-
26th February 2014, 10:19 PM
#11
Junior Member
Seasoned Hubber
பார்த்ததில் பிடித்து -12
ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு எழுதுவதில் மிக்க மகிழ்ச்சி
வேலை பளு காரணமாக எழுத முடியவில்லை மனிக்கவும்
எழுதாத இந்த 10 நாட்காளில் கிட்ட தட்ட 7 நடிகர் திலகத்தின் படங்களை பார்த்தேன் ஏற்கனவே பார்த்த படங்களையும் மீண்டும் ஒரு முறை பார்த்தேன் , இந்த 7 படங்களை பற்றி தான் அடுத்த பார்த்ததில் பிடித்ததில் எழுத உள்ளேன்
குடும்ப கதைகளில் அதுவும் 1978 முதல் 1980 க்கு பிறகு நடிகர் திலகம் கலக்கிய படங்களை பற்றி தான் அடுத்த சில பதிவிகள்
அதில் முதலில் நான் எழுத போகும் படம்
1980 ல் வந்த ரிஷிமூலம்
இந்த பார்த்ததில் பிடித்தது series ல் முதலில் நான் எழுதின முதல் படம் கவரிமான் , அந்த படம் தான் அன்றைய இளம் இயகுன்னர் SPM டைரக்ட் செய்த முதல் படம்
சிவாஜி சார் நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று கவரிமான் . முதல் படம் நல்ல குடும்ப சித்திமாக அமைந்த போதும் மிக பெரிய வெற்றியை பெறவில்லை (எல்லாம் இருந்தும் , ஏன் எப்படி )
ஒரு சின்ன கேப் க்கு பிறகு SPM மற்றும் நடிகர் திலகம் இருவரும் கை கோர்த்து நம் பார்வைக்கு கொடுத்த படம் த்ஹன் இந்த ரிஷிமூலம் . இந்த கூட்டணிக்கு பக்கபலம் மகேந்திரனின் இயல்பான கதை வசனம்
இந்த படம் முதலில் சேஷாத்ரி அவர்களால் நாடகமாக நடத்து பட்டு வந்தது , இந்த படத்தின் கதை , கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கிறார்கள் ,15 வருடம் கழித்து மீண்டும் சந்திகிறார்கள் , பிரிந்த இருவரும் எப்படி மீண்டும் சேர்ந்தார்கள் என்பதே கதை .
EGO என்ற மூன்று எழுத்து தான் மனுஷனின் வாழ்கையை புரட்டி போடுகிறது.
மிக பெரிய போலீஸ் அதிகாரியாக நம்ம சந்தோஷ் (சிவாஜி சார்) , மிகவும் கண்டிப்பான , நேர்மையான அதிகாரி . அவரின் கடந்தகாலம் அவரை பயமுறுத்துகிறது , அதற்கான காரணம் பின்னாடி தெரிய வருகிறது
முதல் காட்சியில் அவர் அறிமுகம் ஆகும் பொது , அவர் பீலிசிவதை கண்டிக்கும் விதத்தில் என்ன ஒரு மிடுக்கு , முன்னாடி பார்த்த தங்கபதக்கத்தின் சாயல் கொஞ்சம் கூட இல்லையே (எப்படி இவரால் மட்டும் இப்படி முடிகிறது )
SP சௌத்ரி ஒரு பரம்பரை பணக்கார் , போலீஸ் அதிகாரி , சந்தோஷ் வாழ்க்கையில் அடி பட்டு , மிதி பட்டு , போலீஸ் அதிகாரி ஆனவர் அந்த வித்தியாசத்தை தான் அவர் காட்டி இருப்பார்
அந்த காட்சியில் அவர் கத்தி முடித்ததும் , அவர் cigarette யை பத்த வைக்கும் ஸ்டைல் இருக்கே , அதுவும் ஓவர் emotional ஆன உடன் அவர் கண்கள் கலங்கி ,yellowish -red கலர் ல் தெரியும் பாருங்கள் chanceless
இப்படி பட்ட நபரின் மனைவி கோகிலா (KR விஜயா ), நடிகர் திலகத்தின் மிகவும் ராசியான ஜோடிகளில் ஒருவர் , அடியேன் வாணிஸ்ரீ மற்றும் ஜெயலலிதா ஜோடியின் ரசிகன் ,ஊட்டி வரை உறவு மட்டும் விதிவிலக்கு
கோகிலா ஒரு பணக்கார பெண் , ஒரு சின்ன தவறு நடந்தாலும் அதை சகிக்க முடியாத நபர் , இவரை பார்க்கும் பொது எனக்கு கோபம் தான் வந்தது
இவரின் தந்தை மேஜர் ,எதை பற்றியும் கவலை படாத கேரக்டர்
இந்த மூவரின் mentalities படி தான் முதல் பாதி கதை நகர்கிறது
முதல் பாதியில் நடிகர் திலகமும் , KRV காட்சிகள் , படத்தை தொய்வு இல்லாமல் நகர்த்துகிறது , மனைவி உடன் தனியாக பேசி கொண்டு இருக்கும் பொது , மகன் எழுந்து விடுவதும் , நடிகர் திலகம் பார்க்கும் பார்வை இருகிறதே , சாக்லேட் குடுத்த குழந்தையிடம் அதை பிடுங்கி விடும் பொது அது காடும் பாவத்தின் ஆச்சு அசல்
முந்தின சில படங்களில் அவர் உடை அவர் வயதுக்கு உகுந்தது போல் இல்லை என்று சொல்லுவோர் பல நபர்கள் , இந்த படத்தில் அவர் make up
மற்றும் உடைகள் டாப் , அதும் அவர் நைட் டிரஸ் simply superb , இதை போன்ற உடைகளை தேடி தேடி அலுத்து விட்டேன் , சமிபத்தில் சென்னைக்கு வந்த பொது கூட பல இடங்களில் தேடினேன் , கிடைக்கவே இல்லை
அப்போது அவர் பாடும் பாடலும் நல்ல situation சாங் , இளையராஜா , கண்ணதாசன் கூட்டணிக்கு கேட்க வேண்டுமா ஜமாய்த்து இருப்பார்கள் , இன்னும் ஒரு காலத்தால் அழியாத பாடல் பற்றி பிறகு எழுதி உள்ளேன்
-
26th February 2014 10:19 PM
# ADS
Circuit advertisement
Bookmarks