-
21st September 2013, 03:59 PM
#1171
vidivelli
sirs,
Some one month back the same Vidivelli was mentioned wrongly by "Randor gay" in The Hindu as not done well despite good performance by Sivaji/Sarojadevi and neat script by Sridhar. It was also pointed out by Mr.Subbu in our NT part 11 thread
Pavai vilakku producer Gopanna is one of our TN Congress leader Gopannava sir
Regards
Gk
-
21st September 2013 03:59 PM
# ADS
Circuit advertisement
-
24th September 2013, 05:20 PM
#1172
Junior Member
Senior Hubber

Originally Posted by
gopal,s.
பாவ மன்னிப்பு 16.03.1961
தேவிகா சம்பத்த பட்ட அனைத்து காதல் காட்சிகள். ரஹீமாக சிவாஜி உள்ளூர ஆசையிருந்தாலும் , சந்தர்ப்ப-சூழ்நிலை கருதி restraint ஆக வெளியிடும் முறை.
பாடாமல் பாடி விடும் பாலிருக்கும் பாட்டில் எவ்வளுவு அழகு இந்த திராவிட மன்மதன்.!!!!
எல்லோரும் கொண்டாடுவோம், வந்த நாள் முதல், சிலர் சிரிப்பார் பாடல் காட்சிகள்.
சிவாஜியும்- beemsingh உம் சிலர் சிரிப்பார் பாட்டில் உச்சம் தொட்டனர். நமக்கு இடப்புறத்தில் பழுதாகாத முக பகுதியுடன் சிரிக்கும் சிவாஜி. வலப்புறத்தில் பழுதான முக பகுதியுடன் அழும் சிவாஜி. நடுவில் சிரித்து கொண்டே அழும் சிவாஜி.
அன்னையுடன் அவர் அன்னை என்று தெரிந்து வீட்டில் சந்திக்கும் காட்சி ,பின்னால் வர போகும் தெய்வ மகனுக்கு அடிக்கல் நாட்டி விடுகிறது.
Acid வீச்சு பட்டு அவர் புழுவென துடிப்பது.
அட்டகாசமாக antics செய்யும் m .r .ராதாவை மிக மிக பொறுமை, பொறுமை, சிறிது நிதானம் தவறி, பதில் கடுமை என்ற வெவ்வேறு நிலைகளில் அவர் deal செய்யும் காட்சிகள்.
படம் துவக்கத்திலிருந்தே method acting முறையில் அந்த மேதை, ரஹீம் பாத்திரத்தை கையாளும் முறை . Subbudu , நடிகர்திலகம் அவர்களின் நடிப்புக்காக, பதின்மூன்று முறை தொடர்ந்து பார்த்தேன் என்ற விமர்சனம் எழுதினர்..உயர்ந்த எண்ணங்கள்,நோக்கம் கொண்ட இறை முறையில் வாழும் ரஹீம் எப்படி நடந்து கொள்ள , பேச வேண்டுமோ ,அப்படி நடித்து எல்லோர் உள்ளங்களிலும் நிறைந்தார்.
silar sirippar silar azuvar song best suited answer by NADIGARTHILAGAM for the BIG QUESTIONS OF THE DAY.
Last edited by Subramaniam Ramajayam; 24th September 2013 at 05:42 PM.
-
27th September 2013, 01:43 PM
#1173
Junior Member
Newbie Hubber

Originally Posted by
gkrishna
sirs,
Some one month back the same Vidivelli was mentioned wrongly by "Randor gay" in The Hindu as not done well despite good performance by Sivaji/Sarojadevi and neat script by Sridhar.
Regards
Gk
Dear Sri.Krishna
You may speak this directly to Mr.Randorguy seeking a clarification on how he managed to say this if at all if your statement is right.
If you need his contact number, please message me in mail and I will share the same.
Nice
-
27th September 2013, 01:45 PM
#1174
Junior Member
Newbie Hubber
Dear Friends,
I shall catch up later.
I have to take medicines post lunch and rest for couple of hours, I shall take leave now for a while.
Nice
-
28th September 2013, 11:43 AM
#1175
Senior Member
Veteran Hubber
பாவமன்னிப்பு
தமிழ்த்திரையின் அற்புதமான ஜோடிக்கு வித்திட்ட முதல் படம். அது சத்யம் வரை தொடர்ந்த அழகு. மூன்று மதங்களையும் இணைத்து எம்மதத்தவரும் மனம் புண்படாத வகையில் அமைந்த திரைக்கதை. பிறப்பால் இந்துவான நால்வர், வளர்ப்பால் மூன்று மதங்களை சென்றடைந்த கதையை நேர்த்தியாக சொன்ன விதம். ஆளவந்தார், ஜேம்ஸ், இஸ்மாயில் என்ற அருமையான கதாபாத்திரங்களுடன் துவங்கும் கதை. பின்னர் பிரதான நான்கு கதாபாத்திரங்களையும் அவர்கள் மத அடையாளத்துடனேயே ஒரே பாடலில் குழப்பமின்றி அறிமுகப்படுத்தும் விந்தை...... பாவமன்னிப்பு ஒரு திரை அதிசயம்.
ஒருபக்கம் தன்னை வளர்த்த தந்தையோடு 'எல்லோரும் கொண்டாடுவோம்' என்று சந்தோஷமாக பாடிக்கொண்டிருக்கும் ரகீமை அறிமுகப்படுத்திய சில வினாடிகளில், தலையில் அரைமுக்காடிட்டபடி ஏசுவின் படத்தின் முன்னிருந்து எழுந்து, வளர்த்த தந்தை ஜேம்ஸின் கையை முத்தமிடும் மேரி. ஆகா, என்னேவொரு கண்கொள்ளாக்காட்சி.
'பாலிருக்கும் பழமிருக்கும்' பாடல் காட்சி ஒரு காதல் காவியம். அதிலும் பாடல் முடிந்தபின், ரகீமும் மேரியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க, பின்னணியில் சுசீலாவும், எம்.எஸ்.வி.யும் மெலிய குரலில் 'பாலிருக்கும்' பாடலை இசைக்க, நடிகர்திலகம் நீட்டிய கைகளில் தேவிகா முகத்தைப் புதைத்துக் கொண்டு அழ, நடிகர்திலகமும் கண்கலங்கும் அந்தக்காட்சி தமிழில் வந்த தலையாய காதல் காட்சிகளில் ஒன்று என்றால் அது மிகையல்ல.
-
28th September 2013, 11:50 AM
#1176
Senior Member
Veteran Hubber
வெள்ளிவிழா காவியமான 'பாவமன்னிப்பு' படத்தின் 50-வது நாள், 100-வது நாள், மற்றும் வெள்ளிவிழா விளம்பர ஆவணங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
பம்மலார் அவர்கள் கருணை காட்டுவாரா..??.
-
30th September 2013, 08:20 AM
#1177
Senior Member
Seasoned Hubber
Sivaji Ganesan Filmography Series
67. பாவமன்னிப்பு Pava Mannippu

தணிக்கை – 09.03.1961
வெளியீடு – 16.03.1961
நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி, தேவிகா, எம்.ஆர். ராதா, எஸ்.வி.சுப்பய்யா, எம்.வி.ராஜம்மா, வி.நாகய்யா, டி.எஸ்.பாலய்யா, கே.ஏ.தங்கவேலு மற்றும் பலர்
மூலக்கதை – ஜே.பி.சந்திரபாபு
திரைக்கதை – ஏ.பீம்சிங்
வசனம் – எம்.எஸ்.சோலைமலை
ஸ்டூடியோ – ஏவி.எம்.
இசை – விஸ்வநாதன் – ராம்மூர்த்தி
பாடல்கள் – கண்ணதாசன்
பின்னணி பாடியவர்கள் – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா, பி.பி.ஸ்ரீநிவாஸ், நாகூர் ஹனீபா, ஜி.கே.வெங்கடேஷ், எல்.ஆர்.ஈஸ்வரி மற்றும் எம்.எஸ்.விஸ்வநாதன்
தயாரிப்பு – ஏவி.எம். மற்றும் புத்தா பிக்சர்ஸ்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
30th September 2013, 08:23 AM
#1178
Senior Member
Seasoned Hubber
பாவ மன்னிப்பு திரைப்படம் சென்னையில் வெளியான அரங்குகள் - சாந்தி, கிருஷ்ணா, ராக்சி
வெள்ளி விழா கண்ட திரையரங்கு – சென்னை சாந்தி

100 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய திரையரங்குகள்
1. சென்னை சாந்தி – 177 நாட்கள்
2. சென்னை கிருஷ்ணா – 127 நாட்கள்
3. சென்னை ராக்ஸி – 107 நாட்கள்
4. திருச்சி ராஜா – 120 நாட்கள்
5. கோவை கர்நாடிக் – 100 நாட்கள்
6. நெல்லை நியூ ராயல் – 109 நாட்கள்
7. நாகர்கோவில் ஸ்ரீ லட்சுமி – 103 நாட்கள்
8. சேலம் ஓரியண்டல் – 130 நாட்கள்
9. வேலூர் ஸ்ரீ ராஜா – 105 நாட்கள்
10. காஞ்சி கண்ணன் – 100 நாட்கள்
11. ராமநாதபுரம் சிவாஜி – டூரிங் டாக்கீஸ் .. கீற்றுக் கொட்டகை – 100 நாட்கள்
12. மதுரை சென்ட்ரல் – 141 நாட்கள்
13. திருவனந்தபுரம் பத்மநாபா – 103 நாட்கள்
14. பெங்களூர் ஸ்டேட் சினிமா – 154 நாட்கள்
15. கொழும்பு கிங்ஸ்லி – 106 நாட்கள்
இது இல்லாமல் வெளியான திரையரங்குகளில் 30க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 50 முதல் 84 நாட்கள் வரை ஓடியது.
தகவல் உபயம் – இதய வேந்தனின் வரலாற்றுச் சுவடுகள் மற்றும் ஆவணத் திலகம் பம்மலார்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
30th September 2013, 08:24 AM
#1179
Senior Member
Seasoned Hubber
பாவ மன்னிப்பு – சிறப்புச் செய்திகள்

1. முதன் முதலாக கீற்றுக் கொட்டகையில் .. டூரிங் டாக்கீஸில் 100 நாட்கள் ஓடிய தமிழ்ப் படம்
2. சென்னை நகரில் முதல் முதலில் குளிர்சாதன திரையரங்கில் வெள்ளி விழாக் கண்ட படம். சென்னை சாந்தி திரையரங்கு திறக்கப் பட்டு வெளியான முதல் நடிகர் திலகத்தின் திரைப்படம்.
3. பாவ மன்னிப்பு பாட்டுப் போட்டி தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பிரபலமானதோடு, ஏராளமான விடைகள் பெறப் பட்டு சிறந்த பாடல் ரசிகர்களின் ஆதரவிற்கேற்றவாரு வரிசைப் படுத்தப் பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு மதுரை சென்ட்ரல் திரையரங்கில் நடைபெற்ற விழாவில் பரிசுகள் வழங்கப் பட்டன. இது மட்டுமின்றி கிராமபோன் ரிகார்டு விற்பனையில் முந்தைய சாதனைகளை முறியடித்தது.
4. 1961ம் ஆண்டின் அகில இந்திய அளவில் சிறந்த படங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப் பட்டு நற்சான்றிதழ் பெற்றது.
5. தமிழ்த்திரையுலகில் முதன் முதலில் பலூன் மூலம் விளம்பரம் செய்யும் யுக்தி கடைப் பிடிக்கப் பட்டது பாவ மன்னிப்பு திரைப்படத்திற்குத் தான்
6. தெலுங்கில் பாப பரிஹாரம் என்று மொழி மாற்றம் செய்யப் பட்டு மாபெரும் வெற்றி பெற்றது.
7. வான வில் நாடகத்தில் நடிகர் திலகத்துடன் ஜோடி சேர்ந்து நடித்த தேவிகா, சிவாஜி ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற ஜோடி நடிகையாக தேவிகா திகழ அடித்தளம் இட்டதும் முதல் படமாக அமைந்த்தும் பாவ மன்னிப்பு.
8. ஒரே பிரேமில் நான்கு பரிமாணங்களில் சிவாஜியைத் தோற்றுவித்த சிலர் சிரிப்பார் பாடல் காட்சி, அக்காலத்தில் புதுமையாக்க் கருதப் பட்டது.
9. ஹிந்தியில் பின்னாளில் சஞ்சய் கான் நடிக்க சப் கா சாத்தி என்ற பெயரில் தயாரிக்கப் பட்டு பீம்சிங் இயக்கத்தில் வெளியானது.
10. அக்காலத்தில் கேரளத்தில் 100 நாட்கள் ஓடிய சில தமிழ்ப் படங்களில் பாவ மன்னிப்பு திரைப்படமும் ஒன்று
11. திராவக வீச்சினால் ஏற்பட்ட பாதிப்பில் முகம் சிதைந்து போன தோற்றத்தோடு ஒரு கதாபாத்திரம் திரையில் காட்டப் பட்டது முதன் முதலில் பாவ மன்னிப்பு படத்தில் தான்
12. அது வரை பல்வேறு திரைப்படங்களில் பாடியிருந்தாலும், பி.பி.ஸ்ரீநிவாஸ் என்கிற மிகச் சிறந்த பாடகரைத் தமிழ்த் திரையுலகில் பிரபலமாக்கியது காலங்களில் அவள் வசந்தம் பாடலே.
13. எல்லாவற்றிற்கும் மேலாக நடிக வேள் எம்.ஆர்.ராதா அவர்களின் வாழ்க்கையில் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக, அவருக்கு நிலையான புகழைப் பெற்றுத் தந்த வாய்ப்பாக அமைந்த்து பாவ மன்னிப்பு.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
30th September 2013, 08:31 AM
#1180
Senior Member
Seasoned Hubber
Bookmarks