-
6th March 2014, 05:38 PM
#1501
Junior Member
Seasoned Hubber
இந்த படத்தில் சிவாஜி சார் படும் கஷ்டத்தை பார்தால் கண்ணில் கண்ணீர் வருவதை தடுக்க முடியவில்லை , தான் செய்யாத தப்புக்கு தண்டனை அனுபவிப்பது , குடும்பம் சேதறும் பொது , ஒன்றுமே செய்ய முடியாமல் , வெறும் முகத்தில் மட்டுமே தன் நிலைமையை காட்டுவது (acting எப்படி செய்ய வேண்டும் என்று , reaction எப்படி காட்ட வேண்டும் என்று தெரியும் இவருக்கு ) சாப்பாட்டை பார்த்த உடன் தன் மனைவிக்காக அதை எடுத்து கொண்டு வந்து , அதை சாப்பிட முடியாமல் போன உடன் வெறித்து பார்ப்பது , கண்ணாடி இல்லாமல் , தன் மனைவியை பார்க்கும் பொது கண்ணை சிமிட்டி ,சிமிட்டி பார்ப்பது கடைசியில் உயிர் விடுவது என்று நன்றாக செய்து உள்ளார்
இந்த படத்தில் யாரும் கேட்டவர்கள் என்று இல்லை , பணத்தின் மேல் ஆசை உள்ளவர் VKR , திமிர் பிடித்த ராஜா சுலோச்சனா இது தான் நெகடிவ் characters . பாக்கி அனைவரும் , வளர்ந்த முறையாலும் , சூழ்நிலையின்னால் உள்ள grey characters தான்
முரளியின் கதாபாத்திரம் தன் காலில் நிற்க ஆசைபடும் கேரக்டர் , அதற்காக அவர் சொல்லாமல் சென்று விடுவது ஏன் என்று தெரியவில்லை
பூவிலங்கு மோகன் நன்றாக நடித்து இருக்கிறார் , பெருசாக வர வேண்டியவர் இப்போ தொலைகாட்சியில் கலக்கி கொண்டு இருக்கிறார் , அவர் ஆனதை என்று தெரிந்த உடன் அவர் நடிக்கும் காட்சி ஒன்று போதும் , அவர் நடிப்புக்கு ஒரு சான்று
ரஞ்சனியின் கதாபாத்திரத்தை பற்றி நிறைய எழுதி உள்ளேன்
இந்த படத்தின் பெரிய minus காமெடி track அதுவும் மிகவும் talented VKR , ஜனகராஜ் , நகைச்சுவை பெரிய வேக தடை , ஆனால் ஜனகராஜ் அவர் தம்பி SN வசந்த் இருவரும் ஒரு சின்ன திருப்பத்திற்கு உதவுகிறார்கள் .
இசை : ரங்கா ராவ் பாடல்கள் சுமார் தான் . ஒரு மனிதர் நல்லதே செய்து , நல்லவனாகவே இருக்கும் பொது , அவர் ஒரு உதவியும் இன்றி வாடி , வதங்கி , அழியும் பொது , அதை ஏற்க முடியவில்லை (அவன் தான் மனிதன் , பாசமலர் , தெய்வமகன் (கண்ணன் பாத்திரம்) படங்களும் பார்க்கும் போதும் இது தான் தோன்றியது )
இந்த காமெடி track யை தவிர்த்து , முக்கிய பாத்திரங்களை நன்றாக establish செய்து , குடும்பம் ஒரு கோவில் என்ற தலைப்புக்கு ஏற்ப முடிவை positive ஆக மாற்றி இருந்தால் படம் இன்னும் நன்றாக இருந்து இருக்கும் .
-
6th March 2014 05:38 PM
# ADS
Circuit advertisement
-
6th March 2014, 05:40 PM
#1502
Junior Member
Seasoned Hubber
Dear Sivaa sir,
Rocking Uploads continue to enthrall us, superb
Dear Ravi kiran suriya sir,
Engal thangaraja pics makes me and excites me to watch this movie in theatre
-
6th March 2014, 05:57 PM
#1503
Senior Member
Seasoned Hubber
-
6th March 2014, 06:03 PM
#1504
Senior Member
Seasoned Hubber
-
6th March 2014, 06:04 PM
#1505
Senior Member
Seasoned Hubber
-
6th March 2014, 09:53 PM
#1506
Junior Member
Seasoned Hubber
அன்புள்ள சிவா - மிகவும் அரிய , உன்னதமான ஆவணகள் - மீண்டும் பதிவிட்டதிற்க்கு மிகவும் நன்றி - ஒவ்வுறு 25 பதிவுகளக்கு பின்பும் இப்படிபட்ட ஆவணகளை நாம் பதிவு செய்து கொண்டே இருக்கவேண்டும் - நமக்காக அல்ல - கற்பனையில் மிதந்து , கடுகளவும் உண்மை இல்லாமல் , அஸ்திவாரம் இல்லாமல் வீடு கட்டி கொண்டிருக்கும் நம் மற்றைய நண்பர்களுக்காகவும் ------ இந்த உதவியை நாம் செய்துகொண்டுதான் இருக்கவேண்டும்
அன்புடன் ரவி
-
6th March 2014, 09:57 PM
#1507
Junior Member
Seasoned Hubber
பதிவுகளுக்கு சம்பந்தமான படங்களை போடுவதில் நீங்கள் என்றுமே முதலாவதாக இருக்கிண்டீர்கள் கோல்ட் ஸ்டார் அவர்களே - நன்றி
-
6th March 2014, 10:12 PM
#1508
Junior Member
Seasoned Hubber
Dear Gold Star Satish sir,
Thanks for timely upload of pics
-
6th March 2014, 10:20 PM
#1509
Junior Member
Seasoned Hubber
அன்புள்ள ராகுல்ராம் - உங்கள் பதிவுகளை வரி வரியாக படித்து ,ரசித்து கொண்டிருப்பவர்களில் நானும் ஒருவன் - பாராட்டி எழுதலாம் என்று நினைக்கும் பொழுது , மீண்டும் ஒரு அரிய படத்தைப் பற்றிய பதிவு - ஜிலேபி க்கு தொட்டுக்கொள்ள சர்க்கரை பொங்கலை வைத்து விடுகிறீர்கள் - இன்று ஒரு வார்த்தையாவது எழுத வேண்டும் என்று நினைத்து உங்கள் குடும்பம் ஒரு கோயிலை படிக்காமல் எழுதுகிறேன் - ---
வயதிற்கு எற்ற வேகம் - அதில் விவேகமும் கூடி வருகின்றது - பலர் பார்க்காத படங்கள் - அதை பற்றி அலசும் போது - கட்டிய சேலை முள்ளில் விழுவது போல = மிகவும் கவணமாக எடுத்து செல்ல வேண்டும் - பதிவை படிப்பவர்கள் - அடடா இப்படி ஒரு படத்தை ஏன் பார்க்காமல் இருந்து விட்டோம் என்று எண்ண வேண்டும் - அப்படி பட்ட எண்ணம் உங்கள் பதிவுகளை படிக்கும் போது கண்டிப்பாக வருகின்றது - இதில் நீங்கள் முழுவதும் வெற்றி பெற்று உள்ளீர்கள் - வாழ்த்துக்கள் .
உங்கள் பதிவுகளை அலசும் முன் என்ன படத்தை பற்றி அலச போகிறீர்கள் என்று முன்பாகவே தெரிவித்தால் படிப்பவர்கள் கவனம் ஒன்றுபடும் என்பது என் கருத்து - சிறிதே கருத்துக்களை பரிமாற எல்லோருக்கும் ஒரு வாய்ப்பும் கிடைக்கும் - மற்றபடி உங்கள் பதிவுகள் இந்த திரிக்கு ஒரு நல்ல tonic ஆக இருக்கின்றது என்றால் அதில் இரண்டு கருத்துக்கள் இருக்க முடியாது
அன்புடன் ரவி

-
7th March 2014, 12:51 AM
#1510
சிவா சார்,
வசூல் நோட்டீஸ் மற்றும் சாதனை நோட்டீஸ் பதிவேற்றதிற்கு நன்றி என்பது சாதாரண வார்த்தை. நீங்கள் பதிவேற்றிய நோட்டிஸ்கள் பார்க்கும் போது இரண்டு விஷயங்கள் புலப்படுகின்றன. ஒன்று இந்த நோட்டிஸ்களிலெல்லாம் நடிகர் திலகத்தின் சாதனைகள் புரிந்த படங்களைப் பார்தோமென்றால் அவை அனைத்துமே 80-களில் வந்த படங்கள். வா கண்ணா வா, சங்கிலி, தீர்ப்பு, தியாகி, நீதிபதி, மிருதங்க சக்கரவர்த்தி, வெள்ளை ரோஜா,திருப்பம் மற்றும் வாழ்க்கை ஆகிய படங்களின் சாதனை துளிகளை அள்ளி தெளித்திருக்கிறீர்கள். நடிகர் திலகத்தின் lean period என்று ஒரு சாரார் சொல்லக் கூடிய காலகட்டத்திலேயே இப்படி வசூல் என்றால் அவர் என்றுமே Vasool Chakravarthi Ganesan என்பது எத்தனை நிதர்சனமான உண்மை!
குறிப்பிட வேண்டிய இரண்டாவது விஷயம் என்னவென்றால் சேலம் மாநகரில் நடிகர் திலகத்தின் புதிய படங்களும் சரி பழைய படங்களும் சரி வசூலில் பெரிய சாதனையையே புரிந்திருக்கிறது. நடிகர் திலகத்திற்கு அடுத்த தலைமுறையும் அதற்கடுத்த தலைமுறையும் தமிழ் சினிமாவில் கதாநாயகர்களாக கோலோச்சும் போது கூட, நடிகர் திலகத்தின் படங்கள் இப்படி வசூல் பிரளயம் ஏற்படுத்தியிருக்கும் ஆதார ஆவணங்கள், மதுரை சென்னை கோவை போன்றே சேலமும் நம்முடைய கோட்டை என்பதை தெளிவாக நிரூபிக்கின்றன [சொல்லப் போனால் தமிழகமே நம்முடைய கோட்டைத்தானே]. இப்பேர்ப்பட்ட சேலம் மாநகரில் மீண்டும் அந்த பொற்கால் நாட்கள் திரும்பி வரும் காட்சி விரைவில் அரங்கேறட்டும்
இதை தவிர என்றென்றும் நடிகர் திலகம் ஆட்சி புரியும் இலங்கையில் நமது சாதனை கல்வெட்டுகளை திக்கெட்டும் ஒளி வீச வைத்ததற்கு நன்றி.
RKS,
Dr.ராஜா ஒரு பக்கம் பட்டாக்கத்தி பைரவன் ஒரு பக்கம் என்று எல்லா போஸ்டர் டிசைன்களும் பின்னி பெடலெடுக்கிறது என்று சொன்னேன். போஸ்டரில் மட்டுமல்ல திரையிடுவதிலும் அதை 100% நிரூபிக்கும் வண்ணம் கோவை மாநகரில் மட்டுமல்லாமல் (மலைக்) கோட்டை நகரிலும் வெளி வரும் செய்தியை பகிர்ந்துக் கொண்ட உங்களுக்கு நன்றிகள்! வாழ்த்துகள்!.
அன்புடன்
Bookmarks