-
15th March 2014, 10:59 PM
#1651
Junior Member
Seasoned Hubber
பிரமாதம் கோல்ட் ஸ்டார் , வில்லில் இருந்து புறப்பட்ட அம்புகள் போல அடுத்து அடுத்து பதிவுகள் - அதுவும் இதுவரை யாரும் பார்க்காத பதிவுகள் - இந்த சுவை போறாது என்று மேலும் கவி மாலை வேறு - வார கடைசியில் எல்லோரையும் திக்கு முக்காட வைத்துவிட்டீர்கள் - சரக்கு இன்னும் உள்ளதா அல்லது இவைகள் மட்டுமேவா ??
அன்புடன் ரவி
-
15th March 2014 10:59 PM
# ADS
Circuit advertisement
-
16th March 2014, 12:23 AM
#1652
கோவையில் பைரவனின் அனல் வீச்சு இன்றும் தொடர்ந்திருக்கிறது. இன்றைய நாளில் 474 அனுமதி சீட்டுகள் விற்பனையாகி உள்ளன. பொதுவாக சனிக்கிழமைகளில் இந்தளவு பழைய படங்களுக்கு டிக்கெட் போகாது. அதையும் மீறி சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கிறார் பைரவன். நாளை சொல்லவே வேண்டாம்.
அதே போன்று சென்னை மகாலட்சுமியில் என்ஜீனியர் ராஜாவிற்கும் வரவேற்பு குறையவில்லை. இன்றும் தியாகம் திரைப்படத்தை 624 பேர் கண்டு மகிழ்ந்திருக்கின்றனர்.
சென்னையிலும் கோவையிலும் முறையே தியாகமும் எங்கள் தங்க ராஜாவும் இரண்டே நாளில் பெற்றிருக்கும் வசூல் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியிருக்கிறது என்பதை சொல்லவும் வேண்டுமோ?
மதுரையிலும் இன்றைய தினம் ஹீரோ தன செல்வாக்கை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். கிட்டத்தட்ட நேற்றைய அளவிலேயே வைர நெஞ்சம் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நாளை மாலை வெகு சிறப்பாக இருக்கும் என்று செய்திகள் .
அன்புடன்
-
16th March 2014, 12:38 AM
#1653
நம்முடைய ரசிகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். இப்போது வெளியாகியிருக்கும் படத்தை பற்றிய கமன்ட்களை நமது திரியில் தவிர்க்கலாமே. பாச மலர் வெளியான நேரத்தில் அவர்கள் அப்படி நடந்துக் கொண்டனர் என்பதற்காக நாமும் அதை செய்ய வேண்டாமே! இன்றைய கால கட்டத்தில் அனைத்து தகவல்களும் நமக்கு மட்டுமல்ல பொது மக்களுக்கும் தெரியும். ஆகவே யாரும் யாரையும் ஏமாற்ற முடியாது. தவறான தகவல்களை சொல்லி பிம்பத்தை வளர்க்க முடியாது.
இப்போது என்றல்ல எப்போதும் உண்மை செய்திகள் தமிழ்கமெங்கும் நடக்கும் உண்மை செய்திகள் நம் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் யார் மனதையும் புண்படுத்தும் எண்ணம் நமக்கில்லை.ஆகவேதான் நடிகர் திலகத்தைப் பற்றிய தவறான செய்திகளுக்கு மட்டும் அல்லது வரலாற்று பிழைகளுக்கு மட்டும் நாம் பதில் சொல்கிறோம்.
எனவே அனைவரும் நமது படங்களைப் பற்றி மட்டும் பதிவிடுவோம். உண்மைகளை காலம் உரக்க சொல்லும். அதை மனதில் இருத்தி பதிவிடுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
-
16th March 2014, 01:04 AM
#1654
Junior Member
Senior Hubber

Originally Posted by
goldstar
GOLD STAR you are our golden star excellent and superb coverage of
NT telugu movies and other news kudos kudos and kudos.
-
16th March 2014, 01:13 AM
#1655
Junior Member
Senior Hubber

Originally Posted by
Murali Srinivas
நம்முடைய ரசிகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். இப்போது வெளியாகியிருக்கும் படத்தை பற்றிய கமன்ட்களை நமது திரியில் தவிர்க்கலாமே. பாச மலர் வெளியான நேரத்தில் அவர்கள் அப்படி நடந்துக் கொண்டனர் என்பதற்காக நாமும் அதை செய்ய வேண்டாமே! இன்றைய கால கட்டத்தில் அனைத்து தகவல்களும் நமக்கு மட்டுமல்ல பொது மக்களுக்கும் தெரியும். ஆகவே யாரும் யாரையும் ஏமாற்ற முடியாது. தவறான தகவல்களை சொல்லி பிம்பத்தை வளர்க்க முடியாது.
இப்போது என்றல்ல எப்போதும் உண்மை செய்திகள் தமிழ்கமெங்கும் நடக்கும் உண்மை செய்திகள் நம் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் யார் மனதையும் புண்படுத்தும் எண்ணம் நமக்கில்லை.ஆகவேதான் நடிகர் திலகத்தைப் பற்றிய தவறான செய்திகளுக்கு மட்டும் அல்லது வரலாற்று பிழைகளுக்கு மட்டும் நாம் பதில் சொல்கிறோம்.
எனவே அனைவரும் நமது படங்களைப் பற்றி மட்டும் பதிவிடுவோம். உண்மைகளை காலம் உரக்க சொல்லும். அதை மனதில் இருத்தி பதிவிடுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
You have just tied my hands I was about write many many bare facts of things happened in seventies about other side FILMS. when they have dragged NT unnecessarily about TRISULAM AND SORGAM in their thread, as you say let us simply ignore them TRUTH ALWAYS WINS SATYAMEVE JAYATE.
Last edited by Subramaniam Ramajayam; 16th March 2014 at 01:17 AM.
-
16th March 2014, 05:02 AM
#1656
Senior Member
Devoted Hubber
-
16th March 2014, 05:04 AM
#1657
Senior Member
Devoted Hubber
-
16th March 2014, 05:13 AM
#1658
-
16th March 2014, 10:39 PM
#1659
Junior Member
Seasoned Hubber
அன்புள்ள முரளி
நீங்கள் இந்த திரியை ஒரு அஹிம்சாவதத்தின் முன்னோடியாக கொண்டு செல்வதை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம் - அனால் அதையே சிலர் நமது மிக பெரிய பல வீனம் என்றும் எடுத்துக்கொள்ள வாய்ப்பு இருகின்றதே ! சிவாவின் ஆவணங்கள் , ரவிகிரணனின் பதிவுகள் , சதீஷின் உறக்கமில்லாத உழைப்பு - இவ்வள்ளவு இருந்தும் , மன வளர்ச்சி கோளாறால் பலர் புரிந்து கொள்ள முடியாமல் , மனம் வந்தபடி உளர்வதில் docterate பண்ணி உள்ளார்கள் - அவர்களுக்கு அவர்கள் வழியில் சென்று தான் பதில் கொடுக்கவேண்டும் என்று சொல்லவில்லை - ஆனால் கண்டு கொள்ளாமல் சென்று விட்டால் அவர்கள் இன்னும் பேத்துவதர்க்கு நாம் இன்னும் நிறைய வாய்ப்பு கொடுகின்றோமோ என்று தோன்றுகின்றது - பலர் படிக்கும் திரி இது - குறிப்பாக இன்றைய தலைமுறை இந்த இரு மேதைகளை பற்றி இன்னும் நிறைய தெரிந்துகொள்ள , புரிந்துகொள்ள இந்த திரிகள் பலமாகவும் , பாலமாகவும் இருக்கும் - அப்படி பட்ட ஒரு திரி பொயின் மொத்த வடிவமாக ஆகிவிட நாம் அனுமதிக்க கூடாது - அப்படி பொய் பேசுபவர்களுக்கு , கற்பனைக்கும் அதிகமாக பேத்துபவர்களுக்கு நாம் தான் ஒரு நல்ல பதிலடி கொடுக்க வேண்டும் --
நாம் ஒரு பண்பு என்ற ஒரு நல்ல பட்டரையில் வளர்ந்தவர்கள் - பிறரை திட்டித்தான் நம் தலைவருக்கு புகழ் சேர்க்கவேண்டும் என்ற நிலையில் இல்லாதவர்கள் - சாதிக்காததை சாதித்ததாக சொல்ல தெரியாதவர்கள் - படம் வெற்றி பெறவில்லை என்றால் -- அதையும் அழகாக மழுப்ப தெரியாதவர்கள் - நம் பதிவுகளில் முதல் வரியிலேயே - படம் ஏனோ வெற்றி இல்லக்கை அடைய வில்லை , மிகவும் கண்டு கொள்ளாத படம் என்றுதான் எழுதுவோம் - 8 round இல் - 8 இலட்சம் சம்பாதித்தது என்று நமக்கு எழுத வராது - ஒரு புதிய முறையில் தலைவர் நடித்து தயாரிப்பாளர்களை மகிழ்வித்த படம் என்று நமக்கு எழுத தோணாது - ஒரு சிரஞ்சீவியை கூட அல்ப்ப ஆயுசு என்று சொன்னவர்கள் நாம் - இந்த திரியின் பிதாமகரை பற்றி கூட , அப்படி சொல்லும்போது நாம் கவலை பட்டதில்லை - திரை அரங்குகளில் தப்பி தவறி ஒரே ஒரு காக்கா உட்காந்து விட்டாலுமே , கூட்டம் நிரம்பி வழிகின்றது என்று நமக்கு சுட்டு போட்டாலும் சொல்ல வராது - இப்படி இவளவு குறைகள் நமக்கு உண்டு - அதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்
ஒன்று மட்டும் நிச்சயம் - நாம் பலவீனர்கள் அல்ல - நமக்கு புலியாக பாய தெரியும் - சிங்கமாக கர்ஜிக்க தெரியும் -
ஆனால் மிருகத்தனமாக எழுத தெரியாது , பிறரை புண்படுத்த வராது -
-தன் வினை தன்னை சுடும் என்று புரிந்து கொள்ளாதவர்களுக்கு விளக்கம் தேவை இல்லை ;
-தூங்குவது போல நடிப்பவர்களுக்கு அனுதாபம் தேவை இல்லை -
-வெளிச்சத்திற்கு வராதவர்களுக்கு edison யை பற்றி பேச என்ன யோகிதை இருக்கின்றது ??
-குறுகிய வட்டத்துள்ளே இருப்பவர்கள் கொலம்பஸ் யை பற்றி என்ன பேசி விட முடியும் ?
-அம்மாவாசையின் இருளை ரசிப்பவர்களால் அழகிய கதிரவனின் இளம் கதிர்களை பற்றி பேச தெரியுமா ??
சிங்கம் ருத்திரத்தை சொல்லிகொண்டு வாழ முடியாது - சீண்டுபவர்கள் சிதறி ஓட நாம் சிறிதே அஹிம்சைக்கு விடுமுறை கொடுக்கலாமே முரளி ??? !!!!
அன்புடன் ரவி

-
17th March 2014, 12:24 AM
#1660
அன்பு ரவி,
உங்கள் உணர்வுகளை நிச்சயமாக புரிந்துக் கொள்கிறேன். அந்த உணர்வுகளையும் மதிக்கிறேன். காந்தியவாதியாக அஹிம்ஸா வழியைதான் இங்கே அனைவரும் பின் தொடர வேண்டும் என்றும் சொல்லவில்லை. நான் சொல்ல வந்தது என்னவென்றால் அங்கே ஒரு நண்பர் தவறாக பேசினார் என்பதற்காக நாமும் அதை செய்தால் இங்கே படிப்பவர்கள் என்ன நினைப்பார்கள்? சிவாஜி ரசிகன் என்று சொன்னால் அது ஒரு பெருமை, தவம் செய்து கிடைக்கும் வரம். அதற்கு மாசு வரவேண்டாம்.
மாற்று முகாம் நண்பர்கள் பலரிடம் இருக்கும் வேதைனைக்குரிய சிந்தனை என்னவென்றால் கண்மூடித்தனமான சிவாஜி விரோதம். சிவாஜி ரசிகர்களை எதிரிகளாக பார்ப்பது. சிவாஜி ரசிகனை பார்க்காதே, சிரிக்காதே, பேசாதே, பழகாதே என்றெல்லாம் விதிக்கப்பட்டிருக்கும் கற்கால கட்டுப்பாடுகள். அந்தக் காரணத்தினால்தான் இப்படிப்பட்ட வார்த்தைகள் வருகின்றன. இன்னும் சொல்லப் போனால் அடுத்த தலைமுறைக்கும் கூட இந்த வெறுப்பு கடத்தி செல்லப்படுகிறது. ஏன் இதை கூறுகிறேன் என்றால் இன்று நம் மீது அமிலத்தை கக்கும் நண்பர் கூட நம்முடைய தலைமுறையை சேர்ந்தவர் இல்லை. இதை கூற காரணம் அவரே ஒரு முறை தன் பதிவில் 1983-ம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்வை குறிப்பிட்டு அந்த நிகழ்ச்சிக்கு 9 வயது சிறுவனாக தன தந்தையுடன் சென்றதாக எழுதியிருந்தார். அப்படியென்றால் 1974-ல் பிறந்தவராக இருக்க வேண்டும். 1974 என்றால் அவருக்கு நினைவு தெரிந்து சினிமாவை புரிந்துக் கொள்ளும் போது சிவாஜி எம்ஜிஆர் போட்டி எல்லாம் முடிந்து விட்ட காலம். ஆகவே அவருக்கு நேரிடையான அனுபவம் கிடையாது. எல்லாமே செவி வழி செய்திதான். அப்படி பரப்பபடும் செய்திகளில் என்ன உண்மை இருக்க முடியும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆக நேரிடையான அனுபவம் இல்லாமல் நடிகர் திலகத்தின் மீது உருவாக்கப்பட்ட வெறுப்பை சுமந்து கொண்டு [நான் புரிந்து கொண்ட வகையில் தனக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டிருப்பவை தவறான தகவல்கள் என்பது தெரியாமலே] ஒரு இளைய நண்பர் ஏதோ சொல்லி விட்டார் என்பதற்காக நாமும் அதே பாணியில் பேச வேண்டுமா என்பதை சற்று யோசித்து பாருங்கள்.
நான் நேற்றே சொன்னது போல் இது பழைய காலம் அல்ல. உண்மைகளை யாரும் மூடி மறைக்க முடியாது. எந்தப் படமாக இருந்தாலும் அது எப்படி ஓடுகிறது எனபது இப்போது அனைவராலும் அறிந்துக் கொள்ள முடியும், முடிகிறது. யாரும் தவறான தகவல்கள் தந்து பட்டங்களை சூட்டிக் கொள்ள முடியாது. அது மட்டுமல்ல இங்கே பலரின் அயராத உழைப்பினால் இன்று நாம் சொல்லும் கடந்த கால மற்றும் நிகழ் கால உண்மைகளை இதுவரை அதை பற்றி மாற்றுக் கருத்து கொண்டவர்கள் கூட இப்போது உண்மை நிலை உணர்ந்து விட்டனர்.
இதற்கு இரண்டே இரண்டு உதாரணங்கள் சொல்ல விரும்புகிறேன். சென்னை மகாலட்சுமி மற்றும் கோவை ராயல். இந்த இரண்டு திரையரங்குகளும் ஒருவரின் குத்தகை எனபது போன்ற தோற்றம் நிலவி வந்தது. இப்போது தொடர்ந்து நமது படங்கள் வெளியிட ஆரம்பித்தவுடன் உண்மை நிலவரம் என்ன? நமது படங்கள் குவிக்கும் வசூல் என்ன என்பது இப்போது வெளியில் தெரிகிறது. அதிலும் நாம் தோராயமாக இத்தனை வசூல் என்றோ சுமார் 300-400 பேர்கள் வந்திருந்தனர் என்று பொத்தாம் பொதுவாக எழுதுவதில்லை. மொத்தம் விற்பனையான டிக்கெட்கள் எத்தனை என்ற துல்லியமாக கணக்கு சொல்கிறோம். காரணம் தவறான தகவல் தந்து நாம் சாதிக்க போவது ஒன்றுமில்லை.
ஆகவே நான் எப்போதும் சொல்லும் அந்த பாடல் வரிகளை இப்போதும் சொல்லி முடிக்க விரும்புகிறேன்.
யாரும் தீமை செய்தாலும் நீங்கள் நன்மை செய்யுங்கள்
யாரும் பொய்யை சொன்னாலும் நீங்கள் மெய்யை சொல்லுங்கள்
நேர்மையாய் வாழ்வதில் தோல்வியே இல்லையே
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks