கோவையில் ராயல் திரையரங்கில் புதிய வசூல் சாதனை நிகழ்த்தியிருக்கிறார் பைரவன். எங்கள் தங்க ராஜாவின் ஒரு வார வசூல் முன் வெளியான படங்களையெல்லாம் பின்னுக்கு தள்ளி முதலிடம் பெற வைத்திருக்கிறது. தொடர்ந்து நடிகர் திலகத்தின் படங்கள் புரிகின்ற சாதனைகளை பார்த்து விட்டு திரையரங்க உரிமையாளர்கள் நடிகர் திலகத்தின் படங்களை வெளியிட மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். ராயல் திரையரங்க உரிமையாளர் அடுத்த நடிகர் திலகத்தின் படத்திற்கும் தேதி கொடுத்து விட்டார். ஆம் வரும் வெள்ளி மார்ச் 28 முதல் நடிகர் திலகத்தின் சொர்க்கம் அங்கே திரையிடப்பட இருக்கிறது. இந்த கோவை மட்டுமல்ல, சென்னை, மதுரை திருச்சி போன்ற ஊர்களிலும் இது தொடரும்.

அன்புடன்