- 
	
			
				
					19th February 2014, 12:08 PM
				
			
			
				
					#1311
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			
			
				  
 
 
			
				
				
						
							
							
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  g94127302  
 பகுதி 3 - மூன்று தெய்வங்கள் 
 
 இந்த  படத்தில் எனக்கு பிடித்த காட்சிகள்
 
 
 1.     சிவகுமார் , சந்திரகலாவை சந்திக்க  வந்த சமயத்தில் சிவாஜி , முத்துராமன் , நாகேஷ் மூவரும் சேர்த்து பண்ணும் லூட்டி நகைச்சுவைக்கு  சிகரம் வைத்தது போன்று இருக்கும் .
 
 2  .    காதல் காட்சிகளில் சிவகுமாரும் , சந்திரகலாவும் ஓடுகிற ஓட்டத்தை விட ஒளிப்பதிவாளர்  K .S Prasad ஓடியிருக்கும் ஓட்டம் பார்பதற்க்கு கவர்ச்சிகரமாக இருக்கும்
 
 3.         பாடல்கள் , இசை , சிவாஜியின் புதுமையான , இளமையான நடிப்புடன் , நகைச்சுவையும்  சரியான விகிதத்தில் கலந்து படத்தை வெற்றிகரமாக உருவாக்கி உள்ளனர்
 
 
 
 A very nice film... Babu padathula pizhiya pizhiya vara emotions ithula just like that vanthudum... neghizha vaiththa padam.... since the positives are all analyzed, I would like to tell few negatives
 
 1. The color of the film kind of gave it a dull look (i think all color films of this era would have been like this... unlike the rich eastmen color that came prior to this era like pudhiya paravai, anbe vaa etc.,)
 
 2. Nagesh role la konjam negative shades thookala irukkum..compared to the other two protoganists
 
 
 
 
 
 
 
- 
		
			
						
						
							19th February 2014 12:08 PM
						
					
					
						
							 # ADS
						
					
			 
				
					
					
						Circuit advertisement
					
					
					  
 
 
 
 
- 
	
			
				
					19th February 2014, 02:50 PM
				
			
			
				
					#1312
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Senior Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							Dear Ravi:
 
 Your analysis of "Moondru Deivangal" and 'Praptham" were simple and eloquent.
 
 In the company I worked earlier, I used to have an NT Fan.  He is a good singer and told me that he sang "Nethup paricha Roja" from Praptham and got prize in school.
 
 Praptham is actually a remake of a Telugu movie starring the late ANR along with Savitri and Jamuna (Jamuna repeated her role in its remake in Hindi "Milan" while Chandrakala did the role in Tamil), which was one the all time hits of ANR.
 
 Praptham didn't click basically for two reasons - Savitri looked too old and bloated (she has been throughout of course!) for a relatively young looking NT at that time.  Moogamanasulu depicted the story along the banks of Godavari river (there was a famous song "Godaari gattundhi" for which "Maargazhi maadham idhu mun panikkaalam" was in Tamil) and the hero used to be the boatman.  AP has two very big rivers in Krishna and Godavari and there used to be several movies around these rivers and about boatmen while in TN, the culture of finding boatmen everywhere is somehow not there and that's why Tamil people couldn't relate to while they can to other professions like drivers, fishermen, etc.
 
 Please continue to enthrall us.
 
 Regards,
 
 R. Parthasarathy
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					19th February 2014, 04:37 PM
				
			
			
				
					#1313
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							எம்.ஜி.ஆருக்கு பாடல் எழுதியபோது சிவாஜிக்கும் பாடல் எழுதினார், வாலி!  பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 14, 9:39 pm ist
 
 எம்.ஜி.ஆரின் ஏராளமான படங்களுக்கு வாலி பாடல் எழுதிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் (1964), சிவாஜி படங்களுக்கும் பாட்டு எழுத அழைப்பு வந்தது.
 
 சிவாஜியின் அன்பைப் பெற்றவரும், அவருடைய நீண்ட கால குடும்ப நண்பருமான பெரியண்ணன், தனது சாந்தி பிலிம்ஸ் சார்பாக "அன்புக்கரங்கள்'' என்ற படத்தை தயாரிக்க முடிவு செய்தார். படத்தின் கதாநாயகன் சிவாஜிதான். அப்படத்துக்கு வாலி பாடல் எழுதவேண்டும் என்று பெரியண்ணன் விரும்பினார்.
 
 வாலியை அழைத்துச்சென்று சிவாஜியிடம் அறிமுகம் செய்தார்.
 
 அதன்பின் நடந்தது பற்றி வாலி கூறியதாவது:-
 
 "கணேசு! இவருதான் வாலி. நம்ம ஊர்க்காரர். திருச்சி'' என்று, சிவாஜியிடம் பெரியண்ணன் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார்.
 
 அப்போது நான் ஏகப்பட்ட எம்.ஜி.ஆர். படங்களுக்கு பாடல்கள் எழுதிக் கொண்டிருப்பது சிவாஜிக்குத் தெரியும். அதன் காரணமாக, என்பால் அவருக்கு ஒரு எரிச்சல் இருக்கக்கூடும் என்று எண்ணினேன்.
 
 ஆனால் என் எண்ணத்திற்கு மாறாக, சிவாஜி சிரித்த முகத்தோடு "வாங்க'' என்று என் வலக்கரத்தில் தன் வலக்கரத்தை கோத்து வரவேற்றார்.
 
 1964-ல் ஆரம்பமான இந்த அறிமுகம், பிறகு நான் 60 சிவாஜி படங்களுக்கு பாடல்கள் எழுத ஓர் ஆரம்பமாக அமைந்தது.
 
 `பராசக்தி' காலத்திலிருந்தே சிவாஜியின் நடிப்பில் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்த நான் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றக் கூட்டங்களில், சிவாஜியை விமர்சித்துப் பேசவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானதுண்டு.
 
 இதுகுறித்து சிவாஜிக்கு மனத்தளவில் என்பால் ஒரு கசப்புணர்வு மெல்லியதாய் பரவியிருந்தபொழுதும், அவர் படங்களுக்கு நான் பாடல் எழுதக்கூடாது என்றெல்லாம் தடை விதிக்கக்கூடிய குறுகிய கண்ணோட்டம் அவரிடம் இருந்ததில்லை.
 
 தனிப்பட்ட முறையில் சிவாஜியும், எம்.ஜி.ஆரும் ஆரத்தழுவி அன்பு பாராட்டும் நண்பர்களாக இருந்தபோதும், தொழில் ரீதியாக அவர்களுக்கிடையே ஒரு போட்டி மனப்பான்மை இருந்தது முக்காலும் உண்மை.
 
 சிவாஜி நடிக்கும் `அன்புக்கரங்கள்' படத்திற்கு நான் பாடல்கள் எழுதுவதாக, என் பெயரைத்தாங்கிய முழுப்பக்க விளம்பரம் நாளேடுகளில் வெளியான அன்று `தாழம்பூ' படப்பிடிப்பில், நான் எம்.ஜி.ஆரைத் தற்செயலாக சந்திக்க நேர்ந்தது.
 
 என்னைப் பார்த்தவுடன், "உங்க `அன்புக்கரங்கள்' எப்ப ரிலீஸ்?'' என்று எம்.ஜி.ஆர். புன்னகைத்தவாறு என்னிடம் கேட்டார்.
 
 "உங்க அன்புக்கரங்களில் இருந்து, என்றைக்குமே எனக்கு ரிலீஸ் கிடையாது'' என்று நான் சொன்னதும் எம்.ஜி.ஆர். நெகிழ்ந்து போனார்.
 
 பிற்காலத்தில், தமிழக முதல்-அமைச்சராக எம்.ஜி.ஆர். பதவி வகித்தபோது, புயல் - வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, நட்சத்திரங்கள் நிதி திரட்டினார்கள். 5 முக்கிய நகரங்களில் எம்.ஜி.ஆர். தலைமையில் அனைத்துப் பிரபல நடிகர்களும் பங்கு பெறும் வகையில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடாகியிருந்தன.
 
 திருநெல்வேலியில் நடந்த கலை நிகழ்ச்சிக்கு எம்.ஜி.ஆர். தலைமை வகிக்கையில், நான் அவருக்குப் பக்கத்து இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்தேன்.
 
 அமைச்சர்கள் காளிமுத்து, எட்மண்ட் முதலானோர் பின் வரிசையில் அமர்ந்திருந்தார்கள்.
 
 "அசோக சக்ரவர்த்தியின் கலிங்கத்துப்போர்'' என்னும் ஓரங்க நாடகத்தில் -சிவாஜி அவர்கள் சாம்ராட் அசோகனாக மேடையில் தோன்றி, அற்புதமாக நடித்தார்.
 
 இந்த ஓரங்க நாடகம், முரசொலி மாறன் "அன்னையின் ஆணை'' படத்திற்காக எழுதியது. சிவாஜி அவர்கள் தனக்கே உரித்தான வசன உச்சரிப்பாலும், வியத்தகு நடிப்பாலும், வெகுவாகப் பலரையும் கவர, நான் உடனே எம்.ஜி.ஆரிடம் சொன்னேன்:
 
 "அண்ணே! சிவாஜி மாதிரி ஒரு நடிகர், இந்த சகாப்தத்திலே வேறு யாருமில்லை... என்ன நடிப்பு பார்த்தீங்களா?'' என்றேன்.
 
 "சிவாஜிக்கு அடுத்ததாக நடிகர் முத்துராமனையும் சொல்லலாம்...'' என்றார் எம்.ஜி.ஆர்.
 
 பிறகு, எம்.ஜி.ஆர். தலைமை வகித்துப் பேச மேடைக்குச் சென்றுவிட்டார்.
 
 உடனே, என் பின்னே அமர்ந்திருந்த அமைச்சர் எட்மண்ட், "என்னங்க வாலி! சிவாஜி நடிப்பைப் புகழ்ந்து எம்.ஜி.ஆர்.கிட்டயே பேசிட்டீங்களே... உங்களப்பத்தி, தப்பா நினைச்சுக்கப் போறாரு...'' என்று என்னிடம் சொன்னதும்தான், நான் நாகரிகக் குறைவான முறையில் நடந்து கொண்டுவிட்டேனோ என்னும் சந்தேகம் என்னைத் தொற்றிக் கொண்டது. இருப்பினும், எம்.ஜி.ஆர். அதைத் தவறாக எடுத்துக்கொள்ளாமல், என்னிடம் தொடர்ந்து அன்பு குறையாமலே பழகினார்.
 
 எப்பொழுதுமே நான் ஒளிவு மறைவின்றிப் பேசியதாலேயே, என்னை எம்.ஜி.ஆர். விரும்பினார் என்று நான் நினைக்கிறேன்.
 
 எம்.ஜி.ஆர். அறிய, சிவாஜியைப் பாராட்டியது போல் -சிவாஜி அறிய நான் எம்.ஜி.ஆரைப் பாராட்டும் சந்தர்ப்பமும் ஏற்பட்டது.
 
 எம்.ஜி.ஆர். முதல்வராகப் பதவியேற்றதும், அவருக்கு ஒரு பாராட்டு விழா நடத்த நடிகர் சங்கம் தீர்மானித்தது. வாழ்த்து மடல் ஒன்றை வாசித்துக் கொடுக்கவும் ஏற்பாடாயிற்று.
 
 அப்போது நடிகர் சங்கத்தின் தலைவராயிருந்த சிவாஜி, சங்கத்தின் செயலாளராயிருந்த மேஜர் சுந்தர்ராஜனை என்னிடம் அனுப்பி, எம்.ஜி.ஆரைப் பாராட்டி வாசித்தளிக்கும் வாழ்த்து மடலை எழுதி வாங்கி வரச்சொன்னார்.
 
 அந்த வாழ்த்து மடலில், எம்.ஜி.ஆரின் இனிய பண்புகளையும், இயல்பான நடிப்பையும் மிகவும் சிலாகித்து நான் எழுதியிருந்தேன். படித்துவிட்டு, சிவாஜி, புன்னகைத்தாரே தவிர பொருமினார் இல்லை.''
 
 இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					19th February 2014, 04:57 PM
				
			
			
				
					#1314
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							ஆரூர்தாசுக்கு சிவாஜி, எம்.ஜி.ஆருடன் ஏற்பட்ட உரசல்கள்!
 
 பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 24, 6:14 pm ist
 
 
 சிவாஜி கணேசனுக்கும், எம்.ஜி.ஆருக்கும் ஒரே சமயத்தில் அதிக படங்களுக்கு வசனம் எழுதியவர் என்ற பெருமை பெற்ற ஆரூர்தாசுக்கு, அவர்களுடன் மோதல்களும் ஏற்பட்டன! சிவாஜியிடம் ஒரு கதையை ஆரூர்தாஸ் கூறி இருந்தார்.
 
 ஆனால், அந்த கதையை படமாக எடுப்பது பற்றிய அறிகுறியே இல்லாமல் இருந்தது. இந்த நிலையில், ஆரூர்தாசை எம்.ஜி.ஆர். அவசரமாக அழைத்தார். 'முத்துக்குமரன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நான் நடிக்க இருக்கிறேன். ஒரே வாரத்தில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. கிருஷ்ணன் - பஞ்சு டைரக்ஷனில் இப்படம் தயாராவதால், வித்தியாசமான கதையாக இருக்க வேண்டும். என்னுடன் சரோஜாதேவியும், எம்.ஆர்.ராதா அண்ணனும் நடிக்கிறார்கள்.
 
 அதற்குத் தகுந்த கதை வேண்டும்' என்றார். முன்பு சிவாஜிக்கு சொன்ன கதையை சொன்னார், ஆரூர்தாஸ். கதை எம்.ஜி.ஆருக்குப் பிடித்துவிட்டது. உடனே படப்பிடிப்பும் ஆரம்பமாகிவிட்டது. 9-12-1966-ல் வெளிவந்து, சக்கை போடு போட்டது. அதுதான் 'பெற்றால்தான் பிள்ளையா.' இந்தப் படத்தினால், சிவாஜிக்கும், ஆரூர்தாசுக்கும் மோதல் ஏற்பட்டது.
 
 அதுபற்றி ஆரூர்தாஸ் கூறியதாவது:-
 
 'சிவாஜியிடம் நான் சொன்ன கதைக்கு அவர் பதில் எதுவும் சொல்லாததால் அதை எம்.ஜி.ஆரிடம் சொன்னேன். 'பெற்றால்தான் பிள்ளையா' என்ற பெயரில் அது படமாக வெளிவந்து வெற்றி பெற்றது. படம் வெளிவந்த ஒரு வாரத்தில், ஒரு நாள் மாலை சிவாஜி என்னை அழைத்தார். நானும் சென்றேன். 'முன்பு என்னிடம் சொன்ன அந்த கதைதானே, இப்பொழுது ஓடிக்கொண்டிருக்கும் பெற்றால்தான் பிள்ளையா' என்று கேட்டார், சிவாஜி. நானும், 'ஆமாம்' என்றேன்.
 
 அதற்கு சிவாஜி, 'கதை நன்றாக இருக்கிறது, சண்முகத்திடம் சொல்லி சிவாஜி பிலிம்ஸ்சில் புதிய பறவை போல ஈஸ்ட்மென் கலரில் எடுக்கலாம் என்று என் விருப்பத்தை தெரிவித்தேனே!
 பிறகு எப்படி எம்.ஜி.ஆரிடம் அந்தக் கதையை சொல்லலாம்? உனக்கு நான் என்ன கெடுதல் செய்தேன்? எனக்குத் தெரியாமல் நீ என்ன பண்ணிவிடுவாய் என்று நம்பி பேசாமல் இருந்துவிட்டேன்.
 நீ எனக்கு துரோகம் பண்ணிவிட்டாய்' என்றார்.
 
 அதற்கு நான் 'சத்தியமா நான் அப்படி இல்லை. நான் கதை சொல்லி பல நாள் வரை நீங்கள் எதுவுமே சொல்லவில்லை.
 
 இந்த சந்தர்ப்பத்தில்தான், உடனே படம் பண்ணவேண்டும் என்று எம்.ஜி.ஆர். கதை கேட்டார். சும்மா அந்த கதையைச் சொன்னேன். அதில் ஆக்டிங் பார்ட் அதிகம். ஆக்ஷன் பார்ட் குறைவு. அதனால் அவருக்கு அது பிடிக்காது என்று நினைத்தேன். நான் நினைத்தது நேர்மாறாகிவிட்டது. கதை அவருக்குப் பிடித்து விட்டது. என்னை மன்னித்து விடுங்கள். அதைவிட நல்லதா வேறு ஒரு கதை சொல்கிறேன்' என்றேன்.
 
 உடனே சிவாஜி 'எனக்கு தேவை இல்லை. அதையும் உன் எம்.ஜி.ஆரிடம் சொல்லி காசு வாங்கிக்கொள்.
 இதோ பார்! இந்த நிமிஷம் முதல், எனக்கும் உனக்கும் பேச்சுவார்த்தை இல்லை.
 இனி என் படத்திற்கு நீ எழுதக்கூடாது என்று நானாக என் வாயால் சொல்லமாட்டேன்.
 அது டைரக்டர், தயாரிப்பாளர் விருப்பம்.
 என்னை வைத்து நீ இல்லை, உன்னை வைத்து நான் இல்லை' என்றார், கோபத்துடன்.
 
 அதன்பிறகு, 3 மாதம் வரை இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை. திருலோகசந்தரின் எல்லாப் படங்களுக்கும் நான்தான் வசனம் எழுதி வந்தேன். அவர் சிவாஜியை வைத்து, தங்கை என்ற படத்தை எடுத்தார். அதற்கும் நான்தான் வசனம் எழுதினேன். சிவாஜியுடன் கருத்து வேற்றுமை ஏற்பட்ட காலகட்டம் இது.
 
 எனவே, தங்கை படப்பிடிப்பு நடந்தபோது, சிவாஜியை சந்திப்பதை தவிர்த்தேன். தங்கை வெளியாகி வெற்றி பெற்றது. அதன்பின், சிவாஜி, பத்மினி, கே.ஆர்.விஜயா நடித்த 'இரு மலர்கள்' என்ற படத்தை திருலோகசந்தர் எடுத்தார். அப்படத்துக்கும் நான்தான் வசனம் எழுதினேன்.
 
 ஒரு நாள் படப்பிடிப்பின்போது, நானும், சிவாஜியும எதிர் எதிரே சந்தித்துக் கொண்டோம். ஒரு கணம திகைத்து நின்றோம்.
 பிறகு நான் ஒதுங்கி நடக்கத் தொடங்கியபோது, அவர் என் கையைப் பிடித்து நிறுத்தினார்.
 
 'டேய்! அண்ணன் தம்பிகிட்ட கோபப்பட்டுக்கிட்டு பேசாமல் இருக்கலாம். ஆனால் தம்பி அண்ணனுடன் பேசாமல் இருக்கக்கூடாது' என்று கூறிவிட்டு, அவரே தொடர்ந்து 'சாரி! ஐயம் வெரி சாரி பழசையெல்லாம் மறந்துவிடு!' என்றார்.
 
 நான் கண்ணீர் விட்டுக் கதறினேன். அவர் என்னை தழுவிக்கொண்டார். அதன்பின் அவரது சொந்தப்படமான 'தெய்வ மகன்' முதல் 'அன்புள்ள அப்பா' வரை அவர் நடித்த பல படங்களுக்கு நான் வசனம் எழுதினேன்.
 
 ஆனால், 'பெற்றால்தான் பிள்ளையா'வுக்கு பிறகு, எம்.ஜி.ஆருக்கு நான் எந்தப் படத்துக்கும் வசனம் எழுதவில்லை என்பதுதான் ஆச்சரியம்!' இவ்வாறு ஆரூர்தாஸ் கூறினார்.
 
 தி.மு.க.வை விட்டு எம்.ஜி.ஆர். விலகி, 'அ.தி.மு.க'வை தொடங்கிய பிறகு, தன் கட்சிக்காரர்கள் கட்சி சின்னத்தை கையில் பச்சை குத்திக்கொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டார்.
 ஆரூர்தாசையும் பச்சை குத்திக்கொள்ளும்படி, கட்சிப் பிரமுகர் ஒருவர் கூறினார்.
 
 அவர் மறுத்துவிட்டார். இதுபற்றி ஆரூர்தாசிடம் எம்.ஜி.ஆர். விசாரித்தார்.
 'ஹிட்லர், முசோலினி, ஸ்டாலின் போன்ற சர்வாதிகாரிகள் கூட, இப்படி கையில் பச்சை குத்திக்கொள்ளும்படி கட்டளையிடவில்லை. உங்கள் மீது நான் வைத்திருக்கும் அன்புக்காக, என் கையை அசிங்கப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை' என்றார் ஆரூர்தாஸ்.
 
 'என்னிடம் இருந்து நீங்கள் விலகிப்போகிறீர்கள் என்று நினைக்கிறேன்' என்றார், எம்.ஜி.ஆர்.
 
 'அதுதான் விதி என்றால், அதை யாராலும் தடுக்க முடியாது' என்று கூறி, எம்.ஜி.ஆரிடம் விடை பெற்றுக்கொண்டார், ஆரூர்தாஸ்.
 
 அதன்பிறகு, எம்.ஜி.ஆர். படங்களுக்கு வசனம் எழுதும் வாய்ப்பை ஆரூர்தாஸ் பெறவில்லை.
 
 
 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
	 
- 
	
			
				
					19th February 2014, 05:53 PM
				
			
			
				
					#1315
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			
			
				  
 
 
			
				
				
						
						
				
					
						
							nice piece of news...that we were / are in a period that some ppl considered even a genuine praise of a rival artiste as offending....tells the sorry state of affairs.....
						 
 
 
 
 
 
 
- 
	
			
				
					19th February 2014, 10:50 PM
				
			
			
				
					#1316
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Regular Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							Thiru ARURDOSS avargal cinimavin marupakkam endra thodaril thiru MGR avargalai mattume mayyamaga vaithu eluthukirar.Athai mgr avargalin marupakkam endru eluthalame.
						 
 
 
 
 
 
 
- 
	
			
				
					19th February 2014, 11:41 PM
				
			
			
				
					#1317
				
				
				
			
	 
		
		
			
				
				
						
						
				
					
						
							சில பல நாட்களுக்கு முன் மதுரை சென்றிருந்த போது நண்பா ஒருவர், நடிகர் திலகத்தின் ரசிகர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் நமது திரியின் silent reader. பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்த போது பொற்கால ஆண்டான 1964 பற்றியும் பேச்சு வந்தது. அந்த 1964-ல் சென்னை மாநகர சாதனைகளை பற்றி எழுதியிருந்தாயே நமது மதுரை பற்றி எழுதவில்லையே என்று எங்களுக்கே உரித்தான மண்பாசத்தோடு செல்லமாக கடிந்துக் கொண்டார். நான் அவரிடம் சென்ற வருடமே நடிகர் திலகத்தின் முறியடிக்க முடியாத மதுரை சாதனைகளின் பட்டியல் ஒன்றை பதிவு செய்திருந்ததை நினைவுபடுத்தினேன். அதில் 1964-ம் வருடம் வெளியான சிவாஜி படங்கள் மதுரையிலே புரிந்த சாதனைகளை மட்டும் மீண்டும் பதிவிடுமாறு கேட்டுக் கொண்டார். அவருக்காகவும் அப்போது படிக்க விட்டுப் போனவர்களுக்காகவும் மீண்டும் அந்த 64-ம் வருட சாதனை மட்டும் மீள் பதிவாய். அதை பதிவிடும் போது நூறு நாட்கள் படங்களைப் பற்றி மட்டும் பேசாமல் வெளியான அனைத்து நடிகர் திலகத்தின் படங்களின் ஓடிய நாட்கள் பற்றியும் சேர்த்திருக்கிறேன். உண்மை உரைக்க நமக்கு தயக்கம் இல்லாததால் உள்ளது உள்ளபடி.               
 
 பொற்கால ஆண்டான 1964-ல் பொன் விழா காவியங்கள் சென்னையில் மட்டுமல்ல மதுரையிலும் சாதனை படைத்தது.
 
 ஒரு Calender வருடத்தில் [ஜனவரி to டிசம்பர்] வெளியான ஒரு கதாநாயக நடிகரின் 4 படங்கள் 100 நாட்கள் ஓடுவது என்ற சாதனை நிகழ்வை மதுரை மாநகரிலே செய்துக் காட்டியவர் நடிகர் திலகம்.
 
 1964
 
 கர்ணன் - 14.01.1964 - தங்கம் - 108 நாட்கள்
 
 பச்சை விளக்கு - 03.04.1964 - சிந்தாமணி - 105 நாட்கள்
 
 கை கொடுத்த தெய்வம் - 18.07.1964 - சென்ட்ரல் - 108 நாட்கள்.
 
 நவராத்திரி - 03.11.1964 - ஸ்ரீதேவி - 108 நாட்கள்
 
 மதுரை மாநகரின் 83 வருட தமிழ் திரைப்பட சரித்திரத்திலே [1931 - 2014] இதை நடிகர் திலகம் மட்டுமே செய்துக் காட்டியிருக்கிறார். இதன் பெயர் சாதனை.
 
 ஏனைய மூன்று படங்கள்
 
 ஆண்டவன் கட்டளை - 12.06.1964 - நியூசினிமா - 70 நாட்கள் [தமிழகத்திலே அதிக பட்ச நாட்கள் - சென்னை பாரகனுக்கு இணையாக]
 
 புதிய பறவை - 12.09.1964 - சிந்தாமணி - 83 நாட்கள்.[தமிழகத்திலே இரண்டாவது அதிக பட்ச ஓட்ட நாட்கள். Second Highest Run].
 
 முரடன் முத்து - 03.11.1964 - சென்ட்ரல் - 52 நாட்கள்.
 
 ஆக சுருங்க சொன்னால் வெளியான படங்களின் quality-யில் மட்டுமல்ல படம் ஓடிய நாட்களின் வெற்றி quantity-யிலும் சக்கரவர்த்தி நானே என்பதை நடிகர் திலகம் சென்னையில் மட்டுமல்ல மதுரையிலும் நிரூபித்த வருடம் 1964.
 
 
 அன்புடன்
 
 
 
 
				
				
				
					
						Last edited by Murali Srinivas; 19th February 2014 at 11:43 PM.
					
					
				 
 
 
 
 
- 
	
			
				
					20th February 2014, 12:01 AM
				
			
			
				
					#1318
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							Dear Murali Sir,
 
 Thanks for establishing MAdurai record , I thought Pudhiya Paravai would have been Silver Jubilee little disappointed with it
 
 eagerly waiting either for your analysis or write up about theatre experiences
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					20th February 2014, 07:52 AM
				
			
			
				
					#1319
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  Murali Srinivas  
 
 பொற்கால ஆண்டான 1964-ல் பொன் விழா காவியங்கள் சென்னையில் மட்டுமல்ல மதுரையிலும் சாதனை படைத்தது.
 
 ஒரு Calender வருடத்தில் [ஜனவரி to டிசம்பர்] வெளியான ஒரு கதாநாயக நடிகரின் 4 படங்கள் 100 நாட்கள் ஓடுவது என்ற சாதனை நிகழ்வை மதுரை மாநகரிலே செய்துக் காட்டியவர் நடிகர் திலகம்.
 
 1964
 
 கர்ணன் - 14.01.1964 - தங்கம் - 108 நாட்கள்
 
 பச்சை விளக்கு - 03.04.1964 - சிந்தாமணி - 105 நாட்கள்
 
 கை கொடுத்த தெய்வம் - 18.07.1964 - சென்ட்ரல் - 108 நாட்கள்.
 
 நவராத்திரி - 03.11.1964 - ஸ்ரீதேவி - 108 நாட்கள்
 
 மதுரை மாநகரின் 83 வருட தமிழ் திரைப்பட சரித்திரத்திலே [1931 - 2014] இதை நடிகர் திலகம் மட்டுமே செய்துக் காட்டியிருக்கிறார். இதன் பெயர் சாதனை.
 
 ஏனைய மூன்று படங்கள்
 
 ஆண்டவன் கட்டளை - 12.06.1964 - நியூசினிமா - 70 நாட்கள் [தமிழகத்திலே அதிக பட்ச நாட்கள் - சென்னை பாரகனுக்கு இணையாக]
 
 புதிய பறவை - 12.09.1964 - சிந்தாமணி - 83 நாட்கள்.[தமிழகத்திலே இரண்டாவது அதிக பட்ச ஓட்ட நாட்கள். Second Highest Run].
 
 முரடன் முத்து - 03.11.1964 - சென்ட்ரல் - 52 நாட்கள்.
 
 அன்புடன்
 
 
 
 முரளி சார்
 
 1964 மட்டுமா ....1953 முதல் 1986 வரை ...கீழே குறிப்பிட்ட விஷயங்கள் தான் அவருக்கு மட்டுமே உரித்தான சாதனை. அதாவது...1964இல் நீங்கள் குறிப்பிட்டிருப்பதை சற்று ஆராய்ந்தால் இது விளங்கும்...
 
 பொங்கல் அன்று அதாவது 14த் கர்ணன் சரியாக ஒன்றரை மாத இடைவெளியில் (47 நாட்கள் இடைவெளி, 100 நாள் padam )
 ஏப்ரல் 3இல் AVM வெளியிட்ட பச்சை விளக்கு(100 நாள் படம்)..பிறகு ரெண்டு மாத இடைவெளியில் (69 நாட்கள் இடைவெளி )
 ஆண்டவன் கட்டளை(10 வார படம்)  அதன் பின் வெறும் 35 நாட்கள் இடைவெளியில் கை கொடுத்த தெய்வம் ( 100 நாள் படம்)
 கை கொடுத்த தெய்வம் 100 நாட்கள் கடந்தவுடன் (54 days interval)
 சிவாஜி பிலிம்ஸ் புதியபறவை புதிய பறவை 100 நாட்கள் கடக்க விடாமல் அதற்குள் வெறும் 50 நாட்களுக்குள்
 இரண்டு படங்கள் 1) நடிகர் திலகத்தின் 100வது படம்(100 நாள் ) நவராத்திரி மற்றும் 99வது படம் முரடன் முத்து..
 
 இதன் சராசரி நாட்கள் பார்த்தோமேயானால் 52 நாட்களுக்கு ஒரு படம் கொடுத்துள்ளார்...மொத்தம் 7 படங்கள் அதில் 100 நாட்கள் படங்கள் 5.
 
 இந்த சாதனை எனக்கு தெரிந்தவரை மட்டும் அல்ல நடு நிலையாக உள்ளவர்கள் படித்தால் மிகபெரிய சாதனையாகும் என்று தான் ஒத்துகொள்வார்கள் !
 
 சிவாஜி என்றால் சாதனை....சாதனை என்றால் சிவாஜி ...!
 
 
 
 
				
				
				
					
						Last edited by RavikiranSurya; 20th February 2014 at 07:59 AM.
					
					
				 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
	 
- 
	
			
				
					20th February 2014, 08:39 AM
				
			
			
				
					#1320
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
							
						
				
					
						
							flash back 
 
 1972 - சென்னை, மதுரை, நெல்லை, கோவை மற்றும் பல நகரங்கள் - 1972 - பட்டிகாடா பட்டணமா - 183 நாட்கள் -
 அதற்க்கு முன் வெளிவந்த பல கலர் படங்கள் மற்றும் அனைத்து கருப்பு வெள்ளை படங்களில் முதன்மையான வசூல் சாதனை
 
 1972 - வெளியான படங்கள் 7 - இதில் 100 நாட்கள் - 6 படங்கள் - அந்த 6 100 நாட்கள் படங்களில் - 2 - 175 நாட்கள் படங்கள் (வசந்த மாளிகை மற்றும் பட்டிகாடா பட்டணமா)- அந்த 2 படங்களும் - 200 நாட்களை கடந்த படங்கள்
 - இலங்கையில் வசந்தமாளிகை வெளியான 3 திரை அரங்குகளில் 2 திரை அரங்கில் 200 நாட்கள் கடந்தன 1இல் 100 நாட்களுக்கும் மேல்
 
 சென்னையில் வெளியான 3 திரை அரங்குகளிலும் அதிகபட்ச தொடர்ந்து அரங்கு நிறைவு கண்ட படம் - 816 காட்சிகள் - ஞான ஒளி வரும் வரை முரியடிக்கபடாத சாதனை.
 
 அதே வருடம் வெளியான ஞான ஒளி சென்னை நகரில் 1000 காட்சிகள் கண்டு முறியடித்தது.
 
 1972இர்க்கு முன் வந்த அனைத்து படங்களின் 50, 100, 175 நாட்கள் வசூல்களை ராஜா, ஞானஒளி, வசந்தமாளிகை, பட்டிகாடா பட்டணமா முறியடித்தது
 
 
 மீண்டும் மிக குறிகிய இடைவெளியில் அடுத்தடுத்து படங்கள் வெளிவந்தாலும் பாக்ஸ் ஆபீஸ் பொறுத்தவரை நடிகர் திலகத்தின் வசூல் ஆளுமை இதிலிருந்து உணரலாம்.
 
 1974 - தங்கபதக்கம் - சென்னை -  3 திரை அரங்குகள் மற்றும் பல நகரங்கள்  - அதற்க்கு முன் வந்த அனைத்து படங்களின் வசூலை முறியடித்த படம் - தமிழ் திரை வரலாற்றில் முதன் முதலாக 1.25 கோடி மேல் வசூல் செய்து அதற்க்கு முந்தைய சாதனை 1.00 கோடி வசூல் சாதனை படம் முறியடிக்கப்பட்டது - 1979 வரை வேறு எந்த படங்களாலும் முரியடிக்கபடவில்லை
 
 
 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
	 
Bookmarks