- 
	
			
				
					26th February 2014, 05:11 PM
				
			
			
				
					#1371
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Junior Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
				
					Thank you
				
					
						
							Dear Sir,
 
 I extend my sincere thanks for your good wishes. Our N.T. God was my inspiration. Now I'm looking for our legend photo to have it my house (Big) so that everyday i look at N.T. before leaving for my work.
 
 Again thank you very much.
 
 JAIHIND
 M. Gnanaguruswamy
 
 
	
		
			
			
				
					  Originally Posted by  ragulram11  
 Dear Gurusamy sir
 
 Congratulations for your Law Degree
 
 Wishing you come with flying colors in practice like Barrister Rajinikanth,
 
 I am having a photo of NT sir in my office in Gowravam getup
 
 I am searching for a pipe (though I don't smoke to keep it like him)
 
 
 
 
 
 
 
 
 
 
 
- 
		
			
						
						
							26th February 2014 05:11 PM
						
					
					
						
							 # ADS
						
					
			 
				
					
					
						Circuit advertisement
					
					
					  
 
 
 
 
- 
	
			
				
					26th February 2014, 05:15 PM
				
			
			
				
					#1372
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Junior Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
				
					Thank you
				
					
						
							Dear Mr. Murali Sir,
 
 Many thanks for your good wishes, sure will continue the same way in Masters...
 
 JAIHIND
 M. Gnanaguruswamy
 
 
	
		
			
			
				
					  Originally Posted by  Murali Srinivas  
 அன்பு நண்பர் ரவி,
 
 நாட்கள் செல்ல செல்ல உங்கள் எழுத்துக்களில் மெருகேறி பழுதுகள் [தமிழ் ஸ்பெல்லிங் mistakes] நீங்கி படிப்பதற்கு சுவையாக இருக்கிறது. அது மட்டுமல்ல, உங்கள் உதாரணங்களும் சற்றே கேலி கலந்த சொற்றொடர்களுமாய் ரசிக்க வைக்கிறீர்கள். வாழ்த்துகள். தொடருங்கள்.
 
 Hearty Congrats Mr. Guruswamy! Hope you continue to taste success in Masters also!
 
 அன்புடன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
	 
- 
	
			
				
					26th February 2014, 05:23 PM
				
			
			
				
					#1373
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Junior Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							Dear Sir,
 
 Truly touched by your good wishes and liked the way you have put the last sentence. I must say and admit that all our N.T. fans are very intelligent and intellectual the way they present our N.T. articles and photo's are high standards and it is on par with any standards.
 
 Thank you again for your legal wishes!!
 
 JAIHIND
 M. Gnanaguruswamy
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					26th February 2014, 05:28 PM
				
			
			
				
					#1374
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Junior Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							Dear Mr. RKS,
 
 Many thanks for your good wishes, infact i as overwhelmed by the congratulations messages from all our beloved fans. I must say all our N.T. fans wishes are blessings for me and i feel i was blessed by the GOD N.T.
 
 Thank you again!
 
 JAIHIND
 M. Gnanaguruswamy
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					26th February 2014, 05:50 PM
				
			
			
				
					#1375
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							தற்போதைய தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்கள் நடிகர் திலகம் சிவாஜிகணேசனை 1967 ம் ஆண்டு பொம்மை ஏடுக்காக நேர்காணல் செய்த வேளையில்
 
 ஜெயலலிதா:சின்ன வயசிலே நீங்க நாடக மேடையில் நடிக்க ஆரம்பிச்சீங்க-இல்லையா?அப்போ ஏதாவது நினைச்சதுண்டா.அதாவது எதிர்காலத்தை பற்றி.இப்படி ஒரு நடிகரா வருவோம்னு நினைச்சதுண்டா?
 
 சிவாஜி:இப்படி ஒரு நடிகனாகிவிடுவேன்னு கனவுகூட கண்டதில்லை.நடிக்க வேண்டும்கிற  ஒரே ஆர்வம் தான் என்னை மேடைக்கு துரத்திச்சு தவிர,வருங்காலத்தைப் பற்றியோ,எதிர்காலத்தைப் பற்றியோ நினைக்க முடியாத நிலை.அப்போது அடுத்தவேளை சோத்துக்கே என்ன செய்யறது?எங்கே போறது என்ற நிலையில் எதிர்காலத்தைப் பற்றி நான் நினைக்கலே.அதுக்கு நேரமே கிடைக்கலேன்னு சொல்வேன்.
 
 ஜெயலலிதா:நடிகர்கள் அரசியலில் பங்கெடுத்துக் கொள்ளவேணும்னு நீங்க நினைக்கிறீங்களா?அப்படி நடந்தால் தங்களது தொழிலுக்கும் அரசியலுக்கும் சமமான வகையில் பணியாற்ற முடியும்னு நினைக்கிறீங்களா?
 
 சிவாஜி:அரசியல் வேறு,நடிப்பு வேறு.நடிகனாக இருப்பவன் நடிப்புக்குத்தான் முதலிடம் தரவேணும். நான் ஒரு அரசியல் கட்சியில் இருப்பதால் நான் முழுக்க முழுக்க அரசியலிலேயே இருக்க வேண்டும்னு அந்த கட்சியும் விரும்பாது. ஆனால் கட்சியில் இருப்பதாலே சில கடமைகள் அவனுக்கு உண்டு.சில கடமைகளை அவனிடமிருந்து எதிர்பார்க்கவும் கட்சிக்கு உரிமை உண்டு.உதரணமா எனக்கு இரண்டுமாசம் ஓய்வு கிடைக்குதுன்னு வச்சுக்குவோம்.ஒரு மாசம் நான் ஓய்வு எடுத்துக்கலாம்.ஒரு மாசம் கட்சிக்காக உழைக்கலாம். ஆனா கட்சி வற்புறுத்தாது.எப்பவும் வரலாம், போகலாம். அதனால கட்சி,நடிப்பு இரண்டுக்கும் முடிச்சுப் போடக்கூடாது. அது வேறு,இது வேறு.
 
 ஜெயலலிதா:தமிழ் படங்கள் இப்போ முன்னேறியிருப்பதா நினைக்கிறீங்களா?அல்லது தரம் குறைந்து விட்டதாக எண்ணுகிறீர்களா?
 
 சிவாஜி:எல்லாத் துறையிலும் நிச்சயமாக முன்னேற்றம் அடைஞ்சிருக்கு. அதேசமயம் சில படங்கள் மக்களது ரசனையை குறைச்சிடும் போலிருக்கு. இந்த மாதிரிப் படங்கள் நூற்றுக்கு இருபத்தஞ்சு இருக்கும். ஆக நாம் மேலே ஏறினாள்,இந்தப் படங்கள் கொஞ்சம் நம்மை கிழே இழுத்து விட்டுடுது.
 
 ஜெயலலிதா:மிகுந்த திறமைசாலிகளுக்கும் சிலசமயம் அவங்க மேற்கொண்டு இருக்கும் தொழிலிலேயே சவாலாக சில விசயங்கள் முளைச்சிடும். அதுபோல சிறந்த நடிகரான உங்களுக்கே,சவாலா இருந்த வேஷம் எது?
 
 சிவாஜி:நல்ல கேள்வி.கப்பலோட்டிய தமிழனாக நடிச்சேனே,அதுதான் உண்மையிலேயே எனக்கு சவாலாக இருந்த வேடம்.ஏன்னா கப்பலோட்டிய அந்த பெருமகனாரை நேரில் பார்த்த பலர் இன்னைக்கும் நம்மோடயே இருந்துக்கிட்டிருக் காங்க. கதைக்குள்ள வரும் பாத்திரங்களை ஏற்று நடிப்பது சுலபமான காரியம்.ஆனால் நமது வாழ்க்கையில் சந்தித்த,அதுவும் சமீப காலம் வரைக்கும் இருந்த ஒரு பெரிய மனிதரைப் போல நடிக்கிறோம் என்று சொல்றபோது,அந்த நடிப்பை எல்லோரும் ஏத்துக்கணும். அதிலே மாறுபாடு எழக்கூடாது.பெரியார் அவங்களைப் போல நடிக்கிறோம் என்றால்,பாக்கிறவங்க 'பெரியாரைப் பார்ப்பதுபோலவே இருந்ததுன்னு சொல்லணும்.அப்போதான் நடிப்பு பூரணத்துவம் பெரும்.அந்த மாதிரியான ஒண்ணுதான் இந்தக் கப்பலோட்டிய தமிழன் வேஷம்.இதில் நான் நடிச்சதை பார்த்துட்டு,அந்தப் பெரியவர் வ.உ.சி.யின் மகன் 'என் அப்பாவை நேரில் பார்த்ததுபோல இருந்தது' என்று சொன்னார்.ஒரு வெற்றியாகத்தான் நான் இதைக் கருதுகிறேன்.
 
 ஜெயலலிதா:சில நாவல்கள் படிக்கிறோம்,கதைகளை கேட்கிறோம்.ஆஹா! அந்த மாதிரி வேஷம் நமக்கு வரக்கூடாதா?கிடைக்காதா?என்று நினைக்கிறோம்.அந்த மாதிரி நீங்க எதிர்பார்த்து நடிச்ச வேஷம் ஏதேனும் இருக்கா?
 
 சிவாஜி:கட்டபொம்மன் வேஷம் அப்படிப்பட்டது.கட்டபொம்மன் கதையை தெருக்கூத்தா நான் பார்த்தேன்.நான் வீட்டை விட்டு நாடகத்தில் போய்ச்சேர தூண்டுதலாக இருந்ததே இந்த கட்டபொம்மன் கதைதான்.
 
 ஜெயலலிதா:இப்போ புதுசா ஒரு பிரச்சினை தலை தூக்கியிருக்கு.முத்தக்காட்சிகளை அனுமதிப்பதா இல்லையான்னு?நீங்க என்ன சொல்றீங்க?
 
 சிவாஜி:சே..சே..வெட்கக்கேடு.முத்தம் கொடுக்கிறதை காட்டவே கூடாது.முத்தம் கொடுக்கிறது மாதிரி நடிக்கணும்.மூடிக்காட்டுவதுதான் கலை.
 பச்சையா உள்ளதை அப்படியே காட்டினா அது கலையாகாது.அதனால் முத்தம் கொடுப்பதையெல்லாம் திரையிலே காட்டக்கூடாது என்பதுதான் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.
 
 ஜெயலலிதா:உங்களுக்கு எவ்வளவோ விசிறிகள் இருக்காங்க.நீங்க யாருக்காவது விசிறியாக இருந்ததுண்டா?
 
 சிவாஜி:ஓ!இப்பவும் நான் விசிறியாக இருக்கேன். பி.ஆர்.பந்துலு மேடையில் நடிச்சு வந்தபோது,நான் அவருடைய விசிறிகளில் ஒருவன்.ஹிந்தி நடிகை நர்கீஸின் விசிறி நான்.சார்லஸ் போயர் ரசிகன் நான்.
 
 ஜெயலலிதா:உங்களுக்கு லதாவின் பாட்டு என்றால் ரொம்பவும் பிடிக்கும் போலிருக்கே?
 
 சிவாஜி:என் தங்கையாச்சே பிடிக்காம இருக்குமா.அது மட்டுமா?சமீபத்திலே நான் ஒரு நியூஸ் கேள்விபட்டேன்.இண்டர்நேஷனல் லெவல்லே உலகம் பூராவும் ஒலிபரப்பப்ட்டு பாடகர்களின் வரிசையில் லதாவின் பாட்டுக்கள் நாள் ஒன்றுக்கு இருபது மணிக்கும் மேலே ஒலி பரப்பாகுதுன்னு சொன்னாங்க.உலகிலேயே எந்தப் பாடகிக்கும் இல்லாத தனி கவுரவம் என் தங்கச்சிக்கு இருக்கு.
 
 ஜெயலலிதா:நீங்க நாடகங்களிலே நடித்து வந்த காலத்தில் சினிமாவுக்கு அடிக்கடி போவதுண்டா?
 
 சிவாஜி:அப்ப மட்டும் என்ன?இப்பவும்ந்தான். மெட்ராஸ் சிட்டியிலே நான் பார்க்காத படமே ஓடாது. நேத்து ராத்திரிகூட ஒரு குப்பை படத்துக்கு நான் போயிட்டு வந்தேன்.
 
 ஜெயலலிதா:அந்த மாதிரியான நாளிலே நீங்க ரொம்ப விரும்பி பலமுறை பார்த்த படம் எது?
 
 சிவாஜி:ருடால்ப் வாலண்டினோ நடித்த 'தி ஷீக்' என்ற படம்.
 
 ஜெயலலிதா:ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் சில சம்பவங்கள் மறக்கமுடியாததாக அமைந்துவிடும்.அந்த மாதிரி உங்க வாழ்க்கையிலே ஏதாவது நடந்திருக்கா?
 
 சிவாஜி:எகிப்தின் தலைநகரான கெய்ரோவில் ஆசிய ஆப்பிரிக்க படவிழாவின்போது நடந்தது.அன்னிக்கு விழாவுக்கு வந்த படங்களின் ரிசல்ட் சொல்றாங்க.
 நான் பின்னாலே உட்கார்ந்திருந்தேன். அங்கிருந்த வங்க எல்லாம் என்னை ஏதோ டெக்னீசியனு நினைச்சிருந்தாங்க.அங்கே வந்திருந்தவங்களெல்லாம் பெரியவங்க,உயரத்திலும் ஏழடி.
 அங்கே பல பெரிய நாடுகளிலிருந்து பல கலைஞர்கள் கூடியிருந்தாங்க.நீதிபதிகள் எல்லோரும் வந்தாங்க.
 
 கட்டபொம்மன் தான் சிறந்த படம்.கட்டபொம்மனா நடிச்ச நான்தான் சிறந்த நடிகன்னு சொன்னாங்க.என் பேரைச் சொல்லி கூப்பிட்டாங்க.நான் எழுந்து நின்னேன்.வாழ்க்கையில் நான் எதற்கும் சாதாரணமா மசிஞ்சு கொடுக்காதவன்.நடுக்காட்டில் புலி துரத்தி வந்தபோதுகூட அசையாமல் இருந்தவன்.
 
 ஆனா அன்னிக்கு கெய்ரோவில் நடந்த அந்த சம்பவம் என்னை அசத்திட்டது.என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பத்மினி என்னை தாங்கிப் பிடிச்சிட்டாங்க.இல்லாட்டி நான் நிச்சயம் விழுந்திருப்பேன்.நான் என்னையே மறந்து உணர்ச்சி வசப்பட்டது அந்த ஒரு நாள்தான்.
 
 isi முத்திரை உள்ள அக்மார்க் உலக நாயகன் சிவாஜி கணேசன் அவர்கள் !
 
 
 
 
				
				
				
					
						Last edited by RavikiranSurya; 26th February 2014 at 05:58 PM.
					
					
				 
 
 
 
 
- 
	
			
				
					26th February 2014, 08:57 PM
				
			
			
				
					#1376
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							காவல் தெய்வம் - தொடருகின்றது 
 01-05-1969
 Director : K.Vijayan
 
 NT யின் 128வது படம் - 1969 வது வருடமும்  NT யின்  பல வெற்றி படங்களை தந்தது . இந்த படத்தில் NTயின் நடிப்பை பார்த்து பாராட்டதவரே  இல்லை . MGR ருக்கு பிடித்த படங்களில் காவல் தெய்வமும் ஒன்று . இந்த படத்தின்  சிறப்பு அம்சங்கள் :
 
 1. SV சுப்பையா பண முடையில் இருக்கும்போது  அவருக்காக பணம் வாங்காமல் NT  நடித்து கொடுத்தார் - இந்த படம்  சுப்பையாவிற்கு பெரும் புகழும் , நல்ல லாபத்தையும் ஈட்டி தந்து - படங்களில் மிகவும் பவ்யமாக வருபவர்கள் எல்லாம் நிஜ வாழ்கையில் அப்படி இருக்க மாட்டார்கள் , நன்றியை நினைவு வைத்துகொண்டிருப்பார்கள் என்றும் சொல்ல முடியாது என்பதற்கு SV சுப்பையா ஒரு நல்ல எடுத்துகாட்டு
 
 2. படத்தின் கதாநாயகன்  சிவகுமார் , அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருகின்றார் : " நான் தான் ஹீரோ - கற்பூரம் அணைத்து சத்யம் செய்தாலும் யாரும் நம்ப மாட்டார்கள் - வரும் சில காட்சிகளிலே சிவாஜி எல்லோரையும்  சாப்பிடுவிடுவார் - இதே மாதிரி பல படங்களில்  என்னை இல்லாமல் செய்து விடுவார் - அவருடன் படத்தில் இருகின்றோம் என்ற ஒரு சந்தோஷமே என்னக்கு போதும் !"
 
 3. சிவாஜியுடன் படத்தில் இருந்த விறு விறுப்பும் படம் முடிவதற்கு முன்பே முடிந்துவிடும் .
 
 4. ஒரு ரசிகர் இந்த படத்தை பார்த்துகொண்டிருந்தார் - சிவாஜியை தூக்கிலிடும் காட்சி - அத்துடன் பலர் அழுதவண்ணம் எழுந்து  சென்று  விட்டனர் - சில பேர்களே இருந்தனர் - அந்த ரசிகர் அவர்களிடம் - ஏன் கிளம்பவில்லை என்று கேட்டதிற்கு - அவர்கள் சொன்ன பதில் வியப்பானது -  நாங்கள் இந்த theatre இல் வேலை செய்பவர்கள் - நீங்கள் பண்ணிய அதிர்ஷ்ட்டம் நங்கள் செய்யவில்லை என்றனர் .
 
 5. பாடல்கள் மிகவும் அருமை , வசனம் ஜெயகாந்தனுடையது - இந்த படத்திலும் NT க்கு ஜோடி இல்லை .
 
 6. நம்பியார் நல்லவராக நடித்த சில படங்களில் இதுவும் ஒன்று
 
 7. சிவாஜியின் மரம் ஏறும் அழகை இன்று முழுவதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் - அவருக்கு வெறும் 5நிமிடங்கள்தான் பயிற்சி கொடுத்தார்களாம் - டூப் போட NT மறுத்துவிட்டார்
 
 தொடரும்
 
 
 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
	 
- 
	
			
				
					26th February 2014, 09:48 PM
				
			
			
				
					#1377
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							ஒரு அரசாங்கம் செய்ய முடியாததை தனி ஒரு மனிதனாக சாதித்து, கன்னட மக்களின் மனதில் என்றும் நிலை கொண்டிருக்கும் திரு ராஜ்குமார் அவர்களை வீரப்பன் பிடியில் இருந்து ஒரு போன் கால் மூலம் அறிவுரைத்து விடுவித்த நம் நடிகர் திலகம். 
 
 அதன் நன்றிகடனாக நடிகர் திலகத்தால் உயிர் பிழைத்து விடுதலை ஆன உடன் தமிழகம் வந்து, நடிகர் திலகத்தை மட்டுமே கண்டு கண்ணீர் மல்க நன்றி கூறி அடுத்த விமானத்தில் பெங்களூர் சென்ற திரு.ராஜ்குமார் அவர்கள்.
 
 ஒரு உயிரை இரண்டு அரசாங்கம் கூட காப்பாற்ற யோசித்த ஒரு விஷயத்தை, திரு நக்கீரன் மூலம் அறிந்து தக்க தருணத்தில் வீரப்பனுக்கு இப்படி நடப்பது முறையன்று என்று நடிகர் திலகம் அறிவுரைத்து வீரப்பன் மனத்திலும் கருணை தோன்றசெய்து அதன் மூலம் ராஜ்குமார் விடுவிக்கப்பட்டது மனசாட்சி உள்ள மக்களும் அறிந்த ஒரு விஷயம்.
 
 இது தான் உண்மையான சாதனை !
 
 கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது என்பதை மீண்டும் நிரூபித்தவர் தமிழகத்தின் பெருமையாம் நம் நடிகர் திலகம் அவர்கள்.
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					26th February 2014, 09:49 PM
				
			
			
				
					#1378
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							ஒரு அரசாங்கம் செய்ய முடியாததை தனி ஒரு மனிதனாக சாதித்து, கன்னட மக்களின் மனதில் என்றும் நிலை கொண்டிருக்கும் திரு ராஜ்குமார் அவர்களை வீரப்பன் பிடியில் இருந்து ஒரு போன் கால் மூலம் அறிவுரைத்து விடுவித்த நம் நடிகர் திலகம். 
 
 அதன் நன்றிகடனாக நடிகர் திலகத்தால் உயிர் பிழைத்து விடுதலை ஆன உடன் தமிழகம் வந்து, நடிகர் திலகத்தை மட்டுமே கண்டு கண்ணீர் மல்க நன்றி கூறி அடுத்த விமானத்தில் பெங்களூர் சென்ற திரு.ராஜ்குமார் அவர்கள்.
 
 ஒரு உயிரை இரண்டு அரசாங்கம் கூட காப்பாற்ற யோசித்த ஒரு விஷயத்தை, திரு நக்கீரன் மூலம் அறிந்து தக்க தருணத்தில் வீரப்பனுக்கு இப்படி நடப்பது முறையன்று என்று நடிகர் திலகம் அறிவுரைத்து வீரப்பன் மனத்திலும் கருணை தோன்றசெய்து அதன் மூலம் ராஜ்குமார் விடுவிக்கப்பட்டது மனசாட்சி உள்ள மக்களும் அறிந்த ஒரு விஷயம்.
 
 இது தான் உண்மையான சாதனை !
 
 கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது என்பதை மீண்டும் நிரூபித்தவர் தமிழகத்தின் பெருமையாம் நம் நடிகர் திலகம் அவர்கள்.
 
 1799215_704906142887408_1063491034_o.jpg
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					26th February 2014, 09:50 PM
				
			
			
				
					#1379
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
 
 
 
- 
	
			
				
					26th February 2014, 10:19 PM
				
			
			
				
					#1380
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
							
						
				
					
						
							பார்த்ததில் பிடித்து -12
 
 ஒரு  சிறிய  இடைவேளைக்கு  பிறகு  எழுதுவதில்  மிக்க   மகிழ்ச்சி
 
 வேலை  பளு  காரணமாக  எழுத  முடியவில்லை  மனிக்கவும்
 
 எழுதாத  இந்த  10 நாட்காளில்  கிட்ட தட்ட  7 நடிகர் திலகத்தின்  படங்களை  பார்த்தேன்   ஏற்கனவே  பார்த்த  படங்களையும் மீண்டும் ஒரு முறை பார்த்தேன் , இந்த 7 படங்களை பற்றி தான் அடுத்த பார்த்ததில் பிடித்ததில் எழுத உள்ளேன்
 
 குடும்ப கதைகளில் அதுவும் 1978 முதல் 1980 க்கு பிறகு நடிகர் திலகம் கலக்கிய படங்களை பற்றி தான் அடுத்த சில பதிவிகள்
 
 
 அதில் முதலில் நான் எழுத போகும் படம்
 1980 ல் வந்த ரிஷிமூலம்
 
 இந்த பார்த்ததில் பிடித்தது series ல் முதலில் நான் எழுதின முதல் படம் கவரிமான் , அந்த படம்  தான் அன்றைய இளம் இயகுன்னர் SPM டைரக்ட் செய்த முதல் படம்
 
 
 சிவாஜி சார் நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று கவரிமான் . முதல் படம் நல்ல குடும்ப சித்திமாக அமைந்த போதும் மிக பெரிய வெற்றியை பெறவில்லை (எல்லாம் இருந்தும் , ஏன் எப்படி )
 ஒரு சின்ன கேப் க்கு பிறகு SPM மற்றும் நடிகர் திலகம் இருவரும் கை கோர்த்து நம் பார்வைக்கு கொடுத்த படம் த்ஹன் இந்த ரிஷிமூலம் . இந்த கூட்டணிக்கு பக்கபலம் மகேந்திரனின் இயல்பான கதை வசனம்
 இந்த படம் முதலில் சேஷாத்ரி அவர்களால் நாடகமாக நடத்து பட்டு வந்தது , இந்த படத்தின் கதை , கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கிறார்கள் ,15 வருடம் கழித்து மீண்டும் சந்திகிறார்கள் , பிரிந்த இருவரும் எப்படி மீண்டும் சேர்ந்தார்கள் என்பதே கதை .
 EGO என்ற மூன்று எழுத்து தான் மனுஷனின் வாழ்கையை புரட்டி போடுகிறது.
 மிக பெரிய போலீஸ் அதிகாரியாக நம்ம சந்தோஷ் (சிவாஜி சார்) , மிகவும் கண்டிப்பான , நேர்மையான அதிகாரி . அவரின் கடந்தகாலம் அவரை பயமுறுத்துகிறது , அதற்கான காரணம் பின்னாடி தெரிய வருகிறது
 முதல் காட்சியில் அவர் அறிமுகம் ஆகும் பொது , அவர் பீலிசிவதை கண்டிக்கும் விதத்தில் என்ன ஒரு மிடுக்கு , முன்னாடி பார்த்த தங்கபதக்கத்தின்  சாயல் கொஞ்சம் கூட இல்லையே (எப்படி இவரால் மட்டும் இப்படி முடிகிறது )
 SP சௌத்ரி ஒரு பரம்பரை பணக்கார் , போலீஸ் அதிகாரி , சந்தோஷ் வாழ்க்கையில் அடி பட்டு , மிதி பட்டு , போலீஸ் அதிகாரி ஆனவர் அந்த வித்தியாசத்தை தான் அவர் காட்டி இருப்பார்
 அந்த காட்சியில் அவர் கத்தி முடித்ததும் , அவர் cigarette யை பத்த வைக்கும் ஸ்டைல் இருக்கே , அதுவும் ஓவர் emotional ஆன உடன் அவர் கண்கள் கலங்கி ,yellowish -red கலர் ல் தெரியும் பாருங்கள் chanceless
 
 இப்படி பட்ட நபரின் மனைவி கோகிலா (KR விஜயா ), நடிகர் திலகத்தின் மிகவும் ராசியான ஜோடிகளில் ஒருவர் , அடியேன் வாணிஸ்ரீ  மற்றும் ஜெயலலிதா ஜோடியின் ரசிகன் ,ஊட்டி வரை உறவு மட்டும் விதிவிலக்கு
 
 கோகிலா ஒரு பணக்கார பெண் , ஒரு சின்ன தவறு நடந்தாலும் அதை சகிக்க முடியாத நபர் , இவரை பார்க்கும் பொது எனக்கு கோபம் தான் வந்தது
 இவரின் தந்தை மேஜர் ,எதை பற்றியும் கவலை படாத கேரக்டர்
 
 இந்த மூவரின் mentalities படி தான் முதல் பாதி கதை நகர்கிறது
 
 முதல் பாதியில் நடிகர் திலகமும் , KRV காட்சிகள் , படத்தை தொய்வு இல்லாமல் நகர்த்துகிறது , மனைவி உடன் தனியாக பேசி கொண்டு இருக்கும் பொது , மகன் எழுந்து விடுவதும் , நடிகர் திலகம் பார்க்கும் பார்வை இருகிறதே , சாக்லேட் குடுத்த குழந்தையிடம் அதை பிடுங்கி விடும் பொது அது காடும் பாவத்தின் ஆச்சு அசல்
 முந்தின சில படங்களில் அவர் உடை அவர் வயதுக்கு உகுந்தது போல் இல்லை என்று சொல்லுவோர் பல நபர்கள் , இந்த படத்தில் அவர் make up
 மற்றும் உடைகள் டாப் , அதும் அவர் நைட் டிரஸ் simply superb , இதை போன்ற உடைகளை தேடி தேடி அலுத்து விட்டேன் , சமிபத்தில் சென்னைக்கு வந்த பொது கூட பல இடங்களில் தேடினேன் , கிடைக்கவே இல்லை
 அப்போது அவர் பாடும் பாடலும் நல்ல situation சாங் , இளையராஜா , கண்ணதாசன் கூட்டணிக்கு கேட்க வேண்டுமா ஜமாய்த்து இருப்பார்கள் , இன்னும் ஒரு காலத்தால் அழியாத பாடல் பற்றி  பிறகு எழுதி உள்ளேன்
 
 
 
 
 
 
 
Bookmarks