-
19th February 2014, 04:30 AM
#11
Senior Member
Seasoned Hubber
அஜித்தின் சம்பளம்
IndiaGlitz [Monday, February 17, 2014] Comments
கெளதம் மேனன் இயக்கத்தில் நடிக்கப்போகும் படத்துக்கு அஜித் வாங்கப்போகும் சம்பளம் எவ்வளவு என்பதுதான் கடந்த சில நாட்களாக திரைப்பட ஊடகங்களில் தலைப்பு செய்தி. அஜித்தை வைத்து ஆரம்பம் என்ற சூப்பர் ஹிட் படத்தைத் தயாரித்த ஏ.எம்.ரத்னம்தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Ajith Salary
ஆரம்பம். வீரம் என்று அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்திருக்கும் அஜித் தன் சம்பளத்தை 28 கோடியாக உயர்த்திவிட்டதாகவும் ஏ.எம்.ரத்னமும் அதைத் தரச் சம்மதித்துவிட்டதாகவும் இன்று ஒரு செய்தி வெளியானது.
இதை உறுதிபடுத்திக்கொள்ள அஜித்துக்கு நெருங்கிய வட்டாரத்தில் உள்ள ஒருவரிடம் பேசினோம். கெளதம் மேனன் இயக்க, ஏ.எம்.ரத்னம் தயாரிக்க இருக்கும் படத்தில் நடிக்க அஜித் வாங்கவிருக்கும் சம்பளம் ரூபாய் 25 கோடி என்பதை உறுதி செய்தார் அவர். மேலும் இந்தச் சம்பளம் அஜித்துக்கும் ரதனத்துக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளதாம்.
சம்பள விஷயத்தில் எப்போதுமே இந்த வெளிப்படைத்தன்மையை பின்பற்றும் அஜித் வருமான வரியிலிருந்து தப்ப வேண்டும் என்பதற்காக சம்பளத்தின் ஒரு பகுதியை திரைமறைவில் வாங்கிக்கொள்ளும் பழக்கத்தை எப்போதுமே கடைபிடித்ததில்லை என்கிறார் அந்த நபர். இதனால்தான் அஜித் ஒரு படத்துக்கு வாங்கும் சம்பளம் என்ன என்பது அனைவருக்கும் எளிதாகத் தெரிந்துவிடுகிறது என்றும் கூறினார் அவர்.
அஜித்தின் நேர்மையை பாராட்ட வார்த்தைகள் இல்லை...! .
-
19th February 2014 04:30 AM
# ADS
Circuit advertisement
Bookmarks