Results 1 to 10 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

Threaded View

  1. #11
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    காவல் தெய்வம் - தொடருகின்றது
    01-05-1969
    Director : K.Vijayan

    NT யின் 128வது படம் - 1969 வது வருடமும் NT யின் பல வெற்றி படங்களை தந்தது . இந்த படத்தில் NTயின் நடிப்பை பார்த்து பாராட்டதவரே இல்லை . MGR ருக்கு பிடித்த படங்களில் காவல் தெய்வமும் ஒன்று . இந்த படத்தின் சிறப்பு அம்சங்கள் :

    1. SV சுப்பையா பண முடையில் இருக்கும்போது அவருக்காக பணம் வாங்காமல் NT நடித்து கொடுத்தார் - இந்த படம் சுப்பையாவிற்கு பெரும் புகழும் , நல்ல லாபத்தையும் ஈட்டி தந்து - படங்களில் மிகவும் பவ்யமாக வருபவர்கள் எல்லாம் நிஜ வாழ்கையில் அப்படி இருக்க மாட்டார்கள் , நன்றியை நினைவு வைத்துகொண்டிருப்பார்கள் என்றும் சொல்ல முடியாது என்பதற்கு SV சுப்பையா ஒரு நல்ல எடுத்துகாட்டு

    2. படத்தின் கதாநாயகன் சிவகுமார் , அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருகின்றார் : " நான் தான் ஹீரோ - கற்பூரம் அணைத்து சத்யம் செய்தாலும் யாரும் நம்ப மாட்டார்கள் - வரும் சில காட்சிகளிலே சிவாஜி எல்லோரையும் சாப்பிடுவிடுவார் - இதே மாதிரி பல படங்களில் என்னை இல்லாமல் செய்து விடுவார் - அவருடன் படத்தில் இருகின்றோம் என்ற ஒரு சந்தோஷமே என்னக்கு போதும் !"

    3. சிவாஜியுடன் படத்தில் இருந்த விறு விறுப்பும் படம் முடிவதற்கு முன்பே முடிந்துவிடும் .

    4. ஒரு ரசிகர் இந்த படத்தை பார்த்துகொண்டிருந்தார் - சிவாஜியை தூக்கிலிடும் காட்சி - அத்துடன் பலர் அழுதவண்ணம் எழுந்து சென்று விட்டனர் - சில பேர்களே இருந்தனர் - அந்த ரசிகர் அவர்களிடம் - ஏன் கிளம்பவில்லை என்று கேட்டதிற்கு - அவர்கள் சொன்ன பதில் வியப்பானது - நாங்கள் இந்த theatre இல் வேலை செய்பவர்கள் - நீங்கள் பண்ணிய அதிர்ஷ்ட்டம் நங்கள் செய்யவில்லை என்றனர் .

    5. பாடல்கள் மிகவும் அருமை , வசனம் ஜெயகாந்தனுடையது - இந்த படத்திலும் NT க்கு ஜோடி இல்லை .

    6. நம்பியார் நல்லவராக நடித்த சில படங்களில் இதுவும் ஒன்று

    7. சிவாஜியின் மரம் ஏறும் அழகை இன்று முழுவதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் - அவருக்கு வெறும் 5நிமிடங்கள்தான் பயிற்சி கொடுத்தார்களாம் - டூப் போட NT மறுத்துவிட்டார்

    தொடரும்

  2. Likes Subramaniam Ramajayam liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •