-
14th September 2013, 12:23 AM
#3031
Junior Member
Devoted Hubber
Kamal Haasan at Ninaithale Inikkum Trailer Launch
-
14th September 2013 12:23 AM
# ADS
Circuit advertisement
-
14th September 2013, 01:53 AM
#3032
Junior Member
Senior Hubber
It may be good to put KB's speech as well
-
14th September 2013, 07:55 AM
#3033
Junior Member
Devoted Hubber
Kamal's Ninaithale Inikkum Trailer Release - FULL VIDEO
-
14th September 2013, 08:33 AM
#3034
Junior Member
Regular Hubber
Balram Naidu Kamal..

(Legend Dr.Kamal Haasan FB)
-
14th September 2013, 08:46 AM
#3035
Junior Member
Regular Hubber
‘‘நானும், கே.பாலசந்தரும் இணைந்து நடிக்க வேண்டும்’’ பட விழாவில், கமல்ஹாசன் பேச்சு
‘‘நானும், கே.பாலசந்தரும் இணைந்து நடிக்க வேண்டும். பாலசந்தரின் அனுமதிக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்’’ என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.
‘நினைத்தாலே இனிக்கும்’
34 வருடங்களுக்கு முன் ரஜினிகாந்த்–கமல்ஹாசன் ஆகிய இருவரும் இணைந்து நடித்து, கே.பாலசந்தர் டைரக்டு செய்த படம், ‘நினைத்தாலே இனிக்கும்.’ இந்த படம் நவீன தொழில்நுட்பங்களுடன் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் திரைக்கு வர இருக்கிறது. இதன் ‘டிரைலர்’ வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடந்தது.விழாவில் கமல்ஹாசன் கலந்துகொண்டு ‘டிரைலரை’ வெளியிட, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய தலைவர் கேயார் பெற்றுக்கொண்டார்.
விழாவில், கமல்ஹாசன் பேசியதாவது:–
தனித்தனியாக...
‘‘சகோதரர் ரஜினிகாந்த் சார்பில் நான் இங்கு வந்து இருக்கிறேன். அவர் இந்த விழாவுக்கு வர இயலவில்லை. நான் வரவில்லை என்றால் என் சார்பில் அவர் வருவார். எங்கள் இருவருக்கும் இடையே அந்த அளவுக்கு நெருங்கிய நட்பு இருந்து வருகிறது.
34 வருடங்களுக்கு முன்பு இந்த படத்தில் நடித்தபோதுதான் நாங்கள் இருவரும் இனிமேல் இணைந்து நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தோம். இனிமேல் நாம் இருவரும் ஒரே சம்பளத்தை பங்கு போட்டுக் கொள்ள வேண்டாம். தனித்தனியாக படங்களில் நடிக்கலாம் என்று நான் சொன்னேன். அதை ரஜினியும் ஏற்றுக்கொண்டார்.
இளமை ரகசியம்
கே.பாலசந்தரை பார்த்துதான் எனக்கு டைரக்ஷன் ஆசை வந்தது. இந்தியாவிலேயே சிறந்த டைரக்டர் என்று என்னை இங்கே குறிப்பிட்டார்கள். அதற்கு காரணம், கே.பாலசந்தரிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட பால பாடம்தான்.என் இளமை ரகசியம் பற்றி கேட்டார்கள். அதை சொல்ல வேண்டாம் என்று ரசிகர்கள் பக்கம் இருந்து குரல் வந்தது. இந்த இளைஞர்களுடன் நான் பழகும் வாய்ப்பு ஏற்பட்டதுதான் என் இளமைக்கு காரணம்.
ஆரம்ப காலத்தில், நான் நடிகன் ஆவேன் என்று நினைக்கவில்லை. டைரக்டர் ஆகவேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன். ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படத்தில் நடித்தபோது ஒருநாள் கே.பாலசந்தர் என்னை அழைத்தார். இனிமேல் என்ன செய்யப்போறே? என்று கேட்டார். டைரக்டர் ஆகப்போகிறேன் என்றேன். அந்த பாதையில் போனால், நீ பஸ்சில்தான் வரவேண்டியிருக்கும். உன்னிடம் நடிப்பு திறமை இருக்கிறது என்று வழிகாட்டியவர், கே.பாலசந்தர்.
வேகத்தடை
‘நினைத்தாலே இனிக்கும்’ படம் வெற்றி பெற்றதால் அவர் ஜெயித்து விட்டதாக இங்கே கூறினார். என்றைக்குமே நீங்க (கே.பாலசந்தர்)தான் ஜெயிப்பீங்க. நீங்க ஜெயித்தால், நான் ஜெயித்த மாதிரி.எனக்கு வேகத்தடை போட வேண்டும் என்று ஒருமுறை அவர் சொன்னார். அந்த வேகத்தை நான் கற்றுக்கொண்டதே அவரிடம் இருந்துதான்.
இணைந்து நடிக்க வேண்டும்
அவர் டைரக்ஷனில் 36 படங்களில் நான் நடித்து இருக்கிறேன். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். கே.பாலசந்தர் ஒரு சிறந்த நடிகர். நன்றாக நடித்துக் காட்டுவார். நல்லவேளை, அவர் நடிக்க வரவில்லை. அவருடைய அந்த திறமையை பயன்படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பத்துக்காக காத்திருக்கிறேன். அவரும், நானும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும். இதற்காக அவருடைய அனுமதிக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.’’இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.
கே.பாலசந்தர்
விழாவில் டைரக்டர் கே.பாலசந்தர், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய தலைவர் கேயார், செயலாளர் டி.சிவா, பொருளாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், டைரக்டர்கள் சங்க தலைவர் விக்ரமன், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் அமீர், டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார், பேராசிரியர் ஞானசம்பந்தம், பட அதிபர்கள் கே.முரளிதரன், புஷ்பா கந்தசாமி, கே.ராஜன், ஏ.எல்.அழகப்பன், பிரமிட் நடராஜன், பிலிம்சேம்பர் துணைத்தலைவர் தேவராஜன், பொருளாளர் கே.எஸ்.சீனிவாசன், நடிகர் எஸ்.வி.சேகர் ஆகியோரும் பேசினார்கள்.பட அதிபர் சித்ரா லட்சுமணன் வரவேற்று பேசினார். ராஜ் டி.வி. ராஜேந்திரன் நன்றி கூறினார்.
(Dailythanthi)
-
14th September 2013, 06:28 PM
#3036
Junior Member
Seasoned Hubber
I represent my brother, Rajinikanth”- Kamal Haasan
The trailer of K Balachander’s super hit classic, Ninaithale Inikkum, starring the biggest superstars of Tamil Cinema, Kamal Haasan and Rajinikanth was released recently in a grand event.
The event boasted the presence of Kamal Haasan, K Balachander, MS Vishwanathan, S Ve Shekar, Ameer, KS Ravikumar and many others.
Fans, who were expecting to see Kamal Haasan and Rajinikanth on the same dais, were partly disappointed by the absence of the latter. But the disappointment vanished when the highly eloquent Kamal Haasan began his speech saying, “I’m here to represent my brother, Rajinikanth. And hadn’t I made it to this event, he would have for sure represented me. That is the bond we share.”
The Vishwaroopam star added, “We began our journey as brothers and until today, we share the same relationship.”
“It was during the shoot of the song Engeyum Eppodhum, from this movie, we agreed to start doing films individually, as we had been getting half the salary back then. Ours is the story of two brothers who understood the necessities of each other and took the paths that suited each other”, narrated Kamal Haasan about the nostalgic journey that he shared with Rajinikanth.
http://behindwoods.com/tamil-movies-...ajnikanth.html
-
15th September 2013, 10:09 AM
#3037
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Ragu Raj
Kamal Haasan at Ninaithale Inikkum Trailer Launch
Kamal's speech in this function is open and hearty...
-
17th September 2013, 09:33 AM
#3038
Junior Member
Regular Hubber
Kamal Haasan on 100 Years of Indian Cinema Celebration
-
17th September 2013, 09:40 AM
#3039
Junior Member
Regular Hubber
A lucky fan got this poster signed by Kamal Haasan

(Diehard Kamalians Group FB)
-
17th September 2013, 12:42 PM
#3040
கடவுளே இல்லை என்று சொல்லும் என்னை கடவுள் என்பதா? ரசிகர்களை ஆப் பண்ணிய கமல்!!
Kamal adviced his fans
கடவுள் நமபிக்கை, நல்ல நேரம், கெட்ட நேரம் போன்றவை நிறைந்தது சினிமா உலகம். படத்திற்கு பூஜை போடுவதில் இருந்து, படப்பிடிப்பு தொடங்கி கடைசியில் பூசணிக்காய் உடைக்கிறது வரைக்கும் இதையெல்லாம் சரியாக கடைபிடிப்பார்கள். ஆனால், அப்படிப்பட்ட சினிமாவில் இது எதையும் பார்க்காமல் தனது திறமை, முயற்சி, உழைப்பு இவற்றையே மூலதனமாகக்கொண்டு இன்று வரை வெற்றி மேல் வெற்றி பெற்று வருகிறார் கமல். குறிப்பாக கடவுள் நம்பிக்கை இல்லாதவர்.
ஆனால், அப்படிப்பட்ட கமல், ரீ ரிலிசாகும் நினைத்தாலே இனிக்கும் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தபோது., அவரது ரசிகர்களும் பெருந்திரளாக கூடியிருந்தனர். கமலின் பெயரை மேடையில் பேசுவோர் உச்சரிக்கும்போதெல்லாம் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இந்த நேரத்தில் சிலர், ஆழ்வார்பேட்டை ஆண்டவா என்றும் அவ்வப்போது குரல் கொடுத்தனர்.
இதை மேடையில் அமர்ந்திருக்கும்போது கேட்ட கமல் அவ்வப்போது ரசிகர்களை மெளனமாக இருக்குமாறு கைசைகையில் கேட்டுக்கொண்டு வந்தார். ஆனால், அந்த ஆழ்வார்பேட்டை ஆண்டவா மட்டும் ரசிகர் கூட்டத்தில் இருந்து ஒலித்துக்கொண்டேயிருந்தது. அதுவும் கமல் மைக் முன்னே பேச வரும்போது இன்னும் வேகமாக ஒலித்தது.
இதனால், ரசிகர்களைப்பார்த்து, நான் கடவுளே இல்லன்னு சொல்லிக்கிட்டிருக்கேன். நீங்க என்னேயே கடவுளுங்கிறீங்களா என்று ரசிகர்களைப்பார்த்து லேசாக சிரித்தபடி சொல்ல, அதோடு ஆப்பாகி விட்டனர். அதன்பிறகு அந்த ஆழ்வார்பேட்டை ஆண்டவா சத்தம் அரங்கில் ஒலிக்கவேயில்லை.
(http://cinema.dinamalar.com/tamil-ne...d-his-fans.htm)
Bookmarks