-
20th November 2013, 03:02 PM
#291
Senior Member
Senior Hubber
-
20th November 2013 03:02 PM
# ADS
Circuit advertisement
-
20th November 2013, 03:12 PM
#292
Junior Member
Regular Hubber
ரவி சார்
தங்களுடைய பதிவு மிகவும் அருமை !
இந்த காட்சியை எழுதினீர்கள ? "இன்ஸ்பெக்டர் ! மத்தவங்க செஞ்ச அதுக்கு பேர் திருட்டு ! அதையே ஒரு போலீஸ் செஞ்ச ?
இன்ஸ்பெக்டர் : வாட் டூ யு மீன் ?
அந்தோனி : ஐ மீன் த சில்வர் டம்ளர் !
இன்ஸ்பெக்டர் : ஹ..ஹ.ஹ..
அந்தோனி : ஹ......ஹ......ஹ.....(கை உறையை கழட்டியபடி)
இன்ஸ்பெக்டர் : ஹ..ஹ..ஹ..ஹ...
அந்தோனி : ஹ....ஹ.....ஹ....ஹ...!
-
20th November 2013, 03:26 PM
#293
Junior Member
Regular Hubber
வாசுதேவனே !
எம்மை பாருங்கள் ....எம் பாவங்கள் தம்மை தாங்கிகொள்ளுங்கள் ! ஆயிரம் லொள்ளு தொல்லைகள் நாங்கள் செய்கின்றோம் ...!
நீங்கள் அறிவீர் ! மனித்தருள்வீர் !
ஓஹ் வாசு சார் !
பாலுடன் நீர் !
நமது மையத்திரியிலிருந்து இரண்டு ஆடுகள் வேறு வேறு பாதையில் போய்விட்டன ! இரெண்டும் பதிவிட்டபோது...நமக்கு தீனியிலயே !
தந்தையின் திரியிலே மழலைகள் ஊமையோ ! திரியின் அழகிலே கருமையே படர்ந்ததோ....! நோய் மனதில எழுத்தில தேவனே ! நாம் அழுவாத சிரிப்பத தேவரே ! ஒ...ஒ...ஒ...!
மையம் நண்பர்கள் இங்கே சொல்லவே .....எந்த மேகமும் விலகி செல்லுமே ...
காலமே பதில் சொல்லுமே ...இந்த வாசுவும் மௌனம் காப்பதென்பதேன் ?
Last edited by Uthamaputhiran; 20th November 2013 at 03:28 PM.
-
20th November 2013, 03:32 PM
#294
Junior Member
Seasoned Hubber
-
20th November 2013, 03:38 PM
#295
Junior Member
Regular Hubber
தேடினேன்...தேவ ...தேவ.....! தாமரை பாதமே ...!
-
20th November 2013, 03:42 PM
#296
Junior Member
Regular Hubber
கோபாலனை எப்படி அழைக்கவேண்டுமோ அப்படி அழைத்தால்தான் வருவான் ! இதிகாசத்திலும் சரி புவிகாசத்திலும் சரி !
-
20th November 2013, 04:58 PM
#297
Senior Member
Senior Hubber
Belated birthday wishes to Ganpat !!!
-
20th November 2013, 07:02 PM
#298
Junior Member
Seasoned Hubber
பார்த்ததில் பிடித்தது
அத்தியாயம் -3
கடந்த பதிவில் பிரம்மாண்ட படத்தை பற்றி அசை போட்டதால் இந்த தடவை கொஞ்சம் கதை அம்சம் அதிகம் உள்ள படம் எடுத்து கொண்டு உள்ளேன் , அதுவும் இது வரை அதிகம் விவாதத்துக்கு எடுத்து கொல்லாத படம் பற்றி எண்ணிய பொழுது கிடைத்தது தான் இந்த
குரு தட்சணை
சென்ற பதிவில் குறிப்பிட்டதை போலே 1969 ல் நடிகர் திலகம் வித விதமான கதாபாத்திரத்தில் நடித்து கல்கி கொண்டு இருந்தார்
தங்கசுரங்கம் என்ற அதிரடி படத்தை அடுத்து காவல் தெய்வம் படத்தில் குருவ வேடத்தில் நடித்தார் , அதை தொடர்ந்து வந்தது தான் இந்த குரு தட்சணை
தங்கசுரங்கம் படத்தை பற்றி எழுதும் பொது நடு நடுவே படத்தில் சிவாஜி அணிந்த உடையை பற்றி குறிப்பிட்டேன் , இதில் அந்த தேவை இல்லை , வெறும் வேஷ்டி , பனியன் தான் அவர் உடை
ஒரு படத்தில் வித விதமான உடையில் வந்து சண்டை , காதல் , ஸ்டைல் என்று நடித்து விட்டு அதின் சாயல் துளி கூட இல்லாமல் அடுத்த படத்தில் நடிக்க நம்மவர்க்கு கை வந்த கலை
தில்லானா மோகனாம்பாள் என்ற மாபெரும் காவியத்துக்கு பிறகு அதே டீம் உடன் நடிகர் திலகம் பணியாற்றிய படம்
இதில் ஜெயலலலிதா, மேஜர் புது வரவு (தில்லானா மோகனாம்பாள் கூட்டணியில் )
இந்த படத்தின் பெயர் போடும் பொது நடிகர்களின் பெயர் போடாமல் அவர்களின் புகை படத்தை காட்டுவார்கள் . இதுவே புதுசு . படத்தின் கதையை எழுதியவர் திரு பழனியப்பன் , இசை புகழ்மணி , இசை மேற்பார்வை : KV மகாதேவன்
இயக்கம் : APN
Video courtesy: I have uploaded the videos for first time
-
20th November 2013, 07:03 PM
#299
Junior Member
Seasoned Hubber
கதை, மிகவும் இயல்பான துளி கூட சினிமா என்ற வணிகத்துக்காக சமரசம் செய்து கொல்லாத கதை , தங்கசுரங்கம் (நடிகர் திலகத்தின் முந்திய படம் , காவல் தெய்வம் guest appearance என்றதினால் விட்டு விட்டேன்) தில்லானா மோகனாம்பாள் என்ற மாபெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட கூட்டணியில் இருந்து வந்த படமா இது என்று என்னை ஆச்சர்யப்பட வைத்தது
சிவாஜி ஓவர் அக்டிங் செய்வார் என்று சொல்லும் நபர்கள் , இந்த படத்தை பார்த்து விட்டு தங்கள் கருத்தை சொல்லலாம்
சரி நாம் படத்துக்கு வருவோம்
படத்தின் opening ஷட்டில் ஒரே கூடம் , அங்கே ஒருவர் bioscope காட்டி கொண்டு இருக்கிறார் (தங்கவேலு ) முஸ்லிம் அன்பராக என்னமா பிச்சு உதறிருகார் மனிதர் அந்த bioscope பாடல் இன்றும் பிரபலம்
அங்கே bioscope பார்த்து விட்டு ஜோசியம் பார்க்கும் ஜெயலலிதாவை வம்புக்கு இழுக்கும் குண்டு மணியை அடிக்கும் காட்சியில் அறிமுகம் நாம் நாயகர் நடிகர் திலகம்
முதலில் அவனிடம் உதை வங்கி மீண்டும் எழுந்து அடிக்கும் நடிகர் திலகம் அவன் கையை முறுக்கி முறுக்கி அடிக்கிறார் , என்ன த இது சும்மா எமதுற சண்டை என்று என்னும் பொது , நல்ல எடை உள்ள குண்டு மணியை தூக்கி போடுகிறார் தொடர்ந்து அவர் நடிகர்திலகத்தின் கையை திருப்பி முறுகுகிறார் , அங்கே இருக்கும் மாட்டுவண்டியில் கால் பதித்து குண்டு மணி பின்னாடி வந்து உதைப்பார் பாருங்கள் , அதிர்ச்சியடைந்து விட்டேன் . அதே சமயம் இந்த சண்டை , அதுவும் நடிகர் திலகத்துக்கு சண்டை போட வராது என்று எப்படி பேச்சு வந்தது என்பது இன்று வரை புரியாத புதிர்
-
20th November 2013, 07:04 PM
#300
Junior Member
Seasoned Hubber
கண்ணனின் நண்பர்கள் என்று பார்த்தல் குறி சொல்லும் பெண் (மனோரமா), டீ கடை நாயர் , சைக்கிள் கடை ஜேம்ஸ் மற்றும் ஒரு அய்யர் குடும்பம் (பாலையா அவர் மனைவி), இவர்கள் தான் கண்ணனின் மேல் அன்பும் , மரியாதையும் வைத்து இருபவர்கள் . அந்த கிராமமே அவனை முரடன் என்று ஒதுக்குகிறது .
தன்னை ரவுடியிடம் இருந்து காப்பாற்றிய கண்ணனை காதலிக்கிறார் கன்னி ,
கண்ணன் வீட்டுக்கு அடிகடி போகும் கன்னியை கண்டிக்கிறார் அவர் தந்தை , கன்னி தன மானத்தை காப்பாற்றிய கண்ணனின் வீட்டுக்கு செல்வது தப்பு இல்லை என்று வாதாடுகிறார் , தன் அப்பாவிடம் நான் வெளி போறேன் நீ தான் கஷ்ட படுவ என்று சொல்லிவிட்டு கண்ணனின் வீட்டுக்கு வந்துவிடுகிறார் . கண்ணன் முதலில் கன்னியை அனுமதிக்க மறுக்கிறார் , பிறகு இறக்கம் கொண்டு கன்னியை அனுமதிக்கிறார்
அந்த காட்சியில் சிவாஜியின் முகத்தில் கோபம் ,ஆத்திரம் , கருணை , இயலாமை , அப்பாவித்தனம் என்று சகலமும் பிரதிபலிக்க காட்சி முடிகிறது
அந்த காட்சி இதோ
அந்த கிராமத்தில் இருக்கும் பள்ளிகூடத்துக்கு ஒரே ஒரு டீச்சர் மல்லிகா (ரமாப்ரபா) கொஞ்சம் பொறமை, அகம்பாவம் பிடித்த பெண் ,
இப்படி பட்ட பள்ளிக்கு வருகிறார் முதல்வர் தேவகி (பத்மினி ) மற்றும் அவர் தந்தை மேஜர் (கண் தெரியாதவர் )
பத்மினி தான் பள்ளியின் முதல்வர் என்று அறிந்து கொண்டு சிவாஜி அவரிடத்தில் காடும் மரியாதையை என்ன என்று சொல்லுவது
தன் நண்பர்களின் பாதுகாப்பில் அவர்களை விட்டு விட்டு வண்டி கொண்டு வருவது , வீட்டை சுத்த படுத்துவது , அளவுகடந்த மரியாதை செலுத்துவது என்று அசல் கிராமதன்னகவே காட்சியளிக்கிறார்
Bookmarks