-
24th November 2013, 08:22 PM
#11
Senior Member
Diamond Hubber
இணையத்தில் செல்வா ரசிகர்களின் வாதம்: சரமாரியாக வரும் காமெடி படங்களுக்கு நடுவில் வித்தியாசமாக படம் கொடுத்ததற்காகவே செல்வாவை பாராட்ட வேண்டும். இந்த படம் ஓடவில்லை என்றால் தமிழ் ரசிகர்களுக்கு ரசனை குறைந்து போய் விட்டது என்றுதான் அர்த்தம். இன்று இப்படத்தை மொக்கை என்பவர்கள் பத்து வருடம் கழித்து இதே படத்தை கொண்டாடத்தான் போகிறார்கள்.
வித்தியாசமாக எடுக்கப்பட்டதாலேயே ஒரு படம் நல்ல படம் ஆகி விடாது. பீட்சா,நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்,நான் ஈ போன்ற படங்களும் வித்தியாசமான படங்கள்தான். இதே ரசிகர்கள் அப்படங்களை ஏற்றுக்கொள்ளவில்லையா? இயக்குனர்களுக்கு சற்றும் புத்திசாலித்தனத்தில் குறைந்தவர்களல்ல ரசிகர்கள். தான் சொல்ல நினைப்பதை ரசிகர்கள் புரிந்து ஏற்றுக்கொள்ளும்படி படத்தை எடுப்பவரே நல்ல இயக்குனர். நான் நன்றாகத்தான் படம் எடுத்தேன். ரசிகர்களுக்கு அதை புரிந்து கொள்ளும் அளவு பக்குவம் வளரவில்லை என்று ஒரு இயக்குனர் எண்ண ஆரம்பித்துவிட்டால் அவருக்கு அழிவு நெருங்குகிறது என்று அர்த்தம். செல்வா அப்படி இதுவரை எந்த கருத்தையும் உதிர்க்கவில்லை என்பது ஆறுதல்.
பத்து வருடங்கள் கழித்து இந்த படத்தை கொண்டாடினால் மகிழ்ச்சியே. ஆனால் அதை பார்த்து மகிழ படத்தின் தயாரிப்பாளர் இருப்பாரா என்பதுதான் கேள்வி.
I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.
- Bernard Shaw
-
24th November 2013 08:22 PM
# ADS
Circuit advertisement
Bookmarks