Page 203 of 401 FirstFirst ... 103153193201202203204205213253303 ... LastLast
Results 2,021 to 2,030 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

  1. #2021
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    DEDICATING THIS SONG TO GOPAL SIR, VIETNAM !



  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2022
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    MANNAVAN VANDHAANADI !!


  4. #2023
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    SABAASH !!!


  5. #2024
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivaa View Post
    சிவாஜிகணேசனுக்கு பாடிய முதல் பாட்டு, மார்ச் 27, 6:25 PM IST





    "சுமதி என் சுந்தரி'' படத்தில் வரும் "பொட்டு வைத்த முகமோ'' என்ற பாடல், சிவாஜிகணேசனுக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய முதல் பாடல்.

    "ஆயிரம் நிலவே வா'', "இயற்கை என்னும் இளைய கன்னி'' ஆகிய பாடல்கள் மூலம் புகழ் பெற்ற பாலசுப்பிரமணியத்துக்கு, ஏராளமான படங்களில் பாட வாய்ப்பு வந்தது.

    அந்தக் கால கட்டத்தில், எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிகணேசனுக்கும் டி.எம்.சவுந்தரராஜன்தான் பாடிக்கொண்டிருந்தார்.

    ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், முத்துராமன் ஆகியோர் முன்னேறிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கெல்லாம் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடலானார்.

    சிவாஜிகணேசன் நடித்த "சுமதி என் சுந்தரி'' என்ற படத்தில், சிவாஜிக்கு குரல் கொடுக்கும் வாய்ப்பு பாலுவுக்கு கிடைத்தது. "பொட்டு வைத்த முகமோ'' என்ற அந்தப்பாடலை, முதலில் வேறு ஒருவர் பாடுவதாக இருந்தது. பின்னர் பாலுவை எம்.எஸ்.விஸ்வநாதன்

    தேர்ந்தெடுத்தார்."சிவாஜிக்கு முதன் முதலாகப் பாடப்போகிறோம். நன்றாக அமையவேண்டுமே'' என்ற பயத்தோடு, பாடல் பதிவுக்குச் சென்றார், பாலு. அங்கே சிவாஜிகணேசன் வந்திருந்தார்.

    பொதுவாக, பாடல் பதிவுக்கு சிவாஜி வருவதில்லை. சிவாஜிக்காக டி.எம்.சவுந்தரராஜன் எத்தனையோ பாடல்கள் பாடியிருக்கிறார். அப்போதெல்லாம் வராத சிவாஜி இப்போது ஏன் வந்திருக்கிறார் என்று பாலு உள்பட அனைவரும் வியப்படைந்தனர்.

    பாலுவை ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்றார், சிவாஜி.

    "பாலு! எனக்குப் பாடப்போவதை நினைத்து, உன் ஸ்டைலை மாற்றிப் பாட முயற்சி செய்யாதே! உன் பாணியில் பாடு. நான் உன் பாட்டைக் கேட்கவேண்டும் என்பதற்காக இங்கே வரவில்லை. எனக்காக நீ உன் பாணியை மாற்றிப்பாட வேண்டும் என்று யாராவது சொல்லி உன்னைக் குழப்பி விடுவார்கள் என்று நினைத்தேன். அதனால்தான் இங்கே வந்தேன். நீ உன் பாணியில் பாடு. அதற்கேற்றபடி நான் நடித்து விடுகிறேன்'' என்று கூறினார்.

    சிவாஜி இப்படி கூறியது, பாலுவுக்கு தைரியத்தைக் கொடுத்தது. பாட்டை நன்றாகப் பாடமுடியும் என்ற நம்பிக்கை வந்தது.

    சிவாஜியும், பாலுவும் வெளியே வந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதனிடம் ஏதோ கூறிவிட்டு, சிவாஜி அங்கே இருந்து புறப்பட்டுச் சென்றார்.

    பின்னர் பாடல் பதிவு நடந்தது. எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், பி.சுசீலாவும் அந்தப்பாட்டை பாடி முடித்தனர். பாடல் நன்றாக வந்திருப்பதாக எம்.எஸ்.வி. கூறினார்.

    சி.வி.ராஜேந்திரன் டைரக்ஷனில் உருவான "சுமதி என் சுந்தரி''யின் படப்பிடிப்பு முடிவடைந்ததும், தொழில் நுட்பக் கலைஞர்களுக்குப் படம் போட்டுக் காட்டப்பட்டது. பாலசுப்பிரமணியம், தன் குடும்பத்துடன் சென்றிருந்தார்.

    "பொட்டு வைத்த முகமோ'' பாடல் காட்சியில், பாலுவின் பாட்டுக்கு ஏற்ப சிவாஜி தன் பாணியை மாற்றி நடித்திருந்தார். சிவாஜியின் ஆற்றலைக் கண்டு பிரமித்துப்போனார், பாலு.

    படம் முடிந்ததும், எல்லோரும் பாலுவை சூழ்ந்து கொண்டனர். "பொட்டு வைத்த முகமோ பாடல் பிரமாதம்'' என்று பாராட்டினர்.

    1971 ஏப்ரல் 14-ந்தேதி தமிழ்ப்புத்தாண்டு அன்று வெளிவந்து "சுமதி என் சுந்தரி'' வெற்றிப்படமாக அமைந்தது.

    தெலுங்கில் என்.டி.ராமராவ், ஏ.நாகேஸ்வரராவ் ஆகிய இருவரும் கொடிகட்டிப் பறந்த காலக்கட்டம் அது. அவர்களுக்கு கண்டசாலாதான் பின்னணியில் பாடி வந்தார். தெலுங்கு பின்னணி பாடகர்களில் "முடிசூடா மன்னன்'' அவர்தான்.

    வயதானதால், பாடுவதை குறைக்கலானார், கண்டசாலா. அப்போது பாலசுப்பிரமணியத்துக்கு வாய்ப்புகள் வரலாயின. அதிலும் ஒரு இடைïறு. ராமகிருஷ்ணன் என்ற இளம் பாடகர், ஏறக்குறைய கண்டசாலாவைப் போன்ற குரல் கொண்டவர். அவர் என்.டி.ராமராவுக்கு குரல் கொடுக்கலானார். கண்டசாலாவின் குரலை மறக்க முடியாத ஆந்திர ரசிகர்கள், ராமகிருஷ்ணன் குரலில் ஆறுதல் அடைந்தனர்.

    தெலுங்கு காமெடி நடிகர்களுக்கு, பாலு பாட நேரிட்டது.

    இந்த சமயத்தில், ஒரு எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. நடிகர் கிருஷ்ணா நடித்த படங்கள் பெரும் வெற்றி பெற்றதால், அவர் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். அவருக்கு பாலசுப்பிரமணியத்தின் குரல் வெகுவாகப் பொருந்தியது. "இனி என் படங்களுக்கு நீங்களே தொடர்ந்து பாடுங்கள். மற்ற பிரபல நடிகர்களுக்கும் நீங்கள் பாடலாம். ஆனால், காமெடி நடிகர்களுக்குப் பாடாதீர்கள்'' என்று பாலுவிடம் கூறினார், கிருஷ்ணா.

    அதைத்தொடர்ந்து கிருஷ்ணாவுக்கும், மற்ற பிரபல நடிகர்களுக்கும் பாலு பாடினார். தெலுங்கு பின்னணி பாடகர்களில் முதல் இடத்தை விரைவிலேயே பெற்றார்.

    தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று தென்னிந்திய மொழிகளில் தினமும் இரவு, பகலாக பாடினார், பாலசுப்பிரமணியம். அவர் புகழ் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போயிற்று.
    malaimalar
    பாலுவின் பாட்டுக்கு ஏற்ப சிவாஜி தன் பாணியை மாற்றி நடித்திருந்தார். சிவாஜியின் ஆற்றலைக் கண்டு பிரமித்துப்போனார், பாலு.


  6. #2025
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Majestic Movements from the Greatest Actor of the Universe !!!


  7. #2026
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ONE ACTOR - MANY SINGERS - DIFFERENT MIMING ! ! ! ALL ARE PERFECT IN SYNC !



  8. #2027
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ONE ACTOR - MANY SINGERS - DIFFERENT MIMING ! ! ! ALL ARE PERFECT IN SYNC ! - TA MOTHI SINGS FOR THE WORLDS GREATEST ACTOR OF ALL TIME !


  9. #2028
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    NADIGAR THILAGAM's THILLAANA MOHANAMBAL !

    அன்புள்ள சிவா - நன்றி - முரளியின் விரிவான பதிவை படித்தபின் பார்த்த படம் ஆனதால் கூடுதல் சுவையுடன் ரசிக்க முடிந்தது - எவ்வளவு அருமையான காலம் அது - எப்படி பட்ட படங்கள் !! எப்படி பட்ட கலைஞ்சர்கள் !! காதலைத்தான் எவ்வளவு மென்மையாக கையாண்டு உள்ளார்கள் - NT நடித்த படங்களே குடும்பத்ததுடன் பார்த்து மகிழ்ந்த படங்கள் -------

  10. #2029
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தைப் பற்றி நான் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். நான் பிறந்து வளர்ந்த கிராமம் (ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம், தற்போதைய திருவாரூர் மாவட்டம்) நாதஸ்வர மற்றும் தவில் வித்வான்கள் நிறைந்த ஊர். சிறு வயதில் தில்லானா மோகனாம்பாள் பார்த்துவிட்டு அதன் பின்னர் கோவில் திருவிழாக்களில் வாசிக்கும் நாதஸ்வரக் கலைஞர்களைப் பார்த்து (அவர்கள் பெரிய புகழ்பெற்ற கலைஞர்களாக இருப்பார்கள்) சிவாஜி வாசிப்பதுபோல இவர்களால் வாசிக்க இயலாது என்று ஒரு விவாதமே செய்த நினைவுகள் இன்றும் என் நினைவில் பசுமையாக நிழலாடுகிறது. என்னைப் பொறுத்தவரை First Impression is the best Impression என்பது போல, எனக்குப் பிடித்த திரைப்படங்களை வரிசைப்படுத்தச் சொன்னால் அதில் முதலிடம் பிடிப்பது தில்லானா மோகனாம்பாள் தான்.

    கடந்த 2008 ஆம் வருடம், சிவாஜி - ஒரு வரலாற்றின் வரலாறு என்ற நூலிற்காக மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் அவர்களை சந்தித்தேன். அப்போது அவர் மிருதங்கச் சக்கரவர்த்தி திரைப்படத்தைப் பற்றி குறிப்பிட்டார். மிருதங்கச் சக்கரவர்த்தி திரைப்படத்தில் சிவாஜிக்காக மிருதங்கம் வாசித்தேன். அதற்கு முன்னதாக நான் வாசித்த கச்சேரிக்கு வந்து முன்வரிசையில் வந்திருந்து அமர்ந்து நான் வாசிப்பதை கூர்ந்து கவனித்தார். திரைப்பட ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கும் என்னை வரவழைத்தார். ஒவ்வொரு ஷாட் முடிந்தவுடனும் என்ன வாத்தியார் சரியாக இருக்கிறதா என்று கேட்டுக்கொள்வார். அவருடைய Sincerity ஐ எண்ணி வியந்தேன். மிருதங்கச் சக்கரவர்த்தி திரைப்படம் வெளியான பிறகு கச்சேரிகளில் வாசிக்கும்போது பல பேர் என்னிடம் வந்து என்ன இருந்தாலும் சிவாஜி வாசித்த மாதிரி இல்லை என்று சொல்லுவார்கள். அப்போதுதான் எனக்குத் தெரிந்தது அவருடைய சின்சியாரிட்டியின் ரகசியம் என்று உமையாள்புரம் சிவராமன் நடிகர்திலகத்தைப் பற்றி குறிப்பிட்டார்.

    அப்போது புரிந்தது தில்லானா மோகனாம்பாளில் நடிகர்திலகத்தின் நாதஸ்வர வாசிப்பில் நாம் ஏன் ஈர்க்கப்பட்டோம் என்று.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  11. #2030
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Location
    The Gambia
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று பகல் 12.) மணிக்கு சன் தொலைக்காட்சியில் ந்டிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த மாபெரும் வெற்றிப் படமான " தில்லானா மோகனாம்பாள் " திரைக் காவியம் திரையிடப்பட்டது. பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இப்படத்தை பார்க்கும் வாய்ப்பு இன்று கிடத்தது.

    என்ன ஒரு அற்புதமான திரைக்காவியம். திரு.கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் தொடர்கதையாக ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய பொழுதே பலரின் பாராட்டுதலைப் பெற்ற இக் கதையை படமாக எடுக்க ஏ.பி.நாகராஜன் முடிவு செய்து சிவாஜியை அனுகிய பொழுது அவர் மிகவும் உற்சாகமாக இப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

    மிகவும் சாதாரண நிலையில் இருந்த ஏ.பி.என். அவர்களை ஒரு பெரும் படாதிபதியாக்கியது நடிகர் திலகம் அவர்கள் தான். எத்தனை வரிசையான வெற்றிப் படங்கள் - நவராத்திரி, திருவிளையாடல், சரஸ்வதி சபதம், திருவருட் செல்வர், திருமால் பெருமை.இப்படி பல வெற்றிப் படங்களின் வரிசையில் அமைந்ததுதான் தில்லானா மோகனாம்பாள். ஆனால் தன்னை பெரும் தயாரிப்பாளராக்கி அழகு பார்த்த வெள்ளை உள்ளம் கொண்ட ஒரு நல்லவருக்கு துரோகம் இழைத்துவிட்டு மாற்று முகாமுக்குச் சென்ற ஏ.பி.என். அந்த மாற்று நடிகரை வைத்து எடுத்த ஒரே ஒரு படத்திலேயே தான் இத்தனைக் காலம் சம்பாதித்து வைத்திருந்த செல்வத்தையும், நற்பெயரையும் இழந்து ந்டுத்தெருவுக்கு வந்தது வேறு கதை.

    . இன்று என் நினைவுகள் இப்படத்தையே சுழன்றன என்றால் அது மிகையில்லை. ஆம். என் இளமைக் காலங்களில் எப்பொழுதும் நடிகர் திலகத்தின் படங்களை முதல் நாளன்றே பார்த்துவிடும் நான் இப்படத்தை சென்னை மிண்ட் அருகில் உள்ள கிரௌன் திரைஅரங்கத்தில் முதல் நாள் இரவுக் காட்சியில் கண்டு ரசித்தேன். அதன் பிறகு பல முறை சென்னை சாந்தி மற்றும் கிரௌன் திரையரங்குகளில் மாறி மாறி பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். சிவாஜியின் படங்களைப் பொருத்தவரையில் சாந்தி அரங்கில் பார்த்தால்தான் எங்களைப் போன்ற சிவாஜி ரசிகர்களுக்கு மிகவும் இன்பமாக இருக்கும்.

    நடிகர் திலகத்தின் மிக இயல்பான நடிப்பில் வந்த பல படங்களுள் இப்படம் ஒரு மைல் கல். அது மட்டுமின்றி இப்படத்தில் நடிகர் திலகத்துடன் நடித்த பல அற்புதமான கலைஞர்களின் அணி. பத்மினி, பாலையா, நாகேஷ், சாரங்கபாணி, தங்கவேலு, டி.ஆர்.ராமச்சந்திரன், கருணாநிதி, மனோரமா,ஏவிஎம்.ராஜன் இப்படி பலர். சிவாஜி என்றுமே திறமையான நடிகர்களுடன் நடிப்பதைத்தான் விரும்புவார். அப்பொழுதுதான் அவரின் நடிப்பின் சிறப்பு பரிமளிப்பதுடன் படமும் பெரும் வரவேற்பு பெரும் என்பதில் நம்பிக்கை உடையவர். மேலும் தன்னுடன் நடிக்கும் நடிகர் சில காட்சிகளில் இவரை விடவும் சிறப்பாக நடித்து பேர் வாங்கிவிட்டால் அதனைக் கண்டு பொறாமைப்பட்டு அந்த நடிகர் அல்லது நடிகையின் அக்காட்சியை நீக்க சொல்லமாட்டார். ஏனென்றால் அவரது திறமையின் மேல் அவருக்கு எப்பொழுதுமே நம்பிக்கை உண்டு.

    இதற்கு உதாரணமாக நடிகர் அசோகனுடன் நடித்த உயர்ந்த மனிதன், வாணிஸ்ரீயுடன் நடித்த குலமா குணமா, எம்.ஆர்.ராதாவுடன் நடித்த பாவ மன்னிப்பு, நாகேஷுடன் நடித்த திருவிளையாடல், பத்மினியுடன் நடித்த வியட்னாம் வீடு என்று இப்படி பல படங்கள்.

    இப்படிப்பட்ட ஒரு மஹா கலைஞன் மீண்டும் ஒரு முறை பிறந்து நம் எல்லோரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்த இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்.
    Last edited by N.V.Raghavan; 30th March 2014 at 09:54 PM.

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •