-
20th April 2014, 01:22 PM
#2371
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
Murali Srinivas
ரவி,
கூடவே வீடியோவும் வருகிறது. அதில் மட்டும் சிறு கவனம் தேவை. காரணம் ஒரு பக்கத்தில் 3,4 வீடியோக்கள் இடம் பெற்றால் திரியின் பக்கங்கள் எளிதில் திரும்பாது. அதாவது திரி hang ஆகும். குறிப்பாக broad band இல்லாமல் dial up connection வைத்திருப்பவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாவர்கள். அதை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள்.
நன்றி முரளி உங்கள் பாராட்டுக்களுக்கு -
பதிவுகளை போடும் ஆர்வத்தில் , அதோட downside யை கவனிக்க தவறிவிட்டேன் - எல்லோருமே broad band வைத்திருப்பார்கள் என்று ஒரு தப்பு கணக்கு போட்டு விட்டேன் - என் மறதிக்கு இன்னுமொரு காரணம் - இதுவரை திரியின் பக்கங்கள் "hang " ஆகின்றது வீடியோ பதிவிடுவதால் என்று யாருமே குறையுடன் எழுதவில்லை - வேகம் வரும்போது விவேகம் சற்றே பின் தங்கி விடுகின்றது - தவறை சுட்டி காண்பித்ததற்கு நன்றி - கவனமாக செயல் படுகிறேன் - Cheers !!
-
20th April 2014 01:22 PM
# ADS
Circuit advertisement
-
20th April 2014, 02:07 PM
#2372
Junior Member
Seasoned Hubber
கேட்டவைகளில் பிடித்தது -12
" ஆறு மனமே ஆறு
படம் : ஆண்டவன் கட்டளை
Theme : The art of patience is not about how long one can wait, but it is about how one behaves while waiting.
இந்த பாடலை பிடிக்காதவர்கள் என்று யாரவது ஒருவர் இருக்கும்மானால் அவரை இந்த planet யை சேர்ந்தவர் அல்ல என்று சுலபமாக சொல்லிவிடலாம்
இந்த ஒரு பாடல் போதும் ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று புரிந்து கொள்வதற்கு ;
இந்த ஒரு பாடல் போதும் ஒரு மனிதன் வாழும் போது எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று தெரிந்து கொள்வதற்கு
இந்த ஒரு பாடல் போதும் ஒரு மனிதன் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று தெரிந்து கொண்டபின் அதை எப்படி அமுல் படுத்தவேண்டும் என்பதை சொல்லி காட்டுவதற்கு
வாழ்வின் முறைகளின் உயர்வுகளை எளிதாக்கிச் சொல்லும் பாடல் இதோ :
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு - சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு அந்த தெய்வத்தின் கட்டளை ஆறு
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு ---
ஒன்றே செய்வார் ஒன்றே சொல்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி - இன்பத்தில் துன்பம் , துன்பத்தில் இன்பம் அது இறைவன் வகுத்த நியதி -
ஒன்றே செய்வார் ஒன்றே சொல்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி - இன்பத்தில் துன்பம் , துன்பத்தில் இன்பம் அது இறைவன் வகுத்த நியதி -
சொல்லுக்கு செய்கை பொன்னாகும் வரும் துன்பத்தில் இன்பம் பட்டாகும் - இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும் ; எல்லா நன்மையும் உண்டாகும்
(ஆறு மனமே ஆறு )
உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்
நிலை உயரும்போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்
நிலை உயரும்போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும் ; பெரும் பணிவு என்பது பண்பாகும்
இந்த நான்கு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையையும் உண்டாகும் ;எல்லா நன்மையையும் உண்டாகும்
(ஆறு மனமே ஆறு )
ஆசை ,கோபம், களவு கொள்பவன் பேச தெரிந்த மிருகம்
அன்பு , நன்றி , கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்
இதில் மிருகம் என்பது கள்ள மனம் , உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்
இந்த ஆறு கட்டளை அறிந்த மனது ஆண்டவன் வாழும் வெள்ளை மனம் ;ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்
(ஆறு மனமே ஆறு )
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
20th April 2014, 02:32 PM
#2373
Junior Member
Seasoned Hubber
தமிழை நேசிப்போம் தமிழில் பேசுவோம்
While one may get exhilarated with a non native Tamilian speaking
(Jaffna) Tamil very fluently, attention must also be paid to the
message she has conveying in this interview : to speak in Tamil.
இந்த interview is an eye opener - நல்ல தமிழை 2001 வருடத்திற்கு பிறகு கேட்க்க சந்தர்ப்பம் இல்லாமல் தவிக்கிறோம் - தமிழ் என்றால் இதுதான் என்று தன் சிங்க குரலில் கர்ஜித்தான் ஒருவன் - என்று தமிழகம் அவனை அவமதித்ததோ அன்றே தமிழ் அன்னை தன் உயிரை மாயித்துகொண்டாள்
இப்பொழுது பேசுவது தமிழா ( பேசுவது தமில் ) என்றால் இல்லவே இல்லை என்று கற்பூரம் அணைத்து சத்தியம் செய்யலாம்
இந்த பெண்மணி யாழ்ப்பாணத் தமிழ் பேசும் ஜேர்மனியப் பெண்.
புலம் பெயர் நாடுகளில் தமிழ் குழந்தைகள் தமிழ் பேசாத நிலையில், தான் தமிழ் மொழியை அதுவும் யாழ்ப்பாண தமிழை சரளமாக சிறு வயதில் இருந்தே கற்றதாக கூறுகிறார் இவர்.
an inspirational வீடியோ உங்கள் பார்வைக்கு
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
20th April 2014, 02:39 PM
#2374
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
g94127302
[B][I][U][COLOR="#FF0000"]கேட்டவைகளில் பிடித்தது -11
கன்றின் குரலும் , கன்னி தமிழும் சொல்லும் வார்த்தை அம்மா அம்மா - கருணை தேடி அலையும் உயிர்கள் உருகும் வார்த்தை அம்மா அம்மா ---
எந்த மனதில் பாசம் உண்டோ அந்த மனமே அம்மா அம்மா - இன்ப கனவை அள்ளி தரவே இறைவன் என்னை தந்தானம்மா
இந்த பாடலில் வரும் " அம்மா "விற்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பணிவுடன் சொல்ல கடமை பட்டுள்ளேன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
20th April 2014, 03:38 PM
#2375
Senior Member
Senior Hubber
அவனுக்கு அவளென்றும் அவளுக்கு அவன் என்றும் சிறுவயதிலேயே சொல்லி வைத்துவிட்டார்கள்..எனில்
வளரவளர இருவருக்கும் உள்ள உறவும் நெருக்கமும் வளர்ந்ததில் ஒன்றும் வியப்பில்லையே..
அப்புறம் என்ன.. நெருக்கமாக பாசம் அன்பு காதல் எனக் கலந்து கட்டி ஊரெங்கும் ஆடிப் பாடிக் கொண்டிருக்கும் காதல் பறவைகளின் வாழ்வினில்..வழக்கம் போல யார் கண் பட்டதோ..நிச்சயம் நின்று விடுகிறது..இருவருக்கும் திருமணம் நடக்குமா நடக்காதா எனக் கவலை.. ஒருவரை ஒருவர் பார்த்து பேசி பழகக் கூடாது என்ற நிலை வேறு..
கஷ்டம் தான்..
சாதலில் கொள்கின்ற சங்கடம் தன்னையே
காதலும் கொண்டு தரும்..
எனப் பெரியவர்கள் (?!) வாக்கிற்கேற்ப இருவருக்கும் மனக்கலக்க்ம், குழப்பம், நோதல்..எனப் போய்க் கொண்டே இருக்கிறது.. இதில் பெண்ணுக்கு கொஞ்சம் ஆற்றாமை ஜாஸ்தியாகப் பொங்குவதால் என்ன செய்கிறாள்..
உள்ளத்தின் வேதனையை ஓட்டிவிட எண்ணியே
சொல்லி விடுகின்றாள் தூது..
(யெஸ்..இதுவும் பெரியவங்க சொன்னது தான்!)
எதைத் தூது விடறா.. அழகாய் ரோஜாப்பூப் போன்ற சிவந்த மூக்குடன் சிரித்து காற்றிலாடும் பச்சை வயல்களைப் போன்ற நிறத்துடன் கூடிய உடம்பையும் கொண்ட கிள்ளைகளை..கிள்ளை? கிளிகளை..
(முறைப்பையனாக நமது ந.தி - காதலன் -காதலின் பிரிவை கண்ணில் காட்டி உருக வைத்திருப்பார்-பின் காதலிக்கு நம்பிக்கை கொள்ளும் (ரவி..அண்டர் லைன் - தன்னம்பிக்கை கொளவைக்கும் ) வார்த்தைகளைத் தொடுத்த பாட்டைப் பாடுவதாகட்டும் கலக்கி இருப்பார்..காத்லியாக..உஷா நந்தினி - கொஞ்சம் அகன்ற விழிகள், இளமைப் பருவம் என பார்க்க ஓகேயாக இருப்பார்)(படம்: பொன்னூஞ்சல்)
இனி பாடல்..
காதலி :
நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்
கொஞ்சம் சொல்லுங்களேன்
துள்ளி வரும் முத்து கிள்ளைகளே
பச்சை வண்ண வெற்றிலை போல்
பறந்தோடும் போது
பாக்கு வந்து வெற்றிலையில்
சொன்னால் என்ன தூது
சொன்னால் என்ன தூது
காதலன் :வெள்ளம் ஓடட்டும் பெண்ணிடம் கூறட்டும்
உள்ளம் வேலி கட்டை தாண்டி வந்து பூவாகட்டும்
அந்த மேகங்கள் பாடும் ராகங்கள்
வண்ண பெண் பார்க்க போய் வரும் தூதாகட்டும்
மஞ்சளுக்கு நாத்து வச்சா மணக்காதோ இங்கே
மௌனத்திலே சேதி சொன்னா புரியாதோ அங்கே
(இவளே.. நானும் தான் ஒன்னப் பத்தி நினச்சுக்கிட்டிருக்கேன்.. நீ கிளியை அனுப்பறியா..இதோ இந்த மேகத்தை அனுப்பறேன்..ஆமா மெளனம் என்ன ஒரு மொழி..அந்த சேதி ஒனக்குப் புரியலியா - நா இருக்கேன்மா..)
தங்க மீன்களே தாமரை பூவிலே
பொங்கும் தேன் உண்டு என்பதை நீர் அறிவீர்களோ
அந்த பொன் வண்டு இந்த பூ கண்டு
இந்த தேனுண்ணும் நாள் பார்த்து விடுவீர்களோ
பந்தியிலே காத்திருக்கு பசியோடு சொந்தம்
பக்கத்திலே நீ இருந்து பரிமாறு கொஞ்சம்
(ஏதோ எனக்கு ஆத்தாமை தூது விட்டேன்.. சீக்கிரம் வாங்கமாமா..)
வெகு அழகான பாடல்..பிக்சரைஸ் பண்ணிய விதமும் ந.தி, உ.ந நடிப்பும் நன்றாக இருக்கும்..(ரொமான்ஸ் பாட்டில காதலிக்கு தன்னம்பிக்கை ஊட்டும் பாடல் இது
சரிதானா ரவி
)
இதே படத்தில் உள்ள மெய்மறக்க வைக்கும் இன்னொருபாடல் ஆகாயப் பந்தலிலே..
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
20th April 2014, 04:21 PM
#2376
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
chinnakkannan
வெகு அழகான பாடல்..பிக்சரைஸ் பண்ணிய விதமும் ந.தி, உ.ந நடிப்பும் நன்றாக இருக்கும்..(ரொமான்ஸ் பாட்டில காதலிக்கு தன்னம்பிக்கை ஊட்டும் பாடல் இது

சரிதானா ரவி

).
ck - நீங்கள் மட்டும் என் கையில் கிடைத்தால் ------------ என் வாசிப்பை முரளியின் வேட்டு சத்தம் தடுத்துவிட்டது - இல்லையென்றால் நடந்திருப்பதே வேறு -----
-
20th April 2014, 04:54 PM
#2377
Senior Member
Senior Hubber
கஷ்டம் 95 கிலோ.. அப்புறம்..அடிப்பீங்களா ரவி..
(முரளி எங்கே வெடி போட்டார்)

Originally Posted by
g94127302
ck - நீங்கள் மட்டும் என் கையில் கிடைத்தால் ------------ என் வாசிப்பை முரளியின் வேட்டு சத்தம் தடுத்துவிட்டது - இல்லையென்றால் நடந்திருப்பதே வேறு -----

-
20th April 2014, 07:35 PM
#2378
Junior Member
Seasoned Hubber
பார்த்ததில் பிடித்தது -26
இந்த பதிவில் நாம் பார்க்க போகும் படம் 1993 ல் வந்த கல்யாணியின் கணவன் . நடிகர் திலகம் , MR ராதா , ரங்கா ராவ் , சரோஜா தேவி , ராமசந்திரன் என்று பெரும் ஜாம்பவான்கள் நடித்து பக்ஷிராஜா ஸ்டுடியோஸ் தயாரித்த படம்
கதை :
கல்யாணி (சரோஜா தேவி ) தன் தோழிகளுடன் சுற்றுலா வந்த இடத்தில ஆற்றில் நீந்தும் பொது , நீரில் அடித்து செல்ல , அவரை காப்பாற்றி , அடிக்கலாம் தருகிறார் கதிரேசன் (சிவாஜி சார் ), சில நாட்களுக்கு பிறகு கல்யாணியின் வீட்டுக்கு தகவல் கொடுக்கிறார் , கல்யாணியின் தந்தை மிக பெரிய செல்வந்தர் அவரின் Well wisher MR ராதா , இருவரும் வந்து கல்யாணியை அழைத்து செல்லுகிறார்கள் .
சில நாட்களுக்கு பிறகு கல்யாணி மீண்டும் கதிரேசன் வீடு தேடி வந்து தன் தந்தையிடம் secretary வேலை பார்க்க சொல்லி வற்புறுத்த , வேறு வழி இல்லாமல் கதிரேசன் ஒத்து கொளுகிறார் .
வேலைக்கு சேர்ந்த சில மாதங்களில் முதலளிடம் நல்ல பெயர் எடுக்கிறார் கதிரேசன் , கல்யாணி கதிரேசனை விரும்புகிறார் , கதிரேசன் அன்பை reciprocate செய்கிறார் , இருவரும் விரும்பும் விஷயம் ரங்கராவ்க்கு தெரிய வர அவர் கல்யாணத்துக்கு பச்சை கொடி காட்டுகிறார் . எல்லாம் சரியாக போகும் பொது , கல்யாணியின் முறை மாமன் சதி செய்ய நினைக்கிறார்
-
20th April 2014, 07:35 PM
#2379
Junior Member
Seasoned Hubber
கல்யாணத்துக்கு சில நாட்களுக்கு முன்பு கதிரேசனிடம் ஒரு மொட்டை கடிதம் வருகிறது , அதில் கல்யாணியின் நடத்தை பற்றி தவறாக குறிப்பிட பட கதிரேசன் குழம்பி போய் விடுகிறார் . கல்யாணிக்கும் வேறு ஒரு கடிதம் வருகிறது
இருவரையும் ஒரு பாழு அடைந்த மண்டபத்துக்கு வர சொல்ல , இருவரும் அங்கே செல்லுகிறார்கள் (தெரியமால் தான் ) . அங்கே போகும் கதிரேசன் கல்யாணியை வேறு ஒரு நபருடன் பார்க்க அவரை தாக்க முற்பட அந்த நபரின் உயிர் பிரிகிறது , கொலை பழி கதிரேசன் மீது , விடிந்தால் கல்யாணம் , கல்யாண மேடையில் தாலி காடும் பொது , மணமகன் கதிரேசன் தாலி கட்ட மறுத்து , கல்யாணி நடத்தை கேட்ட பெண் என்று சொல்லி விட , அந்த நேரம் பார்த்து போலீஸ் கதிரேசனை கைது செய்ய வருகிறது .
கதிரேசன் தப்பி விடுகிறார் , கல்யாணிக்கு மிகவும் குழப்பம் , இருந்தாலும் அவர் குற்றமற்றவர் என்று அவள் உளுணர்வு சொல்ல அதை நம்பி கொண்டு வாழுகிறார்
ஊர் ஊராக சுற்றி திரிகிறார் கதிரேசன் , சில வாரங்களுக்கு பிறகு கொலை நடந்த இடத்துக்கு வருகிறார் அங்கே கல்யாணியும் வர இருவரும் பேசி தங்கள் mis understanding யை சரி செய்து கொள்ளும் பொது , போலீஸ் வருகிறது , கதிரேசன் மீண்டும் தப்பி ஓடி விடுகிறார்
மீண்டும் கல்யாணி காணாமல் போக ரங்கராவ் தவித்து போகுகிறார் , சில நாட்கள் பிறகு கல்யாணி வேறு ஒரு ஊரில் இருப்பது தெரிய வருகிறது , MR ராதா அந்த ஊருக்கு போகும் பொது , அவர் ஒரு பெண்ணை சந்திக்கிறார் , அந்த பெண் ராதாவின் பழைய நண்பர் அவரிடம் இருந்து ராதாவுக்கு தெரிய வரும் விபரம் , ரங்கா ராவ்க்கு குழந்தை கிடையாது என்றும் கல்யாணி ராதாவின் மகள் என்றும் , ராதாவின் மனைவி இறந்த உடன் கல்யாணியை வளர்த்தார் என்றும் தெரிய வருகிறது , தன் மகளை பார்க்க செல்லும் பொது , அவர் கதிரேசனிடம் பேசி கொண்டு இருக்க , வில்லன் (ராமசந்திரன் ) கதிரேசனை சுட , தோட்டா ராதா மீது பாய்கிறது , சாகும் தருவாயில் ராதா உண்மைகளை உரைக்கிறார் , ரங்கா ராவ் தான் தன் மனைவியை கொன்றதாக தவறாக நினைத்து அவரை பழி வாங்க நினைத்ததையும் , பாழு அடைந்த மண்டபத்தில் கொலை செய்ய பட்ட நபர் ராதாவின் அண்ணனை கொலை செய்தவர் என்றும் , அவருக்கு பயந்து தான் மலேசியாவுக்கு சென்றதாகவும் , மீண்டும் திரும்பி வந்து பழி வாங்கியதாகவும் , அந்த நேரத்தில் ராமசந்திரன் நட்பு கிடைக்க அந்த பழியை கதிரேசன் மீது சுமதி விட்டதையும் சொல்லி இறந்து விடுகிறார் ராதா
முடிவில் இருவருக்கும் கல்யாணம் நடக்க , கல்யாணியின் கணவன் ஆகிறார் கதிரேசன்
-
20th April 2014, 07:36 PM
#2380
Junior Member
Seasoned Hubber
இனி அலசல் :
நாம் பல படங்களில் சிவாஜி சாரின் நடிப்பில் ONE MAN ஷோ பார்த்து இருப்போம் , சில படங்களில் மற்ற நடிகர்களின் நடிப்புடன் நம்மவரின் நடிப்பும் பேசபடும் , இந்த படம் இரண்டாம் ரகத்தை சேர்ந்தது
பெரிய stalwarts உடன் சேர்ந்து வேலை பார்ப்பது ஒரு அலாதி இன்பம் நம்மவருக்கு அது பல தடவை அமைந்து இருக்கிறது , காரணம் நம்மவருக்கு தன் மேலும் , தன் நடிப்பின் மேலும் , கதையின் மேல் இருந்த நம்பிக்கை அதிகம் இல்லை ரொம்ப அதிகம் , அதனால் தான் multi starrer படங்களில் நடிக்க முடிந்தது , அதுவும் அனைவருக்கும் நல்ல scope உள்ள பாத்திரங்களை ஏற்க சம்மதித்து , அவரும் நடித்து , மற்றவர்களையும் நடிக்க வைத்து தானும் பெயர் வாங்கி , பிற நடிகர்கள் பெயர் வாங்க காரநமாவர், படமும் வசூல் ஆகும் ,ஆனால் அது சிவாஜி படம் தான் . இது புரியாமல் சில நபர்கள் சில படங்களை பற்றி multi starrer படத்தில் நடித்து தப்பித்து கொண்டார் என்று பித்ததுகிறார்கள் , யார் நடித்தாலும் அது சிவாஜி படம் தான், மங்காத்தா படத்தில் பல நடிகர்களுக்கு அதிகம் வாய்ப்பு கிடைத்தது , ஆனால் அது அஜித் சார் படம் தான் , அதை போல் தான் இதுவும்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks