10 மூவீஸ்

ராஜ் டி.வியில் ஞாயிறுதோறும் காலை 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி, ‘10 மூவீஸ்’. வாரந்தோறும் வெளிவரும் புதிய திரைப்படங்கள் தரவரிசை அடிப்படையில் இந்த நிகழ்ச்சியில் இடம் பிடிக்கிறது.

நேயர்கள் தங்களது ரசனைகளுக்கேற்ப, படங்களின் தரத்தை வரிசைப்படுத்தி, ராஜ் முகவரிக்கு கடிதம் அனுப்புகிறார்கள். அவர்களின் கருத்துக்களையும் தரவரிசையையும் மையப்படுத்தி கடிதங்கள் பிரிக்கப்படும், அவற்றில் நேயர்கள் எந்த படங்களை அதிகமாக தேர்ந்தெடுக்கிறார்களோ அதற்கேற்ப தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது.