-
23rd October 2013, 10:38 AM
#1251
Junior Member
Seasoned Hubber
கப்பலோட்டிய தமிழன்
எனக்கு மிகவும் பிடித்த நடிகர் திலகத்தின் கருப்பு வெள்ளை படங்களில் ஒன்று ,சொன்னால் கொஞ்சம் நண்பா கஷ்டம் தான் இருந்தாலும் இந்த படத்தை வங்கி வைத்து , 4 ஆண்டுகளுக்கு அப்புறம் தான் எடுத்து பார்த்தேன் , பார்க்கும் பொது சிலிர்த்து விட்டேன் , அப்பப்பா என்ன ஒரு நடிப்பு , அதை balance செய்யும் விதத்தில் பந்தலு வின் இயக்கம் , தயாரிப்பு
நம்ம கோபால் சார் குறிப்பிட்டதை போலே இது ஒரு documentary டிராமா தான் , அதிலும் to be precisely the point இது ஒரு history , APN அவர்களின் படத்தில் போலே சிவன் இப்படி தான் இருப்பர் என்று ஒரு பிம்பம் மக்களிடம் இருக்கும் , ஆனால் VOC போன்ற தியாகிகளை மக்கள் நேராக கண்டு இருப்பார்கள் , அதனால் ஓவர் எக்ஷக்கெரடிஒன் க்கு வைப்பு இல்லை , இது நடிப்பு , மற்றும் இயக்கத்துக்கும் பொருந்தும்
இதுக்கு நிறைய மெனக்கெட்டு இருப்பார்கள் திரு பந்தலு மற்றும் சிவாஜி சாரும் , இந்த கூட்டணி கர்ணன் , வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற biopic , mythology படங்களையும் , பலே பாண்டிய என்ற நகைச்சுவை படங்களையும் கொடுத்து ,மக்கள் மத்தியில் நல்லதொரு மதிப்பை பெற்று இருந்தார்கள் .
இந்த படம் வந்த ஆண்டு 1961 . நடிகர் திலகத்தின் 10 படங்கள் ரிலீஸ் செய்ய பட்டது. அவருக்கு details சேகரிக்க நேரம் எங்கு இருக்கும் , இந்த காலத்து நடிகர்கள் போலே வருசத்துக்கு 1-2 படங்கள் இல்லை , 10 படங்கள் , இருந்தாலும் அவர் references எடுத்து செயதார், எப்படி என்று அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்
எப்படி சாத்தியம் , சிவாஜி ஒரு தேசியவாதியின் மகன் , சிறுவயது முதலே அவருக்கு தேசியமும் , தேசபக்தியும் இருந்தது எனவே இந்த வேடத்தை நன்றாக செய்ய முடிந்தது
சரி படத்துக்கு போவும்
படத்தின் நெலம் அந்த காலத்தில் 20-22 ரீல் அதாவது 3- 3.15 மணி நேரம் , இந்த 3 மணி நேரத்தில் ஒரு முழு மனிதனின் வாழ்கை வரலாற்றை விவரிக்க முடியுமா , சிரமம் தான் , சில cinematic liberties எடுத்து கொண்டு VOC யின் இளமை கால வாழ்வை overlook செய்து விட்டர்கள் என்று தான் சொல்ல வேண்டும் இன்னும் ஒரு 15 நிமிடம் படத்தின் நிலத்தை அதிகரிக்க செய்து கொஞ்சம் அதை காட்டி இருக்கலாம் .
என் போன்ற ஆட்கள் சினிமா பார்த்து , அதுக்கு அப்புறம் அது சம்பந்தமான புஸ்தகங்களை படிக்கும் பொது தான் இவர்கள் இதை விட்டது தெரிந்தது
இதில் என்னை கவர்ந்த பாத்திரம் பாரதி , சுப்பையா பிசி உதறி இருப்பர் அதிலும் பறவைகள் அரிசியை உண்ணும் பொது அவர் கொடுக்கும் reaction டாப் . அது போலே ஜெமினி மற்றும் பலர் எல்லாம் வாழ்ந்து இருக்கார்கள்
இவர்கள் இப்படி வெளிப்படும் பொது நம்மவர் சும்மா இருப்பார
இளமையில் நாடு பற்று கொண்ட வக்கீல் , அதுவும் தன் தந்தையே vella atral ulla oruvar , அதுக்கு அப்புறம் வீட்டில் அவர் காடும் பவ்யம் .
தொடர்ந்து தொழில் இடுபடாமல் போறதுக்கு காரணம் சுகந்திர தாகம் .அங்கே அவர் பேசும் வசனம் sharp
தொண்டர்ந்து அவர் ஒரு கப்பல் கம்பெனி க்கு முயற்சி செய்வதும் , அதுக்கு வரும் முட்டுகட்டைகளை சமாளிப்பதும் , தடைகளை மீறி கப்பல் ஓடும் பொது அவர் முகம் ஒரு entrepreneur தன் முயற்சி வெற்றி அடையும் பொது அடையும் உற்சாகம்
இதனால் அவர் சிறைக்குள் அடைக்கப்படும் போதும் , அவர் அனுபவிக்கும் கொடூர தண்டனை யும் உண்மையில் ரத்தம் வர வைக்கும் காட்சி
இனி நடிகர்திலகத்தின் பேட்டி இந்த பட்டை பற்றி
இதுக்கு நடிகர்திலகத்துக்கு கிடைத்த பரிசு :
voc அவர்களின் மகன் " எனது தந்தையை பார்த்தது போலே இருக்கு என்று சொன்னது"
நடிகர்திலகத்தை பிடிக்காதவர்கள் கூட அவர் படத்தை தான் போடுவார்கள் , சுகந்திர தினம் , மற்றும் குடியரசு தினங்களில்.
ஆனால் இந்த படம் muthal ரிலீஸ் ல் வெற்றி அடைய வில்லை
ஆனால் பிற்பாடு நன்றாக மக்களை பொய் சேர்ந்தது
இன்றும் ஒரு iconic status கொண்ட படம்
-
23rd October 2013 10:38 AM
# ADS
Circuit advertisement
-
23rd October 2013, 09:33 PM
#1252
Junior Member
Seasoned Hubber
Very Natural acting from NT and watched the movie during re release at Noorjehan.
Unforgettable movie in NT's career.
-
24th October 2013, 12:52 PM
#1253
Senior Member
Veteran Hubber
Re-Submission of my previous post about my First Experience with ‘Kappalottiya Thamizhan’
'கப்பலோட்டிய த்மிழன்' படத்துக்கு 1976-ல் எமர்ஜென்ஸி காலத்தின்போதுதான் வரிவிலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், அப்படத்தை முழு கட்டணத்திலேயே அரங்கு நிறைந்த காட்சியாக கண்டுகளித்த அனுபவம் எனக்கு.
1961 தீபாவளியன்று வெளியான இக்காவியம், அதன்பின்னர் என் நினைவுக்கெட்டிய காலம் வரை மறு வெளியீட்டுக்கு வராத நேரம். அந்த ஆண்டு வெளிவந்த மூன்று 'பா' வரிசைப் படங்களும் அடிக்கடி தியேட்டர்களில் திரையிடப்பட்டுக்கொண்டிருந்த போதிலும், ஏனோ கப்பலோட்டிய தமிழன் வரவில்லை. முதல் வெளியீட்டில் கிடைத்த ரிசல்ட்டைப்பார்த்து விநியோகஸ்தர்கள் பயந்தார்களோ என்னவோ தெரியவில்லை. அதன் காரணமாகவே இப்படத்தின் மீது அதிக ஆவலும் எதிர்பார்ப்பும் எகிறிப்போயிருந்தது.
இந்நிலையில் எனது பள்ளிமாணவப் பருவத்தின்போது 1972-ஜூன் மாதம் திடீரென்று தினத்தந்தியின் கடைசிப்பக்கத்தில் 'வெள்ளிக்கிழமை முதல் சித்ராவில்' என்று தலைப்பிட்டு கப்பலோட்டிய தமிழன் படத்தின் கால்பக்க விளம்பரம் வந்திருப்பதைப் பார்த்ததும் ஆச்சரியத்தில் விழிகள் அகன்றன. எவ்வளவு நாள் காத்துக்கிடந்த வாய்ப்பு என்று மனம் குதூகலித்தது. விளம்பரத்தில், கட்டம் போட்ட கைதி உடை மற்றும் தொப்பியுடன் நடிகர்திலகம் கீழே கிடக்க, ஒரு பெரிய பூட்ஸ் அணிந்த கால் (கால் மட்டும்தான்) அவரை மிதிக்க உயர்ந்திருப்பது போல விளம்பரமிட்டிருந்ததைப் பார்த்து மனம் எகிறியது. நண்பர்கள் கூடிப்பேசினோம். எப்படியும் முதல்நாளே பார்த்துவிட வேண்டுமென்று மனம் துடித்தது. ஆனால் கையில் காசு இல்லை. அதனால் வெள்ளிக்கிழமை போக முடியவில்லை. நண்பர்கள் சிலர் 'எப்படியும் சுற்றியடித்து நம்ம ஏரியா (வடசென்னை) தியேட்டருக்கு வரும் அப்போது பார்த்துக்கொள்ளலாம்' என்றனர். ஆனால் எனக்கு பொறுமையில்லை. இங்கே வரும் என்பது என்ன நிச்சயம்?. ஒருவேளை வராமல் போய்விட்டால்?. வந்த வாய்ப்பை விட்டுவிட முடியுமா?. (அப்போதெல்லாம் படம்பார்க்க தியேட்டரை விட்டால் வேறு வழி கிடையாது).
சனிக்கிழமை காலை தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அப்பாவிடம் போய் விளம்பரத்தைக்காட்டி, படம் பார்க்க பணம் கேட்டேன். (ஒரு மகன் தந்தையிடம் தைரியமாக சினிமாவுக்கு பணம் கேட்கும் அளவுக்கு விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் மட்டுமே வந்த தரமான படங்களில் ஒன்றல்லவா இக்காவியம்). படத்தின் விளம்பரத்தைப்பார்த்ததும் அவரும் மறுபேச்சுப் பேசாமல் மூன்று ரூபாயை எடுத்துத்தந்தார். (அப்போது முதல் வகுப்பு டிக்கட் 2.60 ). மீண்டும் விளம்பரத்தைப்பார்த்து எந்த தியேட்டர் என்று உறுதி செய்து கொண்ட அவர், 'இந்தப்படத்துக்குத்தானே போறே?. போய்ட்டு வந்ததும் என்கிட்டே டிக்கட்டைக்காட்டணும்' என்று கண்டிஷன் போட்டார். (பைத்தியக்கார அப்பா, அவரே போகச்சொன்னாலும் இந்தப்படத்தை விட்டு வேறு படத்துக்குப்போக மாட்டேன் என்பது அவருக்குத்தெரியவில்லை).
பிராட்வே பஸ் ஸ்டாப்பில் ஏறி மவுண்ட்ரோடு தபால் நிலையத்தில் இறங்கினால் 25 பைசா டிக்கட். அதுவே பாரீஸ் வரை நட்ந்துபோய் அங்கு ஏறி, Hindu பத்திரிகை அலுவலகம் முன்பு இறங்கினால் டிக்கட் 15 பைசா. சிறிது தூரம் நடந்தாலும் பரவாயில்லையென நாங்கள் இரண்டாவதையே தேர்ந்தெடுத்தோம். மாலைக்காட்சிக்கு நேரமாகிவிட்டதால், ஓட்டமும் நடையுமாக ஓடிச்சென்றால், சித்ரா தியேட்டரின் வாசல்கேட்டில் மாட்டியிருந்த ‘Housefull’ போர்டு எங்களை வரவேற்றது. எங்களுக்கு, குறிப்பாக எனக்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. நான் டிக்கட் வாங்கியபின் இந்த போர்டை மாட்டியிருந்தால் என்னைவிட சந்தோஷப்படுபவர் யாரும் இல்லை.
வந்ததற்கு எந்தப்படத்தையாவது பார்த்துவிடவேண்டும் என்று வந்திருந்த நண்பர்கள் உடனடி முடிவெடுத்து, 'சென்னை கங்கை'யின் மறு கரையிலிருந்த கெயிட்டி தியேட்டருக்கு ('குறத்தி மகன்' என்று நினைக்கிறேன்) பார்க்கப் போய்விட்டனர். ஆனால் கப்பலோட்டிய தமிழனைத்தான் பார்க்கவேண்டும் என்று வந்திருந்த நான் மட்டும், கேட்டுக்கு வெளியே கொஞ்சம் நேரம் நின்று, காம்பவுண்டுக்கு மேலே இருந்த தட்டிகளில் ஒட்டப்பட்டிருந்த இரண்டு பிரம்மாண்ட போஸ்ட்டர்களையே சிறிது நேரம் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்து விட்டு மீண்டும் 15 பைசா டிக்கட்டில் வீடு திரும்பினேன்.
பெரிய வால்வு ரேடியோவில் ஏதோ நிகழ்ச்சி கேட்டுக்கொண்டிருந்த அப்பா சற்று ஆச்சரியமாக தலையைத்தூக்கி, 'ஏண்டா, போகலையா?' என்று கேட்டார். 'போனேன்பா, நாங்க போகமுன்னாடியே ஃபுல் ஆயிடுச்சு' என்றதும், 'சரி அப்போ நாளைக்குப்போ' என்றவர் சட்டென்று 'வேணாம், நாளைக்கு இன்னும் கூட்டமாயிருக்கும். திங்களன்னைக்கு ஸ்கூல் விட்டு வந்ததும் போ' என்றார். பணத்தை திருப்பி வாங்கிக்குவாரோ என்று பயந்த எனக்கு குதூகலமாயிருந்தது. எனக்கென்னவோ, தன் மகன் எப்படியாவது இந்தப்படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்று அவரும் ஆர்வமாக இருந்தது போலத்தோன்றியது.
திங்கள் மாலை பள்ளிவிட்டு வந்ததும் தாமதிக்காமல் நான் மட்டும் தனியாக பஸ்ஸில் போனேன். பின்னே, நண்பர்கள்தான் இருந்த காசுக்கு 'குறத்திமகன்' பார்த்துவிட்டனரே. பாலத்தைக்க்டக்கும்போதே தென்பட்ட கூட்டம் மீண்டும் பயத்தைக்கிளப்பியது. இருந்தாலும் கிட்டே போய்ப் பார்த்தபோது சற்று தைரியம் வந்தது. சற்று முன்னமேயே சென்றுவிட்டதால் 2 ரூபாய் டிக்கட்டே கிடைக்கும்போல இருந்தது. சித்ரா தியேட்டரில் 2 ரூபாய் டிக்கட் எத்தனை என்று போர்டில் பார்த்து, அதில் பாதியை பெண்களுக்கு கழித்துவிட்டு, கியூவில் நின்றவர்களை தோராயமாக எண்ணிப் பார்த்ததில், டிக்கட் கிடைக்க வாய்ப்பிருப்பதாகத் தோன்றியது. கவுண்ட்டர் திறந்ததும், வழக்கம்போல பிஸ்த்தாக்கள் ஒரு பத்துபேர் வரிசையில் நடுவில் நுழைந்தனர். அச்சத்துடன் நெருங்கிப்போக, டிக்கட் கிடைத்து விட்டது. மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. உடனே உள்ளே போகாமல், எனக்குப்பின் இன்னும் எத்தனை பேருக்கு டிக்கட் கிடைக்கிறதென்று பார்த்துக்கொண்டிருக்க, ஐந்தாறு பேர் வாங்கியதும் கவுண்ட்டர் அடைக்கப்பட்டது. நல்லவேளை 'வஸ்தாதுகள்' இன்னும் ஒரு ஐந்து பேர் நுழைந்திருந்தால் என் கதி அவ்வளவுதான். உள்ளே போய் சீட்டில் கர்சீப் போட்டுவிட்டு, வெளியே வந்து முதல் வகுப்பு பக்கம் போனால், அதுவும் ஃபுல். கடைசி கிளாஸ் டிக்கட் முடிந்ததும் திங்களன்றும் ‘Housefull’ போர்டு போட்டார்கள். சந்தோஷத்துக்குக் கேட்கணுமா?. நிறையப்பேர் இந்தப்படத்தை எதிர்பார்த்திருப்பார்கள் போலும்.
படம் துவங்கியதும் ரொம்ப உணர்ச்சி மயமாகப்போனது. ஆரம்பத்தில் கைதட்டியதுதான். அதன்பிறகு கைதட்டலுக்கெல்லாம் வேலையில்லாமல் அனைவரும் படத்தோடு ஒன்றிப்போனார்கள். ஆனால் கலெக்டர் வின்ச் துரை (எஸ்.வி.ரங்காராவ்) யிடம் நடிகர்திலகம் பேசும்போது, வீரபாண்டிய கட்டபொம்மன் பெயரைக்குறிப்பிட, வின்ச்துரை அதிர்ச்சியுடன் சிதம்பரனாரைப் பார்க்கும்போது அங்கே வ.உ.சி. முகம் மறைந்து கட்டபொம்மன் தெரியுமிடத்தில் கைதட்டலால் தியேட்டரே அதிர்ந்தது.
ஆனால் ஜெமினிகணேஷ் ஏற்றிருந்த மாடசாமி ரோலுக்கு தேவையில்லாமல் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து அதிக சீன்களும், ஒன்றுக்கு இரண்டாக டூயட் கொடுத்ததும் அந்த வயதில்கூட எனக்குப்பிடிக்கவில்லை. படத்துக்கு ஸ்பீட் பிரேக்கர்கள் போலத்தோன்றியது.
ஒரு விஷயம் சொன்னால் உங்களில் பெரும்பாலோருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். படத்தின் சென்ஸார் சர்டிபிகேட் காண்பிக்கப்பட்டபோது, Kappalottiya Thamizhan (Part Colour) என்று சர்ட்டிபிகேட்டில் இடம்பெற்றிருந்தது. அதைப்பார்த்து விட்டு, படம் துவங்கியதும் அதை மறந்து போனேன். ஆனால் படம் ஓடிக்கொண்டிருக்கும்போது, சிதம்பரனார் சுதேசி கப்பல் கம்பெனிக்காக கப்பலை வாங்கிக்கொண்டு தூத்துக்குடி துறைமுகத்துக்கு வரும் அந்த வரலாற்று நிகழ்வில், கரையிலிருக்கும் திரண்ட கூட்டத்தோடு, பாரதியும், சுப்பிரமணிய சிவாவும் பாட, வ.உ.சி. கப்பலில் கையசைத்துக்கொண்டே வரும் "வெள்ளிப்பனி மலையின் மீதுலாவுவோம்" என்ற பாடல் மட்டும் கேவா கலரில் எடுக்கப்பட்டிருந்தது, ஆச்சரியமாக இருந்தது.
அதன்பிறகு இதுவரை கப்பலோட்டிய தமிழன் படத்தை குறைந்தது 25 முறையாவது பார்த்திருப்பேன். ஆனால் அந்தப்பாடலை கலரில் பார்த்தது அந்த ஒருமுறை மட்டுமே. அதன்பிறகு பார்த்ததபோது படம் முழுக்க கருப்புவெள்ளையில்தான். 1972-ல் முதன்முறையாக நான் பார்த்தபோது திரையிடப்பட்ட அந்த பிரிண்ட், அநேகமாக 1961-ல் படம் ரிலீஸானபோது உருவாக்கப்பட்ட பிரிண்ட்டாக இருக்கலாம். அதன்பிறகு எடுக்கப்பட்ட பாஸிட்டிவ்கள் அனைத்தும் கருப்புவெள்ளையில்தான் எடுக்கப்பட்டது.
வ.உ.சி. சிறைக்குச்செல்லும்போதே கண்களில் நீர்கட்டத்துவங்கி விட்டது. சிறையில் வழங்கப்படும் உணவின் வாடை தாங்காமல், அப்படியே வைத்து விட்டு, ஓட்டைவிழுந்த தகரக்குவளையிலிருந்து தண்ணீர் குடிக்க எடுக்கும்போது, தண்ணீர் முழுவதும் ஓடி, குவளை காலியாக இருக்கும் காட்சியில் கண்ணீர் வடியத்துவங்கியது. செக்கடியில் அவர் கழுத்தில் மாடுகளின் கழுத்தில் பிணைக்கும் சங்கிலியை மாட்டி, சிறைக்காவலன் அவரை அடித்து செக்கிழுக்கச்செய்ய, இவரும் கால்கள் தரையில் இழுபட செக்கிழுக்கும் காட்சியில் கேவிக்கேவி அழத்தொடங்கிவிட்டேன். என் கண்களில் இருந்து தாரை தாரையாய் கண்ணீர் கொட்டிக்கொண்டே இருக்கிறது. அந்தக்கண்ணீர் வ.உ.சி.யின் தியாகத்துக்கா, நடிகர்திலகத்தின் அர்ப்பணிப்புக்கா, பாரதத்தாயின் அடிமைத்தனத்தை நினைத்தா என்பது தெரியவில்லை. தியேட்டர் முழுவதும் கேவல்கள், விசும்பல்கள்.
(அன்றைய இளம்பிராயத்தில்தான் அப்படியென்றில்லை. இன்றைக்கும் கப்பலோட்டிய தமிழனைப் பார்க்கும்போதெல்லாம், நினைக்கும்போதெல்லாம், ஏன் இப்போது பதிவிட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் அதே நிலைதான்).
படம் முடிந்து பஸ்ஸில்போகும்போதும் கண்ணீர்தான். இரவு சாப்பிடாமலேயே படுத்து விட்டேன். எவ்வளவு நேரம் அழுதேன் என்று தெரியாது. காலையில் கண்விழித்தபோது கண்கள் இரண்டும் சிவந்திருந்தன......
-
24th October 2013, 10:01 PM
#1254
Senior Member
Seasoned Hubber
கார்த்திக் சார்
தங்களின் மீள் பதிவு மீண்டும் நெஞ்சை நெகிழ வைத்த பதிவு. இப்படத்தை நினைக்கும் போதே நெஞ்சம் உருகுகின்றது. நான் முதன் முதலில் இப்படத்தைப் பார்த்த போது பள்ளிச் சிறுவன். அவ்வளவாக விவரம் தெரியாத வயது. சென்னை மெரினா மைதானத்தில் அப்போது ஒரு மீன் கண்காட்சி acquarium நடைபெற்றது. மாலை வேளைகளில் கேளிக்கைகள் உண்டு. அதில் பொம்மலாட்டம் நடைபெறும். அது முடிந்த பின்னர் திரைப்படம் திரையிடப் படும். அப்படி அங்கு திரையிடப் பட்டு நான் பார்த்தவை இரு படங்கள். ஒன்று அம்பிகாபதி. கலர் பாடல் காட்சிகளுடன். அதே போல் கப்பலோட்டிய தமிழன் திரைப்படம். வெள்ளிப் பனி மலை பாடல் காட்சி கலரில். கட்டபொம்மன் திரைப்படம் எடுக்கப் பட்ட அதே வண்ணம். மிகவும் ரம்மியமாக இருக்கும். அதுவும் அந்த பொம்மலாட்டம் நடைபெறும் போது அம்பிகாபதி படத்தில் இடம் பெற்ற வடிவேலும் மயிலும் துணை பாடல் இசைக்கப் படும்.
இது போன்று திரைப்படம் பார்த்த நினைவுகள் இன்றும் பசுமையாக உள்ளன.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
24th October 2013, 10:03 PM
#1255
Senior Member
Seasoned Hubber
கப்பலோட்டிய தமிழன் ... படப்பிடிப்பு நிழற்படம்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
25th October 2013, 05:07 PM
#1256
It is indeed a long time since I posted on Mayyam - and the first thread I visited was the NT section. I understand that from my last post, NT threads have gone on to No.9, then No.10 and now a new one....Karnan padam re-relase pannum podhu vandha vasool, industry jambavaangalai salute adikka vaithadhu....andha madhiri one has to salute the activity and buzz that NT commands even on a forum like this.
I wanted to share a few things with my comrades here - about NT of course. His sheer brilliance is clearly evident in one movie which came in the late 1960s - "Uyarndha Manidhan".
Now as many of you would know, VC Ganesan was a prominent and impactful stage actor before he made his indelible mark on the big screen. In those days, the technology and infrastructure available for plays was very less. Clear acoustics were not available till the 1960s-70s. Stage sets and art direction were pretty much straight forward, until RS Manohar set benchmarks. Similarly, dialogue delivery was considered the clear area of one Mr S S Rajendran, who was respected and is still remembered for his clear diction and dialogues.
But then, no one had owned the most important aspect called acting / facial expressions. This is where NT made it his space. As many of you would know, the early stage dramas had very difficult arrangements - so one had to talk loudly so that the last row audience could hear them. Also, facial expressions had to be exaggerated, so that an expression like Roudram or Sogam could be seen about 15 rows back. That is also the reason why facial makeup was also over the top.
It is in this context that NT had such commanding presence on screen. His voice would just boom across the screen and his face would twitch to show the expression. But many people in my generation felt that NT was actually over-acting or rather, he was exaggerating. This was a clear hangover from the stage days (at least that is what I thought).
And then I saw Uyarndha Manidhan.
This movie nailed it for me. Today, one sees facial expressions of Mohanlal and says "What subtlety". But you need not go beyond UM to see the meaning of subtle. Brilliantly restrained in his portrayal, NT was an absolute marvel, portraying a superbly written character (upper class man, who could not go against his father, sacrifices his love, and lives in guilt, yet mechanically carries on with his married life).
The sheer facial expressions and tone, were all markedly different from what he had portrayed so far. Gone were the booming voices - out came the low volume, refined tones, to depict his expressions. Gone were the thrombing eyebrows and booming face cheeks - out came the "look up and down in one glance" expression. Even his hand holding a pipe - was subtle. There is one superb scene, right at the beginning, where his man servant retires after many years of service. While his man servant is emotional, Sivaji is emotional too - but the way NT shows emotional restraint of the character - phenomenal.
I think UM is one of the all-time great acting performances by any actor. Though we know he received a raw deal by not winning awards, the truth is, it is such a treasure.
-
26th October 2013, 02:32 PM
#1257
Junior Member
Seasoned Hubber
கப்பலோட்டியாய தமிழன் : என்ன அருமையான பதிவு கார்த்திக் சாரோட தும் கோபால் சாரோட தும் , ராகவேந்திர சாரோட தும் , ராகுல்ராம் சாரோட தும்- படித்துகொண்ட இருக்கலாம் போல் உள்ளது -
என்ன படம் சார் இது !- யாரால் இந்த மாதிரி நடிக்க முடியும் ?? சிறு வயதில் என் பெற்றோர் , தாத்தா , பாட்டியுடன் திரையில் பார்த்த nt படங்களில் இதுவும் ஒன்று - தேச பக்தியே இல்லாதவர்கள் ஒரு முறை இந்த படத்தை பார்த்தால் போதும் - அந்த காலம் எங்கே ! - இந்த காலம் எங்கே ? -
இவர்களை சிறையில் போட்டதனால் - சிறைச்சாலை ஒரு மதிப்பை பெற்றது - இன்றோ அதே சிறை சாலை , பண பேய்களையும் , பதவி பித்தர்களையும் சிறையில் தள்ளி , தான் சம்பாதித்து வைத்திருந்த நல்மதிப்பை தானே கொன்றுவிட்டது .
வ வு சி யை வெள்ளையர்கள் புரிந்து வைத்த அளவு கூட , தமிழக மக்கள் புரிந்து கொள்ள தவறிவிட்டார்கள் - சரியாக புரிந்துகொண்டிருந்தால் இந்த படம் மிக பெரிய வெற்றியை தங்க வைத்துகொண்டிருக்கும் - தமிழகம் எதைத்தான் சரியாக புரிந்துகொண்டு உள்ளது இதை புரிந்துகொள்ள ?!!
Ravi

-
3rd November 2013, 08:11 AM
#1258
Senior Member
Seasoned Hubber
கப்பலோட்டிய தமிழன் சிறப்பு செய்திகள்
* இந்திய அரசினால் வரி விலக்கு சலுகை அளிக்கப் பட்ட முதல் தமிழ்த் திரைப்படம்
* மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் கவிதைகளைத் திரைப்பாடல்களாகப் பயன்படுத்திய படம்
* முதல் வெளியீட்டில் தயாரிப்பாளருக்கு நஷ்டம் என்று சொல்லப் பட்டாலும், இலங்கையில் வெற்றி பெற்ற படம், கொழும்பு கிங்ஸ்லி மற்றும் யாழ் வின்சர் திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடியது. அது மட்டுமின்றி பின்னாட்களில் மறு வெளியீட்டில் திரையிட்ட இடங்களிலெல்லாம் மிகப் பெரிய வெற்றி பெற்று விநியோகஸ்தர்களுக்கு வசூலை வாரி வழங்கியது.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
3rd November 2013, 08:15 AM
#1259
Senior Member
Seasoned Hubber
கப்பலோட்டிய தமிழன் காணொளிகள்
முழுப்படம்
வெள்ளிப் பனி மலையின் மூதுலவுவோம்
தன்னுடைய நடையிலேயே காண்போர் கண்களைக் குளமாக்கி நெஞ்சை நெகிழ வைக்கும் நடிகர் திலகத்தின் உன்னத நடிப்பிற்கு
நெஞ்சில் உரமும் இன்றி
இசை மேதை ஜி.ராமநாதனின் காலத்தைக் கடந்து நிற்கும் இனிமையான பாடல்
காற்று வெளியிடைக் கண்ணம்மா
என்று தணியும் இந்த சுதந்திர தாகம் வ.உ.சி.யின் மரணப் படுக்கைக் காட்சி
சின்னக் குழந்தைகள் போல் விளையாடி
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
3rd November 2013, 11:09 AM
#1260
Senior Member
Seasoned Hubber
Sivaji Ganesan Filmography Series
75. பார்த்தால் பசி தீரும்Parthal Pasi Theerum

தணிக்கை 08.01.1962
வெளியீடு 14.01.1962
நடிக நடிகையர்
[இத்திரைப்படத்தின் டைட்டில் கார்டில் நடிக நடிகையரின் பெயர்கள் இடம் பெறாமல், உங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடித்த எனக் குறிப்பிடப் பட்டிருக்கும்.]
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி, சௌகார் ஜானகி, சரோஜா தேவி, கமலஹாசன், கே.ஏ.தங்கவேலு, எம்.சரோஜா, சி.கே.சரஸ்வதி, காதர் மற்றும் பலர்
கதை ஏ.சி. திருலோக்சந்தர்
வசனம் – ஆரூர்தாஸ்
பாடல்கள் – கண்ணதாசன்
பின்னணி பாடியவர்கள் – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா, ஏ.எல்.ராகவன்
இசை – மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராம்மூர்த்தி
ஒளிப்பதிவு – ஜி. விட்டல் ராவ்
எடிட்டிங் ஏ.பீம்சிங், பால் துரை சிங்கம், ஆர். திருமலை
கலை – ஆர் சாந்தா ராம்
தயாரிப்பு சி.ஆர். பஸவ ராஜா
இணைத் தயாரிப்பு – ஏவி.எம். சரவணன்
திரைக்கதை இயக்கம் ஏ. பீம்சிங்
வெற்றி நடை போட்ட அரங்குகள்
சேலம் ஓரியண்டல் – 105 நாட்கள்
கொழும்பு கிங்ஸ்லி – 102 நாட்கள்
யாழ்ப்பாணம் வெலிங்டன் – 102 நாட்கள்
மதுரை சென்ட்ரல் – 100 நாட்கள்
ஆவணத் திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks