-
5th November 2013, 07:54 AM
#3711
Senior Member
Seasoned Hubber
விநோத் –
நடிகர் திலகத்தின் கம்பீரமான தோற்றத்தை அளித்து தங்கள் வாழ்த்துடன் மகிழ்ச்சியை அளவற்றதாக்கி விட்டீர்கள். மிக்க நன்றி.
வாசு சார்
மதுவின் மயக்கும் புன்னகையுடன் வாழ்த்தி மனதில் குதூகலம் ஏற்படுத்தி விட்டீர்கள். மிக்க நன்றி.
Ganse –
I am a very ordinary fan … miles to go before I sleep…
ரவி –
தாங்கள் கற்றுக் கொள்ள இந்த அடியேனிடம் நற்பண்புகள் உள்ளன என்பதை அறிய மிகவும் சந்தோஷமாக உள்ளது. மிக்க நன்றி.
சின்னக் கண்ணன் சார் –
கோபம் வரும் ஆனால் அது பனித் துளி போல் உடனே மறைந்து விடும். தங்கள் கவிதைப் பாராட்டிற்கு மிக்க நன்றி.
Ananthu
Past, Present and Future .. everything is NT… He is the riding and guiding force for us. Thank you for the appreciation.
Sarathy
Thank you for the appreciation
சேகர்,
தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி.
கல்நாயக் சார்
தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி.
சிவா
தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி. தாங்கள் கூறியது மிகவும் சரி. நிச்சயம் முயற்சிக்கிறேன்.
Ramachandran
Thank you for the appreciation
கோபால் சார்
பாராட்டிற்கு மிக்க நன்றி.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
5th November 2013 07:54 AM
# ADS
Circuit advertisement
-
5th November 2013, 08:01 AM
#3712
Junior Member
Seasoned Hubber
Still 3 more for magical 5000 congrats Ragavendran Sir
-
5th November 2013, 08:03 AM
#3713
Junior Member
Seasoned Hubber
Dear vasu sir,
superb costumes of each and every still. Thanks for your valuable information and photos. Each frame speak volumes of your immense hard work & effort from your part & I have no words to say other than Thank you
-
5th November 2013, 08:04 AM
#3714
Junior Member
Seasoned Hubber
RAJAN CBI may visit Kovai shortly
-
5th November 2013, 08:06 AM
#3715
Senior Member
Seasoned Hubber
இயல் இசை நாடகம் என முத்தமிழுக்கும் பெருமை சேர்த்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பெயரில், தமிழகத்தில் புதியதாக அமைய இருக்கும் இசைப் பல்கலைக்கழகத்தைத் தொடங்க வேண்டும். இனிமேலும் அரசியல் வாதிகளின் பெயர்களையே வைத்து, தமிழகத்துக்கு பெருமை சேர்த்த மற்றவர்களின் பெயர்களை மறக்க வேண்டாம். தமிழகத்தில் அரசியலைத் தாண்டி மற்றவர்கள் உலக அளவில் தேடித் தந்த பெருமையில் பத்து சதம் கூட அரசியல் தலைவர்களும் ஆட்சியாளர்களும் செய்திருக்க மாட்டார்கள். உலக அளவில் தமிழனைத் தலை நிமிரச்செய்த எத்தனையோ பேர் தமிழகத்தில் இருந்தார்கள் இருக்கிறார்கள். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கணித மேதை ராமானுஜம், நோபல் பரிசு பெற்ற சாதநையாளர்கள், இசையரசி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி, எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, என ஏராளமான எண்ணற்ற சாதனையாள ர்களின் பெயர்களை அரசின் பல்வேறு திட்டங்களுக்கும் கட்டிடங்களுக்கும் சூட்ட வேண்டும். இதன் தொடக்கமாக கவின் கலை மற்றும் இசைப் பல்கலைக்கழகத்திற்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பெயரைச் சூட்ட வேண்டும்.
தேவைப்பட்டால் இதற்கென கையெழுத்து இயக்கமும் நடத்தலாம்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
5th November 2013, 08:41 AM
#3716
Senior Member
Seasoned Hubber
வாசு சார்
கள்வனின் காதலி, நான் பெற்ற செல்வம் என ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகன் தொடரை அருமையாக அலங்கரித்து வருகிறீர்கள். நடிகர் திலகத்திற்கு எப்படி ராமகிருஷ்ணனோ அதே போல் நடிகர் திலகத்தின் திரிக்கு வாசுதேவன் என இத்திரியின் அழகை மேம்படுத்தி வருகிறீர்கள்.
பாராட்டுக்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
5th November 2013, 08:42 AM
#3717
Senior Member
Seasoned Hubber
நட்சத்திரங்களின் கேள்விகளுக்கு நடிகர் திலகத்தின் பதில்கள்
“ ‘நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிகர்களுக்குப் பதில் சொல்கிறார்’ என்று சென்ற இதழில் அறிவித்தவுடன் அநுபவம் மிக்க புகழ் பெற்ற நடிகர்கள், இளம் நடிகர்கள், அனைவரும் பெரும் உற்சாகம் காட்டினார்கள்.
சில நடிகர், நடிகையர் எங்களிடம் நேரில் சில கேள்விகளைச் சொல்லி விட்டு, அடுத்து சந்தித்த போது ‘சார்! அந்தக் கேள்வி வேண்டாம்! இந்தக் கேள்வியைக் கேளுங்கள்...’ என்று மூன்று, நாலு தடவை மாற்றிச் சொன்னார்கள்.
‘சிவாஜி கணேசன் பதில் சொல்லும் அளவுக்கு கேள்வி நல்லதாக அமைய வேண்டுமே!’ என்ற விருப்பம் தான் அதற்குக் காரணம் என்பதும் புரிந்தது.
‘பொம்மையின் ஏப்ரல் இதழுக்காக கலைஞர்களிடம் கேள்விகளை வாங்கி வருகிறோம். நீங்கள் பதில் அளிப்பீர்களா?’ என்று ‘நடிகர் திலக’த்திடம் முதலில் கேட்டோம்.
ஒரு பலத்த சிரிப்பு!
‘இது ஜனநாயகம்!... யார் யாரை வேண்டுமானாலும் கேட்கலாமே!...’ என்று சொல்லி விட்டு, ‘கலைஞர்களின் கேள்விகளை ஒன்றாகத் திரட்டிக் கொண்டு வாருங்கள். பதில் சொல்லி விடுகிறேன்!’ என்றார், புதுமையை என்றும் வரவேற்கும் ‘நடிகர் திலகம்’ உற்சாகமாக.
‘இட்லர் உமாநாத்’ படப்பிடிப்பின் போது ஏவி.எம்.கலைக் கூடத்தில் இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொன்னார் அவர். பதில்களைச் சொல்லி வந்த போது, ஒவ்வொரு கலைஞரைப் பற்றியும் அவர் கூறியதையே தொகுத்து ஒரு தனி சிறப்புக் கட்டுரை எழுதி விடலாம். அவ்வளவு சுவையாக இருந்தன.“
..... பொம்மை ஏப்ரல் 1981 இதழில் நட்சத்திரங்களின் கேள்விகளுக்கு நடிகர் திலகம் பதில் சொன்னதைப் பிரசுரிக்கும் போது அதற்கு முன்னுரையாக இடம் பெற்றதே மேலே தரப் பட்டுள்ளது.
அந்த பொம்மை இதழில் இந்த முன்னுரையைத் தொடர்ந்து இடம் பெற்ற அந்த நட்சத்திரக் கேள்வி பதில்கள் இங்கே நம் பார்வைக்கு.
நடிகர் திலகத்தின் மேல் நட்சத்திரங்கள் எந்த அளவிற்கு அன்பும் பாசமும் மரியாதையும் கொண்டிருந்தனர் என்பதை இது காட்டுகிறது. தன்னுடைய அனுபவங்களின் மூலம் மற்றவர்களுக்கு அறிவுரையாகவும் ஆலோசனைகளாகவும் நடிகர் திலகம் பதிலளித்திருப்பது எந்தக் காலத்திற்கும் பொருந்தும் வகையில் இருப்பதைப் படிக்கும் போது அவருடைய தீர்க்க தரிசனமும் பரந்த மனப்பான்மையும் நல்ல உள்ளமும் வெளிப்படுவதைப் பார்க்கலாம்.
கலை உலக பிதாமகனைப் பற்றிக் கலை உலகத்தைச் சார்ந்தவர்களின் கருத்துக்களை இந்த இடத்தில் பகிர்ந்து கொள்வதைப் பெருமையாகக் கருதுகிறேன்.
குறிப்பு .. கீழே தரப்பட்டுள்ள வரிசை பொம்மை புத்தகத்தில் உள்ளபடியே தரப் பட்டுள்ளது.
நடிகை திருமதி லட்சுமி

உங்களிடம் நீங்கள் விரும்பும் குணங்கள் எவை?
உங்களிடம் நீங்கள் வெறுக்கும் குணங்கள் எவை?

நடிகர் திலகம் பதில்
எல்லோருக்கும் உதவியாக இருக்க வேண்டும் என்பது தான் நீங்கள் முதலில் சொல்லியது. அதை நான் விரும்புகிறேன்.
ஆனால்---
எல்லோருக்கும் உதவியாக இருப்பது, இருக்க வேண்டும் என்று நினைப்பதே, சில நேரம் நம்மையே கவிழ்த்து விடுகிறது!
இதை நான் எப்படி விரும்ப முடியும்!
இயக்குநர் எஸ்.பி. முத்துராமன்

நடிப்புக்கு இலக்கணம் நீங்கள் என்பதில் எவருக்கும் இரண்டாவது அபிப்ராயம் இருக்க முடியாது.
எங்களைப் போன்ற திரைப்படத் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?

நடிகர் திலகம் பதில்
எல்லோரையும் அணைத்துக் கொள்ளுங்கள். அனைவரது அறிவுரையையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.
ஆனால், உங்கள் விருப்பம் போல காரியத்தைச் செய்யுங்கள்!
மேஜர் சுந்தர்ராஜன்

நீங்கள் ஏற்று நடித்த பாத்திரங்களிலேயே எது மிகவும் கடினமான பாத்திரம்?

நடிகர் திலகம் பதில்
நீ எனக்குக் கொடுத்த்து தானடா! (அடா! – ஆசி வார்த்தை)
ஸ்ரீப்ரியா

அடுத்த ஜன்ம்ம் எடுத்தால், நீங்கள் யாராகப் பிறக்க விரும்புவீர்கள்!

நடிகர் திலகம் பதில்
அடுத்த ஜென்மத்திலே எனக்கு நம்பிக்கை இல்லை!
கமல ஹாசன்

திரையுலகமே உங்கள் நடிப்பைக் கண்டு வியக்கும் போது, நீங்கள் எப்போதாவது, யார் நடிப்புத் திறனையாவது கண்டு வியந்த்துண்டா? சொல்லுங்களேன், அவரைப் பற்றி?

நடிகர் திலகம் பதில்
உங்களைப் பற்றியே சொல்கிறேனே... என் கண் முன்னால் இனிதே வளர்ந்த உங்கள் நடிப்பைக் கண்டும் வியந்திருக்கிறேனே!
Last edited by RAGHAVENDRA; 5th November 2013 at 10:11 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
5th November 2013, 12:21 PM
#3718
Junior Member
Seasoned Hubber
Mr Raghavendra Sir,
Best wishes for your 5000th post. Congratulation.
Regards
S Vasudevan
-
5th November 2013, 12:22 PM
#3719
Junior Member
Seasoned Hubber
Mr Vasu Sir,
Your immense efforts are visible in the post of NT's Dress series.
Thanks for the same.
-
5th November 2013, 01:46 PM
#3720
Senior Member
Devoted Hubber
Dear raghavendra sir,
my hearty congratulations for your valuable and meaningful 5000 posts
TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM
Bookmarks