்டு பாடல்கள் from Movie: THAAI VEETU SEETHANAM
உனக்கும் எனக்கும் வழக்கு
Playback: S.P.Bala; P.Susila
Cast: Jaisankar; Usha Nandhini
Music: . M.S.Viswanathan Lyrics: Kannadasan
Year of Release: 1975
காலத்தை வெல்லும் இன்ப காதல் வாழ்க
Playback:Jesudas
-
12th September 2013, 04:46 PM
#257
இதோ எந்தன் தெய்வம் என்று ஒரு படம் முத்துராமன் மற்றும் கே.ர. விஜய நடித்து திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளி வந்தது
அந்த படத்தில் "அம்பிகை நேரில் வந்தாள் அன்பினை அள்ளி தந்தாள் கோபுரம் கண்ணில் கண்டேன் கொஞ்சிடும் கலசம் கண்டேன் தேவி என் தேவி " பாலு வித் சுசீலா
-
12th September 2013, 07:29 PM
#258
Senior Member
Diamond Hubber

Originally Posted by
gkrishna
சார்
இதுநாள் வரை இந்த திரி பற்றி தெரியாமல் இருந்தேன்
ஆரம்பித்தது யார் என்று பார்த்தால் நமது மதிற்பிற்குரிய ராக வேந்தர் சார் அவர்கள்
மிக்க மகழ்ச்சி
பணம் பெண் பாசம் ஸ்ரீகாந்த் மற்றும் ஜெயப்ரத நடிப்பில் வெளியாகத படம் என்று திரு முரளி சார் அவர்கள் ஸ்ரீகாந்த் பற்றிய திரியில் கூறி இருந்தார்
வணக்கம் திரு gkrishna sir,
முரளி சர்ர் கூறியிருந்தது பணம் பகை பாசமாக இருக்கலாம். பணம் பெண் பாசம் திரைப்படம் குமுதத்தில் ஜாவர் சீதாராமன் எழுதிய தொடரின் திரை வடிவம். அதில் முத்துராமன், வடிவுக்கரசி, சரிதா ஆகியோர் நடித்திருந்தார்கள்.
கடலோடு நதிக்கென்ன கோபம் என்பது அர்த்தங்கள் ஆயிரம் என்ற படத்தில் இடம் பெற்றது.
மாலை சூடவா படத்தில் கமலுடன் நடித்தது கன்னட மஞ்சுளா ( புதுவெள்ளம், எடுப்பார் கைப்பிள்ளை ஆகிய படங்களில் நடித்தவர் ) என்று நினைக்கிறேன்.
பல பல பதிவுகளாக பாடல்களைப் பற்றி எழுதி இருக்கிறீர்கள். ஒரே பதிவாக எழுதிவிட்டால் படிக்க சுலபமாக இருக்கும். மேலும் இந்தப் பாடல்கள் எல்லாம் தங்களிடம் உள்ளனவா ? அல்லது இவற்றை யாரேனும் இங்கு பதிவு செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களா என்பதையும் எழுதினால் மற்ற நண்பர்களிடம் அவை இருந்தால் பகிர்ந்து கொள்வார்கள்.
நானும் நீயும் இன்று ரசிகன் என்ற பாடல் எனக்கு நினைவில் இல்லை.
-
12th September 2013, 09:29 PM
#259
Junior Member
Devoted Hubber

Originally Posted by
gkrishna
கடலோடு நதிக்கு என்ன கோபம் ஒரு பாடல் shankar ganesh மியூசிக் ஆனால் படம் பெயர் மறந்து விட்டது
திரைப்படம்: அர்த்தங்கள் ஆயிரம்
பாடியவர்: Spb
திரைக்கலைஞர்கள்: புவனேஸ்வரி, பார்த்திபன்
வருடம்: 1981
-
12th September 2013, 09:40 PM
#260
Junior Member
Devoted Hubber
பாடல்: நீ வருவாய் என நான் இருந்தேன்
திரைப்படம்: சுஜாதா
பாடியவர்: கல்யாணி மேனன்
திரைக்கலைஞர்கள்: சங்கர், சரிதா, ராஜலக்ஷ்மி
இசை: MSV
வருடம்: 1980
Bookmarks