ரஹ்மான் ஏன் இப்படி பப்ளிசிட்டிக்காக அலைகிறார் என்று தெரியவில்லை. பாடும் கதாபாத்திரத்தின் பெயர் அஷோக்காக இருந்தாலும் 'ராஜா..ராஜாதி ராஜன் இந்த ராஜா' என்று இந்த இந்திய நாட்டின் வளர்ச்சிக்காக பாடல் போட்டிருக்கலாம். அல்லது தன் சொந்தப் படத்தில் 'எங்கிட்டே மோதாதே, நான் ராஜாதி ராஜனடா' என்று ஒரு பாடலை திணித்து நான் எந்த விதமான கவனிப்பும் தேவைப்படாத மிகப்பெரிய ஞானி என்று நிரூபித்து இருக்கலாம். அதை விட்டுவிட்டு இசைக் கல்லூரி, கோடக் தியேட்டரில் தமிழ் என்று ஏன் வெட்டி பந்தா செய்கிறார்? யாராவது கேட்டு சொல்லவும்.
Bookmarks