Results 1 to 10 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

Threaded View

  1. #11
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நட்சத்திரங்களின் கேள்விகளுக்கு நடிகர் திலகத்தின் பதில்கள்
    “ ‘நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிகர்களுக்குப் பதில் சொல்கிறார்’ என்று சென்ற இதழில் அறிவித்தவுடன் அநுபவம் மிக்க புகழ் பெற்ற நடிகர்கள், இளம் நடிகர்கள், அனைவரும் பெரும் உற்சாகம் காட்டினார்கள்.

    சில நடிகர், நடிகையர் எங்களிடம் நேரில் சில கேள்விகளைச் சொல்லி விட்டு, அடுத்து சந்தித்த போது ‘சார்! அந்தக் கேள்வி வேண்டாம்! இந்தக் கேள்வியைக் கேளுங்கள்...’ என்று மூன்று, நாலு தடவை மாற்றிச் சொன்னார்கள்.

    ‘சிவாஜி கணேசன் பதில் சொல்லும் அளவுக்கு கேள்வி நல்லதாக அமைய வேண்டுமே!’ என்ற விருப்பம் தான் அதற்குக் காரணம் என்பதும் புரிந்தது.

    ‘பொம்மையின் ஏப்ரல் இதழுக்காக கலைஞர்களிடம் கேள்விகளை வாங்கி வருகிறோம். நீங்கள் பதில் அளிப்பீர்களா?’ என்று ‘நடிகர் திலக’த்திடம் முதலில் கேட்டோம்.

    ஒரு பலத்த சிரிப்பு!

    ‘இது ஜனநாயகம்!... யார் யாரை வேண்டுமானாலும் கேட்கலாமே!...’ என்று சொல்லி விட்டு, ‘கலைஞர்களின் கேள்விகளை ஒன்றாகத் திரட்டிக் கொண்டு வாருங்கள். பதில் சொல்லி விடுகிறேன்!’ என்றார், புதுமையை என்றும் வரவேற்கும் ‘நடிகர் திலகம்’ உற்சாகமாக.

    ‘இட்லர் உமாநாத்’ படப்பிடிப்பின் போது ஏவி.எம்.கலைக் கூடத்தில் இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொன்னார் அவர். பதில்களைச் சொல்லி வந்த போது, ஒவ்வொரு கலைஞரைப் பற்றியும் அவர் கூறியதையே தொகுத்து ஒரு தனி சிறப்புக் கட்டுரை எழுதி விடலாம். அவ்வளவு சுவையாக இருந்தன.“

    ..... பொம்மை ஏப்ரல் 1981 இதழில் நட்சத்திரங்களின் கேள்விகளுக்கு நடிகர் திலகம் பதில் சொன்னதைப் பிரசுரிக்கும் போது அதற்கு முன்னுரையாக இடம் பெற்றதே மேலே தரப் பட்டுள்ளது.

    அந்த பொம்மை இதழில் இந்த முன்னுரையைத் தொடர்ந்து இடம் பெற்ற அந்த நட்சத்திரக் கேள்வி பதில்கள் இங்கே நம் பார்வைக்கு.

    நடிகர் திலகத்தின் மேல் நட்சத்திரங்கள் எந்த அளவிற்கு அன்பும் பாசமும் மரியாதையும் கொண்டிருந்தனர் என்பதை இது காட்டுகிறது. தன்னுடைய அனுபவங்களின் மூலம் மற்றவர்களுக்கு அறிவுரையாகவும் ஆலோசனைகளாகவும் நடிகர் திலகம் பதிலளித்திருப்பது எந்தக் காலத்திற்கும் பொருந்தும் வகையில் இருப்பதைப் படிக்கும் போது அவருடைய தீர்க்க தரிசனமும் பரந்த மனப்பான்மையும் நல்ல உள்ளமும் வெளிப்படுவதைப் பார்க்கலாம்.
    கலை உலக பிதாமகனைப் பற்றிக் கலை உலகத்தைச் சார்ந்தவர்களின் கருத்துக்களை இந்த இடத்தில் பகிர்ந்து கொள்வதைப் பெருமையாகக் கருதுகிறேன்.
    குறிப்பு .. கீழே தரப்பட்டுள்ள வரிசை பொம்மை புத்தகத்தில் உள்ளபடியே தரப் பட்டுள்ளது.


    நடிகை திருமதி லட்சுமி

    உங்களிடம் நீங்கள் விரும்பும் குணங்கள் எவை?
    உங்களிடம் நீங்கள் வெறுக்கும் குணங்கள் எவை?



    நடிகர் திலகம் பதில்
    எல்லோருக்கும் உதவியாக இருக்க வேண்டும் என்பது தான் நீங்கள் முதலில் சொல்லியது. அதை நான் விரும்புகிறேன்.
    ஆனால்---
    எல்லோருக்கும் உதவியாக இருப்பது, இருக்க வேண்டும் என்று நினைப்பதே, சில நேரம் நம்மையே கவிழ்த்து விடுகிறது!
    இதை நான் எப்படி விரும்ப முடியும்!


    இயக்குநர் எஸ்.பி. முத்துராமன்

    நடிப்புக்கு இலக்கணம் நீங்கள் என்பதில் எவருக்கும் இரண்டாவது அபிப்ராயம் இருக்க முடியாது.
    எங்களைப் போன்ற திரைப்படத் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?



    நடிகர் திலகம் பதில்
    எல்லோரையும் அணைத்துக் கொள்ளுங்கள். அனைவரது அறிவுரையையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.
    ஆனால், உங்கள் விருப்பம் போல காரியத்தைச் செய்யுங்கள்!



    மேஜர் சுந்தர்ராஜன்

    நீங்கள் ஏற்று நடித்த பாத்திரங்களிலேயே எது மிகவும் கடினமான பாத்திரம்?



    நடிகர் திலகம் பதில்
    நீ எனக்குக் கொடுத்த்து தானடா! (அடா! – ஆசி வார்த்தை)

    ஸ்ரீப்ரியா

    அடுத்த ஜன்ம்ம் எடுத்தால், நீங்கள் யாராகப் பிறக்க விரும்புவீர்கள்!



    நடிகர் திலகம் பதில்
    அடுத்த ஜென்மத்திலே எனக்கு நம்பிக்கை இல்லை!


    கமல ஹாசன்

    திரையுலகமே உங்கள் நடிப்பைக் கண்டு வியக்கும் போது, நீங்கள் எப்போதாவது, யார் நடிப்புத் திறனையாவது கண்டு வியந்த்துண்டா? சொல்லுங்களேன், அவரைப் பற்றி?



    நடிகர் திலகம் பதில்
    உங்களைப் பற்றியே சொல்கிறேனே... என் கண் முன்னால் இனிதே வளர்ந்த உங்கள் நடிப்பைக் கண்டும் வியந்திருக்கிறேனே!
    Last edited by RAGHAVENDRA; 5th November 2013 at 10:11 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •