Page 89 of 401 FirstFirst ... 3979878889909199139189 ... LastLast
Results 881 to 890 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

  1. #881
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #882
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று ஒரு இனிய நன்னாள் ! ஆதவனுக்கு நன்றி சொல்லும் நாள் - அந்த ஒளி கடவுள் நம் நன்றியை எதிபார்ப்பது இல்லை - அவன் தன் கடமையை சரிவர செய்துகொண்டுருக்கின்றான் - அதனால் தான் இந்த உலகம் இருளில் இன்னும் சிக்கி தவிக்காமல் உள்ளது - இந்த பாடல் அவனுக்கு நன்றி சொல்லும் பாடல் - இது போல எளிய , இனிய பாடல் NT படத்தை விட்டால் வேறு எங்கு கிட்டும் ?

    அன்புடன் ரவி


  4. #883
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    [[/I]

    உணர்ச்சியில் விளையாடும் உன்னத கவி சிங்கம் தளர்ச்சியில் விழல் ஆகுமா? மகனே சந்தனம் சேறாகுமா ? கவியரசு கண்ணதாசனை தவிர யாரால் இப்படி பாடல் எழுத முடியும். கவியரசின் வைர வரி, கே.பி. சுந்தரம்மாள் குரல் வளம், கே.வி. மகாதேவனின் இசை, நடிகர் திலகத்தின் நடிப்பு என காலத்திலும் அழியாத காவியம் தான் மகாகவி காளிதாஸ் திரைக்காவியம்.

    வாழ்வென்றும் தாழ்வென்றும் வளமென்றும் குறைவென்றும் சக்கரம் சுழல்கின்றது அதில் தான் சரித்திரம் நிகழ்கின்றது யாருக்கும் வாழ்வுண்டு அதற்கொரு நாளுண்டு அது வரை பொறுப்பாயடா மகனே என் அருகினில் இருப்பாயடா --- கவித்துவம் நிறைந்த பாடல் - இதோ உங்களுக்காக அந்த இனிய பாடல், இந்த இனிய நல்நாளில்!!


  5. #884
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    ஜீ தமிழ் பகல் 2.30 மணி
    16.01.2014 – மகாகவி காளிதாஸ்

    பார்க்க தவறாதீர்கள்

    அன்புடன்
    ரவி

  6. #885
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    19.01.2014 தேதியிட்டு வெளிவந்துள்ள இவ்வார ராணி இதழிலிருந்து..
    Rani140114NTPAPfw_zpsd0181286.jpg

  7. #886
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    காலத்தை வென்ற காவியம் என்று பல படங்களைப் பற்றி குறிப்பிடுகிறார்கள். ஆனால் ஒரு சில படங்களே அந்த வெகுமதிக்கு உரித்தானவை. அவற்றில் நிச்சயம் இடம் பிடிக்கும் படங்களில் ஒன்றுதான் நடிகர் த்லகதின் மகோனத்த படைப்பான கர்ணன். தமிழ் சினிமாவின் சரித்திரத்திலேயே என்றுமே அழியாத இடத்தை கைப்பற்றிய காவியம் கர்ணன்.

    இன்றைக்கு சரியாக ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னாள் இதே பொங்கல் திருநாளில் தமிழ் நாட்டின் திரையரங்குகளில் ஒளி கடவுளின் அவதாரம் தன பொன் கிரகனங்களை பரப்பியவாறு வளம் வர தொடங்கினான். அன்றைக்கு துவங்கிய திக்விஜயம் இன்று வரை நிற்காமல் தொடர்கிறது.

    சில வருடங்களுக்கு முன்பு நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றி எழுதி போது கர்ணன் பற்றி எழுதியதை மீண்டும் நினைவு கூர்கிறேன்.

    மதுரையில் ஆசியாவின் மிக பெரிய திரையரங்கமான தங்கத்தில் 100 நாட்களை கடந்த படம் - கர்ணன்.

    முதன் முதலாக தங்கத்தில் ஒரு நாயக நடிகரின் 3 படங்கள் 100 நாட்களை கடக்கும் சாதனையை நிகழ்த்தியதும் நடிகர்திலகம் தான். அவை

    பராசக்தி - 112 நாட்கள்

    படிக்காத மேதை - 116 நாட்கள்

    கர்ணன் - 108 நாட்கள்

    இன்று வரை இது யாராலும் முறியடிக்கப்படாத சாதனையாகும்.

    மதுரை - தங்கத்தில் கர்ணன் 108 நாட்களில் பெற்ற வசூல் - Rs 1,98,102.99 p.

    ஒரு இடைவெளிக்கு பின் மதுரையில் மீண்டும் வெளியிடப்பட்ட போது கர்ணன் செய்த சாதனைகள்.

    வெளியான நாள் - 23.11.1978

    அரங்கம் - ஸ்ரீ மீனாக்ஷி

    தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் - 50 (இது ஒரு சாதனையாகும்)

    ஓடிய நாட்கள் - 22

    மொத்த வசூல் - Rs 93,280.55 p

    ஷிப்டிங்கில் ஓடிய நாட்கள் - 50

    சென்னையில் ஷிப்டிங்கில் ஓடிய நாட்கள் - 100

    முதன் முதலாக மதுரையில் ஒரு புதிய படம் போல ரசிகர் மன்ற டோக்கன் மூலமாக டிக்கெட் விற்கப்பட்டது இந்த படத்திற்கு தான்

    மீண்டும் மதுரையில் 03.03.2005 அன்று சென்ட்ரல் திரையரங்கில் வெளியிட்ட போது ஓடின நாட்கள் - 14.

    2012-ல் திரையிட்ட போது கர்ணன் செய்த சாதனைகளை ஏற்கனவே பலரும் இங்கே குறிப்பிட்டார்கள். கர்ணன் செய்த சாதனைகளில் தலையாய சாதனை சென்னை சத்யம் அரங்கில் 152 நாட்களும் எஸ்கேப் அரங்கில் 115 நாட்களும் ஓடியது மட்டுமல்ல சத்யம் வளாக வசூல் ரூபாய் ஒரு கோடியை தாண்டியது என்பதுதான் பிரமிக்கத்தக்க வெற்றி.

    தினம் தினம் வந்தாலும் சூரியனை உலகம் வரவேற்பதே வழக்கம். அது போன்றே திரையரங்குகளுக்கு சூரிய புத்திரன் எப்போது விஜயம் செய்தாலும் தமிழக மக்கள் வரவேற்பு தருவது நிச்சயம்.

    பொற்கால ஆண்டான 1964-ன் முதல் முத்து வெளியாகி பொன் விழா ஆண்டை நிறைவு செய்து அகவை 51-ல் அடியெடுத்து வைக்கும் இந்த நல்ல நாளில் கர்ண நினைவுகளை நினைவு கூர்வோம். உளம் மகிழ்வோம்.

    அன்புடன்

  8. #887
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் ரசிகர்கள் மனதில் என்றுமே மாறாமல் மறையாமல் மறந்து விடாமல் நிலைத்து நிற்கும் சில விஷயங்களில் பொற்கால ஆண்டான 1964-க்கு தனியிடம் உண்டு. வெளியான படங்களை வைத்து பார்க்கும் போது பொற்கால ஆண்டாக விளங்கும் 1964 இந்த 2014-ல் பொன் விழா ஆண்டாகவும் மலர்ந்திருக்கிறது. அதை பற்றிய தகவலகளையும் புகைப்படங்களையும் நமது நண்பர்கள் ஆதிராம் மற்றும் கோல்ட் ஸ்டார் சதீஷ் அழகாய் பதிவிட்டிருந்தார்கள். அந்த பொற்கால ஆண்டைப் பற்றிய என்னுடைய பழைய பதிவு இங்கே மீள் பதிவாக.

    வருடம் - 1964

    நடிகர் திலகத்தின் வெளி வந்த படங்கள் - 7

    அவற்றில் 70 நாட்களை கடந்த படங்கள் - 7

    100 நாட்களை கடந்த படங்கள் - 5


    முதன் முதலாக சென்னையில் ஒரே வருடத்தில் ஒரே நடிகரின் 5 படங்கள் 100 நாட்களை கடந்து ஓடிய சாதனையை செய்தது நடிகர் திலகத்தின் படங்கள் தான்.

    அது மட்டுமல்ல 5 படங்களும் சென்னையில் 15 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடிய முதன் முதல் சாதனை இன்று வரை முறியடிக்கப்படாத ஒன்றாகும்

    கர்ணன் - 14.01.1964 - சென்னை - சாந்தி, பிரபாத், சயானி - 3

    பச்சை விளக்கு - 03.04.1964 - சென்னை - வெலிங்டன், ராக்ஸி,மஹாராணி - 3

    கை கொடுத்த தெய்வம் - 18.07.1964 - சென்னை - மிட்லாண்ட், பிரபாத், சரஸ்வதி, ராம் - 4

    புதிய பறவை- 12.09.1964 - சென்னை - பாரகன் - 1

    நவராத்திரி - 03.11.1964- சென்னை - மிட்லாண்ட், மஹாராணி, உமா, ராம் - 4

    1963-ல் 15.11.1963 அன்று வெளியாகி 1964- ம் ஆண்டு 22.02.1964 அன்று சென்னை காசினோவில் 100 நாட்களை கடந்த அன்னை இல்லத்தையும் சேர்த்தால் 6 படங்கள் 16 திரையரங்குகளில் 100 நாட்களை கடந்தது.


    12.06.1964 அன்று வெளியான ஆண்டவன் கட்டளை சென்னையில் திரையிடப்பட்ட 4 அரங்குகளிலும் 8 வாரங்களை வெற்றிகரமாக கடந்து ஓடியும் பாரகன் அரங்கில் 100 நாட்களை நோக்கி ஓடிக் கொண்டிருந்த நேரம். நடிகர் திலகத்தின் புதிய பறவை திரைக்கு வர தயாராகிக் கொண்டிருந்த நேரம். சாந்தியில் வெளியிட ஏற்பாடுகள் நடைப்பெற்றுக் கொண்டிருந்த நேரம். அந்த நேரத்தில் ராஜ்கபூரின் சங்கம் ஹிந்தி திரைப்படம் சாந்தியில் திரையிடப்படுகிறது. இந்த நேரத்தில் ஒன்றை குறிப்பிட வேண்டும். அந்த வருடம் (1964) கர்ணன் தவிர வேறு எந்த நடிகர் திலகத்தின் திரைப்படமும் சாந்தியில் திரையிடப்படவில்லை. சங்கம் படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு. நான்கு வார இடைவெளிக்காக திரையிடப்பட்ட சங்கம் படத்தின் வெற்றியை பார்த்த நடிகர் திலகமும் சண்முகமும் புதிய பறவை படத்தை சாந்தியில் வெளியிட வேண்டாம் என்று முடிவெடுத்து வேறு அரங்கு தேடிய போது மவுண்ட் ரோட்டில் வேறு அரங்குகளே கிடைக்காத சூழலில் பாரகன் அவர்கள் கண்ணில் பட்டது. 100 நாட்களை எளிதாக கடந்திருக்க கூடிய ஆண்டவன் கட்டளை பலிகடா ஆனது. புதிய பறவை திரையிடபடுவதனால் பாரகன் அரங்கில் சில மாற்றங்கள் செய்ய வேண்டி வந்ததால் ஆண்டவன் கட்டளை முன் கூட்டியே 70 நாட்களோடு நிறுத்தப்பட்டது. பாரகன் அரங்கு புதுப்பிக்கப்பட்டு 12.09.1964 அன்று புதிய பறவை வெளியானது. புதிய பறவைக்காக 100 நாட்களை விட்டுக் கொடுத்த படம் ஆண்டவன் கட்டளை.

    அது போன்றே முரடன் முத்து திரைப்படமும். தயாரிப்பாளர் முகாம் மாறியதால் படத்தை விளம்பரப்படுத்தவோ படத்தின் ஓட்டத்திற்கு எந்த வித முயற்சியும் எடுக்காமல் போயும் கூட முக்கிய நகரங்களிலெல்லாம் 8 வாரங்களை கடந்த முரடன் முத்து அதிகபட்சமாக கோவையில் 79 நாட்கள் ஓடியது. சொல்லப் போனால் பந்துலு பிற்காலத்தில் எடுத்த கருப்பு வெள்ளை மற்றும் சில கலர் படங்களை விட அதிக நாட்கள் ஓடிய படம் முரடன் முத்து.

    சென்னை நகரை பொறுத்தவரை அந்த 1964-ம் ஆண்டில் நடிகர்திலகத்தின் 7 படங்கள் மொத்தம் 26 அரங்குகளில் வெளியானது. அவற்றில் 25 அரங்குகளிலும் அந்தப் படங்கள் குறைந்த பட்சமாக 8 வாரங்கள் ஓடி வெற்றிக் கொடி நாட்டியது. 50 வருடங்களாக இது சாதனை சரித்திரமாகவே இருக்கிறது.

    முதன் முதலாக சிவாஜி பிலிம்ஸ் தயாரித்த தமிழ் படம் - புதிய பறவை.

    முதன் முதலாக ஒரு பாடலுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட இசை கருவிகள் பயன்படுத்தப்பட்டது நடிகர் திலகத்தின் படத்திற்கு தான்.

    பாடல் -எங்கே நிம்மதி

    படம் - புதிய பறவை.

    முதன் முதலாக பன்னிரண்டு வருட இடைவெளியில் 100 படங்களில் அதுவும் நாயகனாகவே நடித்த ஒரே நடிகர் நடிகர் திலகம் தான்.

    1952 தீபாவளி - பராசக்தி

    1964 தீபாவளி - நவராத்திரி

    முதன் முதலாக இந்திய திரையுலகில் ஒரு நாயகன் ஒரு திரைப்படத்தில் 9 வேடங்கள் ஏற்று நடித்த சாதனையை செய்தது நடிகர் திலகம் தான்.

    படம் - நவராத்திரி.

    ஒன்பது வேடங்களில் சிறந்த மூன்றை தேர்ந்தெடுக்குமாறு மக்களுக்கு ஒரு போட்டி அறிவிக்கப்பட்டு, ஆர்வத்துடன் மக்கள் பங்கு பெற, அவர்களில் வெற்றி பெற்றவர்களை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதும் முதன் முதலாக நடிகர் திலகத்தின் நவராத்திரி படத்தின் மூலமாகத்தான்.

    அன்புடன்

  9. #888
    Senior Member Seasoned Hubber rsubras's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    Chennai
    Posts
    878
    Post Thanks / Like
    just a curiosity, which were the three roles that won? it will definitely be a very hard choice......................... my pick would be 1.drama artiste 2. hero's uncle 3. the rough and tough guy who gets killed after taking revenge
    R.SUBRAMANIAN

    My Blog site - http://rsubras.blogspot.com

  10. #889
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Location
    The Gambia
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜி கணேசன்..

    திருவிளையாடல் படத்தில் கடற்கரையில் ஒரு நடை, மன்னவன் வந்தானடி பாட்டில் முதல் வரி முடிந்தவுடன் ஒரு கம்பீர நடை, ’மன்னிக்கவேண்டுகிறேன் உந்தன் ஆசையை தூண்டுகிறேன்’ பாடலின் பிஜிஎம்மில் ஒரு நடை. ’

    செல்வம்’ படத்தில் ’காற்றிலே நீந்தும் கொடியிடை என் கைகளில் தவழட்டுமே’ என்ற வரி முடிந்ததும் ஒரு நடை.

    ’யாருக்கு மாப்பிள்ளை யாரோ!அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ!’பாடலை ரசித்துக்கொண்டே ஊனமுற்ற காலோடு ஒரு அழகு நடை.

    நடப்பதில் கூட இவ்வளவு வெரைட்டி காட்டி விட முடியுமா!!

    எம்.ஆர்.சந்தானத்தைப்பார்த்து’தானாபதி பிள்ளை அவர்களே! நீவிர் நாகாக்க.’
    என்ற வீரபாண்டிய கட்டபொம்மன்.

    குறவஞ்சி படத்தில் “ மன்னா! பசிக்கிறது என்றால் அடிக்கிறார்கள். வலிக்கிறது என்றால் கொன்றே விடுகிறார்கள்” என்ற குமுறல்.

    ’ஐயா பாரதி... போய்விட்டாயா’ என்று கலங்கிய கப்பலோட்டிய தமிழன்.

    ’நான் எங்க போவேன்..எனக்கு யாரைத்தெரியும்..மாமா நிசமாவே போவச்சொல்றீங்களா மாமா!’ என்று தேம்பிய வெகுளி ரங்கன்.


    ’கண்ணில் தெரியும் வண்ணப்பறவை கையில் கிடைத்தால் வாழலாம்’ - தவித்த பலே பாண்டியா

    ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல’ தங்கபதக்கம் சௌத்ரி.

    சிவாஜி மட்டும் பெருந்தன்மையாக விட்டுக்கொடுக்காமல் இருந்திருந்தால் திருவிளையாடல் தருமி பாத்திரத்தில் நாகேஷ் தூள் கிளப்பி கலக்கியிருக்கமுடிந்திருக்குமா?

    ரிலாக்ஸ்டாக கலாய்த்த ’கலாட்டா கல்யாணம்’

    ’மோகனாம்பாளின் சிக்கல் சண்முகசுந்தரம்’

    ஒரு கதாநாயகன் அந்தக்காலத்தில் நினைத்தே பார்க்க விரும்பாத ‘அந்த நாள்’தேசத்துரோகி.

    ’பார் மகளே பார்’ வரட்டு கௌரவ,அகங்கார, பணத்திமிர்.

    நண்பனையே கொல்லத்துணியும் ’ஆலயமணி’ பொறாமை....

    கெமிஸ்ட்ரி கெமிஸ்ட்ரி என்று ஒரு cliche இன்று உச்சரிக்கப்படுகிறதே.’தெய்வப்பிறவி’ படத்தில் சிதம்பரம் ஜெயராமன் -ஜானகி பாடிய
    “அன்பாலே தேடிய என் அறிவுச்செல்வம் தங்கம்..

    இந்தப்பாடலுக்கு சிவாஜி கணேசன் பத்மினி ஜோடிக்கிடையிலான கெமிஸ்ட்ரி பார்த்து விட்டு சொல்ல வேண்டும்.

    இன்னும் எத்தனை எத்தனை.....

    நாம் பாக்கியசாலிகளல்லவா! தமிழ் திரை கண்ட அசுர நடிகன் நம்முடைய சிவாஜி கணேசன்.

    நன்றி ராஜநாயகம் ..




    சிவாஜி கணேசன்.. திருவிளையாடல் படத்தில் கடற்கரையில் ஒரு நடை, மன்னவன் வந்தானடி பாட்டில் முதல் வரி முடிந்தவுடன் ஒரு கம்பீர நடை, ’மன்னிக்கவேண்டுகிறேன் உந்தன் ஆசையை தூண்டுகிறேன்’ பாடலின் பிஜிஎம்மில் ஒரு நடை. ’ செல்வம்’ படத்தில் ’காற்றிலே நீந்தும் கொடியிடை என் கைகளில் தவழட்டுமே’ என்ற வரி முடிந்ததும் ஒரு நடை. ’யாருக்கு மாப்பிள்ளை யாரோ!அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ!’பாடலை ரசித்துக்கொண்டே ஊனமுற்ற காலோடு ஒரு அழகு நடை. நடப்பதில் கூட இவ்வளவு வெரைட்டி காட்டி விட முடியுமா!! எம்.ஆர்.சந்தானத்தைப்பார்த்து’தானாபதி பிள்ளை அவர்களே! நீவிர் நாகாக்க.’ என்ற வீரபாண்டிய கட்டபொம்மன். குறவஞ்சி படத்தில் “ மன்னா! பசிக்கிறது என்றால் அடிக்கிறார்கள். வலிக்கிறது என்றால் கொன்றே விடுகிறார்கள்” என்ற குமுறல். ’ஐயா பாரதி... போய்விட்டாயா’ என்று கலங்கிய கப்பலோட்டிய தமிழன். ’நான் எங்க போவேன்..எனக்கு யாரைத்தெரியும்..மாமா நிசமாவே போவச்சொல்றீங்களா மாமா!’ என்று தேம்பிய வெகுளி ரங்கன். ’கண்ணில் தெரியும் வண்ணப்பறவை கையில் கிடைத்தால் வாழலாம்’ - தவித்த பலே பாண்டியா ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல’ தங்கபதக்கம் சௌத்ரி. சிவாஜி மட்டும் பெருந்தன்மையாக விட்டுக்கொடுக்காமல் இருந்திருந்தால் திருவிளையாடல் தருமி பாத்திரத்தில் நாகேஷ் தூள் கிளப்பி கலக்கியிருக்கமுடிந்திருக்குமா? ரிலாக்ஸ்டாக கலாய்த்த ’கலாட்டா கல்யாணம்’ ’மோகனாம்பாளின் சிக்கல் சண்முகசுந்தரம்’ ஒரு கதாநாயகன் அந்தக்காலத்தில் நினைத்தே பார்க்க விரும்பாத ‘அந்த நாள்’தேசத்துரோகி. ’பார் மகளே பார்’ வரட்டு கௌரவ,அகங்கார, பணத்திமிர். நண்பனையே கொல்லத்துணியும் ’ஆலயமணி’ பொறாமை.... கெமிஸ்ட்ரி கெமிஸ்ட்ரி என்று ஒரு cliche இன்று உச்சரிக்கப்படுகிறதே.’தெய்வப்பிறவி’ படத்தில் சிதம்பரம் ஜெயராமன் -ஜானகி பாடிய “அன்பாலே தேடிய என் அறிவுச்செல்வம் தங்கம்.. இந்தப்பாடலுக்கு சிவாஜி கணேசன் பத்மினி ஜோடிக்கிடையிலான கெமிஸ்ட்ரி பார்த்து விட்டு சொல்ல வேண்டும். இன்னும் எத்தனை எத்தனை..... நாம் பாக்கியசாலிகளல்லவா! தமிழ் திரை கண்ட அசுர நடிகன் நம்முடைய சிவாஜி கணேசன். நன்றி ராஜநாயகம் ..
    .

    Like · · Share · 40 minutes ago ·










    Aanandh Padmanaban and 14 others like this.
    .






    1 share
    .











    Raghavan Nemil Vijayaraghavachari அது மட்டுமா ? ரோஜாவின் ராஜா படத்தில் பலவிதமான நடைகள், தெய்வமகன் படத்தில் இளைய மகனின் அசத்தல் ஸ்டலிஷ் நடை, பார்த்தால் பசி தீரும் படத்தில் " உள்ளம் என்பது ஆமை" பாடலில் இம்மியளவும் பிசகாத ஊனமுற்றவனாக நடக்கும் நடை, பாகப்பிரிவினையில் அந்த ஊனமுற்ற இடது கையை ஒரே பொஸிஸனில் வைத்துக்கொண்டு படம் முழுவதும் வரும் காட்சிகள், பாலும் பழமும் படத்தில் " போனால் போகட்டும் போடா" பாடலில் நடக்கும் நடை மற்றும் முக பாவங்கள். இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இப்படிப்பட்ட ஒரு மகத்தான ந்டிகன் தமிழ் நாட்டில் மட்டும் பிறக்காமல் வேறு எந்த மாநிலத்தில் பிறந்திருந்தாலும் உலகமே கொண்டாடும் அளவுக்கு அந்த மாநில அரசுகளும், மக்களும் உயர்த்தியிருப்பார்கள். நடிப்பில் மட்டுமல்ல அவருடைய படங்கள் அவரின் படத்திற்கே போட்டியாக பல தடவைகள் வெளியான போதும் அவைகள் பெற்ற வெற்றிகள் அவர்மட்டும் தான் உண்மையான வசுல் சக்கரவர்த்தி என்பதை உறுதி செய்துள்ளன. ஆனால் அவரின் சாதனைகள் எல்லாம் மறைக்கப்பட்டு அவரை உயர்ந்த இடத்தில் வைக்காதது தமிழ் நாட்டுக்குத்தான் இழப்பு.

    about a minute ago · Edited · Like · 1
    ..



    Raghavan Nemil Vijayaraghavachari









    Write a comment...

    The above message was posted by " Urayuril Thaamarai " in Facebook. I am pasting this in this block with my comments on his posting.
    ..

  11. #890
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். செலுலாய்ட் சோழன் தொடருக்கு நன்றி திரு சந்திரசேகர். தொடர்ந்து இடவும் என்னை போல் வெளி நாட்டில் இருப்பவருக்கு பெரும் உதவியாக இருக்கும்.

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •