Page 70 of 401 FirstFirst ... 2060686970717280120170 ... LastLast
Results 691 to 700 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

  1. #691
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    உண்மை உணரும் நேரம் - 3

    ஒரு முன்னுரை

    இனி நமது ஹப்பில் பதியப்பட்ட மற்றொரு "வரலாற்று" பதிவிற்கு வருகிறேன். அதற்கு முன்பு ஒரு விஷயம் சொல்ல வேண்டும். முதலில் நமது ஹப் அல்லது மய்யம் என்ற இந்த இணையதளத்தைப் பற்றிய செய்தி. இது தொடங்கப்பட்டது தமிழ் சினிமா இசையைப் பற்றிய ஒரு தகவல் பரிமாற்றம் மற்றும் பாடல்களின் சிறப்பை நினைவு கூர்தல் ஆகியவற்றுக்காக. முதலில் அதன் பெயரே TFM DF. Tamil Film Music Discussion Forum. பின்னர் அது படிப்படியாக விரிவாக்கப்பட்டு நாம் இன்று காணும் அமைப்பில் வந்து நிற்கிறது. இங்கே சூரியனுக்கு கிழே உள்ள எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். பல் வேறு துறைகளில் உள்ள ஆளுமைகளைப் பற்றி அது கலைத்துறையாக இருக்கலாம், இசைதுறையாக இருக்கலாம், திரைப்பட துறையாக இருக்கலாம், இன்னும் அரசியல், விளையாட்டு, இலக்கியம், கவிதைகள், படைப்புகள் என்று ஒவ்வொரு துறையிலும் புகழ் பெற்ற ஆளுமைகளைப் பற்றி அவர்தம் படைப்புகளைப் பற்றி பதிவுகள் இடலாம், கருத்து பரிமாற்றம் மற்றும் ஆரோக்கியமான விவாதங்கள் ஆகியவை இடம் பெறலாம். ஆனால் அவை அந்தந்த பிரிவில் கீழே வரும் தலைப்புகளில் இருக்க வேண்டும். அரசியல் பற்றி விவாதிக்க வேண்டுமானால் current topics பகுதிக்கு செல்ல வேண்டும். அவற்றை திரைப்படங்கள் பகுதியில் பதிவிடுவது சரியானது அல்ல. அதே போன்றே திரைப்படங்கள் பகுதியில் ஒரு திரைத்துறை ஆளுமைக்காக உருவாக்கப்பட்ட திரியில் தனிப்பட்ட மனிதர்களின் வீட்டில் நடைபெறும் காதணி விழா, மஞ்சள் நீராட்டு விழா மற்றும் இன்ப சுற்றுலா போன்றவை இடம் பெறுவது சரியல்ல. அவற்றை பதிவு செய்ய வேண்டுமென்றால் Hubbers Lounge என்ற பகுதிக்கு செல்ல வேண்டும்.

    இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் பல்வேறு நேரங்களில் திரைப்படம் சம்பந்தப்பட்ட திரிகளில் அதற்கு தொடர்பே இல்லாமல் வேறு பல பதிவுகள் வருகின்றன. அதை தவிர்க்க சொல்லவே இந்த் முன்னுரை.

    உண்மை உணரும் நேரம் - 3 (Part I)

    சரி நாம் விட்ட இடத்திற்கு வருவோம். நடிகர் திலகம் திரியில் நாம் அரசியல் பதிவுகள் இடுவதில்லை. எப்போதேனும் சில விவாதங்கள் வரும்போது கூட அதை தவிர்க்க சொல்கிறோம். ஜூலை 15 அன்று மட்டும் நடிகர் திலகம் தன் வாழ்நாள் முழுக்க யாரை தலைவராக ஏற்றுக் கொண்டாரோ, யாரை நாமும் இன்று வரை போற்றுகிறோமோ அவரை அந்த பெருந்தலைவரைப் பற்றிய ஒரு நினைவு கூறல் அதுவும் அது பிறந்த நாளாக இருப்பதனால் செய்கிறோம். அந்த வகையில் இந்த வருடமும் ஜூலை 15 அன்று அவரை பற்றிய பதிவுகள் வந்தன. என்னுடைய பங்காக அவர் தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் இருந்தபோது தொழில்துறை சிறக்க அவர் எடுத்த முயற்சிகள், பங்களிப்புகள் பற்றிய ஒரு தகவல் குறிப்பாக செய்தேன்.

    வழக்கம் போல் இதற்கும் பதில் சொல்கிறேன் பேர்வழி என்று ஒரு பதிவு வெளிவந்தது. அவர்களின் அபிமானத்துக்குரியவரை பற்றிய புகழ் பாடல். அதில் நமக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. ஆனால் அதே பதிவில் பெருந்தலைவர் பற்றிய தவறான தகவல்களை சொல்லியிருந்தார்கள். அந்த தவறை சுட்டிக் காட்டவும் வரலாற்று உண்மைகளை எடுத்துக் கூறவுமே இந்த பதிவு.

    முதலில் பெருந்தலைவர் பதவியேற்று போது நடந்த ஒரு நிகழ்வு பற்றி சொல்லும்போது எழுதப்பட்ட பிழை.

    1954 ஏப்ரல் 13 அன்று தமிழக முதல்வராக பெருந்தலைவர் பதவியேற்கிறார். அப்போது அவர் சட்டமன்ற உறுப்பினராக இல்லை. எனவே குடியாத்தம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டார். இதுவரை சரி.

    அடுத்து என்ன சொல்கிறார்கள்? பெருந்தலைவர் குடியாத்தம் தொகுதியில் போட்டியிட்டபோது அவருக்கு எதிராக திமுக சார்பில் வேட்பாளரை நிறுத்தாமல் அண்ணாதுரை பெருந்தன்மையாக நடந்துக் கொண்டார். திமுக போட்டியிடவில்லை என்பது உண்மை. அனால் அதற்கு காரணம் பெருந்தன்மையா? இல்லை. அப்படியென்றால் உண்மைக் காரணம் என்ன? சற்று வரலாற்றை பின்னோக்கி பார்ப்போம்.

    திராவிடர் கழகத்தில் ஈ.வே.ரா. தலைமையில் செயல்பட்டு வந்தவர்கள்தான் சி.என்.ஏ., மதியழகன்,சம்பத் மற்றும் நெடுஞ்செழியன் போன்றவர்கள். இவர்கள்தான் 1949-ல் திராவிட கழகத்தை விட்டு வெளியேறினார்கள். கொள்கையில் கருத்து வேறுபாடா என்றால் இல்லை. ஈ.வே.ரா. தன்னை விட வயதில் மிக மிக இளையவரான மணியம்மையாரை திருமணம் செய்துக் கொண்டார். அதை எதிர்த்து வெளியேறிய இவர்களை கண்ணீர் துளிகள் என்று வர்ணித்தார் ஈ.வே.ரா.

    பிரிந்து சென்றவர்கள் 1949-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ந் தேதி வட சென்னையில் ராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்ற கழகத்தை தொடங்கினார்கள். மறுநாள் கட்சிகென்று சட்டத்திட்டங்கள் வகுக்கப்பட்டன. அதில் முக்கியமான பிரிவு என்ன சொல்லியது என்றால் திராவிடர் கழகம் போல திராவிட முன்னேற்ற கழகமும் சமூக சீர்திருத்த இயக்கமாகவே செயல்படும் என்றும் அதனால் தேர்தல் அரசியலில் பங்கு கொள்ளாது என்றும் சொல்லி அதை கட்சியின் விதிமுறையாக அமல்படுத்தப்பட்டது. அந்த பிரிவில் ஒரு உட்பிரிவாக ஒரு ஷரத்து சேர்க்கப்பட்டது. அது என்னவென்றால் இந்த முடிவை மாற்ற வேண்டுமென்று பின்னாட்களில் கட்சி முடிவெடுத்தால் அதை கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் தீர்மானமாக கொண்டு வந்து அதற்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு அளித்தாலே அதை செயல்படுத்த முடியும் என்பதும் கட்சியின் சட்டமாக்கப்பட்டது. கட்சியில் இப்படி ஒரு சட்ட பிரிவு இருந்ததனால்தான் 1952-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் திமுக போட்டியிடவில்லை. அதே காரணத்தினால்தான் 1954-ம் ஆண்டு குடியாத்தம் தொகுதி இடைத்தேர்தலிலும் திமுக போட்டியிடவில்லை.

    பதவியைப் பிடித்து ஆட்சிக்கட்டிலில் அமர்வதையே தங்கள் வாழ்நாள் லட்சியமாக கொண்ட திராவிட இயக்கத்தினரால் ஒரு தேர்தலுக்கு மேல் பொறுக்க முடியவில்லை. 1956-ம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற திமுக மாநாட்டில் தேர்தலில் பங்கு கொள்ள வேண்டும் என்பதை தீர்மானமாக கொண்டு வந்து பெரும்பான்மை உறுப்பினர்கள் அதை ஆதரிக்கவே அதை ஏற்று அப்போது நடைபெற இருந்த 1957-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் திமுக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. [என் நினைவு சரியாக இருக்குமென்றால் இந்த மாநாட்டில்தான் அண்ணாதுரை அவர்கள் நெடுஞ்செழியனைப் பார்த்து தம்பி வா! தலைமையேற்க வா! என்று சொன்னதாக படித்திருக்கிறேன். இதைப் பற்றி உறுதியாக தெரிந்தவர்கள் சொல்லலாம்].

    மீண்டும் நம் எடுத்துக் கொண்ட விஷயத்திற்கு வருவோம். உண்மை என்ன? திமுக தானே வகுத்துக் கொண்ட சட்டதிட்டத்தின்படிதான் 1952-ம் பொதுதேர்தலிலும் போட்டியிடவில்லை. 1954-ம் ஆண்டு குடியாத்தம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் போட்டியிடவில்லையே தவிர இதற்கு பெருந்தன்மை காரணமில்லை. உண்மையிலே அப்படி பெருந்தலைவர் மீது மதிப்பும் மரியாதையும் இருந்திருக்குமானால் 1957 பொதுத்தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிடாமல் பெருந்தன்மையை காட்டியிருக்கலாமே. 1962 தேர்தலிலும் 1957 தேர்தலிலும் ஏன் 1969-ம் ஆண்டு அவர் நாகர்கோவில் இடைத்தேர்தலில் பாராளுமன்றத்திற்கு போட்டியிட்டபோது அதே பெருந்தன்மையை காட்டியிருக்கலாமே! ஏன் செய்யவில்லை?

    இதுவும் தினமலர் வாரமலர் இதழில் தமிழக அரசியல் வரலாறு தெரியாத ஒருவர் அள்ளிவிட்ட கப்சா! இதை உண்மையா என்று கூட சரி பார்க்காமல் இங்கே பதிவு செய்தாகிவிட்டது. இதை யார் கேட்கப் போகிறார்கள்? கேட்டாலும் பதில் இருக்கவே இருக்கிறது அதாவது இந்தப் புத்தகத்தில் வந்தது என சொல்லிக் கொள்ளலாம் என்ற எண்ணம்தான் காரணம்.

    நான் குறிப்பிட்டது போல வரலாற்று உண்மைகளை எல்லா காலங்களிலும் மறைக்க முடியாது. அவை வெளிவந்தே தீரும்.

    (தொடரும்)

    அன்புடன்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #692
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by murali srinivas View Post
    உண்மை உணரும் நேரம் - 3
    டியர் முரளி சார்,
    தாங்கள் பெருந்தலைவர் காமராஜர் அவர்களைப் பற்றிய உண்மைகளை தெளிவாகக் கூறியிருக்கிறீர்கள்.

    நானும், இதுகுறித்து, e .v .k .சம்பத் எழுதிய திராவிட இயக்க வரலாறு நூலிலும், கவியரசு கண்ணதாசனின் வனவாசத்திலும் படித்திருக்கிறேன்.

    நம் தலைவர் சிவாஜியைப் போலவே அவர் தலைவராக ஏற்றுக்கொண்ட காமராஜரின் அரசியல் மற்றும் பொதுவாழ்வு மேன்மைகளை அவர் சார்ந்த இயக்கத்தினர் சரியானபடி கொண்டுசெல்லவில்லை என்பதுதான் உண்மை.
    Last edited by KCSHEKAR; 23rd December 2013 at 11:36 AM.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  4. #693
    Senior Member Devoted Hubber J.Radhakrishnan's Avatar
    Join Date
    Mar 2010
    Posts
    128
    Post Thanks / Like
    நான் சுவாசிக்கும் சிவாஜி - இந்த வாரம்

    சமீபத்தில், என் சகோதரர் ஒய்.ஜி.ராஜேந்திரா, என்னை, தொலை பேசியில் அழைத்து, 'அந்த நாள் படம், 'டிவி' யில் போடுகின்றனர். உடனே பாருங்க...' என்றார். பாட்டு இல்லாமல், படங்கள் எடுப்பது பற்றி, இப்போது, பெருமையாக பேசுகின்றனர். ஆனால், கிட்டத்தட்ட, 59 ஆண்டுகளுக்கு முன்பே, வீணை எஸ்.பாலசந்தர் - சிவாஜி இருவரும் இணைந்து, பாடலே இல்லாத, அந்த நாள் என்ற வெற்றிப் படத்தை கொடுத்து, புரட்சி செய்திருக்கின்றனர்.
    எஸ்.பாலசந்தரின் மகன் ராமன், என் சகோதரர் ராஜேந்திராவுடன் ஒன்றாக படித்தவர். எஸ்.பாலசந்தர் எங்கள் குடும்ப நண்பர். ஒரு முறை, அவர் வீட்டில், நாங்கள் டின்னர் சாப்பிட்டு கொண்டிருந்த போது, 'சிவாஜி போன்ற, திறமை உள்ள நடிகரால் தான், அந்த நாள் மாதிரியான, படத்தில் நடிக்க முடியும். ஒரு காட்சியில், வீட்டின் சொந்தக்காரரின் மனைவியை, பூங்காவில் சந்தித்து, காதலிப்பது மாதிரி நடித்து, ஏமாற்றுவார். தெரு விளக்கு வெளிச்சத்தில் தெரியும் முகத்தில், ஒரு கண்ணில் காதல், வெளிச்சம் படாத கண்ணில் ஏமாற்றுகிற வஞ்சம்... அவருடைய கேரக்டர் புரிவதற்காக வைக்கப்பட்ட அமர்க்களமான, 'ஷாட்' இது. இன்றைக்கும், அந்த நாள் படம் பாருங்க, நான் சொல்வதை நீங்களும், ரசித்து, உணர முடியும். நல்ல திறமையான இயக்குனர்களால், நன்கு கையாளப் பட்டால், 'சிவாஜி ஹாலிவுட் நடிகர்களுக்கு சவாலாக இருப்பார்...' என்று கூறினார்.
    எஸ்.பாலசந்தர் - சிவாஜி இணைந்து மேலும் படங்கள் செய்திருந்தால், தமிழ் திரை உலகிற்கு பெரும் பொக்கிஷங்களாக அவை இருந்திருக்கும்.
    அந்த நாள் படத்தில் தேசத்துரோகி, திரும்பிபார் படத்தில் வெறுக்கக்கூடிய காமுகன், ரங்கோன் ராதாவில் தகாத உறவுக்காக, மனைவியை பைத்தியமாக்கும் கெட்டவன், கூண்டுக்கிளி படத்தில், ஸ்டைலிஷ் வில்லன், பெண்ணின் பெருமை படத்தில், கொடூர வில்லனாக நடித்திருப்பார் சிவாஜி.
    நடிகனாக, திரை உலகில், முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் ஹீரோ அந்தஸ்து பெற்று, எதிர்மறை பாத்திரங்களில் தொடர்ந்து நடிக்கும், தைரியம், மனப்பக்குவம் எத்தனை நடிகர்களுக்கு வரும்! சிவாஜி முழுமையான நடிகர். தன்னுடைய, 'இமேஜ்' என்ன ஆகுமோ என்று அவர் பார்க்கவில்லை, கொடுக்கப்படும் பாத்திரங்களுக்கு, பொருத்தமாக நடித்தார். தொழில் மேல் விருப்பம் உள்ள நடிகர்கள், இதை ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். கமல், அடிக்கடி சொல்வது, 'தமிழ் திரை உலக வரலாற்றை, சிவாஜிக்கு முன், சிவாஜிக்கு பின் என்று இரண்டு பாகங்களாக பிரிக்கலாம்....' என்று. உண்மையான பேச்சு.
    சிவாஜிக்கு பின் வந்த அத்தனை நடிகர்களுக்கும், சிவாஜி முன்னோடியாக இருந்திருக்கிறார். அத்தனை நடிகர்களிடமும், ஏதோ ஒரு விதத்தில் சிவாஜியின் தாக்கம் கண்டிப்பாக இருக்கும். இல்லையென்று யாராவது சொன்னால், அது மனசாட்சிக்கு விரோதமாக சொல்லப்படும் பொய் என்பது, என் தாழ்மையான கருத்து.
    நெகடிவ் ரோல் பற்றி பேசும் போது, சிவாஜி பிலிம்சின் சொந்தப் படமான புதிய பறவை பற்றி சொல்லியே ஆக வேண்டும். தன் சொந்த படத்தில், கொலைகாரனாக, வில்லனாக தயங்காமல் நடித்தார் சிவாஜி.
    ஒரு முக்கியமான ரகசியத்தை மனதிற்குள் அடக்கிக் கொண்டு, குற்ற உணர்வோடு கூடிய சோகத்தை யும், கண்களில் மிரட்சியையும், முதல் சீனிலிருந்து காண்பித்து, நடித்திருப் பார். படத்தின் பிரபல இயக்குனர் தாதா மிராசி, (சிவாஜி நடித்த மூன்று தெய்வங்கள் மற்றும் ரத்த திலகம் படங்களை இயக்கியவர்.) 'என்னுடைய ஹீரோ, மிகச் சிறந்த நடிகர்...' என்று சிவாஜியை பெருமையோடு குறிப்பிடுவார். அந்தப்படத்தில், 'ப்ளாஷ்பேக்' காட்சியில், சிவாஜிக்கு அப்பாவாக நடித்திருப்பார் தாதா மிராசி.
    அமெரிக்காவில் இருந்து, மார்த்தா கிரஹாமின், 'மாடர்ன் அமெரிக்கா' நடனக்குழு சென்னைக்கு வந்து, நிகழ்ச்சிகள் நடத்தினர். அந்த நிகழ்ச்சியை உன்னிப்பாக கவனித்த சிவாஜி, 'எங்கே நிம்மதி எங்கே நிம்மதி...' பாடல் காட்சியில், மாடர்ன் அமெரிக்கா நடனத்தை, நினைவில் கொண்டு, சில புதுமையான, நளினமான மூவ்மென்ட்ஸ் களை செய்திருப்பார். அந்த பாடல் காட்சிக்கு, தியேட்டர்களில் பலத்த கரகோஷம் எழும்.
    இந்தப் பாட்டு எழுதும்போது, எம்.எஸ்.விஸ்வநாதனும், கண்ணதாசனும் சேர்ந்து, உட்கார்ந்து ஆலோசித்தனர். சரியான பல்லவி கிடைக்க வில்லை. அருகில் இருந்த சிவாஜி தான், 'எங்கே நிம்மதி எங்கே நிம்மதி' என்ற பல்லவியை, பாடலின் முதல் வரியாக எடுத்துக் கொடுத்தார்.
    எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும், கண்ணதாசனுக் கும் பொருத்தமான வரிகள் என்று படவே, இதுவே, பாடலின் பல்லவியாக ஆயிற்று; தமிழ் சினிமாவிற்கு புதுமையான பாடல் காட்சி கிடைத்தது.
    இன்றைக்கும், இப்படம் இளைஞர்களை கவரக்கூடிய படம்.
    ஒரு முறை, எங்கள் நாடகத்திற்கு தலைமை தாங்க வந்த சிவாஜியுடன், ஒரு வடமாநில அழகான இளைஞர் கூடவே வந்திருந்தார். செகரட்டரி போல, சிவாஜியின் சிகரெட் டின்னை கூட, அவர் தான் வைத்திருந்தார். 'அவர் யார்?' என்று, என் தந்தை கேட்டார். 'இந்த பையனை பார்த்துக்கோ. இந்தியில் மிகப் பெரிய நடிகனாக வருவான்...' என்றார் சிவாஜி.
    சிவப்பாக, அழகாக பைஜாமா, ஜிப்பா அணிந்து வந்த அந்த இளைஞர் தான், பிற்காலத்தில் இந்தியாவில் சிறந்த நடிகர் என்ற, பாரத் விருது பெற்ற, சஞ்சீவ் குமார். மிகப் பெரிய நடிகராக ஆனபின்னும், சென்னையில் ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந் தாலும், டிபனோ, சாப்பாடோ சிவாஜியின் வீட்டில் தான், சாப்பிடுவார்.

    *சிவாஜி நடித்த படங்களிலேயே மிக அதிகமான வசூல் பெற்று, சாதனை படைத்த படம், சிவாஜி பிலிம்ஸ் தயாரித்து, மூன்று வேடங்களில் நடித்த திரிசூலம். திரிசூலம் படத்தின் சாதனையை, எம்.ஜி.ஆர்., மனதார பாராட்டியதோடு, 'இந்தப்படத்தின் அதிக வசூல் மூலம், அரசுக்கு கிடைத்த கேளிக்கை வரி, அரசின், மதிய உணவு திட்டத்திற்கு, பெரும் அளவில் உதவியிருக்கிறது...' என்று, சிவாஜிக்கு நன்றி கூறினார்.

    * சிவாஜி, திலீப்குமாரை, அவருடைய சொந்தப் பெயரான, யுசுப் பாய் என்ற பெயரைச் சொல்லியே அழைப்பார். இருவரிடையே நல்ல புரிதலும், நல்ல நட்பும் இருந்தது. சிவாஜியின் நடிப்பு திறனை மிகவும் மதித்து பாராட்டுவார் திலீப்குமார். சிவாஜிக்கும், அவர் மீது நல்ல மரியாதை இருந்தது. சிவாஜி நடித்த, முரடன் முத்து இந்தி ரீ-மேக்கில், தீலிப்குமார் நடித்து, பெரிய ஹிட் ஆனது.
    * பல வெற்றிப்படங்கள் இந்தியிலிருந்து, தமிழில் ரீ - மேக் செய்து, அவற்றில், சிவாஜி நடித்து சூப்பர் ஹிட் ஆகியிருக்கின்றன.
    * இந்தியில், கிலோனா என்ற திரைப்படம், தமிழில், எங்கிருந்தோ வந்தாள் (சிவாஜி - ஜெயலலிதா) இயக்கம்: ஏ.சி.திருலோக சந்தர்.
    * தேவ் ஆனந்த் நடித்த, ஜானி மேரா நாம். தமிழில், ராஜா. (சிவாஜி - ஜெயலலிதா) இயக்கம்: சி.வி.ராஜேந்திரன்.
    * ராஜேஷ் கண்ணா நடித்த, துஷ்மன் திரைப்படம், தமிழில், நீதி, (சிவாஜி - ஜெயலலிதா) இயக்கம்: சி.வி.ராஜேந்தர்.
    * ஷம்மி கபூர் நடித்த, பிரம்மச்சாரி திரைப்படம், தமிழில், எங்க மாமா. (சிவாஜி - ஜெயலலிதா) இயக்கம்: ஏ.சி.திருலோக சந்தர்.
    — தொடரும்.
    அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

  5. #694
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by adiram View Post
    "கௌரவம் படத்தில் இரண்டு சிவாஜிகளும் எதிரெதிரே அமர்ந்து செஸ் விளையாடுவதைப் பார்த்துதான் என் அப்பாவுக்கு செஸ் விளையாட ஆர்வம் வந்தது. அதைத் தொடர்ந்துதான் எனக்கும் செஸ்ஸில் ஆர்வம் பிறந்தது" என்று விஸ்வநாதன் ஆனந்த் சொன்னதாக நாங்கள் புளுக மாட்டோம். நடிகர்திலகத்தின் புகழைப் பரப்ப நியாயமான வழிகள் எங்களிடம் உள்ளன.

    (its time for scatting).

  6. #695
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas View Post
    உண்மை உணரும் நேரம் - 3



    இதுவும் தினமலர் வாரமலர் இதழில் தமிழக அரசியல் வரலாறு தெரியாத ஒருவர் அள்ளிவிட்ட கப்சா! இதை உண்மையா என்று கூட சரி பார்க்காமல் இங்கே பதிவு செய்தாகிவிட்டது. இதை யார் கேட்கப் போகிறார்கள்? கேட்டாலும் பதில் இருக்கவே இருக்கிறது அதாவது இந்தப் புத்தகத்தில் வந்தது என சொல்லிக் கொள்ளலாம் என்ற எண்ணம்தான் காரணம்.

    நான் குறிப்பிட்டது போல வரலாற்று உண்மைகளை எல்லா காலங்களிலும் மறைக்க முடியாது. அவை வெளிவந்தே தீரும்.

    (தொடரும்)

    அன்புடன்
    Great Murali - lie has life till the truth is revealed - how true it is - your analysis and demonstration of truth will give nightmares to many - hope they will henceforth be careful while posting -


  7. #696
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    இந்த கீழ்கண்ட பதிவுக்கும் இந்த திரிக்கும் சம்பந்தம் இல்லைதான் - முரளி சொன்னதுபோல இதை வேறு பகுதியில் ( current topics) பதிவிட்டுருக்கலாம் - ஆனால் சில உண்மைகள்/ மன குமறல்கள் இந்த பதிவு மூலம் வெளிவருகின்றன - நமது தலைவரின் சிலை விஷயமாக - இந்த அரசு காட்டும் ஆர்வம் - பல லக்க்ஷ கணக்கான ரசிகர்களின் மன வருத்தத்தை புரிந்து கொள்ளாத ஒரு முதல்வர் , பல கோடி மக்கள் வாழும் இந்த தேசத்தையா புரிந்து கொள்ள போகிறார் - அவர்கள் உணர்வுகளுக்கு என்ன மரியாதை கிடைக்க போகின்றது ? - a revealing write up by ஞாநி


    ================================================== ============
    ஜெ. பிரதமர் ஆக முடியுமா? ஆக வேண்டுமா?
    ஞாநி


    நியாயப்படி அப்போது தமிழகத்திலிருந்து மிக அதிக எம்.பி-களை அளித்த தி.மு.க-வுக்கு - கருணாநிதிக்குத்தான் பிரதமர் பதவி வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

    ஜெயலலிதாதான் அடுத்த பிரதமர் என்ற முழக்கம் அ.தி.மு.க-வினரால் சில ஆண்டுகளாகவே தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. கூடவே அ.தி.மு.க-வினர் முன்வைக்கும் இன்னொரு முழக்கம் : நிரந்தர முதல்வர் ஜெயலலிதா என்பது. ஒருவர் எப்படி நிரந்தர முதல்வராகவும் பிரதமராகவும் ஒரே சமயத்தில் இருக்க முடியும் என்ற புதிரைப் புரிந்துகொள்ள முதலில் அ.தி.மு.க-வின் அம்மாயிஸத்தைப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கும்.

    அ.தி.மு.க-வினரின் ‘ஞ' போல் வளையும் மரியாதைக் கலாச்சாரத்தின் தொடர்ச்சியாக அவர்கள் முடியுமானால் ஜெயலலிதாவுக்குதான் அடுத்த நோபல், ஜெயலலிதாதான் அடுத்த ஐ.நா. சபைப் பொதுச்செயலாளர், அவர்தான் அடுத்த ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் என்றெல்லாம்கூட சொல்ல விரும்பக்கூடும். அதையெல்லாம் தமிழக அரசியல் கலாச்சாரத்தின் வெகுஜனப் பொழுதுபோக்குக் கூறுகள் என்ற அளவில் ஒதுக்கிவைத்துவிட்டு நிஜமாகவே, ஜெயலலிதா இந்தியப் பிரதமராகும் வாய்ப்பு இருக்கிறதா, அல்லது அது அ.தி.மு.க-வினரின் பகல் கனவு மட்டும்தானா என்று ஆராயலாம்.

    தமிழ் பிரதமர் தமிழர்கள் பிரதமரைவிட உயர் பதவியான இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கு ஏற்கெனவே வந்திருக்கிறார்கள். காரணம் அது ஒருவிதத்தில் நியமனப் பதவி மாதிரிதான். மத்தியில் ஆளும் கட்சி விரும்புகிறவரை அதற்குக் கொண்டுவந்துவிட முடியும். தவிர, எப்போதும் பிரதமர் பதவி வட இந்தியாவிலேயே இருந்துவருவதால், குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் பதவிகளைத் தென்னிந்தியருக்கு ஒரு ‘கோட்டா’ போல அளித்து சமன்செய்வதை நேரு காலம் முதல் பின்பற்றிவந்திருக்கிறார்கள்.

    காமராஜர் நிராகரித்த வாய்ப்பு

    பிரதமராகும் வாய்ப்பு தமிழகத் தலைவர்களுக்கு இதற்கு முன்பு இருந்ததா என்றால், அது ஓரிரு முறை மட்டுமே இருந்திருக்கிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் ஓரளவேனும் அறியப்பட்டிருக்கக்கூடிய தலைவராக இருந்தவர்கள் மிகக் குறைவு. காங்கிரஸுக்குள் மாநிலத் தலைவர்கள் பலம் பொருந்தியவர்களாக இருந்த காலத்தில் இருந்த தமிழகக் காமராஜர் அப்படி அறியப்பட்டிருந்தவர்களில் ஒருவர். அவர் பிரதமராகும் வாய்ப்பு, நேரு- சாஸ்திரி காலத்துக்குப் பின்னர் கனிந்திருந்தது. ஆனால் அவர் அதை விரும்பவில்லை. இந்தியாவின் பிரதமராக வருபவருக்கு, இந்தி, ஆங்கிலம் இரண்டு மொழிகளில் ஒன்றேனும் நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும் என்றும் தனக்கு அப்படித் தெரியாத நிலையில் தான் பிரதமராகும் வாய்ப்பு இருந்தும்கூட ஆக விரும்பவில்லை என்றும் காமராஜரே தன்னிடம் சொன்னதாகப் பிரபலப் பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் சில ஆண்டுகளுக்கு முன்னர் எழுதியிருக்கிறார்.
    தமிழருக்கு வாய்ப்பு வரும் நிலையே இந்திய அரசியலில் அடுத்த சுமார் 30 ஆண்டுகளுக்கு இருக்கவில்லை. ஒற்றைக் கட்சியே வலிமையாக டெல்லியில் ஆட்சி நடத்தும் காலம் முழுக்கவும் அது பெரும்பாலும் காங்கிரஸாகவே இருந்தது. அதில் இந்திரா காலத்திலிருந்து காமராஜர் போன்ற மாநிலத் தலைவர்கள் உருவாகவே முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டது. இதனால் காங்கிரஸே பல மாநிலங்களிலும் பலவீனமாகி, இனி டெல்லியில் மாநிலக் கட்சிகளின் கூட்டணி உதவியுடன்தான் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலைமை 1996-ல் ஏற்பட்டது.

    கூடிவந்த இன்னொரு வாய்ப்பு

    அப்போதுதான் இன்னொரு முறை ஒரு தமிழர் பிரதமராகும் வாய்ப்பு இருந்தது என்று சொல்லலாம். அன்றைய நிலை என்ன என்று சற்று விவரமாகக் கவனிப்பது இன்றைய அரசியல் ஆரூடங்களுக்குப் பயன்படும். அப்போது பா.ஜ.க-வின் 15 நாள் அரசு கவிழ்ந்த பின் காங்கிரஸ் அல்லாத ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்தது. அதன் 179 எம்.பி-களில் தமிழகத்திலிருந்து தி.மு.க-வும் தமிழ் மாநில காங்கிரஸுமாக அனுப்பியவர்கள் மட்டும் 39 பேர். மேற்கு வங்க இடதுசாரிக் கூட்டணியிலிருந்து 33 பேர். பிகாரிலிருந்து 25 பேர். உத்தரப் பிரதேசத்திலிருந்து 20 பேர். கர்நாடகத்திலிருந்து 16 பேர். ஆந்திரத்திலிருந்து 16 பேர். மொத்தத்தில் 179 எம்.பி-களில் 83 பேர் தென் மண்டலம். அதில் மிகப் பெரிய பங்களிப்பு தமிழ்நாட்டுடையதுதான். இடதுசாரி ஜோதிபாசுவும் தெலுங்கு தேசமும் பிரதமர் பதவியை விரும்பாத நிலையில் தமிழ்நாட்டுக்கும் கர்நாடகத்துக்குமே வாய்ப்பு மிஞ்சியது.

    தமிழ்நாட்டிலிருந்து யார் என்றபோதுதான் அந்தத் தவறு நிகழ்ந்தது. மூப்பனாரைக் கேட்டார்கள். அவர் மறுத்துவிட்டார். அதன் விளைவாக, கர்நாடக தேவ கௌடா பிரதமரானார். நியாயப்படி அப்போது தமிழகத்திலிருந்து மிக அதிக எம்.பி-களை அளித்த தி.மு.க-வுக்கு - கருணாநிதிக்குத்தான் பிரதமர் பதவி வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்க வேண்டும். மூப்பனாரைவிட அரசியல் அனுபவமும் நிர்வாக அனுபவமும் அரசுப் பொறுப்பில் இருந்த அனுபவமும் பல மடங்கு பெற்றவர் கருணாநிதி. அவர் பிரதமராகிவிட்டால் தி.மு.க-வில் அடுத்த முதல்வர் யார் என்ற சிக்கலும் கிடையாது. பேராசிரியர் அன்பழகன், ஸ்டாலின் என்று வரிசையாகப் பலர் இருந்தனர். ஆனால், கருணாநிதியைப் பிரதமராக வரவிடக் கூடாது என்பதற்காகவே மூப்பனார் பெயர் சொல்லப்பட்டு, தமிழக வாய்ப்பு தட்டிப்பறிக்கப்பட்டது (இதை அப்போதே நான் எழுதியிருக்கிறேன்).

    இன்னொரு வாய்ப்பா 2014?

    அப்படி ஒரு வாய்ப்பு 2014-ல் வரும் என்பதுதான் ஜெயலலிதாவைப் பிரதமராக்க விரும்புவோரின் கணக்கு. காங்கிரஸ், பா.ஜ.க. இரு கட்சிகளுக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கப்போவதில்லை என்பதே பெருவாரியான கருத்துக் கணிப்புகளின் முடிவாகும். காங்கிரஸுக்கு சுமார் 130 இடங்களும் பா.ஜ.க-வுக்கு சுமார் 150 இடங்களும் கிட்டலாம் எனப்படுகிறது. எஞ்சியிருக்கக்கூடிய 260 இடங்களை பல்வேறு மாநிலக் கட்சிகள், இடதுசாரிகள் பங்குபோடப்போகின்றன. இடதுசாரிகள் இந்த முறை மேற்கு வங்கத்திலேயே முன்பைவிட அதிகமாக வென்று சுமார் 25 இடங்கள் வரை அடையலாம் என்பது கணிப்பு.

    மோடியை முன்னிறுத்தியதால், பா.ஜ.க-வுடன் கூட்டுசேர விரும்பாத பல தேசிய, மாநிலக் கட்சிகள் இடதுசாரிகளுடன் சேர்ந்து மூன்றாவது அணிக்கு முயற்சிப்பார்கள். அப்போது மூன்றாவது அணியில் மிக அதிக எம்.பி-களை வைத்திருக்கக்கூடிய கட்சியின் தலைவருக்கே பிரதமர் வாய்ப்பு என்றாகும்போது, முலாயம், மாயாவதி, நிதீஷ், ஆகியோரைவிட அதிகமாக ஜெயலலிதாவிடம் 35 எம்.பி-கள் வரை இருப்பார்கள்; அப்போது உடன் இருக்கக்கூடிய இடதுசாரிகளும் ஜெயலலிதாவை ஆதரிப்பார்கள் என்பது அவர்கள் வியூகம். ஒருவேளை காங்கிரஸ் ஆதரவுடன் மூன்றாவது அணி ஆட்சி அமைக்க விடாமல் தன் ஆதரவுடன் அமைப்பதையே விரும்பும் பா.ஜ.க. அப்போது வெளியில் இருந்துகொண்டு ஜெயலலிதாவை ஆதரிக்கக்கூடும்; ஜெயலலிதா பிரதமராகிவிடலாம் என்பது இன்னொரு வியூகம். இந்த வியூகங்களின்படி எல்லாம் நடந்தால், ஜெயலலிதாவுக்குப் பிரதமராகும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், எல்லாம் அப்படி நடக்குமா என்று உறுதியாகச் சொல்ல முடியாது. எதுவும் நடக்கலாம்.

    தகுதியானவரா?

    இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். பிரதமர் பதவிக்குத் தகுதியானவர்தானா ஜெயலலிதா? பிரதமராக மோடிக்கோ ராகுலுக்கோ தகுதி உண்டா உண்டா என்று கேள்வி எழுப்புவதுபோல இதையும் அலசத்தான் வேண்டும். ஜெயலலிதாவுக்கு ஆங்கிலம், ஹிந்தி உடபட பல மொழிகள் தெரியும் என்பதால் மட்டுமே காமராஜருக்கு இல்லாத தகுதி அவருக்கு இருப்பதாகக் கருதிவிட முடியாது. மன்மோகன் சிங்கை விட மோசமாகவா இருக்கப்போகிறார் என்ற வாதங்களும் உதவாது.

    கூட்டணியின் அடிப்படை ஜனநாயகம்

    ஜெயலலிதா ஒரு முதல்வராக எப்படிச் செயல்பட்டிருக்கிறார், ஒரு கட்சித் தலைவராக எப்படிச் செயல்பட்டிருக்கிறார் என்பதைப் பார்க்கும்போது, அவர் கட்சியில் துளியும் உள்கட்சி ஜனநாயகம் என்பதே இல்லை என்பது நாம் கவனிக்க வேண்டிய அதிமுக்கியமான அம்சம். காங்கிரஸ், பா.ஜ.க., இடதுசாரிக் கட்சிகள் எல்லாவற்றிலும் எத்தனை கோளாறுகள் இருந்தாலும், அவை எல்லாவற்றிலும் கட்சிக்குள் மாறுபட்ட கருத்துகளை முன்வைக்கவும் விவாதிக்கவும் இடம் இருந்துகொண்டே இருப்பதுதான் அவற்றை உயிரோடு வைத்திருக்கின்றன.

    ஜெயலலிதாவின் அ.தி.மு.க அப்படிப்பட்ட கட்சி அல்ல. ஒரு தனியார் முதலாளி நடத்தும் நிறுவனம்போல, முதலாளியைத் தவிர வேறு யாருக்கும் எதையும் சொல்ல உரிமையற்ற இடமாகவே அது இருக்கிறது.

    சரியாக ஓராண்டு முன்னால் எழுதிய ஒரு கட்டுரையில் சொன்னேன்: “ஊழல் அராஜகம், குடும்ப சுயநலம், என்று எத்தனையோ கோளாறுகள் நிரம்பிய ஆட்சியை அளித்தவர் என்றாலும், கருணாநிதியை எந்தப் பிரஜை விரும்பினாலும் சந்திக்க முடியும் என்ற நிலை எப்போதும் இருந்திருக்கிறது. சந்திக்க முடியாவிட்டாலும்கூட ஒருவர் தன் குறையை அவர் தீர்க்கிறாரோ இல்லையோ, அவருக்குத் தெரியப்படுத்தவாவது முடியும் என்ற நிலை இருந்திருக்கிறது.

    இப்போது முதல்வராக இருக்கும் ஜெயலலிதாவின் காதுக்கும் கண்ணுக்கும் ஒரு விஷயத்தை எடுத்துச்செல்ல என்ன வழி என்று அரசு ஊழியர்கள் மத்தியிலேயே தெரியாத நிலை. முதல்வர் கவனத்துக்குப் பிரச்சினையை எடுத்துச்செல்வது எப்படி என்று ஒவ்வொரு துறையினரும் திணறிக்கொண்டிருக்கிறார்கள். தன் குடிமக்களுடன் எந்தத் தகவல்தொடர்பும் இல்லாமல் இருக்கும் ஒருவர் எப்படி ஆட்சி நடத்த முடியும் ? என்ன நிர்வாகம் செய்ய முடியும் ? அமைச்சர்கள் முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வரை முதல்வரை அணுகி, சங்கடமான செய்திகளைப் பேசத் தயங்கும் சூழலில் தன் மக்களின் நிலைபற்றி, நிர்வாகத்தின் குறைகள்பற்றி அவருக்கு யார் தகவல் சொல்வார்கள் ? உளவுத் துறை மட்டும்தானா? இப்படிப்பட்ட முதல்வர் நமக்கு எதற்கு என்பதுதான் என் கேள்வி.”

    இப்படிப்பட்ட அணுகுமுறையில் இருக்கும் ஒருவரால் இந்தியா போன்ற பல தேசிய இனங்கள், பல மொழிகள், பல்வேறு கலாச்சாரங்கள், வெவ்வேறான சிக்கல்கள் உள்ள ஒரு பெரிய நாட்டை நிர்வகிக்க முடியுமா? காவல் துறை, உளவுத் துறை, அச்சப்படும் நிர்வாக இயந்திரம், அடிமை மனநிலையுடைய கட்சியினரை மட்டும் கொண்டு ஒரு நாட்டை ஒருபோதும் ஆள முடியாது. 2016-க்குள் ஜெயலலிதாவின் இந்தப் போக்கு மாற்றம் அடைந்து ஜனநாயகபூர்வமான, மக்களிடம் செவிகளுடைய ஒரு முதல்வராகச் செயல்பட்டு அவர் தன்னை நிரூபித்துக்கொண்டால் மட்டுமே அவரைப் பிரதமர் பதவிக்கும் தகுதியானவர் என்று ஏற்க முடியும்.

    இப்போதைய நிலையிலேயே அவர் பிரதமரானால், இந்தியாவுக்கு நேரும் தொடர் விபத்துகளில் இன்னொன்றாகவே அது இருக்கும். ஒரு தமிழர் முதன்முறையாகப் பிரதமர் ஆகிறார் என்று மட்டும் மகிழ்ச்சி அடைய முடியாது. 1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழலில் தமிழர்கள் சம்பந்தப்பட்டிருந்தார்கள் என்று மகிழ்ச்சி அடைவது போன்றது அது.

    ஞாநி, மூத்த பத்திரிகையாளர், சமூக-அரசியல் விமர்சகர், தொடர்புக்கு: gnanisankaran@gmail.com

  8. #697
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    கிறித்துவ நண்பர்கள் அனைவருக்கும் உளங்கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

    https://www.youtube.com/watch?featur...&v=CMfbEd5aggI
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  9. #698
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    30,488
    Post Thanks / Like
    One of the very rare times AM Raja sang for NT

    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  10. #699
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    நாம் எல்லாம் முரசு டிவி க்கு நன்றி சொல்ல கடமை பட்டுள்ளோம் - இந்த இனிய நாளில் , நம் மனதில் நாட்டாண்மை செய்து கொண்டிருக்கும் ஞான ஒளியை பார்க்க வைப்பதற்க்கு


  11. #700
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    உண்மை உணரும் நேரம் - 3 (Part II)

    சரி இது கூட ஒரு புத்தகத்தில் வந்தது. அதை எடுத்து பதிவிட்டோம் என்று சொல்லலாம். அதே பதிவில் வேறொரு அபத்தமும் (அல்லது காமெடி என்று கூட சொல்லலாம்) எழுதப்பட்டிருகிறது. என்னவென்றால் பெருந்தலைவரின் சாதனைகளை பற்றி நாம் குறிப்பிட்டோம். அது ஒன்றும் பெரிய சாதனை இல்லை என்று நிலைநாட்ட ஒரு விஷயத்தை சொல்கிறார்கள். அதை படித்தவுடன் அழுவதா இல்லை சிரிப்பதா என்று தெரியவில்லை. அப்படி என்ன எழுதியிருந்தார்கள்?

    காமராஜ் பிரதமர்களை உருவாக்கும் வல்லமை பெற்று King maker ஆக திகழ்ந்ததால் மத்திய அரசில் செல்வாக்கு பெற்றிருந்த அவர் அதை பயன்படுத்தி தன்னுடைய ஆட்சிக்காலத்தில் தமிழகத்திற்கு வேண்டிய திட்டங்களைப் எளிதாக பெற முடிந்தது என்று எழுதியிருந்தார்கள். எந்தளவுக்கு இவர்களை போன்றவர்களுக்கு தமிழக மற்றும் இந்திய அரசியல் வரலாறு தெரியும் என்பதற்கு இது ஒரு சான்று. நாம் உண்மை வரலாற்றை திரும்பி பார்ப்போம்.

    பெருந்தலைவர் தமிழக முதல்வராக பணியாற்றிய காலம் 1954 ஏப்ரல் 13 முதல் 1963 அக்டோபர் 2 வரை. நான் இங்கு ஏற்கனவே பதிவு செய்திருக்கிறேன். அதை மீண்டும் சொல்கிறேன். இந்திய சுதந்திரம் பெற்று 66 வருடங்களாகின்றன. இத்தனை வருட காலகட்டத்தில் தமிழகத்தில் 5 வருடங்கள் முழுமையாக ஆட்சி செய்து தேர்தலை சந்தித்து மீண்டும் அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த ஒரே மனிதன் பெருந்தலைவர் மட்டுமே. அவர் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவரை எவராலும் அவரை வெல்ல முடியவில்லை. கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், தானே கொண்டு வந்த K Plan என்ற திட்டத்தின் கீழ் முதல்வர் பதவியை விட்டு விலகி கட்சிப் பணிக்கு சென்றார்.

    ஆட்சித் தலைவர் பதவியை விட்டு விலகிய அவருக்கு கட்சித் தலைவர் பதவி தேடி வந்தது. ஆம், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக பெருந்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதில் சிறப்புற அவர் செயலாற்றிக் கொண்டிருக்கும் போதுதான் துயர்மிகு 1964 மே மாதம் 27-ந் தேதி வந்தது. எவருமே எதிர்பார்க்காத வகையில் ஆசிய ஜோதி பண்டிட் ஜவஹர்லால் நேரு இயற்கை எய்தினார். அடுத்த பிரதமர் யார் என்பதைப் பற்றிய சிந்தனை கூட இல்லாமல் இருந்த பொது மக்களுக்கும் சரி காங்கிரஸ் கட்சியினருக்கும் சரி இது ஒரு பெரிய சவாலாக தோன்றியது. ஆனால் அந்த படிக்காத மேதை தன் கூர் மதியால் லால் பகதூர் சாஸ்திரியை பிரதமராக தேர்ந்தெடுத்தார். சாஸ்திரியின் உருவத்தை பார்த்து இவரா என்று கேலி பேசியவர்களை சாஸ்திரி தன் திறமையினால் வாயடைக்க செய்தார். விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுத்து அவர் மேற்கொண்ட முயற்சிகளும் அந்த விவசாயிகளை நாட்டை காக்கும் ராணுவ வீரர்களுக்கு இணையாக முன்னிறுத்தி ஜெய் ஜவான் ஜெய் கிசான் என்ற அவர் முழக்கமும் நல்ல பலனை தந்தன. வலிமை குறைந்த தலைவன் என தப்புக் கணக்கு போட்டு கராச்சியை தலைநகராக கொண்ட சிந்து மாகாண எல்லையில் அமைந்துள்ளதும் நமது குஜராத் மாநில எல்லையில் அமைந்துள்ளதுமான கட்ச் என்ற சதுப்பு நிலம் வழியாகவும் பஞ்சாப் வாகா எல்லைப்புறம் வழியாகவும் நம்மை 1965 செப்டம்பரில் தாக்கி ஆக்ரமிக்க நினைத்த பாகிஸ்தான் படையெடுப்பையும் வெற்றிகரமாக தடுத்து அந்தப் படைகளை ஓட ஓட விரட்டி வீர சாதனை புரிந்தார்.

    இவ்வகையில் சாஸ்திரி திறம்பட ஆட்சி செய்துக் கொண்டிருந்த போது இந்தியா பாகிஸ்தான் இடையே போர் மூண்டதனால் ஏற்பட்ட பதற்ற நிலையை அகற்றி இரு நாடுகளுக்கிடையே ஒரு சமாதான உடன்படிக்கை ஏற்பட அன்றைய ரஷ்ய அதிபர் கோஸிஜன் முயற்சி எடுத்து ரஷ்ய நாட்டில் அமைந்துள்ள தாஷ்கண்ட் நகரில் இந்திய பிரதமர் சாஸ்திரி அவர்களையும் அன்றைய பாகிஸ்தான் அதிபர் அயுப்கான் அவர்களையும் சந்திக்க வைத்தார். 1966 ஜனவரி 10-ந் தேதி அன்று நடைபெற்ற இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பின் முடிவில் தாஷ்கண்ட் ஒப்பந்தம் கையெழுத்தானது. எதிர்பாராத விதமாக அன்று இரவு (மறுநாள் அதிகாலை) சாஸ்திரி மரணம் அடைந்தார். சந்தேகத்திற்கிடமான முறையில் அவர் இறப்பு இன்றும் பார்க்கப்படுகிறது.

    நேருவின் மறைவுக்கு பின் சாஸ்திரியின் மறைவும் இந்திய அரசியலில் ஒரு வெற்றிடத்தை தோற்றுவித்த போது மீண்டும் பிரதமரை தேர்ந்தெடுக்கும் சுமை பெருந்தலைவர் தலையில் விழுந்தது. இம்முறை அவரே பிரதமர் ஆக வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்தது. ஆனால் என்றுமே பதவியை துச்சமாக மதித்த பெருந்தலைவர் அந்த வாய்ப்பை மறுத்தார். அன்றைய சூழலில் நாட்டிற்கு தேவை ஒரு வலிமையான மனஉறுதி படைத்த தலைமை என்பதை உணர்ந்த பெருந்தலைவர் நேருவின் மகளும் சாஸ்திரியின் அமைச்சரவையில் தகவல் மற்றும் ஒலிப்பரப்பு துறை அமைச்சராக [Minister of Information & Broadcasting] பணியாற்றிக் கொண்டிருந்த இந்திரா காந்தி அம்மையார் அவர்களை பிரதமராக தேர்ந்தெடுத்து பதவி ஏற்க வைத்தார். 1966 ஜனவரி 24 அன்று இந்திரா அம்மையார் பாரதப் பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார்.

    இப்படி நமது தேசத்தில் இரண்டு முறை தலைமை பொறுப்பில் ஒரு வெற்றிடம் ஏற்பட்ட போது அந்த சூழலை தன மதியூகத்தினால் திறம்பட சமாளித்து நமது நாட்டிற்கு அன்றைய சூழலில் திறமைமிக்க பிரதமர்களை தேர்ந்தெடுத்துக் கொடுத்ததால் பெருந்தலைவர் கிங் மேக்கர் [King Maker] என்று அழைக்கப்பட்டார். இதுதான் வரலாற்று உண்மை. அதாவது அவருக்கு அந்தப் பட்டம் கிடைத்ததே 1966 ஜனவரிக்கு பிறகுதான்.

    நாம் குறிப்பிட்டு சொன்ன பதிவில் என்ன எழுதியிருக்கிறார்கள்? பெருந்தலைவர் கிங் மேக்கர் என்று மத்திய அரசில் செல்வாக்கு பெற்று விளங்கியதால் அதன் காரணமாக அவர் தமிழக முதல்வராக இருந்த போது தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை மத்திய அரசு அனுமதித்தது என்று எழுதியிருக்கிறார்கள். பெருந்தலைவர் தமிழக முதல்வராக பதவி வகித்த காலம் 1954 ஏப்ரல் 14 முதல் 1963 அக்டோபர் 2 வரை. அவர் கிங் மேக்கர் என்று புகழ் பெறுவது 1966 ஜனவரியில். அதாவது தமிழக முதல்வர் பதவியிலிருந்து விலகி இரண்டரை வருடங்களுக்கு பிறகு [சுமார் 28 மாதங்களுக்கு பிறகு]. உண்மை இப்படியிருக்க அவர் எப்படி பின்னாட்களில் வந்த இந்த செல்வாக்கை வைத்து அவர் முன்னாட்களில் முதல்வராக இருக்கும்போது மத்திய அரசிடமிருந்து திட்டங்களை வாங்கியிருக்க முடியம்?

    நாம் முன்பே சொன்னது போல் அன்று முதல் இன்று வரை தங்களின் நோக்கத்தை நியாயப்படுத்தும் வண்ணம் தவறான தகவல்களை பரப்பி வரும் இந்த செய்கை நிற்காமல் தொடர்கிறது. காமராஜ் ஒரு தமிழக தலைவர், தமிழக முதல்வராக இருந்தார். கிங் மேக்கர் என்று அவருக்கு கிடைத்திருந்த செல்வாக்கை வைத்து அவர் முதல்வராக இருக்கும்போது திட்டங்களை மத்திய அரசிடமிருந்து பெற்று தந்தார் என்று ஒரு மாணவன் கட்டுரை எழுதினால் புரிந்துக் கொள்ளலாம். இதையே முதிர்ந்தவர்கள் எழுதுவது வேதனையானது.

    என்ன செய்வது? 1979 செப்டம்பரில் அதிகாரப்பூர்வமாக்கப்பட்ட சீர்திருத்த தமிழ் 1965 பிப்ரவரி 10-ந் தேதி வெளியான தமிழ் நாளேட்டில் 100-வது நாள் திரைப்பட விளம்பரத்திலேயே வரும் அதிசயத்தையும் இப்போதும் நமது மய்யம் இணையதளத்திலேயே பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்? உருவாக்கப்பட்ட விளம்பரங்கள் இனி இடம் பெறாது என்று அருமை நண்பர் வினோத் போன்றவர்களெல்லாம் உறுதி அளித்தும் கூட "சென்னை" பிளாசா என்ற விளம்பரமெல்லாம் இப்போதும் வரத்தானே செய்கிறது!

    நாம்தான் ஒவ்வொரு முறையும் உண்மையை உரக்க சொல்ல வேண்டும்!

    அன்புடன்

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •