-
5th April 2014, 12:48 PM
#2161
Junior Member
Seasoned Hubber
படத்தின் ஒரு ஒரு frame ல் தெரிவது பிரமாண்டம் , அந்த பிரமாண்டம் கலை இயக்குனர் கங்காவை சேரும் (APN படங்கள் இவரின் brand , hard work ) அதே போன்ற தரம் இசையிலும் , G ராமநாதன் , பெயர் போடும் போதே இவர் ராஜாங்கம் ஆரம்பித்து விடுகிறது படத்துவக்கமே சிவன்-பார்வதி நடனம், படத்தில் முதல் ஐந்து-ஆறு நிமிடம் இசையும்-நடனும் மட்டுமே,தமிழ் சினிமாவின் மிக உக்கிரமான பரதநாட்டியக் காட்சிகளில் ஒன்று இது. ஆனால் சிவனாக சிவாஜி சார் , பார்வதியாக சாவித்ரியும் தான் நினைவுக்கு வருகிறார்கள்
பூமிக்கு வரும் கடவுள் வனத்துக்கு வந்த உடன் வேடர்கள் அறிமுகம் ஆகும் பாடல் ,கோழி உடை அணிந்து கொண்டு ஆடும் நடனம் நன்று என்று சொல்ல வரும் பொது , பெரிய முரசை பார்த்து வாய் அடைத்து உக்கார்ந்து விட்டேன்
அடுத்த spectacle நடிகர் திலகம் தான் , சண்டை காட்சிகள் தூள் - ஆனால் நம்மில் பல நண்பர்கள் நடிகர் திலகத்தின் சண்டை படம் என்றதும் வெகு சில படத்தை பற்றி மட்டுமே சொல்லுகிறோம் , காரணம் வேறு விஷயத்தை நம் கவனம் ஈர்த்து விடுகிறது (குணசித்திர நடிப்பு , கதை )
நடிகர் திலகம் அறிமுகம் ஆகும் காட்சி ( இந்த படத்தை நான் பார்க்க காரணமாக இருந்த இந்த சண்டை காட்சி , வர்ணனை திரு வாசுதேவன் சார்)
ஒரு இடத்தில் கூட 'டூப்' போடாமல் ஒரிஜினலாக மல்யுத்தக் காட்சியில் அசத்தியிருப்பார் N.T. ஒரு ஒரிஜினல் மல்யுத்த வீரனின் அசைவுகளை இம்மி அளவு கூட பிசகாமல் கலக்கி இருப்பார் (ஸ்டண்ட் மாஸ்டர் – சோமு)
போட்டியாள வீரருடன் அவர் மோதத் துவங்கும் போது அந்த வீரர் இருமுறை நடிகர் திலகத்தை கழுத்தையும், உடம்பையும் ஒருசேரப் பிடித்து இடதுபக்கவாட்டில் தூக்கி வீசுவார் , மீண்டும் எழுந்து கொண்டு காலை உதறி கொண்டு அந்த வீரரின் கால்களைப் பிடித்து அவரை தலை கீழாக தூக்கிப் போட்டுவிட்டு (head smash )சண்டை போடும் அந்த 6 நிமிடம் தான் இந்த படத்தில் நடிகர் திலகத்தின் சண்டை காட்சிகள் அணிவகுப்பின் ஆரம்பம் (வாசு சார் அழகாக எழுதி இருப்பார் )
-
5th April 2014 12:48 PM
# ADS
Circuit advertisement
-
5th April 2014, 12:48 PM
#2162
Junior Member
Seasoned Hubber
அதை இங்கே கொடுக்கிறேன்
(Credit : Neyveli Vasudevan)
'காத்தவராயன்' திரைப்படத்தில் வரும் நடிகர் திலகம் அவர்கள் செய்வதாக வரும் மல்யுத்தக் காட்சி மெய் சிலிர்க்க வைக்கும் ஒரு அற்புதக் காட்சியாகும். அக்காலத்தில் அனைவராலும் மிகவும் சிலாகித்து பேசப்பட்ட ஒரு அரிய அற்புதமான மல்யுத்த சீன். ஒரு இடத்தில் கூட 'டூப்' போடாமல் ஒரிஜினலாக மல்யுத்தக் காட்சியில் அசத்தியிருப்பார் N.T. ஒரு ஒரிஜினல் மல்யுத்த வீரனின் மல்யுத்த அசைவுகளை இம்மி அளவு கூட பிசகாமல் ஏன் அதற்கு ஒருபடி மேலாகவே தந்து கலக்கியிருப்பார் நடிகர் திலகம். மல்யுத்த வீரனுக்குரிய உடல்வாகும்,தோற்றமும் அப்படியே அவருக்குப் பொருந்தி இருப்பது நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும்.
மல்யுத்தக் காட்சியின் தொடக்கத்தில் N.T. முதலில் களத்தில் இறங்கும்போது வலது கையால் வலது தொடையைத் தட்டி மண்ணைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு வலது காலை மட்டும் சற்றுத் தூக்கி, காலை உள்வாங்கி மடித்தபடி ஓடி வந்து ,சற்று உடலைத் தளர்வாக தொய்யவிட்டு யுத்தத்திற்கு ரெடி ஆகும் போதே மிகுந்த எதிர்பார்ப்புகள் நமக்கு ஏற்படத் துவங்கிவிடும். பின் போட்டியாள வீரருடன் அவர் மோதத் துவங்கும் போது அந்த வீரர் இருமுறை நடிகர் திலகத்தை கழுத்தையும், உடம்பையும் ஒருசேரப் பிடித்து இடதுபக்கவாட்டில் தூக்கி வீசுவார். தூக்கி வீசப்பட்ட மறு கணமே புள்ளிமான் போலத் துள்ளி எழுந்து நிற்பார் நடிகர் திலகம். பின் மறுமுறை எதிர்வீரர் N.T. யை வலதுபக்கமாக தன் தோள்பட்டை வழியாக தூக்கி வீசும்போதும் அதே சுறுசுறுப்புடன் எழுந்து கொள்வார் N.T. மூன்றாம் முறை எதிர்வீரர் N.T.யின் இரு தொடைப்பகுதிகளையும் இடுப்போடு பிடித்து தூக்க முயற்சி செய்யும் போது, N.T. அந்த வீரரின் கால்களைப் பிடித்து அவரை தலை கீழாக தூக்கிப் போட்டுவிட்டு கைகளைத் தரையில் ஊன்றி நொடிப் பொழுதில் எழுந்து கைகளை நீட்டி யுத்தத்திற்கு மீண்டும் தயாராவது அருமை. பின் அந்த எதிரியின் இரு கைகளோடு தன் இரு கைகளையும் கோர்த்தவாறு பலப்பரீட்சை செய்வதும், பின் எதிராளியின் இடதுகையை தன் தலைக்குமேலாகக் பின்பக்கக் கழுத்து வழியே கொண்டுவந்து,அவர் கீழ் ஆடையைப் பற்றி அவரைத் தூக்க முயற்சிக்கும் போதே அந்த எதிராளி கொஞ்சமும் எதிர்பாராத வகையில் N.T. யின் முதுகைப் பிடித்து திருப்பி முறுக்கியவாறு பக்கவாட்டில் N.T. யைத் தூக்கிக் கிடாசும் போதும் நம் இதயமே சில்லிட்டுப் போகும். அப்படியே மனிதர் நேச்சுராக தரையில் விழுந்து எழுந்திருப்பார் பாருங்கள்! அடடா! தன் தொழிலின் மீது தான் எத்துனை ஈடுபாடு! எழுந்தவுடன் சற்று ரிலாக்ஸ் செய்வதற்காக அந்தப் போட்டிக் களத்தில் கொட்டிக் கிடக்கும் மணலின் மேல் N.T. ரவுண்டடித்து ஓடிவரும் அழகு இருக்கிறதே! காணக் கண் கோடி வேண்டும். (இடையிடையே கீழே விழுந்து எழுந்தவுடன் மறக்காமல் இரு கைகளிலும் ஒட்டியிருக்கும் மண்ணைத் தன் இரு தொடைப்பகுதிகளின் பக்கவாட்டில் தட்டித் துடைத்துக் கொள்வார்.)
-
5th April 2014, 12:49 PM
#2163
Junior Member
Seasoned Hubber
பின் போட்டியாளரின் பின்புறம் நின்று அவர் உடம்பை உடும்புப் பிடியாகப் பிடித்து அவரை மூன்று முறை தூக்கித் தூக்கி நிறுத்தி நிலை குனிய வைப்பதும், அவரை இரண்டு முறை தலை கீழாகத் தூக்கி வீசுவதும் ரத்தத்தை உறைய வைக்கும் காட்சிகள். அடுத்து n.t. எதிரியின் கழுத்தைப் பிடித்து வளைத்து சர்வ சாதரணமாக மண்ணைக் கவ்வ வைப்பது மிரள வைக்கும் தத்ரூபக் காட்சி. எதிரி தன் முதுகின் மேலே படர்ந்து படுத்தவாறு இம்சை தர ,அப்படியே படுத்தவாக்கில் அவரை தலைகீழாக மாற்றிப் புரட்டிப் போட்டுப் படுக்கவைத்து, தான் அவர் முதுகின் மீது அமர்ந்து கொண்டு அவரது கைகளைப் பிடித்துப் பிடிபோட்டு அவரை தலை கீழாக நிறுத்தி (சிரசாசன பொசிஷனில்) அவரது இரு தூண் போன்ற தொடைகளுக்கிடையே தன் கழுத்தும்,முகமும் பதிந்திருக்க எதிரி அப்படியே தனது தொடைகளால் n.t. யின்கழுத்தை இறுக்கி அப்படியே புரட்டிப் போட, தூரமாகப் போய் டூப்பே இல்லாமல் n.t. விழுவது நம்மை திடுக்கிட வைக்கிறது. பின் எதிரி கொஞ்சம் கொஞ்சமாக தன் பலத்தை இழக்க ஆரம்பிக்க, n.t. யின் கை ஓங்க, தான் வெற்றி பெறப் போவது உறுதி என்று நிச்சயமாகத் தெரிந்து விட்ட நிலையில், வெற்றி பெறப் போகும் களிப்பை முகத்தில் காட்டி, எதிரியை சர்வ அலட்சியமாக பலமுறை தூக்கிப் போட்டு பந்தாட வைத்து மண்ணைக் கவ்வச் செய்வதும், எதிரி சோர்ந்து போய் ஒவ்வொருமுறையும் தட்டுத் தடுமாறி எழுந்திருக்கையில், இடைப்பட்ட அந்த நேரத்தில் அந்த இடத்தை வெகு அழகாக,அலட்சியமாய் ஓடியவாறு சுற்றி வருவதும்,தோள்பட்டைகளை சற்று துவளவிட்டு, உடலை சற்று தளர விட்டு,வலது தொடையைத் தட்டி வெற்றிக்கான அறிகுறியை முகத்தில் காட்டத் தொடங்குவதும், இறுதியில் அப்படியே அலாக்காக எதிரியை தூக்கி மனிதர் என்னமாய் தூக்கிச் சுழற்றுகிறார்!) தோள்பட்டையில் வைத்துக் கொண்டு மூன்று முறை சுற்றி கீழே தூக்கிப் போட்டு வெற்றி வாகை சூடுவதும் இதுவரை தமிழ் சினிமா கண்டிராத அபாரமான அரிய காட்சிகள். அதே போல எதிரி தன்னை இம்சிக்கும் நேரங்களில் வலியின் வேதனையைக் காட்டியவாறும், காட்டாதவாறும் அவர் முகத்தில் பிரதிபலிக்கும் உணர்ச்சிகள் உன்னதமானவை. குறிப்பாக ஒரு இடத்தில் கூட 'டூப்' போடாமல் அவர் மிகுந்த சிரத்தை எடுத்து செய்த சண்டைக் காட்சி (மல்யுத்தக் காட்சி) இதுவாகத்தான் இருக்க வேண்டும்.
அந்த அற்புத, மனதை உறைய வைக்கும் மல்யுத்தக் காட்சி உங்களுக்காக.
-
5th April 2014, 12:50 PM
#2164
Junior Member
Seasoned Hubber
-
5th April 2014, 12:50 PM
#2165
Junior Member
Seasoned Hubber
சண்டை காட்சிகள் நடிகர் திலகத்தின் நடிப்பு பிரமாதம் கிழவனாக வேடம் அணிந்து சாவித்ரியை சந்திக்க வரும் பொது சண்டைக்காட்சியில் சிவாஜி பல படைவீரர்களை எதிர்கொள்ளும்போது தரையிலிருந்து படிப்படியாக மேலே குதித்து, பல நிலைகளைத் தாண்டி கோட்டைசுவரை எட்டுவதாக வரும் காட்சி, மாடி படியை பிடித்து ஏறும் கைபிடியில் குதித்து குதித்து சண்டை போட்டு மீண்டும் குதிக்கும் காட்சி - best எடிட்டிங் , கேமரா , நடிகர் திலகத்தின் சண்டை அனைத்தும் சம அளவில் உழைத்து இருக்கிறது.
மந்திரத்தை வைத்து மக்களை ஏமாற்றி பிழைக்கும் சின்னவை சிவாஜி எதிர்த்து பேசி அவரின் ஒரு ஒரு மந்திரத்துக்கும் , தப்பிக்கும் நடிகர் திலகத்தின் உக்தி ரசிக்க வைக்கிறது ( அந்த காட்சியில் நடிகர் திலகத்தின் expressions அபாராம் )
எனக்கு இந்த படத்தில் நடிகர் திலகம் மிகவும் அழகாக இருபதாக தோன்றியது , அதுவும் வேடன் உடையில் விபுதிஉடன் வரும் காட்சி என்ன ஒரு வசீகரம் , குழந்தை முகம் , கிழவனாக வரும் சிவாஜி சாரின் குரல் , body language ஆச்சு அசல் தாத்தா வின் பிரதிபலிப்பு , மீண்டும் குடுகுடுப்பைக்காரனாக வரும்போது அதே போன்ற ஒரு மேனகேடுதல் (மகா நடிகர் )
-
5th April 2014, 12:52 PM
#2166
Junior Member
Seasoned Hubber
சந்திரபாபு :
தந்தானே தானத் தந்தானே என்ற typical சந்திரபாபு நடனம் , மற்றும் பொம்மலாட்டம் நடனத்தில் சந்திரபாபு பொம்மையைப் போலவே குறைந்த அசைவுகளுடன் சிறப்பாக ஆடுவார். MN ராஜம் நன்றாக ஈடு கொடுப்பார் . சந்திரபாபுவின் திறமையை பற்றி சொல்ல வேண்டியது இல்லை ,
தங்கவேலு :
எனக்கு மிகவும் பிடித்த நசைச்சுவை நடிகர்களில் ஒருவர் , இந்த படத்தில் வழக்கம் போலே அற்புதம்.
அடித்துவிட்டு ஓடும் சிவாஜியைப் பிடிக்க முடியாமல் அடிதாங்க மாட்டாமல் உடம்பைத்தான் பிடித்து விடச் சொல்லுகிறார் என்று தங்கவேலு உடம்பை அமுக்கிவிடும் அதிபுத்திசாலி அஸிஸ்டென்ட். (வடிவேலு இதை இப்போது செய்து கொண்டு இருக்கிறார் )
தன்னைச் சுற்றி மந்திர வளையம் போட்டு கிழ வேடம் தரித்த சிவாஜி மரத்தின் கீழ் அமர்ந்து ஆரியமாலையை ஜெபிக்க, தளபதி தங்கவேலுவின் ஆட்கள் மாயாசக்தியின் மகிமையினால் கோட்டைத் தாண்ட முடியாமல் குத்தாட்ட நாட்டியம் வரிசையாக ஒருவர் பின்னாக ஒருவர் ஆட, அதைக் கண்ட தங்கவேலு அதிர்ச்சியுற்று அந்த நேரத்திலும் ஒருவன் ஆடுவதைக் கவனித்து "பய நல்லாத்தான் ஆடுறான்" என்று தன்னை மறந்து certificate கொடுப்பது.ராஜம் வீட்டுக்கு வந்து விசாரிக்கும் போது மிடுக்காக "பட்டத்து யானை எங்கே" என்று கேட்டபடி மிக இயல்பாக மேசைக்கு அடியில் பார்ப்பது என்று நகைச்சுவை ராஜ்ஜியம் செய்து வயிறாய் புண் ஆகிறார்
அடிகடி உருவம் மாறுவதும் , சிவாஜி சார் நடிப்பில் புரட்சியை ஏற்படுத்திய பராசக்தி (அதை போன்ற ஒரு வசனம் ராஜாக்கு எதிராக பேசுகிறார் ) வந்த பாதிப்பில் மக்கள் விடுபடாத மனநிலையில் மக்கள் இருந்த பொது இந்த படம் வந்ததாள் படத்தின் பெரும் வெற்றியை பாதித்தது என்று நினைக்கிறன் .
இந்த படத்தை அதிகமாக விவரிக்க வில்லை , காரணம் பிரமாண்ட படத்தின் அருமையை நீங்களும் உணரவேண்டும் என்ற நோக்கத்தில் தான்
BEST MOVIE IN FANTASY GENRE.
-
5th April 2014, 12:53 PM
#2167
Junior Member
Seasoned Hubber
Next
arunodhayam
maadi veetu ezhai
naam pirantha mann
-
5th April 2014, 01:27 PM
#2168
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
ragulram11
next
arunodhayam
maadi veetu ezhai
naam pirantha mann
அன்புள்ள ராகுல் - அருமை - nt யின் படங்கள் கொஞ்சமும் இடைவெளி இல்லாமல் வெளி வந்தது போல ஒரே சமயத்தில் பல படங்களை அலசுகிண்டீர்கள் - உழைப்பும் அபாரம் - தகுந்த இடைவெளி கொடுத்து , பழைய திரிகளையும் பார்த்து கூடவே அதற்க்கு உரிய ஆவணகளையும் பதிவிட்டால் அலசல் ஒரு முழுமை பெரும் என்பது என் கருத்து - எந்த அலசலும் நமது நடையில் இருக்கவேண்டும் என்பதும் என்னுடைய அபிப்பிராயம் - "பார்த்ததில் பிடித்து" தவிர நீங்கள் பொதுவான பதிவுகளையும் போடலாமே - nt யை பற்றி எழுத , தெரிந்துகொள்ள பல விஷயங்கள் இருக்கின்றனவே ---
அன்புடன் ரவி
-
5th April 2014, 02:00 PM
#2169
Junior Member
Seasoned Hubber
Dear Ravi sir,
Thanks for your comments, I will try to write other than பார்த்ததில் பிடித்து" series but time is constraint also I feel after seeing all movies atleast majority of movies I can write like others
time gap- weekly 2-3 movies is fine I guess
பழைய திரிகளையும் பார்த்து கூடவே அதற்க்கு உரிய ஆவணகளையும் பதிவிட்டால்
Thats what I tried in Kaathavaraayan but I got carried away by those writings that's why you wrote எந்த அலசலும் நமது நடையில் இருக்கவேண்டும் என்பதும் என்னுடைய அபிப்பிராயம் , I must get over that
Thanks for your valuable words will try to live up to your expectations
-
5th April 2014, 08:14 PM
#2170
Senior Member
Devoted Hubber
டியர் ராகுல்ராம்,
தங்களின் காத்தவராயன் திறனாய்வு நன்றாக உள்ளது, திரு ரவி அவர்கள் கூறியது போல் சற்று இடைவெளி விட்டு அடுத்த படத்தை பற்றி எழுதினால் நன்றாக இருக்கும். அடுத்து எழுத போவதாக கூறிய "அருணோதயம்" நாம் பிறந்த மண்" "மாடி வீட்டு ஏழை" படங்களின் cd இதுவரை இங்கு கிடைக்கவில்லை. அவ்வப்போது டிவியில் போடும் போது பார்த்ததோடு சரி. அதிலும் "மாடி வீட்டு ஏழை" இதுவரை பார்க்கும் வாய்ப்பே கிடைக்க வில்லை.
தொடருங்கள் தங்கள் பணியை.
அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
Bookmarks