- 
	
			
				
					30th April 2014, 12:03 PM
				
			
			
				
					#2521
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
							
							
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  SPCHOWTHRYRAM  
 after engal thanga raja release all distributors are ready to release more and more nadigarthilagam's films in trichy
 THANKS TO MR.RAVIKIRAN SURYA
 
 avm is going to release uyarntha manithan on 09-may-14 at trichy gaiety theatre
 
 also as per mr.easwaran from avm told that raja part rangadurai is going to be digitalized by avm balasubramanian before jun-14
 
 
 
 Dear SP Sir,
 
 What have I done to release the film sir ...nothing...!
 
 am just putting up the advertisement / paper ad about our NT films getting re-screened.
 
 Actually, your thanks should go to the distributor who re-screens the film sir...
 
 am just putting up the ad matter and writing that's all ...yedho ennala mudinjadhu..!
 
 RKS
 
 
 
 
 
 
 
- 
		
			
						
						
							30th April 2014 12:03 PM
						
					
					
						
							 # ADS
						
					
			 
				
					
					
						Circuit advertisement
					
					
					  
 
 
 
 
- 
	
			
				
					30th April 2014, 12:38 PM
				
			
			
				
					#2522
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  Rama Doss  
 எனக்கு மிகவும் பிடித்த நடிகர் திலகத்தின் படம் அம்பிகாபதி. நம் நாயகரின் நயமிகு நற்றமிழுக்காகவே இப்படத்தை எண்ணிலடங்கா தடவைகள் நோக்கியுள்ளேன். எனக்கு என்னமோ எல்லா படங்களையும் விட சிவாஜி அவர்கள் இந்த படத்தில் அற்புத வனப்புடன் காணப்படுவார். அதிலும் குறிப்பாக இறுதிக் கட்ட காட்சியான சிந்தனை செய் மனமே பாடலில் அவர் அழகு கொப்பளிக்கும் தேஜஸுடன் அமர்ந்து ஓரக்கண்ணால் பானுமதியை கண்டவாறே பாடல் பாடும் அழகே தனிதான்.  
 
 அதிலும்
 
 தமிழ்மாலை தனைச் சூடுவான்
 தமிழ்மாலை தனைச் சூடுவான் - கொன்றைத்
 தளிர்மாலை மலர் மாலை ஜெபமாலையுடன் சந்தத்
 தமிழ்மாலை தனைச் சூடுவான் - கொன்றைத்
 தளிர்மாலை மலர் மாலை ஜெபமாலையுடன் சந்தத்
 தமிழ்மாலை தனைச் சூடுவான்
 
 தாபமிகு வெப்பு வாதமொடு பித்த மான பிணி மொய்த்து உடம்போடு
 தாபமிகு வெப்பு வாதமொடு பித்த மான பிணி மொய்த்து உடம்போடு
 சாருமுயிர் துன்ப சாகரமுழன்று சாதனை இழந்து வருந்தாமுன்
 சாருமுயிர் துன்ப சாகரமுழன்று சாதனை இழந்து வருந்தாமுன்
 தாளையளித்திட வேணுமெனத் துதிபாடருணைக்கிரி நாதனழைத்திட
 தயவுடன் இசைந்து அருள்மழை பொழிந்து
 முத்தைத்தரு பத்தித் திருநகையென
 முதலடி உரைத்த தழைத்த கருணையை
 நினைந்து நினைந்து கவிமலர் தொடுத்த
 
 வரிகளுக்கு அவர் இடைவிடாமல் மூச்சுப் பிடித்து வாயசைக்கும் தருணத்தில் மயங்காத மனமும் உண்டா? இந்தக் காட்சியின் போது அரங்குகளில் பொது மக்களால் நடிகர் திலகத்தின் திறமைக்குக் கிடைத்த கைக்கொட்டல்கள் இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டேதான் இருக்கின்றன. இப்பாடலில் நடிகர் திலகத்தின் பேரழகை நோக்கும் போதெல்லாம் என் கண்கள் குளமாகி விடுவது என்னால் தவிர்க்க இயலாததாகிறது.
 
 'என்ன தவம் செய்தனை யசோதா' பாடல்தான் ஞாபகத்திற்கு வருகிறது. இந்த அம்பிகாபதியைப் பெற நாம் என்ன தவம்தான் செய்தோமோ!
 
 தவறுகள் ஏதாவது இருப்பின் அன்பர்கள் பொறுத்தருள்வீர்.
 
 
 
 அருமை திரு ராமதாஸ் . உங்கள் வருகை இந்த திரிக்கு இன்னும் அதிகமான  புத்துணர்வையும் , உற்சாகத்தையும் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை - இந்த பாடல் TMS க்கும் மிகவும் புகழை தேடித்தந்தது - இந்த படத்தில் கதாநாயகி தேர்வு மட்டும் சற்றே சரியாக அமைந்து இருந்தால் இன்னும் இந்த படம்  அதிகமான  வெற்றியை அடைந்திருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து - இந்த பாடலை நமது நண்பர்  நெய்வேலி வாசுதேவனும் NT - filmography இல் அருமையாக அலசி இருப்பார்
 
 அன்புடன் ரவி
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					30th April 2014, 12:40 PM
				
			
			
				
					#2523
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  s.vasudevan  
 There is a difference between spontaneous Hit and Paid Hit. There were pressure not to run the
 Karnan movie upto 175 days inspite of house full shows till 150 days. It is not the case with otherone.
 
 
 
 Well Said Vasu Sir
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					30th April 2014, 01:13 PM
				
			
			
				
					#2524
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  Rama Doss  
 அனைத்து நடிகர்திலக ரசிகர்களுக்கும் எனது வந்தனம். என் பெயர் ராமதாஸ். ஒய்வு பெற்ற தமிழ் ஆசிரியர். எனது சொந்த ஊர் தஞ்சாவூர். . 
 
 
 தஞ்சை மண்ணின் மைந்தனாக, தமிழாசிரியராக இத்திரியின் புதுவரவாக வந்திருக்கும் திரு.ராமதாஸ் அவர்களை வரவேற்கிறேன்.
 '
 தங்களுடைய அம்பிகாபதி திரைப்படப் பதிவைப் பார்க்கும்போதே தங்களுடைய தமிழ்ப் புலமை, தமிழார்வம் எங்களுக்குப் புரிகிறது.  திரையில் ஒலித்த நடிகர்திலகத்தின் தமிழை தங்கள் பதிவுகளில் வரும் காலங்களில் ஆவலோடு எதிர்நோக்குகிறோம்.
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					30th April 2014, 01:27 PM
				
			
			
				
					#2525
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							கோபால் அருமையான தொகுப்பு - உங்களுக்கும் , பம்மலார் அவர்களுக்கும் மிகவும் நன்றி - ஒவ்வொரு நடிகர் திலகத்தின் பிள்ளைகளும் பாது காத்து படிக்கவேண்டிய பொக்கிஷம் இது என்று  சொன்னால் அது மிகை ஆகாது
						 
 
 
 
 
 
 
- 
	
			
				
					30th April 2014, 01:34 PM
				
			
			
				
					#2526
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							Murali - wonderful - no words to praise , your way of narrating - Your write up is always a combo of passion , perseverance , patience and a good connect with past - it never gives us a feel that it is lengthy but certainly we end up with a feel that w/up should have continued some more .  Hats Off .
						 
 
 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
	 
- 
	
			
				
					30th April 2014, 02:49 PM
				
			
			
				
					#2527
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							dear Murali. really an amazing compilation and a good write-up of data and information on Baaga Pirivinai. You, Gopal Sir, Ragul,Ravikiran Surya ...... really fantastic contributors to NT's name and fame.Hats off!
						 
 
 
 
 
 
 
- 
	
			
				
					30th April 2014, 02:52 PM
				
			
			
				
					#2528
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  g94127302  
 Well Said Vasu Sir 
 
 
 Ravikiran's timely display of the 50th day posters of Karnan and the satire on the other movie is really an eye opener to the tamil cinema fans as to establish who is the real crowd puller and bankable icon! We are partly indebted to Chokkalingam sir too! Marketless Guaranteeless Revenueless rerun movies need not be compared with an evergreen immortal epic like Karnan!!
 
 
 
 
				
				
				
					
						Last edited by sivajisenthil; 30th April 2014 at 03:05 PM.
					
					
				 
 
 
 
 
- 
	
			
				
					30th April 2014, 03:01 PM
				
			
			
				
					#2529
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							Dear Rama Doss Sir. Absorbing write-up on NT's Ambikapathy. Iyal, Isai, Nadagam...muththamizhilum viththagar NT but NT is the greatest teacher of how a tamil word should be pronounced with appropriate modulations. Any one who practices speech Tamil, NT's mode is inevitable. Also, there is no one in this universe to match his lip movement synchronization in song sequences!!Welcome Sir.
						 
 
 
 
 
 
 
- 
	
			
				
					30th April 2014, 04:25 PM
				
			
			
				
					#2530
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
							
						
				
					
						
							பார்த்ததில் பிடித்தது 29
 
 1954 ல் வெளிவந்த மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் நம் நடிகர் திலகத்தின் 11 வது படமான இல்லற ஜோதி படத்தை பற்றி தான் இந்த பதிவு . நடிகர் திலகத்துடன் பத்மினி ,ஸ்ரீரஞ்சனி, தங்கவேலு, அசோகன் என்று பலரும் நடித்த படம் தான் இந்த இல்லற ஜோதி .
 
 கதை :
 
 மனோகர் (சிவாஜி) என்ற இளைஞன் கலை ஆர்வம் மிக்கவன் , இதனால் வேலைக்கு செல்லாமல் , நாடகத்துக்கு கதை மற்றும் கவிதை எழுதி நாட்களை கடத்துகிறார் , சரியான வாய்ப்பு அமையாமல் தவிக்கிறார் . அதே ஊரில் புரொபஸர் ஒருவர் இருக்கிறார்  அவர் மகள் சித்ரலேகா (பத்மினி ) , அவருக்கும் கலையில் அதித ஈடுபாடு . நெட்டிலிங்கம் (தங்கவேலு , மனோகரின் தந்தை ) தன் மகனுக்கு கல்யாணம் செய்துவைக்க எண்ணுகிறார் , மாப்பிள்ளை வேலை இல்லாமல் இருப்பதால் ஒருவரும் பெண் கொடுக்க முன்வராததால் ,  தன் மகனுக்கு வேலை வாங்கி கொடுக்கிறார் , ஆர்வம் இல்லாமல் வேலை பார்க்கிறார் மனோகர் , இது தான் சமயம் என்று மனோகருக்கு காவேரி (ஸ்ரீ ரஞ்சனி ) என்ற பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைகிறார்கள் . தன் மகன் மீண்டும் கவிதை எழுதி நேரத்தை வீணாக செலவு செய்ய கூடாது என்று எண்ணி மனோகர் எழுதிய கவிதைகளை பழைய பேப்பர் கடைக்காரனிடம் கொடுத்து விடுகிறார் . அந்த கவிதைகள் சித்ரலேகாவிடம் வருகிறது , அதை அறிந்து மனோகர் அங்கு வர மனோகரின் கவிதைகளை ரசிக்கும் சித்ரலேகா அவரை நாடகம் எழுதி தர சொல்ல , மனோகர் சலீம் அனார்கலி நாடகம் எழுதி , இருவரும் நடிக்க , நாடகம் பெரிய ஹிட் ஆகி விடுகிறது .
 
 ஏற்கனவே வேலை பிடிக்காமல் இருக்கும் மனோகர் முழு நேர கலை பித்தனாகிறார் . சித்ரலேகா , மனோகர் இருவரும் அடிகடி சந்தித்து கொளுகிரர்கள் , இருவருக்கும் இடையில் வெறும் நட்பு தான் என்றாலும் மனோகரின் மனைவி , மற்றும் சித்ரலேகாவின் வருங்கால கணவன் என்று நினைத்து கொண்டு இருக்கும் மோகன் (அசோகன் ) இருவருக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது . இருவரும் நட்பாக தான் இருக்கிறார்கள் என்றாலும் ஆழ்மனதில் இருவரும் காதலிக்கிறார்கள் .
 
 மனோகருக்கு குழந்தை பிறக்கிறது . தன் மனைவியின் தூய்மையான அன்பு புரிகிறது , தன் தவறை உணர்கிறார் .சித்ரலேகா வீட்டுக்கு சென்று தன் தவறுக்கு மனிப்பு கேட்கிறார் . முடிவில் மோகனை திருமணம் செய்து கொளுகிறார் சித்ரலேகா
 
 படத்தை பற்றி :
 
 மிகவும் sensitive கதை , கவனமாக கையாளாவிட்டால்  மக்களின் கண்டனத்துக்கு உள்ளக நேரிடும் , அப்படி எதுவும் இல்லாமல் , கத்தி மேல் நடந்து அதை வெற்றிகரமாகவும் நடந்து சாதனை படைத்தது இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும் , இதற்கு பட குழுவினர்களுக்கு ஒரு சபாஷ் . எனக்கு இந்த படத்தில் ஒரு குறை என்றால் அது இந்த படத்தின் நெடுந்தகடு quality தான் , ப்ரதி மிகவும் சுமார் . இந்த படத்தில் என்னை கவர்ந்த அம்சம் அனர்கலி நாடகம் கிட்ட தட்ட 15 நிமிடம் ஓட கூடிய அந்த நாடகம் மிகவும் அற்புதம் . அதில் சிவாஜி மிகவும் அற்புதமாக நடித்து அசதி இருப்பார் , அதுவும் கல்லறை முன் நின்று அவர் உருகும் இடம் , பிச்சு உதறி இருப்பார் மனிதர் . கல் நெஞ்சையும் உருக வைக்கும் . முதல் சில நிமிடங்களில் அவர் பேசுவது புரிந்து கொல்வது சற்று சிரமமாக இருந்தது காரணம் அவர் தூய தமிழில் பேச அவரின் தந்தையாக வரும் தங்கவேலு சாதரணமாக பேச அந்த ஒரு காட்சி மட்டும் பிரிண்ட் சுமாராக இருந்ததால் சுத்தமாக புரியவில்லை , ஆனால் இந்த படத்தில் நடிகர் திலகத்தின் நடிப்பை விட , நான் ரசித்தது அவர் முகத்தின் வசீகரத்தை தான் , என்ன அழகாக இருக்கார் மனிதர் .தங்கவேலுவின் நகைச்சுவை வழக்கம் போலே அபாராம் அதுவும் திருப்திசாமி என்ன சாபற்றிங்க ?
 ஒன்னும் இல்லைய ?
 பத்மினியின் நடிப்பு , நடனம் , அழகு அனைத்தும் உச்சம் .அதுவும் அனார்கலி நாடகத்தில்  அவர் காட்டும் ஏமாற்றம் , சாகும் பொது கண்களில் தெரியும் ஏக்கம் , சொல்ல வார்த்தைகள் இல்லை.
 
 பாடல்கள் G ராமநாதன் இசையில் நன்றாக இருக்கிறது
 
 மொத்தத்தில் ஒரு வித்தியாசமான அனுபவம் இந்த படம்
 
 
 
 
 
 
 
Bookmarks