-
7th October 2013, 12:19 PM
#1411
Senior Member
Veteran Hubber

Originally Posted by
Movie Buff
There is no title fixed yet for this one? May be Lingu is following Vishnu's trend of selecting the title at a later stage..
" The real triumph in life is not in never getting knocked down, but in getting back up everytime it happens".
-
7th October 2013 12:19 PM
# ADS
Circuit advertisement
-
10th October 2013, 03:12 PM
#1412
Senior Member
Veteran Hubber
-
16th October 2013, 12:50 PM
#1413
Senior Member
Veteran Hubber
வெண்ணிலா கபடிக்குழு இரண்டாம் பாகம் தயாராகிறது....!!!!
சுசீந்திரன் இயக்கிய முதல் படம் வெண்ணிலா கபடிக்குழு. சுசீந்திரனின் தந்தை திண்டுக்கல்லில் கபடிக்குழு நடத்தி வந்தவர் என்பதால், அப்போது நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு அப்படத்தை இயக்கினார் சுசீந்திரன். படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றது.
அதைத்தொடர்ந்து இப்போது அப்படத்தின் இரண்டாம் பாகமும் தயாராகிறது. ஆனால், இந்த முறை சுசீந்திரன் படத்தை இயக்கவில்லையாம். கதை வசனம் எழுதுவதோடு நிறுத்திக்கொள்ள, அவரது சித்தப்பா மகன் அப்படத்தை இயக்குகிறாராம். அவரது தந்தையும் கபடி விளையாட்டு வீரர் என்பதால் இதுவும் ஒரு நிஜ சம்பவத்தைக்கொண்டுதான் உருவாகிறதாம்.
மேலும், முதல் பாகத்தில் விஷ்ணு நடித்த வேடத்தில் இப்போது அங்காடித்தெரு மகேஷ் நடிக்க, முதல் பாகத்தில் நாயகியாக நடித்த அதே சரண்யா மோகனையே இப்போதும் கதாநாயகியாக நடிக்க வைக்கிறார்களாம். கதை விவாதங்கள் தடபுடலாக நடந்து வரும் நிலையில், இப்படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.
-
16th October 2013, 12:51 PM
#1414
Senior Member
Veteran Hubber
-
16th October 2013, 02:40 PM
#1415
Junior Member
Junior Hubber

Originally Posted by
balaajee
மான்கராத்தேவுக்காக கெட்டப்பை மாற்றிய சிவகார்த்திகேயன்!
விஜய்யின் துப்பாக்கியில் நடித்த வில்லன் வித்யுத் ஜாம்வாலே இப்படத்திலும் வில்லனாக நடிக்கிறாராம். அவருக்கும், சிவகார்த்திகேயனுக்கும் அதிரடி சண்டை காட்சிகளும் உள்ளதாம்.
Idharku karanam dhanush kooda friend aanadhinaala ? ( another sullan )
-
16th October 2013, 02:43 PM
#1416
Junior Member
Junior Hubber
" வி.டி.வி.கணேஷ், ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து சிம்புவுடன் பல படங்களில் நடித்தவர் இப்போது அவரே சொந்தமாக தயாரிக்கும் ‘இங்க என்ன சொல்லுது’ படத்தின் மூலம் ஹீரோவாகவும் களம் இறங்கியுள்ளார். இப்படத்தில் கணேஷ் ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடிக்கிறார். " ( Source : Dinakaran ) .
OMG , RUN MJ vukka indha nelama............
-
17th October 2013, 07:46 AM
#1417
Senior Member
Seasoned Hubber

Congratulations to Santhosh Sivan and his Unit...
First time in the History of Indian Cinema ... Red Dragon High End Digital Camera used even before Hollywood ventured it.. Thanks to Santhosh Sivan, only member of American Cinematographers' Association from India.
More images at http://www.kevkeka.com/viewgallery-1...on-camera.html
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
19th October 2013, 03:36 AM
#1418
Junior Member
Seasoned Hubber
“I will work with Gautham Menon next year”- Suriya
Suriya pulling out of Dhruva Natchathiram and his striking letter on Gautham Menon are today’s hottest topics of discussion. In a recent development, the actor spoke about his decision in an event. Although he didnt mention the name of the director, it was obvious from his mention of 'Vaaranam Aayiram'.
“I might have been influenced by the impact created by Singam and Singam 2,” said the actor. He also added, “More than work and my profession, I respect relationships. The decision I have taken is just for now. We’re not split forever. We will come back with a stunning project next year. I’m definitely looking forward to our reunion and that will happen for sure.”
Meanwhile, Suriya is all set to begin his project with director Lingusamy very soon. A test shoot with the latest Red Dragon technology happened at the Prasad setup recently. The film will go on floors on November 15th and is expected to release in May 2014. Samantha is pairing up with Suriya in this mega budget project, produced by Thirrupathi Brothers and cinematographer Santosh Sivan, composer Yuvan Shankar Raja and editor Anthony will also be working on the film.
http://behindwoods.com/tamil-movies-...chathiram.html
-
21st October 2013, 02:12 PM
#1419
Senior Member
Veteran Hubber
-
24th October 2013, 03:05 PM
#1420
Senior Member
Veteran Hubber
உண்மையிலேயே சாதனையாளர்தான் ராமராஜன்....!
சென்னை: நடிகர் ராமராஜனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுத்துக் கெளரவப்படுத்தியுள்ளனர். இந்த விருதுக்கு நிச்சயம் அவர் பொருத்தமானவர்தான்... சந்தேகமே இல்லை.
ராமராஜன் சிறந்த நடிகரா இல்லையா என்பது வேறு விஷயம். அவருக்கு டான்ஸ் ஆட வருமா, வராதா என்பதும் வேறு விஷயம்... ஆனால் அவரது படங்கள், குறிப்பாக இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து கொடுத்த அத்தனை படங்களுமே மக்களின் மனதை மயக்கிப் போட்ட மாயாஜாலப் படங்கள் என்பது மட்டும் உண்மை.
மன பாரமா.. மனக் கஷ்டமா.. சந்தோஷமாக கிராமத்து நினைவுகளில் மூழ்க வேண்டுமா.. எடுத்துப் போட்டு ஒரே ஒரு ராமராஜன் பாட்டைக் கேட்டுப் பாருங்கள்.. முடிஞ்சா கரகாட்டக்காரன் படத்தைப் பாருங்கள்.. அத்தனையும் நொடிப் பொழுதில் பறந்து போவதை உணர்வீர்கள்.
சரி வாங்க ராமராஜனைப் பத்தி ஒரு ரவுண்டு பார்த்துவிட்டு வருவோம்...
மக்கள் நாயகனான மதுரைக்கார ராசா...
ஆரம்பத்தில், யாருமே பெரிதாக அறிந்திராத இயக்குநராக வலம் வந்தவர்தான் ராமராஜன். ஆனால் மக்கள் நாயகன் என்ற இமேஜ் அவர் மீது குறுகிய காலத்திற்குள் வந்து சேர்ந்தது பெரிய சாதனைதான்.
முன்னணி நடிகர்களைப் பின்னுக்குத் தள்ளி...
நடிக்க வந்த குறுகிய காலத்திற்குள்ளாகவே முன்னணி நடிகர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி அத்தனை பேரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்ததும் அந்தக் காலத்தில் மிகப் பெரிய சாதனைதான்.
கோடி வாங்கிய முதல் நடிகர்
தமிழ் சினிமா வரலாற்றிலேயே மிகப் பெரிய சாதனை இதுதான். ஒரு நடிகர் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கியது ராமராஜன் காலத்தில்தான் முதல் முறையாக நடந்தது. அந்த சாதனைக்குரியவர் ராமராஜன்தான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட அப்போது அந்த அளவுக்கு சம்பளம் வாங்கவில்லை என்று அப்போதே பரபரப்பாக பேசப்பட்டது.
கிராமப்புற வசூல் ராஜா
ராமராஜன் படங்கள் அன்று மிகப் பெரிய ஹிட் படங்களாகவே அமைந்தன. குறிப்பாக கிராமப்புறங்களில் ராமராஜன் படங்கள்தான் சூப்பர் ஹிட்டாக ஓடி வசூலில் சாதனை படைத்தன. இந்த சாதனையை வேறு எந்த நடிகரும் நிகழ்த்தினரா என்பது தெரியவில்லை - எம்.ஜி.ஆரை இந்த லிஸ்ட்டில் சேர்க்க முடியாது.. காரணம், அவர் தனி சகாப்தம்.
பாட்டும் - பட்டையைக் கிளப்பிய சட்டையும்
ராமராஜன் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது இளையாராஜவும், ராமராஜன் போட்ட கலர் கலரான சட்டைகளும்தான். பாட்டுக்காகவே ஓடிய படங்கள் அவருடையது... அதேபோல அவர் போட்ட பச்சை, மஞ்சள், சிவப்பு, கருப்பு, நீலம் என விதம் விதமான கலர் சட்டைகளும் அப்போது டிரெண்ட் செட்டாக அமைந்தன.
'காடி' காஸ்ட்யூமாக இருந்தாலும் கலெக்ஷன் சூப்பரப்பு...
ராமராஜன் படங்களில் அவர் போட்ட டிரஸ்கள் படு காமெடியாக தெரிந்தாலும், ஓவர் மேக்கப் வெகுவாக நக்கல் செய்யப்பட்டாலும் கிராமப்புற மக்களை மட்டுமல்லாமல் நகர்ப்புறத்து மக்களிடமும் கிராமப்புறத்தின் தாக்கத்தை கொண்டு வந்து சேர்த்தது நிச்சயம் சாதனையான விஷயம்தான்.
கெட்ட வாடையே இல்லாத படம்
அதை விட ராமராஜன் படங்களின் ஸ்பெஷாலிட்டி என்று சொல்ல வேண்டுமானால், கெட்ட பழக்கங்களை, கெட்ட நடத்தைகளைக் கற்றுக் கொடுக்கும் படங்களாக இல்லாமல், நல்ல விஷயங்களைச் சொல்லும் பாடமாக அமைந்திருக்கின்றன என்பதுதான். உண்மையிலேயே இது பாராட்ட வேண்டிய விஷயம்.. இந்த விஷயத்தில் எம்.ஜி.ஆரின் வாரிசு என்று ராமராஜனை தாராளமாக சொல்லலாம்.
கரகாட்ட ராஜா...
டான்ஸே ஆடத் தெரியாதவர் ராமராஜன் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் ஒரு கால் தேர்நத கரகாட்டக்கார நிபுணராக நடித்த படம்தான் கரகாட்டக்காரன். அந்தப் படம் தமிழ் சினிமாவின் வரலாற்றில் இடம் பெற்ற படம். படத்தின் வசனம், கேரக்டர்களின் அணிவகுப்பு, கதை சொன்ன விதம், அருமையான
கிராமங்களுக்கு கெளரவம் கொடுத்தவர்
எல்லாவற்றையும் விட ராமராஜனை நாம் பாராட்டியே ஆக வேண்டிய விஷயம் என்ன தெரியுமா.. கிராமங்களுக்கும், அந்த கிராமத்து மக்களின் வெள்ளந்தி வாழ்க்கைக்கும், அதன் பசுமையான சூழலுக்கும் கொடுத்த கெளரவம்தான். ராமராஜன் நடித்துக் கொண்டிருந்த காலம் வரை கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் பல படங்கள் கிராமங்களைத்தான் சுற்றிச் சுற்றி வந்தன. கிராமத்து வாழ்க்கையை மிக அழகாக வெளிக்காட்டிய பல படங்களை நம் மக்கள் அந்தக் காலகட்டத்தில் காண முடிந்தது.
கை கொடுக்காத அரசியல்
ராமராஜனுக்கு சினிமா எந்த அளவுக்கு தூக்கி விட்டதோ அதை விடவேகமாக இறக்கி விட்டது இந்த அரசியல்தான். புகழேணியின் உச்சியில் இருந்த அவர் அதிமுகவுக்குப் போனார். போன வேகத்தில் எம்.பியானார். அது அவரது வாழ்க்கையில் நிச்சயம் சாதனைதான். ஆனால் அதே வேகத்தி்ல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால் மாஜி எம்.பியானார். சினிமாவில் அவரது காலம் எப்படி குறுகியதாக இருந்ததோ, அதேபோல அரசியல் வாழ்க்கையும் குறுகியதாகப் போனது.
நிச்சயம் மறக்க முடியாது
ராமராஜனின் திரையுலக வாழ்க்கையும், அரசியல் வாழ்க்கையும் மிகக் குறுகியதாக இருந்தாலும் கூட எங்க ஊரு பாட்டுக்காரன்... கிராமத்து மின்னல்... செண்பகமே செண்பகமே... எங்க ஊரு காவக்காரன்... ராசாவே உன்னை நம்பி... பொங்கி வரும் காவேரி... கரகாட்டக்காரன்.. வில்லுப்பாட்டுக்காரன்... ஊரெல்லாம் உன் பாட்டுத்தான்.. இதுபோன்ற படங்களை நினைக்கும்போது கண்டிப்பாக ராமராஜனும் ஒரு சாதனையாளர்தான் என்று எண்ணவே தோன்றுகிறது.
பிறகென்ன... உங்க கருத்துக்களையும் தட்டி விடுங்க ராசாக்களே...!
Bookmarks