Page 176 of 401 FirstFirst ... 76126166174175176177178186226276 ... LastLast
Results 1,751 to 1,760 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

  1. #1751
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Thanks GOld star for nice pics

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1752
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    காலத்தை வென்ற காதல் நாயகன் அழகாபுரி சின்ன ஜமீன் ஆனந்த் நாஞ்சில் நகரில் நேற்று முதல் தன் காதல் ராஜ்யத்தை மீண்டும் நிறுவ வந்திருக்கிறார். நாகர்கோவில் ராஜாஸ் திரையரங்கில் (முன்னாட்களில் சுவாமி என்ற பெயரில் இயங்கி வந்தது) நேற்று 18.03.2014 முதல் தினசரி 4 காட்சிகளாக வசந்த மாளிகை வெற்றி நடை போட்டு வருகிறது. தகவலுக்கு நன்றி திரு ராமஜெயம்.

    ராகவேந்தர் சார் மீண்டும் நமது மெயின் திரியில் பதிவிட வந்தது மிகவும் மகிழ்ச்சியளிக்க கூடிய செய்தி. அவரது பதிவுகளின் quantity 5000 என்றால் அவரது பதிவுகளின் quality 50000 பிளஸ் என்றே கூறுவேன். எங்கள் ஊர்காரர் சின்ன கண்ணனின் மீள் வரவும் மகிழ்ச்சியளிக்கிறது.வாசுவும் விரைவில் வருவார்.

    சதீஷ்,

    நடிகர் திலகத்தின் தெலுங்கு பட விளம்பரங்கள் [அனேகமாக பெரும்பாலானவை மொழி மாற்றப் படங்கள் என்றே தோன்றுகிறது] அமர்களமாக இருக்கின்றன. மொழி தெரியாத நமக்கே அவை என்னென்ன படங்கள் என்பது தெரிகிறது. நமது பாலா [எங்கே அவரை ஆளையே காணோம்?] வந்தாரென்றால் அனைத்து படங்களையும் தெலுங்கு பெயர்களோடு சொல்லி விடுவார்.

    தம்பி ராகுல்ராம் ராகவேந்தர் சார் சொன்னது போல் அதிகம் விவாதிக்கப்படாத படங்களை தேடி பிடித்து அவற்றை அலசுவது பாராட்டுக்குரிய ஒன்று. நண்பர் ரவியும் சேர்ந்து கை கொடுக்கும் போது அது மேலும் சுவையை கூட்டுகிறது. அனைவரும் சேர்ந்து திரியை மேன் மேலும் உயர்ந்த level-ல் கொண்டு செல்வது மகிழ்ச்சியான செய்தி.

    அன்புடன்

  4. #1753
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ரவி,ராகுல் ராம், சதீஷ் மூவரும் அழகாக அறிவாளி பற்றி இங்கு விருந்து படைத்திருக்கிறீர்கள்..நன்றி..

    முரளி சார் சொன்னது போல சதீஷ் - உங்களுடைய தெலுங்குப் பட போஸ்டர்கள் அருமை.. என்னபடம் என்று யோசிப்பது கொஞ்சம் த்ரில்லாக இருந்தது.. நன்றி..

    அறிவாளியில் பானுமதியைத் திருமணம் செய்து கொண்ட பிறகு என நினைக்கிறேன்.. ந.தியும் பானுமதியும் பூங்காவில் அமர்ந்திருப்பார்கள் ... ஏதோ பேசிக்கொள்வார்கள்..புறாக்கள் பறக்கும்.. அழகான காட்சி அது..கல்யாணத்துக்கு முன்னால் சட் சட்டென்று மாறுபடும் முகபாவம் கொண்ட பானுமதி க.விற்குபின் சாந்த ஸ்வருபியாக - சஜெஷன் தான் சொல்கிறேன் என்று சொல்லி - மென்மையான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். ந.தியும் சண்டைக்கோழியென இருக்கும் பானுமதியிடம் ச்ரிக்குச் சமமாக சண்டையிடும் போதும் சரி, கல்யாணத்துக்கப்புறம் அவள் ந்ல்ல பெண் தான் என்று டிஆர் ராமச்சந்திரனிட்மோ தங்க வேலிடமோ சொல்லும் போதும் சரி அழகாக நடித்திருப்பார்..ம்ம் அசை போட வைத்ததற்கு மறுபடியும் நன்றி

  5. Likes RAGHAVENDRA liked this post
  6. #1754
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    முரளி - ட்யொபொக்ஷொ dictionary யில் week end என்பதற்கு - திங்கள் , செவ்வாய் ,புதன் என்று அர்த்தம் ( Ref page 46 , para 34 )

    ஜெயா டிவி AO வை பற்றி ஒரு சிறப்பு நிகழ்ச்சி தங்களது டிவி யில் வெளி பரப்பி உள்ளார்கள் - தொகுத்து பேசுபவர் ஒரு பெண் - அவர் சொல்கிறார் - B R பந்தலு தொடர்ச்சியாக தோல்வி படங்களே கொடுத்துவந்தாராம் - அதை கண்டு கலங்கி MT தானே முன் வந்து இந்த படத்தை நடித்து கொடுத்தாராம்

    ஆயிரத்தில் ஒரு பொய் சொன்னால் பராவாயில்லை - ஆயிரமும் பொய்யாக இருந்தால் ??????

    B R பந்தலு அப்படியே உண்மையில் சொல்லி இருந்தால் அவருக்கு நரகத்தில் கூட இடம் கிடைத்திருக்காது - அவரை அடையாளம் காட்டிய படங்கள் சில :

    1. வீர பாண்டிய கட்டபொம்மன் - அவரை உலக அளவில் கொண்டு சென்று நிறுத்தியது

    2. கர்ணன் - B R பந்துலுவை குபேரனாக்கியது அன்றும் இன்றும்

    3. பலே பாண்டியா - அவருக்கு நகைச்சுவை உணர்வும் உண்டு என்று உணர்த்திய படம் - வசூலில் முன் நின்றது

    4. முரடன் முத்து - போட்ட முதலுக்கும் மேல் லாபம் கொடுத்த படம்

    5. கப்பலோட்டிய தமிழன் - தமிழக மக்களுக்கு தேச பக்தி சுத்தமாக கிடையாது என்று நிரூபித்த படம் - இந்த படத்தின் மூலம் B R பந்துலு அழியாத புகழை சம்பாதித்தார் - படம் மீண்டும் மீண்டும் வெளி வந்து பணத்தை குவித்தது

    எதை வைத்து இப்படி ஒரு அண்ட பொய்யை சொல்கிறார்கள் ? உண்மையை , முரளி நீங்கள் அதிகமாக உறங்க விடுகிறீர்கள் - அது எழுந்து வரும் போது கர்ஜிக்க தெரியாமல் மியாவ் மியாவ் என்றே கத்துகின்றது - படத்தில் நம் சிங்கத்திற்கு தயிர் சாதம் போட்ட படங்கள் ஏராளம் - அந்த பழக்க தோஷமோ என்னவோ நாம் இன்னும் தயிர் சாதத்தை தான் அமைதியாக சாப்பிட்டு கொண்டு இருகின்றோம் - பொய் சொல்பவர்கள் உண்மை விளம்பிகளாக திரிந்து கொண்டு இருக்கிண்டார்கள் - ஜெயா டிவி "தயியா தக்கா" என்று குதிக்க நம் பொறுமையும் ஒரு காரணமே !!!

    அன்புடன் ரவி

  7. Likes RAGHAVENDRA liked this post
  8. #1755
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Quote Originally Posted by g94127302 View Post
    முரளி - ட்யொபொக்ஷொ dictionary யில் week end என்பதற்கு - திங்கள் , செவ்வாய் ,புதன் என்று அர்த்தம் ( Ref page 46 , para 34 )

    ஜெயா டிவி AO வை பற்றி ஒரு சிறப்பு நிகழ்ச்சி தங்களது டிவி யில் வெளி பரப்பி உள்ளார்கள் - தொகுத்து பேசுபவர் ஒரு பெண் - அவர் சொல்கிறார் - B R பந்தலு தொடர்ச்சியாக தோல்வி படங்களே கொடுத்துவந்தாராம் - அதை கண்டு கலங்கி MT தானே முன் வந்து இந்த படத்தை நடித்து கொடுத்தாராம்

    ஆயிரத்தில் ஒரு பொய் சொன்னால் பராவாயில்லை - ஆயிரமும் பொய்யாக இருந்தால் ??????

    B R பந்தலு அப்படியே உண்மையில் சொல்லி இருந்தால் அவருக்கு நரகத்தில் கூட இடம் கிடைத்திருக்காது - அவரை அடையாளம் காட்டிய படங்கள் சில :

    1. வீர பாண்டிய கட்டபொம்மன் - அவரை உலக அளவில் கொண்டு சென்று நிறுத்தியது

    2. கர்ணன் - B R பந்துலுவை குபேரனாக்கியது அன்றும் இன்றும்

    3. பலே பாண்டியா - அவருக்கு நகைச்சுவை உணர்வும் உண்டு என்று உணர்த்திய படம் - வசூலில் முன் நின்றது

    4. முரடன் முத்து - போட்ட முதலுக்கும் மேல் லாபம் கொடுத்த படம்

    5. கப்பலோட்டிய தமிழன் - தமிழக மக்களுக்கு தேச பக்தி சுத்தமாக கிடையாது என்று நிரூபித்த படம் - இந்த படத்தின் மூலம் B R பந்துலு அழியாத புகழை சம்பாதித்தார் - படம் மீண்டும் மீண்டும் வெளி வந்து பணத்தை குவித்தது

    எதை வைத்து இப்படி ஒரு அண்ட பொய்யை சொல்கிறார்கள் ? உண்மையை , முரளி நீங்கள் அதிகமாக உறங்க விடுகிறீர்கள் - அது எழுந்து வரும் போது கர்ஜிக்க தெரியாமல் மியாவ் மியாவ் என்றே கத்துகின்றது - படத்தில் நம் சிங்கத்திற்கு தயிர் சாதம் போட்ட படங்கள் ஏராளம் - அந்த பழக்க தோஷமோ என்னவோ நாம் இன்னும் தயிர் சாதத்தை தான் அமைதியாக சாப்பிட்டு கொண்டு இருகின்றோம் - பொய் சொல்பவர்கள் உண்மை விளம்பிகளாக திரிந்து கொண்டு இருக்கிண்டார்கள் - ஜெயா டிவி "தயியா தக்கா" என்று குதிக்க நம் பொறுமையும் ஒரு காரணமே !!!

    அன்புடன் ரவி
    Very well said RAVI sir.
    Enna sonnalum urariym ulagarium UNMAI ENNA ENDRU
    ENN PONDRA MAKKAL SATCHI

  9. #1756
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் அளித்த ரவி, முரளி, சின்னக் கண்ணன் மற்றும் நண்பர்களுக்கு என் உளமார்ந்த நன்றி.

    மறு வெளியீட்டில் நம் மன்னர் நிகழ்த்தும் சாதனைகள் ஏராளம். அவற்றை விவரிக்கத் தேவைப்படும் பக்கங்களோ தாராளம். நம்முடைய விவாதங்களுக்கிடையில் இவை இடம் பெறுவதனால் விவாதமும் பாதிக்கப் படுகிறது. இந்த சாதனைகளும் கவனத்தை தேவைப்படும் அளவிற்கு ஈர்க்கப் பட முடியவில்லை.

    எனவே மறு வெளியீட்டில் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் நிகழ்த்தும் சாதனைகள், பெறும் வெற்றியைப் பற்றிய தகவல்கள் போன்றவற்றைத் தனித்திரியில் நாம் பகிர்ந்து கொண்டால் இங்கே படங்களைப் பற்றிய அலசல்கள் முழுமையாக கவனத்திற்கு வழி கிடைக்கும்.

    மறு வெளியீட்டிலும் மன்னரின் சாதனை என்ற தலைப்பில் புதியதாக தொடங்கப் பட்ட திரியில் இனி ரீரிலீஸ் திரைப்படங்களைப் பற்றிப் பகிர்ந்து கொள்வோமே.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #1757
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    எனவே மறு வெளியீட்டில் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் நிகழ்த்தும் சாதனைகள், பெறும் வெற்றியைப் பற்றிய தகவல்கள் போன்றவற்றைத் தனித்திரியில் நாம் பகிர்ந்து கொண்டால் இங்கே படங்களைப் பற்றிய அலசல்கள் முழுமையாக கவனத்திற்கு வழி கிடைக்கும்.

    மறு வெளியீட்டிலும் மன்னரின் சாதனை என்ற தலைப்பில் புதியதாக தொடங்கப் பட்ட திரியில் இனி ரீரிலீஸ் திரைப்படங்களைப் பற்றிப் பகிர்ந்து கொள்வோமே.
    மிகவும் அருமையான ஐடியா - மற்றவர்களும் ஒப்பு கொள்வார்கள் என நினைக்கிறேன்

  11. #1758
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    பொய் உலா வரும் நேரம்

    முரளி உங்கள் தலைப்பை சற்றே மாற்றி எழுதிள்ளேன்

    நீங்கள் சொல்ல வருவது புரிகின்றது - அவர்களுடைய ஓவ்வொரு கருத்துக்களுக்கும் நாம் react பண்ண முடியாது , கூடாது . அப்படி செய்தால் அவர்கள் கருத்துக்கள் மதிப்புக்குரியவை என்று ஆகிவிடும் - கண்டுகொள்ளாமல் விட்டு விடுவோம் - அங்கே சொல்பவர்கள் சொல்லட்டும் அது ஆணவ கருத்து - இங்கே நாம் இடும் பதிவுகள் ஆனந்த கருத்து - sorry இதை படிப்பவர்கள் ஒரு உதாரணத்திற்கும் எங்கள் தலைவர் பாட்டை த் தானே உபயோக படுத்துகிண்டீர்கள் என்று சொல்லலாம் - அதனால் நம் தலைவர் பாட்டையே உதாரணத்திற்கு எடுத்து கொள்கின்றேன் - உலகம் ஆயிரம் சொல்லட்டுமே - நீ தான் உனக்கு நீதிபதி - மனிதன் எதையோ பேசட்டுமே , உன் மனதை பார்த்துக்க நல்லபடி ---------

    அப்படி முடியவில்லை முரளி - அவர்கள் தங்கள் தலைவரை எப்படி வேண்டுமானாலும் புகழ்ந்து கொள்ளட்டும் - நமக்கு கவலை இல்லை - ஆனால் மறை முகமாக நம் தலைவரை இழுப்பதுதான் பொறுத்துக்கொள்ள முடியவில்லை - நல்லவர்களாகவே இருப்பது எவ்வளவு கடினமான செயல் என்று புரிகின்றது - நீங்கள் போட்ட லக்ஷ்மண் கோடு (Lakshman Rekha) நமக்கு என்றும் இருக்கும் பண்பாட்டை மீற அனுமதி தருவதில்லை - அந்த வரம்பரைக்குள் தான் என் இந்த குமறலை வெளிபடுத்துகின்றேன்


    Jaya TV யின் AO சிறப்பு நிகழ்ச்சியில் ஒருவர் சொல்கிறார் - இயற்கை நடிப்பு என்றால் இந்த படத்தை பார்த்துதான் எல்லோரும் புரிந்து கொள்ளவேண்டுமாம் !

    இதை கூட விட்டு விடலாம் - தின இதழ் தன் கட்டுரையில் சொல்கின்றது - MT யினால் நஷ்டப்பட்ட தயாரிப்பாளர்கள் யாருமே இல்லையாம் - அவர் தோல்வி படங்களே தந்தது இல்லையாம் - அப்படி இருந்தாலும் அவைகளை விரல் விட்டு எண்ணி விடலாமாம் - அந்த விரல் விட்டு எண்ணிய படங்களும் தயாரிபாளர்களுக்கு நஷ்ட்டத்தை கொடுத்ததில்லையாம் - அதனால் தான் எல்லா தயாரிப்பாளர்களும் அவர் பின்னாடி ஓடினார்களாம் -----

    1957 இல் இருந்து 1980 வரை ஒரு வருடத்திற்கு குறைந்தது 10 படங்கள் - எல்லாமே சரித்திரம் படைத்தவைகள் - எவ்வளவு படம் - அதுவும் ஒரே நடிகரை நம்பி - அந்த தயாரிப்பாளர்கள் எல்லாம் பணத்தை பார்க்காதவர்களா ? பணம் சேர்காதவர்களா ? திரும்பி திரும்பி NT இடம் ஓடாதவர்களா ?

    செய்திகளை போடுங்கள் - பத்திரிக்கை தருமபடி அதில் பல பொய்கள் இருக்கலாம் - ஆனால் கொஞ்சமாவது உண்மையும் இருக்கட்டுமே - உங்கள் பத்திரிக்கை கண்டிப்பாக விலை போகும் - கவலை படாதீர்கள் - உண்மை உறங்கலாம் ஆனால் அது மடிவதில்லை - செய்த பாவங்களை போல மீண்டும் மீண்டும் வெளி வரும் - அப்பொழுது அதன் வெப்பத்தை யாருமே தாங்கிக்கொள்ள முடியாது

    அன்புடன் ரவி

  12. #1759
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    B,R. Bandhulu got his recognition, fame and distinctions only due to NT movie classics. Of course, due to some misunderstandings at that time he became a camp maari and went to the otherside. If he claimed that he could not mint money with NT movies, it is amazing that how he could have minted money with aayirathil oruvan which could not touch the line of silver jubilee compared to VPKB? theriyamal pulivaal pidiththa Bandhulu mellavum mudiyamal sollavum mudiyamal puzhngikkondirundhiruppar. Because he has not given any silver jubilee hit with the other actor after whom he ran for the rest of his life. while Karnan has returned his glories in its unbeatable rerun, AO has miserably failed to pull crowds to theatres. Of course, they may resort to ammaa theatre screenings with vilayilla tickets or tax free to boost its run?! who knows! appadiyavathu indha kalaththukku ovvaatha padaththai oatta mudindhal saridhan. poiyana seithihalai veliiyidum indha madhiri dhina idhazhgal ippodu mugaththai enge vaithtukkollappogirargal? History now records that AO in its rerun attempt is a miserable failure compared to the himalayan victory of Karnan!
    Last edited by sivajisenthil; 20th March 2014 at 12:59 PM.

  13. #1760
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2008
    Location
    BANGALORE
    Posts
    211
    Post Thanks / Like
    திரு முரளி சார்,
    நடிகர்திலகம் படத்திறப்பு விழா தொடர்பாக நீங்கள் கேள்விப்பட்டது உண்மை ஆனால் அது நடப்பது பெங்களூரில் .ஆம் வருகிற 22-3-14 சனிக்கிழமையன்று பெங்களூர் அல்சூரில் உள்ள தமிழ்சங்கத்தில் நடிகர்திலகத்தின் திரு உருவப்படம் திறக்கப்பட உள்ளது . திறந்து வைப்பவர் சௌகார்ஜானகி அவர்கள் .திரு ராம்குமார் மற்றும் திரு ஆர்.சுந்தரராஜன் அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கிறார்கள் இது தொடர்பாக சிவாஜி அறக்கட்டளை தலைவர் திரு மா.நடராஜ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை இன்றைய தினத்தந்தி நாளிதழில் வெளிவந்துள்ளது
    TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •