-
19th February 2014, 07:47 PM
#11
Administrator
Platinum Hubber
கோலாலம்பூர், பிப்ரவரி 19 -உலகின் மிகப் பிரபலமான, செழுமையான திரைப்பட இசையமைப்பாளர் என ‘டைம்’ சஞ்சிகையால் புகழாரம் சூட்டப்பட்டவரும், ‘ஸ்லம் டோக் மில்லெனியர்’ திரைப்படத்திற்காக இரு அகெடமி விருதுகளை வென்றவருமான இசையுலகின் சகாப்தம், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், கோலாலம்பூரில் பிரமாண்டமான ஓர் இசை இரவை மலேசிய ரசிகர்களுக்காக படைக்கவுள்ளார்.
செவிக்கினிய ஒலியும், விழிக்கிதமான ஒளியும் சங்கமிக்கும் ‘ஏ.ஆர்.ரஹ்மானின் எல்லையற்ற அன்பு’ எனும் இந்த இசை இரவு, ஏப்ரல் 26-ஆம் தேதி, சனிக்கிழமை, மெர்டேக்கா விளையாட்டு அரங்கில் இரவு மணி 7.30-க்கு நடைபெறவுள்ளது.
கடந்த 2003-ஆம் ஆண்டு, ‘யுனிட்டிஒப்லைட்’ இசை இரவில் மலேசிய ரசிகர்களை இசை வெள்ளத்தில் மூழ்கடித்த ஏ.ஆர் ரஹ்மான், அதன்பின் கடந்த பத்தாண்டுகளாக மலேசியாவில் இசை நிகழ்ச்சியைப் படைக்கவில்லை.
எனவே, ‘ஏ.ஆர்.ரஹ்மானின் எல்லையற்ற அன்பு’ இசை இரவில் மலேசிய ரசிகர்களின் இசை தாகத்தைத் தணிக்க ஆவலோடு காத்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
Dml live நிறுவனம் பெருமையுடன் படைக்கும் இந்த இசை இரவு சுமார் 3 மணி நேரத்திற்கு ரசிகர்களை ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பிரபல தமிழ், இந்தி பாடல்களால் வசப்படுத்தவுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசைக் குழுவோடு, பிரபல பின்னணிபாடகர்கள் மோஹிட் சாவ்ஹான், ஜாவெட் அலி, மனோ, சித்ரா, விஜய் பிரகாஷ், நீதி மோஹன்,ஹஷ்டீப்கோர், ஸ்வேத்தா பண்டித் ஆகியோர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தாங்கள் பாடிய புகழ் பெற்ற பாடல்களை இந்த இசை இரவில் படைக்கவுள்ளனர்.
உலகம் முழுவதையும் தனக்குள் கட்டிப்போடும் வல்லமை இசைக்கு மட்டுமே உண்டு. அத்தகைய இசை வரத்தைப் பெற்றுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் தனது மெல்லிசையால் உலக மக்களின் உள்ளங்களை வசியம் செய்து வருகிறார் என dml live நிறுவனத்தின் புரவலரும், தலைமை செயல் முறை அதிகாரியுமான கீர்த்திவாசன் சுப்ரமணியம் குறிப்பிட்டுள்ளார்.
மலேசியாவுக்கு வருகைப்புரியும் ஆண்டை முன்னிட்டு அரங்கேறவுள்ள இந்த மாபெரும் இசைவிருந்து, உலகம் முழுவதுமுள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகர்களை மலேசியாவில் ஒன்றிணைக்கும் நிகழ்வாக அமையுமென malaysia major events-சின்நிர்வாகி டோனி நாகமய்யா கூறுகிறார்.
கடந்த பத்தாண்டுகளாக மலேசிய மண்ணில் எந்த இசை நிகழ்ச்சியையும் ஏ.ஆர்.ரஹ்மான் படைக்காத நிலையில், இம்முறை அவர் மலேசிய ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் இசை மழையைப் பொழிவார் என்பது திண்ணம் என்கிறார் rapport global events-சின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான தீபக் கத்தானி.
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
19th February 2014 07:47 PM
# ADS
Circuit advertisement
Bookmarks