Page 130 of 401 FirstFirst ... 3080120128129130131132140180230 ... LastLast
Results 1,291 to 1,300 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

  1. #1291
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    பகுதி 3 - மூன்று தெய்வங்கள்

    இந்த படத்தில் எனக்கு பிடித்த காட்சிகள்


    1. சிவகுமார் , சந்திரகலாவை சந்திக்க வந்த சமயத்தில் சிவாஜி , முத்துராமன் , நாகேஷ் மூவரும் சேர்த்து பண்ணும் லூட்டி நகைச்சுவைக்கு சிகரம் வைத்தது போன்று இருக்கும் .

    2 . காதல் காட்சிகளில் சிவகுமாரும் , சந்திரகலாவும் ஓடுகிற ஓட்டத்தை விட ஒளிப்பதிவாளர் K .S Prasad ஓடியிருக்கும் ஓட்டம் பார்பதற்க்கு கவர்ச்சிகரமாக இருக்கும்

    3. பாடல்கள் , இசை , சிவாஜியின் புதுமையான , இளமையான நடிப்புடன் , நகைச்சுவையும் சரியான விகிதத்தில் கலந்து படத்தை வெற்றிகரமாக உருவாக்கி உள்ளனர்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1292
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like

    Red face

    பகுதி - 4a - கதை ( சுருக்கமாக )

    சந்தர்ப்ப வசத்தால் மூன்று வாலிபர்கள் சிறைக்கு செல்ல வேண்டி இருந்தது - மூவரும் சிறையைவிட்டு வெளியே சில காரணங்களால் தப்பித்து வெளியே வந்து விடுகிறார்கள் - அவர்கள் மூவரும் ஒரு பொட்டி கடை சொந்தக்காரரின் வீட்டில் பணம் திருடலாம் என்ற நினைப்பில் வருகின்றனர் - அந்த வீட்டு நிலைமையும் , அவர்கள் காட்டும் ஒப்பற்ற அன்பும் அவர்களை நல்லவராக மாற்றுகின்றது - கண் தெரியாத அவர்களின் மகளுக்கும் , காதலிக்கும் இன்னுமொரு பெண்ணுக்கும் ஒரு புது வாழ்கையை உண்டாக்கி தருகிண்டார்கள் - காதலித்த பெண்ணின் திருமணத்தை காண துடிக்கும் மூவரும் , கடமை உந்த போலீசில் சரணடைகிறார்கள் - அந்த குடும்பம் அவர்களை மூன்று தெய்வங்களாக வணங்கி பாராட்டுகின்றது - சுபம்

    பகுதி - 4b

    சிவாஜி - ஊதி விடுவார் - நடிப்பில் ஆகட்டும் , நகைச்சுவையில் ஆகட்டும் - தனக்கு முன்பும் , பின்பும் யாரும் இல்லை என்று அடித்து சொல்லும் படம்


    ------------ முத்துராமன் , நாகேஷ் , சிவகுமார் , சுப்பையா , vkr , இன்னும் பலர் உள்ளனர் - நாகேஷ் , சுப்பையா இவர்களின் நடிப்பும் படத்தை தூக்கி நிறுத்த உதவும்

    குடும்பத்துடன் பார்க்கவேண்டிய படங்களில் இந்த படம் ஒரு முதலாய படம் - கவலைகளை மறக்கவும் , பார்க்கவேண்டிய படம் . அனுமார் மாதிரி விஸ்வரூபமும் நமது தலைவரால் எடுக்க முடியும் அதே சமயம் ஒரு அணிலாக சின்ன வேடத்தில் நடித்தும் பெருமை சேர்க்க முடியும் என்று சொன்ன படம்

    தொடரும்

    அன்புடன் ரவி


  4. Likes sivaa liked this post
  5. #1293
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    367
    Post Thanks / Like
    Quote Originally Posted by g94127302 View Post
    இன்னும் சில ஆவணங்களை போடலாம் என்று நினைத்தால்

    File Upload Manager says that I have fully used 976.6kb space for uploading images - written to moderator to fix this issue - the system counts earlier file sizes uploaded already as well and rejects new images as capacity constraint - is there anyone facing the problem like mine ? There is no way to delete the images already uploaded to create space for new ones .

    அன்புடன் ரவி
    இதே பிரச்சினைதான் எனக்கும் தீர்வு கிடைக்கவில்லை
    தங்கள்மூலம் எனக்கும் ஒரு முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன்

  6. #1294
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கடைசியாக எல்லோரும் பார்க்க வேண்டி , முழு நீள படத்தின் பதிவையும் இங்கு இடுகிறேன் - இதன் மூலம் ஒரு நல்ல படத்தை அலசிய திர்ப்தியும் , சந்தோஷமும் எனக்கு கிடைத்தற்காக உங்கள் எல்லோருக்கும் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன் - மகிழ்ச்சி எல்லோருக்கும் கிடைக்கட்டும் - எல்லோரும் வாழும் நிலை வரட்டும் ...

    நன்றி , அன்புடன் ரவி

    மூன்று தெய்வங்கள் அலசல் இத்துடன் முடிவடைகின்றது. முன்னமே குறிப்பிட்டதை போல சில ஆவணகளை பதிவிட முடியவில்லை - technical snag. சரியானதும் பதிவிடுகிறேன் .


  7. #1295
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    அடுத்த அலசல் அதே வருடத்தில் வந்த "ப்ராப்தம் " - அருமையான படம் , அற்புதமான நவராத்திரி கதாநாயகன் , கதாநாயகி - இனிய பாடல்கள் - எல்லாம் இருந்தும் , வசதிகள் இருந்தும் சில காரணங்களால் - no peace of mind --- oh God - please answer our prayer -----------why so????

  8. #1296
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பார்த்ததில் பிடித்து -11

    மூன்று தெய்வங்கள் மற்றும் பாபு இரண்டும் contrasting கதைகள் , இருந்தும் இரண்டு படங்களும் ரசிக்க வைத்தார் நடிகர் திலகம்


    இந்த இரண்டு பதிவுகளும் படிக்கும் நேரத்தில் , நான் பார்த்த படம் தான் இப்பொழுது எழுத போகும் படம் கருடா சௌக்கியமா . இந்த படத்தை நான் எழுத காரணம் , பாபு குணசித்திர நடிப்பு , மூன்று தெய்வங்கள் - காமெடி , குடும்ப கதை , இந்த படம் சிவாஜி என்ற மகா நடிகனை மட்டும் நம்பி எடுக்க பட்ட படம்
    படம் வந்த வருடமோ 1982, புது நடிகர்கள் ரஜினி , கமல் மற்றும் பலர் கால் பதிக்க ஆரம்பித்த நேரம் (அழுத்தமாக ) நடிகர் திலகமோ 200 படத்தை தாண்டி ஓடி கொண்டு இருந்த old war horse ஆனால் gold horse .
    வா கண்ணா வா என்ற குடும்ப படத்தில் தன் நடிப்பை மீண்டும் ஒரு முறை நிருபித்த பிறகு இந்த படம் மூலம் களம் இறங்கினார் நடிகர் திலகம் , படத்தின் இயக்குனர் பிரகாஷ் ராவ் , படகோட்டி , வசந்த மாளிகை படங்களின் இயக்குனர். கதை வசனம் - சுந்தரம் (vietnaam veedu )

    இந்த படத்தை நான் பார்க்க காரணம் என்னை தமிழில் எழுத தூண்டிய திரு வாசுதேவன் சார் , இந்த படத்தை பற்றி அவர் எழுதி இருந்தார் .

    தர்மங்கள் மீற படும் பொது , நல்லவர்களை காக்க நானே வருவேன் என்பதே கீதை வாசகம் , போகும் பாதை எப்படி இருந்தாலும் , சேர வேண்டிய இடம் தான் முக்கியம் அனைத்தையும் நான் அறிவேன் என்பதற்கு ஏற்ப வாழும் பேட்டை பிஸ்தா நம் கதாநாயகன் தீனதயாளன் , அவரின் சிஷ்யர் முத்து கிருஷ்ணன் (தியாகராஜன் ),

    அவன் இன்றி ஒரு அணுவும் அசையாது என்பதை பறை சாற்றும் விதமாக , தீனதயாளன் கண் அசைந்தால் மில் வேலை நிறுத்தம் நடக்கிறது , மீண்டும் மில் நடக்கிறது

    இது அனைத்திற்கும் காரணம் திரு தீனா, சுருகம்மாக GODFATHER .

    தன்னை வளர்க வாழ்கையை எழந்த மேரி (பண்டரி பாய் ) மீது மிகுந்த அன்பு , மரியாதை , பக்தி செலுத்துகிறார் தீனா , அவரை சந்திக்கும் பொது மட்டும் நல்ல பிள்ளையாக இருக்கிறார் , வெளியே அவர் ஒரு சிம்ம சொப்பணம்
    இவரின் இருட்டு வாழ்கை தெரியாமல் வாழுகிறார் சுஜாதா (அவர் மனைவி மற்றும் மகள் (அம்பிகா ))
    தன் நண்பரின் மகளை விரும்பிகிறார் முத்து கிருஷ்ணன் , கல்யாணம் செய்து வைக்கிறார் தீனா , மகளின் விருப்பம் படி கல்யாணம் செய்து வைக்கிறார் (மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்றாலும் , மனைவியின் விருபத்துகாக)

    முத்து கிருஷ்ணன் தீனாவை over take செய்ய நினைத்து , அது முடியாமல் போகவே , தீனாவின் மாப்பிள்ளை கெட்டவர்கள் உடன் சேர்ந்து ,

    இப்படி முன்முனை பிரச்சனைகளை எப்படி எதிர்கொண்டு வெற்றி அடைகிறார் என்பதே கதை .

  9. #1297
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இந்த படத்தில் நடிகர் திலகத்தின் பாத்திர படைப்பு கனகட்சிதம் , ஆனால் மிச்ச பாத்திர படைப்பு முழுமையாக இல்லை
    அதனால் நான் நடிப்பு கடவுளின் நடிப்பை பற்றி மட்டுமே எழுதி உள்ளேன்

    முதலில் அவர் தமிழ் , நடிகர் திலகம் எப்படி பேசுவார் , அவர் மொழி புலமை எப்படி என்று நான் எழுதினேன் என்றால் என்னை போன்று ஒரு முட்டாள் இருக்க மாட்டார்கள் , ஆனால் இந்த படத்தில் அவர் தமிழ் ஒரு type of broken சென்னை கொச்சை தமிழ்.
    அதை அவர் பேசும் விதம் டாப் , அதுவும் அவர் முத்து கிருஷ்ணா என்று அழைக்கும் தொனி இருகிறதே இப்பவும் என் காதில் ஒலித்து கொண்டே இருக்கிறது , அந்த அழைக்கும் விதத்தில் தான் என்ன ஒரு அலட்சியம் , அப்பப்பா
    அடுத்தது அவர் உடை - சும்மா வா வாசு சார் நடிகர் திலகத்தின் உடைகளை பற்றி தொடர் எழுதி உள்ளார் , இந்த படத்தில் அவர் பட்டு வேஷ்டி அணிந்து , பனியன் தெரிய கலர் ஜிப்பா அணிந்து நிற்கும் பொது அசல் தாதா.

    கிருஷ்ணா பரமாத்மக்கு தெரியாத தர்மம் இல்லை , ஆனால் அதை அடைய , நிலை நாட்ட அவர் சில சூழ்ச்சியை செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம் , கிருஷ்ணா பரமாத்மா ஒரு விஷியத்தை அணுகும் முறை மிகவும் வித்தியாசமாக இருக்கும்
    அதே முறை தான் நம் தீனா செல்லும் வழி , உதரணத்துக்கு தன் மனைவிடம் தவறாக நடக்க முயற்சித்த முறை மாமன் உடன் நட்புடன் நடந்து கொண்டு மனைவி கிட்ட வாங்கி கட்டி கொளுகிறார் , அதற்கு அவர் சொல்லும் காரணம் - பலே பாண்டியா

    அம்மாவிடம் பேசும் பொது - யசோதை கண்ணன் உடன் இப்படி தான் பேசி இருப்பரோ என்று தோன்றுகிறது ,அதுவும் தீனா தன் தாயிடம் தான் கல்யாணம் செய்து கொள்ள போகிறேன் என்று சொன்ன உடன் அவர் கேட்கும் பாங்கு அடக்கத்தின் உச்சம் , அதற்கு அவர் 1 ருபாய் coin யை காட்டி அதை போல் நான் என் இருட்டு பக்கத்தை காட்ட மாட்டேன் என்று உறுதி மொழி கொடுக்கும் பொது , சபாஷ் சுந்தரம் சார்

  10. #1298
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இந்த படத்தில் நாம் நடிகர் திலகத்தின் expressions நிறையாக பார்க்கலாம் , உதரணமாக அவர் கோதாவில் குதிக்கும் பொது cigarette உடன் கை யை சொடுக்கும் பாங்கை காண கண் கோடி வேண்டும் ,
    தன்னை வளர்த்த அன்பு தெய்வம் மரணம் அடையும் நொடி அவர் முகத்தில் தான் எத்தனை பாவங்கள் , அதுவும் அவர் தாய் இறந்த உடன் கையை மேலே உயர்த்தி அவர் கொடுக்கும் reaction , டாக்டர் உடன் அவர் பேசும் வசனம் You are too late doctor , நான் நல்லது செய்தலும் , கெட்டது செய்தலும் என்னை ஆசிர்வாதம் செய்யும் கை , நீ இல்லாமல் நான் கோழை ஆகி விட்டேன் அவர் பொலம்பும் இடம் - நெஞ்சை கனக்க வைக்கிறது - நடிகர் திலகத்தால் , ஆம் எங்கள் நடிகர் திலகத்தால் மட்டுமே முடியும்

    முத்து கிருஷ்ணன் தன்னை வளர்த்த தாயின் மரணத்துக்கு இடாக பணம் வங்கி வந்து , நிற்கும் பொது , அவர் கண்டிப்பதும் , அவர் முகத்தில் தெரியும் அப்பட்டமான ஏமாற்றம் பிரதிபலிகிறது .


    தன் அம்மாவின் மரணத்துக்கு காரணமான சங்கலி முருகனை அவர் கை ஆளும் விதம் " don 't angry me "

    அதுவும் அவர் மனைவி இருக்கும் போதே அந்த மனிதர் யை காலி செய்யும் விதம் சபாஷ் போட வைக்கிறது (அதுவும் சகுந்தலாக்கும் இதே வயசு தான் இருக்கும் , அதை அவர் சொல்லும் assault விதமும் ரசிக்க வைக்கிறது )
    தான் வளர்த்த பையன் முத்து கிருஷ்ணன் தன்னை மீறி பேசும் பொது ஆத்திரம் கொண்டு அடிக்கும் இடத்தில - ரௌத்திரம் , உண்மையில் தியாகராஜன் அடி வாங்கி இருப்பாரோ , அடித்து முடித்த உடன் பதட்டம் குறையாமல் கை நடுக்கத்துடன் cigarette யை எடுத்து பற்ற வைத்து , ஐயா பேச்சு தான் final , இங்கே ஐயா பேச்சுக்கு second opinion கிடையாது என்று சொல்லி விட்டு , அப்படியே போயிடு என்ற உடன் தியாகராஜன் crawl செய்து அந்த frame ல் இருந்து வெளி போகும் காட்சி heights of heroism - well crafted சீன். அடித்து விட்டு அவர் cigarette யை வைத்து கொண்டு அழும் காட்சி, இவன் இப்படி செய்து விட்டானே என்ற ஏமாற்றத்தினால் வந்த ஆத்திரத்தின் அப்பட்டமான பிரதிபலிப்பு
    அவசரத்தில் கை நீட்டி அடித்து பின் அந்த முத்து கிருஷ்ணனின் மனைவி கிட்ட அதை விளக்கும் காட்சி , அதில் அவர் action - 1 பூங்கொத்து parcel அவர் நடிப்பு

    எதிரிகள் பலம் கூட தீனா வீழ்வார் என்று எதிர்பார்த்தால் , அவர் அப்படியே இருக்கார் , இது தான் சூப்பர் twist - காரணம் நாம் எதிர் பார்க்கும் விஷயம் நடக்காமல் வேறு ஒன்று நண்ட்தால் தான் படம் பார்க்கும் நபர்களுக்கு ஒரு கிக் .
    அதுவும் bullet proof அணிந்து தப்பித்த உடன் எதுவுமே ஆகவில்லை என்ற கெத்து உடன் அவர் எந்திரிக்கும் காட்சி , நேராக முத்து கிருஷ்ணன் இருக்கும் இடத்தில(முத்து கிருஷ்ணன் ஐயாவை போல் அவர் வேடம் அணிந்து கொண்டு பேசுவதை பார்த்ததும் ) அவர் கர்ஜிக்கும் காட்சியில் சிங்கம் தான்

    கோர்ட் காட்சியில் பராசக்தி , கெளரவம் reference வரும் பொது ஒரு smile வருவதை மறுக்க முடியவில்லை

  11. #1299
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இப்படி பட்ட சிங்கத்தின் மறுபக்கம் இருபதோ ஒரு பசுவின் குணம்

    மனைவி உடன் அவர் கோவில்க்கு செல்லும் பொது , தன் மனைவியின் மாமா உடன் பேசி மனைவி பார்த்த உடன் பயப்படும் காட்சி , அதற்கு அவர் சொல்லும் விளக்கம் , மகள் காதலிப்பது தெரிந்ததும் light ஆக எடுத்து கொண்டு handle செய்யும் விதம் , தன் மகளின் காதலன் சரி இல்லை என்பதை அறிந்து அதை தன் மனைவி கிட்ட சொல்லும் விதம் , அதற்கு அவர் (மனைவி ) மதிப்பு கொடுக்காமல் இருந்தது அதனால் பிரச்சனை வந்த உடன் மகளை மட்டும் தான் கண்டிக்க முடியும் என்று சொல்லும் வார்த்தை அதே மகள் , மற்றும் தாய் பிரச்சனை என்று வந்த உடன் அவர் (தீனா ) மீது பழி போடும் பொது அவர் மகள் காதலித்த விஷியத்தை ஏன் அப்படி handle செய்தார் என்ற காரணத்தை அவர் விவரிப்பதும் , மனைவி என் அப்பொழுதே சொல்ல வில்லை என்ற உடன் அவர் சொல்லும் காரணமும் , உலகத்தை எடை போட்டவரின் வாயில் இருந்து வரும் அனுபவ முத்து
    கிருஷ்ணர் பற்றி சொல்லி விட்டு குசேலன் episode வரவில்லை என்றால் எப்படி , அதுவும் வருகிறது VS ராகவன் வடிவத்தில் . கடைசி காட்சியில் அவர் நடிப்பை பற்றி பேசும் வசனம் , அவர் மட்டுமே பேச கூடிய வசனம்

    இது அதனையும் இருந்தும் இந்த படம் என் வரவேற்பு பெற வில்லை என்றால் என்னக்கு தெரிந்த காரணம் சிவாஜி சாரின் அபார நடிப்பில் மீது ஒரு கோட்டை எழுப்பி தூண்களை (மிச்ச நடிகர்களின் பாத்திரம் ) சரியாக செதுக்க வில்லை என்றது தான் எனக்கு தெரிந்த காரணம்

  12. #1300
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Ravi sir,

    A different perspective on moondru deivangal superb sir, continue but you could have posted ,more(technical fault what to do)

    Iam asking it because , I was enjoying your moondru deivangal very much thats why
    Last edited by ragulram11; 18th February 2014 at 10:23 PM.

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •